ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊடகங்களின் பொறுப்பின்மை !

3 posters

Go down

request ஊடகங்களின் பொறுப்பின்மை !

Post by seltoday Wed Sep 07, 2016 9:04 pm

உடுமலை சங்கர் கொலை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்ப வேண்டிய அவசியம் இல்லாதபோதும் பல செய்தி சேனல்களில் தொடர்ந்து ஒளிபரப்பினார்கள். இதன் பிறகு பொதுவெளியில் பலர் முன்னிலையில் கொலை செய்யும் துணிச்சல் அதிகரித்துள்ளது. எதை காட்டணும் ? எதை காட்டக்கூடாது ? என்ற விவஸ்தை காட்சி ஊடகங்களுக்கு சுத்தமாக இல்லை.

காதல் என்பது இயல்பான ஒன்று. நம் வாழ்வில் வரலாம் ; வராமலும் போகலாம். தவறில்லை. ஆனால் தமிழ் திரையுலகம் காதல் இல்லாமல் படமே எடுப்பதில்லை. இளைஞர்கள் என்றால் காதலித்தே ஆக வேண்டும் , மது குடித்தே ஆக வேண்டும் என்றே தொடர்ந்து காட்சிகளை முன்வைக்கிறார்கள் . இளைஞர்கள் வாழ்வில் காதலைத் தவிர மற்ற எதுவுமே இல்லையா ? பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பதை சுவாரசியமாக பல படங்களில் இன்னமும் காட்சிபடுத்துகிறார்கள். 80களுக்கு பிறகான திரைப்படங்களில் ஆண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அடுத்த காட்சியில் அவன் மது குடிக்கும் காட்சி கண்டிப்பாக இடம்பெறுகிறது. இளைஞர்களின் கொண்டாட்டம் என்றால் மது தான் முக்கிய இடம்பிடிக்கிறது.

திரைப்படங்களில் பெண்கள் இன்னமும் கேவலமாகத்தான் சித்தரிக்கப்படுகிறார்கள். பெண்களை அவமானப்படுத்தும் வசனங்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. ஊடகங்களும் , திரைப்படங்களும் பெண்ணை சக மனுஷியாக மதிக்க ஆரம்பித்தாலே போதும். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வெகுவாக குறையும். நம் சமூகத்தில் அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது. அறத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து திருவள்ளுவர், திருக்குறளில் அறத்துப்பால் என தனி அதிகாரமே எழுதியும் என்ன பயன் ?

"எனக்கு கிடைக்காதது என் பிள்ளைக்கு கிடைக்கனும் " என்று பெற்றோர்கள் நினைப்பதில் தவறில்லை. ஆனால் தோல்வியையும் , ஏமாற்றத்தையும் தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பிள்ளைகளுக்கு உருவாக்க வேண்டியது பெற்றோர்களின் முக்கிய கடமையாகும். "எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது " என்ற மனநிலை தான் காதலிக்க மறுக்கும் பெண்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணம். நவீன வாழ்வு கொலைகளை புதிதாக வகைப்படுத்திக்கொண்டே இருக்கிறது. ஆணவ கொலைகளுக்கு அடுத்ததாக தற்போது 'காதல் கொலைகள் '. ஆறறிவுள்ள நாகரிக சமூகம் என்று சொல்லிக் கொள்ள வெட்கமாக இல்லையா ?

பாலின பாகுபாடுகள் நம் இந்திய தேசம் முழுவதுமே இருக்கிறது. "முதலில் பெண்களுக்குத் தனியாகவும் , ஆண்களுக்கு தனியாகவும் பள்ளிகள் , கல்லூரிகள் இயங்குவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அப்போது தான் பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படும் " மனநல மருத்துவர்கள் சொல்கிறார்கள். அப்படியே இருபாலரும் படிக்கும் பள்ளியோ , கல்லூரியோ அமைந்தாலும் அங்கே இருபாலரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அப்புறம் எப்படி பெண்களைப் பற்றி ஆண்களும் , ஆண்களைப் பற்றி பெண்களும் புரிந்து கொள்வது ?

பெண்களைப் பொறுத்தவரை தடைகளையும் , இடையூறுகளையும் கடந்து சாதிக்கத் துடிக்கிறார்கள். அதனால் ஆண்கள் செய்யும் கிறுக்குத்தனங்களை கண்டுகொள்ளாமல் கடந்து போகவே விரும்புகிறார்கள். ஆனால் ஆணாதிக்கம் அவர்களை அப்படி இருக்க விடுவதில்லை, சாதிக்க துடிப்பவர்களின் உயிர்களை பலி கேட்கிறது.
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

request Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !

Post by T.N.Balasubramanian Wed Sep 07, 2016 9:27 pm

செய்தி /டிவி ஊடகங்களின் பொறுப்பின்மை நாளுக்கு நாள்   அதிகமாகிறது .
அவர்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று மதிப்பிடுகின்றனர் .
ஆனால் சென்சேஷனலாக பதிவிட்டு , TRP ரெட்டிங்  உயர்த்துவது போல்,
போடவேண்டாத விஷயங்களை போட்டு , மேலும் பல குற்றங்களுக்கு வழி வகுக்கிறார் .
தமிழ்நாட்டின் கலாசார சீரழிவுக்கு இவர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் ,செல்வராஜ் .

இவர்களை திருத்துவது எப்பிடி ?

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Wed Sep 07, 2016 9:28 pm; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !

Post by விமந்தனி Wed Sep 07, 2016 10:46 pm

நல்ல பகிர்வு. ஆனால், இது ஓரிரு நாட்களில் மாறக்கூடிய நிலை அல்ல. இன்னும், இன்னும் மோசமான நிலைக்கு தான் போய்க்கொண்டிருக்கிறதே தவிர, சரியாகிவிடும் என்ற நினைப்பே வீண் கற்பனையாக தான் இருக்கிறது. மொத்தத்தில் ஊடகங்களின் செயல் பாடுகள் மிச்சம் இருப்பவர்களையும் குழிக்குள் இழுத்துப்போடத்தான் முயற்சித்துக்கொண்டிருக்கிறது.


ஊடகங்களின் பொறுப்பின்மை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஊடகங்களின் பொறுப்பின்மை ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஊடகங்களின் பொறுப்பின்மை ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !

Post by seltoday Thu Sep 08, 2016 8:05 am

அறம் என்பதே இல்லாமல் போய்விட்டது . அறம் தான் மாற்றத்தைக் கொண்டு வரும். தொலைக்காட்சியில் காட்டப்படும் விளம்பரமோ , செய்தியோ ,நாடகமோ அனைத்தையும் தணிக்கை செய்ய வேண்டும்
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

request Re: ஊடகங்களின் பொறுப்பின்மை !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum