ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

3 posters

Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:10 am

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! GVsbeQgwQIWlzCLZVCSm+2
-
ஆப்பிரிக்கக் காட்டில் சிறுமி ஒருத்தி தன்னந்தனியே நடந்து
சென்றாளாம். அவளின் எதிரே வந்த ஓநாய் ஒன்று "என்னைக்
கண்டால் உனக்கு பயமில்லையா?' என்று கேட்டதாம்.

"இல்லை' என்று கூறிவிட்டுத் தன் பயணத்தைத் தொடர்ந்தாளாம்.
சற்று தூரம் சென்றதும் எதிரே வந்த ஒட்டகச்சிவிங்கி அவளை
வழிமறித்து அதே கேள்வியைக் கேட்டதாம் அதற்கும் "இல்லை'
என்றாளாம்.

இன்னும் சற்றுச் தொலைவு சென்றதும் புலி ஒன்று வழி மறித்து
அதே கேள்வியைக் கேட்டதாம். அதற்கும் அதே பதிலைத் தந்தாளாம்.
கடைசியாக அவளை இறுகப் பிடித்துக் கொண்ட பெண் சிங்கம்
ஒன்றும் அதே கேள்வியையே கேட்டதாம்.

"இல்லை! இல்லை! இல்லவே இல்லை!' என்றாளாம்.

"பின் எதற்குத் தான் பயப்படுவாய்?'

"ஆண்கள்! சிறுமிகளிடம், பேரிளம் பெண்களிடம் மோசமாக
அணுகுகிற ஆண்கள். அவர்கள் உங்களை விடக் கீழானவர்கள்!
மிருககுணம் கொண்டவர்கள்! வன்புணர்ச்சி செய்யும் ஆண்களை
நினைத்தாலே என் குலை நடுங்கும்!'
என்றாளாம்.

இதைக் கேட்ட பெண் சிங்கமே கண் கலங்கியதாம்.
--
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty Re: "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:14 am

இது ஒரு கற்பனை உரையாடல்தான் என்றாலும் இப்படித்தான்
இருக்கிறது இன்று பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில். அதிலும் உகாண்டா
மற்றும் கென்யாவில் நிலைமை படுமோசம்.

அது உகாண்டாவின் மிகவும் பின்தங்கிய கிராமப்புறம். சிறுமி
ஒருத்தி வேதனையுடன் அமர்ந்து இருக்கிறாள். யாரோ ஒரு
கயவனால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட பதினாறே வயதான
அவள் சகோதரியை மாந்திரீகம் செய்ய அழைத்துச்
சென்றிருக்கிறார்கள்.

காரணம் அவள் கர்ப்பமடைந்து விட்டாள்.

அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் வெளியில் சொல்ல
விரும்பாமல் மாந்திரீகம் செய்பவர்களை அணுகுவார்கள்.
பெரும்பாலான சிறுமிகள் சிகிச்சை பலனின்றி இறந்துவிடுவர்.
இந்தச் சிறுமியின் சகோதரியும் இறந்து போனாள். அவர்களுக்கு
வேறு வழியில்லை. படிப்பறிவும் இல்லை.

எங்கு நோக்கிலும் வறுமையும், தீவிரவாதமும் தலைவிரித்து ஆடிக்
கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக 7.5% ஹெச்.ஐ.வி. தொற்று
நாடு முழுவதும் பரவி இருந்தது. பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்
பாதுகாப்பு என்பதே சிறிதளவும் இல்லை.

இவை யாவையும் கண்டு வேதனைப்பட்ட அந்த சிறுமி ஏதாவது
செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டே இருந்தாள்.
அவள் பெயர் "ரூத் நாபெம் பெசி' ( Ruth Nabembezi)
அவளுக்கு ஐந்து வயது இருக்கும் பொழுதே அவள் பெற்றோர்
ஹெச்.ஐ.வியால் மாண்டனர். இதன் காரணமாக அவளும், அவளுடைய
மூத்த சகோதரியும் உகாண்டாவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில்
வளர்ந்தனர்.

பெற்றோருக்கு இருந்த நோய் இவளுக்கும் தொற்றியிருந்தது.
தன் வாழ்நாட்கள் சொற்பமே என்பதை உணர்ந்த ரூத் சமூகத்திற்கு
ஏதாவது செய்ய விரும்பினார்.

பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் "சோஷியல் இன்னொவேஷன் அகாடமி'
( Social Innovation Accademy) - SIA) என்ற அமைப்பில்
சேர்ந்தார். சமூக சேவை புரிய விரும்பும் இளைஞர்களின் ஒவ்வொரு
திட்டமும் அங்கு செயல் வடிவம் பெற்றன.
2015 - ஆம் ஆண்டு ரூத் ஒரு திட்டத்தை சமர்ப்பித்தார்.
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty Re: "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by ayyasamy ram Wed Jul 13, 2016 10:16 am

"ஆப்பிரிக்கப் பெண்களும், சிறுமிகளும் ஆண்களால் பலவாறு
சிதைக்கப்படுகின்றனர். சிறுமிகள் போதைப் பழக்கத்திற்கு
ஆளாக்கப்பட்டு கற்பழிக்கப்படுகின்றனர். பல சிறுமிகளுக்கு
தாங்கள் கர்ப்பமடைந்திருப்பதே தெரியவில்லை.

கல்வி அறிவு இல்லாத இவர்கள் சிகிச்சைக்காக மாந்திரீகர்களை
அணுகி மரிக்கின்றனர். தங்களுக்கு நேர்ந்த அவலத்தை வெளியில்
சொல்லவும் முடிவதில்லை. ஆகவே "வெட்கப்படாமல் கேளுங்கள்'
என்ற புதிய திட்டத்தை தொடங்க விரும்புகிறேன்' என்று தனது
கடிதத்தில் குறிப்பிட்டார்.

அதன்படி "வெட்கப்படாமல் கேளுங்கள்' (AWS - Ask Without
shame) 2015 - ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது ஒரு
செல்ஃபோன் செயலி ( Cellphone Application) ஆகும்.
இது ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இலவச
சேவையாக செயல்படுகிறது.

இந்தச் செயலியை வடிவமைக்க ஒரு கணினி தொழில் நுட்ப வல்லுநர்
மற்றும் மூன்று மருத்துவர்கள் கொண்ட குழு செயல்படுகிறது.
நம் ஊரில் குழந்தைகள் பாதுகாப்பிற்கு (1098) என்ற எண் போன்று
ஆப்பிரிக்க நாடுகளில் இந்தச் செயலி பயன்படுகிறது. பாலியல்
துன்பத்திற்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு முதலில் உளவியியல்
ஆலோசனை (Psychological Counselling) வழங்கப்படுகிறது.

பிறகு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் மருத்துவ
மனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்யப்படுகிறது. மேலும் ஆண்கள்
தீண்டும் முறைகள் (பாதுகாப்பான தீண்டல் மற்றும் பாதுகாப்பற்ற
தீண்டல்), செக்ஸ் கல்வி ஆகியவை குறித்த விழிப்புணர்வையும்
இச்செயலி வழங்குகிறது.

இதுவரை இச்செயலியைப் பயன்படுத்திய 8000 வாடிக்கையாளர்களின்
15,000 கேள்விகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன்
மூலம் ஆயிரக்கணக்கான சிறுமிகள் கர்ப்பமடைவது தடுக்கப்பட்டது.

ஜெர்மனி அரசு "ரூத்'தை ஜெர்மனியில் நடைபெற்ற மிகப் பெரிய
தகவல் தொழில் நுட்பக் கண்காட்சியில் (IT EXPO, Ce BIT)
சிறப்புரையாற்ற அழைத்தது. பி.பி.சி.தொலைக்காட்சி தான் நடத்தி வரும்
OUTLOOK என்ற நிகழ்ச்சிக்காக இவரை பேட்டி கண்டது. இவரது
சேவையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பிற நாடுகள் தற்பொழுது
பொருளுதவி செய்து வருகின்றன.

அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 250 மில்லியன் பயனாளிகளைத் தனது
செயலி மூலம் தொடர்பு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
என்பது ரூத்தின் கனவாகும்.

"வெட்கப்படாமல் கேளுங்கள்' ( ASK Without shame - AWS)
அமைப்புக்கு வரும் பெரும்பாலான அழைப்பு இலவச மருத்துவ சேவை
கோரிதான். எனவே உகாண்டாவின் தலைநகர் "கம்பாலா'வில்
மருத்துவமனை ஒன்றை இவ்வமைப்பு நிறுவி வருகிறது.

"இந்தச் சேவையால் ஏராளமானோர் பயன் பெற்று வருகின்றனர் என்பது
எனக்கு ஆறுதல் அளிக்கிறது. நானும் வன்புணர்வால் பாதிக்கப்பட்டவள்
என்ற முறையில் இச்சேவை எனது கடந்த காலத் துயரங்களை மறக்கச்
செய்கிறது.

என்னைப் போன்று பிற சிறுமிகள் துயரப்படக் கூடாது என்ற வகையிலும்
இச்சமூகத்திற்கு என்னால் ஆன மிகச் சிறிய பங்களிப்பை நான் செய்து விட்டேன்.
இருந்தாலும் ஆண்களின் மனதில் மாற்றம் ஏற்படாத வரையிலும் எத்தனை
AWS அமைப்புகள் ஏற்பட்டாலும் பயன் ஏதுமில்லை' என்கிறார் "ரூத்' என்கிற
இளம் சமூக சேவகி.
-
---------------------------------------
- என். லட்சுமி பாலசுப்பிரமணியன்
மகளிர் மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty Re: "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by பாலாஜி Wed Jul 13, 2016 5:11 pm

வாழ்த்துக்கள் ரூத் நாபெம் பெசி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty Re: "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by ராஜா Thu Jul 14, 2016 3:14 pm

இது ஒரு கற்பனை உரையாடல்தான் என்றாலும் இப்படித்தான்
இருக்கிறது இன்று பெண்கள் மற்றும் சிறுமிகளின் நிலை
பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில். அதிலும் உகாண்டா
மற்றும் கென்யாவில் நிலைமை படுமோசம்.
இதைவிட கொடுமையை இருக்கு நம்ம நாட்டில் பெண்களின் நிலை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை! Empty Re: "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum