ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

+4
கார்த்திக் செயராம்
கிருபானந்தன் பழனிவேலுச்சா
ayyasamy ram
T.N.Balasubramanian
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by T.N.Balasubramanian Mon Jul 04, 2016 8:58 pm

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  QX1p8TamSuuitn4F6VB2+Tamil_News_large_1556652_318_219

மேட்டூர்;மேட்டூர் அருகே, 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்து, உடலை பாத்திரத்தில் மூடி வைத்த காட்டுமிராண்டி கைது செய்யப்பட்டான்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே, காவேரிபுரம் தெலுங்கனுாரை சேர்ந்தவர் ராஜா; மீனவர். இவரது மனைவி வள்ளி. இவர்களது இரண்டாவது மகள் தர்ஷிணி, 7, அரசு பள்ளியில், இரண்டாம் வகுப்பு படித்தாள்.

மனநோய் பாதிப்பு:அதே கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. கணவரை பிரிந்த ரூபா, பெற்றோர் வீட்டில் வசித்தபடி, ஊர் ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்கிறார். ரூபாவின் மகன் திருமூர்த்தி, 18, மனநோயால் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவன், பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தான்.

சில மாதங்களுக்கு முன், பள்ளி மாணவர் ஒருவரை, அருகிலுள்ள மலைப்பகுதிக்கு கூட்டி சென்று, திருமூர்த்தி பாலியல் தொந்தரவு செய்துள்ளான். மாணவர் கூச்சலிட்டதால், கிராமத்தினர் திருமூர்த்தியை கண்டித்து, ஊருக்குள் நுழைய தடை விதித்தனர். எனவே, திருமூர்த்தியை தன்னுடன் காய்கறி வியாபாரத்துக்கு, ரூபா அழைத்து சென்றார்.
இந்நிலையில், கடந்த, 1ம் தேதி இரவு, தெலுங்கனுாரில் உள்ள வீட்டுக்கு திருமூர்த்தி வந்தான். 2ம் தேதி மாலை, திருமூர்த்தி வீட்டின் பக்கத்து தெருவில் வசிக்கும் ராஜாவின் மகள் தர்ஷிணியை காணவில்லை.

அன்று நள்ளிரவு திருமூர்த்தி வீட்டில், சிறுமியின் அலறல் சத்தம் கேட்டதாக, கொளத்துார் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. நேற்று காலை, திருமூர்த்தி வீட்டில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஈய பாத்திரத்தில், சிறுமி தர்ஷிணி உடல் திணித்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். விசாரணையில், சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றதை திருமூர்த்தி ஒப்புக் கொண்டான்.பிஸ்கட் தருவதாக...
இது குறித்து, போலீசார் கூறியதாவது: நேற்று முன்தினம் மாலை, 5:00 மணியளவில், சிறுமி தர்ஷிணி, திருமூர்த்தி வீடு வழியாக சென்றாள். அப்போது, திருமூர்த்தி, பிஸ்கட் தருவதாக கூறி, தன் வீட்டுக்குள் அழைத்து சென்றான். பின், 'டிவி'யை மிக சத்தமாக வைத்துவிட்டு,
பூஜை அறையில் வைத்து, சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.
இதனால், சிறுமியின் அலறல் யாருக்கும் கேட்கவில்லை. மயங்கிய சிறுமியை வெளியில் துாக்கி செல்ல திட்டமிட்டான். ஆனால், வெளியில் இரவு முழுவதும் ஊர் மக்கள், சிறுமியை தேடிக்கொண்டிருந்தனர்.

அதனால், வெளியில் துாக்கி சென்றால் மாட்டி கொள்வோம் என நினைத்து, வீட்டினுள் குழி தோண்டி புதைக்க, முடிவு செய்துள்ளான். சிறிது குழி தோண்டிய நிலையில், அது முடியாததால், புதைக்கும் திட்டத்தை கைவிட்டான்.பின், சிறுமிக்கு மயக்கம் தெளிந்தால் பிரச்னையாகி விடும் என்பதால், அவளது கன்னத்தில் இருந்து வயிறு வரை பிளேடால் கீறி, கொடுரமாக கொலை செய்து, பூஜை அறையில் இருந்த பாத்திரத்தில் போட்டு மூடி விட்டான்.
நேற்று காலை, தாத்தா ராமன் பூஜை அறையை சுத்தம் செய்ய சென்றார். அப்போது, தாத்தாவை உள்ளே அனுமதிக்காமல் திருமூர்த்தி தடுத்தான். சந்தேகம் அடைந்த ராமன், உள்ளே நுழைந்து சிறுமி உடல் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். அவர் மூலம் மற்றவர்களுக்கு தகவல்
தெரிந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், நேற்று இரவு தெலுங்கனுாரில் அடக்கம் செய்யப்பட்டது. தெலுங்கனுார் மக்கள், திருமூர்த்தி வீட்டை சூறையாடக்கூடும் என்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

காம கிறுக்கன்:தெலுங்கனுார் கிராம மக்கள் கூறுகையில், 'மனநிலை பாதித்த திருமூர்த்தி எது கேட்டாலும், அவரது தாத்தா மற்றும் தாய் வாங்கி கொடுத்து விடுவர். திருமூர்த்தி, ஒரு லேப்டாப், மொபைல் வைத்திருந்தான். அதில், எப்போதும் ஆபாச படங்களையே பார்த்து கொண்டிருப்பான்' என்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by T.N.Balasubramanian Mon Jul 04, 2016 9:11 pm

என்ன நடக்கிறது ?
மிருக இனத்தை மிஞ்சி விடும் இளைஞர் கூட்டம் ?
தினம் தினம் தினசரியில் இது மாதிரி விஷயங்கள் !
நவீன ஊடகங்கள்/ கைபேசிகள் /
சகஜமாக பேசும் பெண்களை  சகோதரிகளாக நினைக்கா இளைஞர்கள் ,
இளைஞர்களை பகடை காயாக்கி , காரியம் சாதித்துக் கொள்ளும் பெண்கள் ,
இந்த பெண்களை திருப்தி படுத்த ,
பெண்களின் சங்கிலிகளை அறுத்துக் கொண்டு செல்லும்    இளைஞர்கள் .
கஷ்டகாலம் . விடிவு பிறக்குமா ?

வழி என்ன ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by ayyasamy ram Mon Jul 04, 2016 9:13 pm

எப்போதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும்
பாலியல் கொடுமைகள்....
-
2000 ஆண்டுகளுக்கு முன்னரும் இந்நிலை இருந்திருக்கிறது
எனவேதான் பிறன் மனை நோக்கா பேராண்மை என
திருவள்ளுவர் எழுதினார்....
-
நடப்பு செய்தியில்
மன நிலை பாதிக்கப்பட்டவன் என்ற நோக்கில்
அவனது குற்றம் மூடி மறைக்கப்படும், அவ்வளவுதான்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா Mon Jul 04, 2016 10:33 pm

எனக்கு பெயர் நினைவில்லை . மென்பொறியாளராக பணியாற்றிய பெண்ணை காதல் நாடகமாடி திருமணம் செய்த உதாரி ஒருவன் அவனைப்பற்றிய சாயம்வெளுத்து அவள் டைவர்ஸ் செய்துவிடும் நிலை வந்த போது கொன்றுவிட்டு அவளின் டெபிட் கார்டை வைத்து ஊர் சுற்றி பொழுது போக்கி விட்டு உள்ளுருக்கு போய் தற்கொலை செய்யவில்லையா ?

இதுபோலே இன்னும் பல பெண்களை காதலில் வீழ்த்திய ஒரே சாதனைக்காக உட்கார்ந்து சாப்பிட்டு பொழுதுபோக்கும் உதாரிகள் நிறைய இருக்கிறார்கள்

அவர்களிடம் விழுந்த ஒரேஒரு பாவத்திற்காக அனுதினம் செத்துக்கொண்டு வாழும்பெண்கள் நிறைய இருக்கிறார்கள்

சினிமாக்களை உதாரணமாக வைத்து நிறைய ஊதாரிகள் எப்படியாவது ஒரு இளிச்சவாச்சியை மடக்கி பிடித்து உட்கார்ந்து சாப்பிடலாம் என ஏற்கனவே ஆக்சனில் இறங்கி விட்டார்கள் பெண்களை ஏமாற்றும் விதவிதமான உத்திகளை சினிமாக்களில் கற்றுக்கொள்கிறார்கள்

இதற்கு சமூக ஆர்வலர்கள் முன்முயற்சி எடுத்து காதலை மட்டும் வைத்து சினிமா எடுத்தால் அது தடை செய்யப்படும் என்று சட்டம் கொண்டுவர முயலவேண்டும்

காதல் சைடு ரோலாக வரலாமே தவிர மெயின் ரோலாக தயாரிக்கப்படும் படங்கள் திரையிட அனுமதிக்க கூடாது
கிருபானந்தன் பழனிவேலுச்சா
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 604
இணைந்தது : 28/12/2011

http://kirubarp.blogspot.com

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by Guest Tue Jul 05, 2016 12:11 am

இப்படியான சம்பவங்கள் மனநலவியலாளர்களின் பார்வையில் -schizophrenia -என்ற ஒருவித மன நோயாகப் பார்க்கப்படுகிறது. மேலே உள்ள சம்பவம் மன நலவியாளர்களால் pedophilia என அணுகப்படுகிறது. pedophilia என்பது குறைந்த வயதினர் மீதான பாலியல் இச்சை வெறி என சொல்லலாம்.

ஆனாலும் இதற்கான காரணங்களை ஆராயும் அவர்கள் இது ஒரு மனநோய் என முற்றாக புறந்தள்ளி விடவில்லை. சிறுவதில் இருந்தே சரியான வழிகாட்டல் இல்லாததும், யாருமற்ற நிலையில் கவலை கொண்டு வேறு சிந்தனைகளை ஏற்படுத்தி வளர்த்துக் கொள்வதும், மற்றவர்களால் ஒதுக்கப்படுவதும் என ஆரம்பமாகி வளர்கின்றது என்கிறார்கள். இது மட்டுமே காரணமா? இன்னொரு காரணமும் வைக்கப்படுகிறது.

மீண்டும் மீண்டும் தூண்டப்படும் செயல் அல்லது எண்ணங்கள்-அது சம்பந்தப்பட்டவர் தானாகவோ அல்லது வேறொரு வெளித் தூண்டுதலாகவோ இருக்கலாம்- அவரை தூண்டுகிறது. அது நீண்ட காலமாக இருக்க வேண்டியதில்லை எனவும் குறைந்தது ஒரு சில மாதங்களே போதுமானதாகும் என்கிறார்கள்..

அந்த செயல் கொலைவெறியாகவோ, மதுவின் பால் ஏற்படும் ஆசையாகவோ, பாலியல் இச்சையாகவோ தொடங்கி, கட்டுப்படுத்த முடியாத வெறி நிலைக்கு அவரைக் கொண்டு செல்லலாம். அதை யாரும் ஆரம்பத்தில் தடுக்காத நிலையில் அல்லது அவரே அதற்கு கடிவாளம் போட்டுக் கொள்ளாத நிலையில் , அந்தக் கற்பனைகள் தொடர்ந்து வளர்ந்து அதை செயலாக்க முனைகிறார்.இந்த நிலை abuse பெண்களிடம் மிகக் குறைவாகவே காணப்படுகிறது என்கிறார்கள்.

இந்தத் தூண்டுதல் இணையம்-முக்கியமாக சமூகத்தளங்கள்,வீடியோ விளையாட்டுகள், சினிமா இப்படி எதுவாகவும் இருக்க முடியும். இந்தத் தூண்டுதலை அவர் தனிமையில் வளர்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அதை அவர் தான் செய்த கற்பனைகளை நிசத்தில் செய்ய முடியும் என நம்பி சமயம் பார்த்து செயல்படுகிறார்.

வேண்டாம் என்று சொல்லச் சொல்ல துரத்திக் காதலிக்கும் கதாநாயகன்,முடிவில் அவன் வலையில் விழும் கதாநாயகி-தமிழ் சினிமா- அதை நிசம் என நம்பும் அவர், அதை செயல்படுத்தி விட முடியும், எல்லாருமே அப்படித்தான் என நம்புகிறார்.அவர் கற்பனை மெல்ல செயல் உருவம் பெறத் தொடங்குகிறது.

இன்று வலைப்பக்கங்கள் சுலபமாகவும் இலவசமாகவும் உருவாக்கிக் கொள்ள முடியும். இந்த நிலையில் நல்ல சிறப்பான பக்கங்களை உருவாக்காமல், காமக் கதைகள் என பல(அண்ணி... அத்தை.. இப்படிப் பல), தமிழில் கூகிளில் தேடும் போது அள்ளி வீசப்படும் நிலையில்............
மேலே சொல்லப்பட்ட நபர் அப்படியானவற்றைக் கூட தன் மடிக்கணினியில் படித்து தன் கற்பனைகளை வளர்த்திருக்கக் கூடும்.

அந்த மன நிலைக்கு தன்னை வளர்த்துக் கொண்டது யார் தவறு? மன நோய் என ஒதுக்கி விட்டு நாம் தப்பித்துக் கொள்ளப் போகிறோமா? தெரியவில்லை.

ஆனாலும் ஒன்று மட்டும் தெரிகிறது. அரசு, சினிமா,தொலைக்காட்சிகள் மட்டுமல்லாது பெற்றோர்,சமூகம்,கல்வி (சீர்திருத்தம்) எல்லாமே சமூக அக்கறை கொண்டு தங்களை ஒருமுறை பரிசீலணைக்கி உட்படுத்திக் கொண்டால்??. நாமும் சமூகத்தில் ஒரு பங்குதாரர் என்பதை எண்ணிப் பார்த்துக் கொண்டால் மாற வழி பிறக்கும்.
இது எங்கோ நடக்கும் ஓரிரு செயல் தான் என கண்களை முடிக்க கொண்டால் .................அப்படிக் கண்களை முடிக்க கொண்டதன் விளைவை இன்று அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறோம்.

இதை நான் சொல்லவில்லை.American Psychiatric Association சொல்கிறது. அவர்களே தாங்கள் செல்லும் பாதை தவறென்று சிந்திக்க ஆரம்பிக்கும் போது, பழம்பெருமை பேசும் நாம் ஏன் சிந்திக்கக் கூடாது?
avatar
Guest
Guest


Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 6:23 am

kiruba veluchamy wrote:காதல் சைடு ரோலாக வரலாமே தவிர மெயின் ரோலாக தயாரிக்கப்படும் படங்கள் திரையிட அனுமதிக்க கூடாது

இதெல்லாம் காதல் பிரிவில் வராது . காமம் --உடல் வேட்கையை தணிக்க ,துணிந்திடும் கொடூர எண்ணங்களின் அரங்கேற்றங்கள் .
பாவம் சிறுமியர்கள் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 6:28 am

murthy wrote:அந்த மன நிலைக்கு தன்னை வளர்த்துக் கொண்டது யார் தவறு? மன நோய் என ஒதுக்கி விட்டு நாம் தப்பித்துக் கொள்ளப் போகிறோமா? தெரியவில்லை.

அந்த மனநிலைக்கு காரணம் இன்றைய ஊடகங்கள் என்றே கூறுவேன் .  உடனுக்குடன் ஒரு மறக்கமுடியா தண்டனைகள் கொடுத்தால்தான் இவர்கள் அடங்குவார்கள் . வயது /பதவி / சமூக அந்தஸ்து  என பிரிக்காமல் தண்டனை தரப்படவேண்டும் .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by கார்த்திக் செயராம் Tue Jul 05, 2016 8:30 am

ஊடகம் ,ஊடகம் சார்ந்த வியாபாரம் கேட்பரி சாக்லேட் விளம்பரத்தில் புதிதாக வகுடி வரும் வீட்டு தாயும் ,மகனையும் பக்கத்து வீட்டில் உள்ள தந்தையும், மகளும் சைட் அடிப்பது போன்ற கட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தது.. இது போன்ற காட்சிகளை ஏன் சென்சார் போர்டு தடை செய்ய வில்லை..???


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by T.N.Balasubramanian Tue Jul 05, 2016 10:40 am

கத்திரி போடவேண்டிய அவசியம் உள்ளது .
அரசு கவனிக்கவேண்டிய /செய்யவேண்டிய சீர்திருத்தங்களில் இதுவும் ஒன்று கார்த்திக் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 05, 2016 10:44 am

கெட்டு குட்டிச்சுவராக ஆகிக்கொண்டிருக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?  Empty Re: எங்கே போகிறது இன்றைய இளைஞர் சமுதாயம் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum