ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
 ”இருசொல் அலங்காரம்” ! Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! Poll_c10 
Dr.S.Soundarapandian
 ”இருசொல் அலங்காரம்” ! Poll_c10 ”இருசொல் அலங்காரம்” ! Poll_m10 ”இருசொல் அலங்காரம்” ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

”இருசொல் அலங்காரம்” !

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty ”இருசொல் அலங்காரம்” !

Post by krishnaamma Thu Jun 23, 2016 1:19 pm

ஒருத்தன்கிட்ட ”கால்ல எப்படி அடிபட்டுச்சின்னு?” நண்பன் கேட்டானாம்
அதே நேரம் இன்னொரு நண்பன் ”நீ எந்த ஊருக்கு போகணும் ” என்று கேட்டானாம்.
இரண்டுக்கும் ஒரே பதில்தான்...அது என்னன்னு சொல்லுங்க...

“செங்கல் பட்டு”

இலக்கியத்தில் ”இருசொல் அலங்காரம்” என்று சொல்கிறார்கள்.இரண்டு கேள்விகளுக்கு ஒரு பதிலாயிருந்தால் அது இருசொல் அலங்காரம் எனப்படுகிறது.மூன்று கேள்விகளுக்கு ஒரே பதிலாகி வந்தால் அது “முச்சொல் அலங்காரம்’ எனப்படுகிறது.

1. சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ?

விடை: பெருங்காயத்தால்  

2. எருக்கம் இலை பழுப்பதேன்,
எருமைக்  கன்று சாவதேன்?

விடை: பால் வற்றி............


3. உடம்பில் வியாதிகள் பெருகுவதேன்?
குடும்பச் செலவு கூடுவதேன்?

'விடை:'உழைப்பின்றி!''.

4. நெல் அளப்பதும் எதனாலே ?
நொண்டி நடப்பதும் எதனாலே ?

மரக்காலால் .

5. அச்சு வண்டி ஒடுவதேன்
மச்சான் உறவாடுவதேன்.

விடை :- அக்காளைக் கொண்டு (அக் காளையைக் கொண்டு ;
அக்காவைக் கொண்டு)

6.அரக்கு பொன்னிறம் ஆவதேன்
அனுமார் இலங்கைக்கு போனதேன்?

விடை :- அரிதாரம் ( சாயம்; அரியின் தாரம்... (ராமர் அரியின் அவதாரம் தானே))

7.கீரை விதைப்பதேன்
கிழோர் செல்வரைச் சுற்றுவதேன்?

விடை :- (பிடுங்கித் தின்ன ( கீரையைப் பிடுங்கித்தின்ன; பணக்காரர்களை பிடுங்கித்தின்ன)

8.சந்தனம் சிறந்தது ஏன்?
சொந்த உறவு துறந்ததது ஏன்?

விடை :- பூசலாலே (சந்தனம் பூசுவதாலே;சண்டையினாலே)


* இதுபோல நிறைய படிக்க ஆசை.......Guest இருந்தால் பகிருங்கள் ! :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 1:55 pm

காட்டுவழி சென்றவன் செத்தது ஏன் ?
காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது ஏன் ?

இரண்டுக்கும் ஒரேவிடை " அம்மாவால் " என்பது .

காட்டுவழி சென்றவன் செத்தது அம்மாவால் . மா என்றால் விலங்கு என்று பொருள் . அதாவது காட்டுவழி சென்றவன் அந்த விலங்கால் கொல்லப்பட்டான் என்பது பொருள் .

காட்டாற்று வெள்ளம் சென்னைக்கு வந்தது அம்மாவால் . அதாவது " அம்மா " என்ற பெயர் கொண்டவரால் சென்னைக்கு காட்டாற்று வெள்ளம் வந்தது என்பது மற்றொரு பொருள் .

( இதை நகைச்சுவைக்காக மட்டும் எடுத்துக் கொள்க . அரசியல் இல்லை )


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by T.N.Balasubramanian Thu Jun 23, 2016 3:14 pm

நகைச்சுவைக்காக என்று எடுத்துக் கொண்டாலும் ,
உண்மையை ஒத்துக்கொள்ள  மனம் மறுக்கிறது .என்ற வெளிப்பாடு தெரிகிறது .
சைனாவில் பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன  - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .
பிரான்ஸ் ,ஜெர்மனி , US ஹூஸ்டனில் ,பெரு மழை ,வெள்ளம் , கார்கள் மூழ்கின ,வீடுகள் இடித்தன  - எல் நினோ வின் விளைவு ஒத்துக்க கொள்கிறோம் .

ஆனால் சென்னையில் மூன்று மாத மழை ஒரே நாளில் என்றால் ஒத்துக்க கொள்ள மறுக்கிறோம் .

ஆம் வெள்ளைக்காரன் பொய் சொல்லமாட்டான் என்ற நம்பிக்கை என்பதா அல்லது ..................

காட்டுவழி சென்றவன் செத்தது ஏன் ?
இட்லி தோசை பலகாரம் கிடைத்தது எதனால் ?
இட்லி ஒருரூபாய்க்கு கிடைப்பது எப்பிடி ?

அம்மாவால்  --

இதுவும் ஒத்துக்கொள்ளக் கூடியதே .

முச்சொல் அலங்காரம் ---

( அவரவர் எண்ணங்களுக்கேற்ப அம்மாவிடம் குறைகள் இருக்கலாம் .
வானிலை பொறுத்த அளவில் ,உலகளவில் வானிலை வல்லுநர்கள்
கூறியதற்கு சிறிது மதிப்பு கொடுக்கவேண்டும் என்பது எந்தன் கருத்து .
இது அரசியல் இல்லை .)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by T.N.Balasubramanian Thu Jun 23, 2016 3:26 pm

க்ரிஷ்ணாம்மா கேட்டதற்கிணங்க ,

ஈஸ்வர வருடம் பிறப்பதேன் ?
பிறந்த உயிர் இறப்பதேன் ?

விடை : தாது போவதால்

(எனக்கு தெரிந்த மற்ற இரு சொல் அலங்காரத்தை நீங்களே அலங்கரித்துவிட்டீர் . ஞாபகம் வரின் பகிர்கிறேன் )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 10:20 pm

மரம் துண்டுகளாக ஆவதேன் ?
மாணவர்கள் ஆசிரியரை வெறுப்பதேன் ?

- அறுவையால்


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by M.Jagadeesan Thu Jun 23, 2016 10:22 pm

தேளைக் கண்டு அஞ்சுவானேன் !
மழையைக் கண்டு மகிழ்வானேன் !

- கொட்டுவதால் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by krishnaamma Thu Jun 23, 2016 11:10 pm

மிக மிக அருமை ஜெகதீசன் ஐயா!..............  ”இருசொல் அலங்காரம்” ! 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! 3838410834  ”இருசொல் அலங்காரம்” ! 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
.
.

.
மிக மிக அருமை ராமணீயன் ஐயா !............... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி :ட

இருவருக்கும் மிக்க நன்றி! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by prajai Sat Jun 25, 2016 5:41 pm

முத்தமிழ்  என்ற கூகுள் க்ரூபில் 2009 மார்ச்சில் பதியப்பட்டது.

ஆலிலை பறிப்பதேன் ?, அனுமார் இலங்கைக்குப் போனதேன் ?

தையலுக்காக
(ஆலிலையை தைத்து அழகான தட்டு செய்வார்கள் - தையலுக்காக
அனுமார் போனது சீதையைத் தேடி - தையலுக்காக )


அதில் காணப்படும் “தேறாத கேஸ்” இரகத்தில் ஒன்று.

படிக்கும் பத்திரிகை பிறந்தது எதனால்? வண்டி ஓடுவது எதனால்?-அச்சினால்

நீங்கள் கொடுத்துள்ள சாம்பார் மணப்பது எதனாலே,
பெரும் படை அவதியுறுவது  எதனாலே ? என்பதை அதில்
ரசம் மணப்பதேன் ?, ரத்தம் பெருகுவதேன்  ?-பெருங்காயத்தால் என்று கொடுத்துள்ளார்கள்.

பெருங்காயத்தை வைத்து எனக்குத் தோன்றியது. - காயம் என்றால் உடல் என்ற பொருள் உண்டு. (காயமே இது பொய்யடா ……) அதனால்,

நடந்தால் மூச்சிறைப்பதெதனால்  -  பெருங்காயத்தால்.


எனக்குத் தோன்றிய “தேறாத கேஸ்” இரகத்தில் இரண்டு.

நல்லபாம்பு எடுப்பது எது?, கேமரா பிடிப்பது எது?  - படம்
தவமியற்றும் முனிவர் நாடுவது எது? வழி தவறிய குழந்தை தேடுவது எது? -   வீடு

சிலேடைப் புலி என்று பாரட்டப்பட்டவர் கி.வா.ஜகந்நாதன் அவர்கள். இதோ எனக்குப் பிடித்த சிலேடை.

சென்னையில் குமரி அனந்தனும், கி.வா.ஜ.வும் கலந்து கொண்ட ஒரு கூட்டம். முதலில் பிரமாதமாகப் பேசிவிட்டு அமர்ந்தார் குமரி அனந்தன். பலத்த கைதட்டல். அடுத்து பேச வந்தார் கி.வா.ஜ.

“குமரி அனந்தன் அருமையாகப் பேசினார்” என்று பாராட்டிவிட்டு, அவரிடம் “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார்.

“வண்ணாரப்பேட்டையிலிருந்து” என்றார் அவர். உட்னே சொன்னார் கி.வா.ஜ.

“அதான் இப்படி வெளுத்துக்கட்டிவிட்டீர்கள்” சபையில் கைதட்டல் அடங்க வெகுநேரமாயிற்று!

இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.

அழுக்கு வேட்டியை என்ன செய்தான்? மேடையில் பேசியவன் என்ன செய்தான்?  - வெளுத்துக்கட்டினான்.

இன்னொன்று

கி.வா.ஜ தலைமையில் அந்தக் காலத்தில் ஒரு இலக்கியக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் விவாதம் வலுத்து பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டது. சிறிது நேரத்தில் சண்டையும் வலுத்து ஒருவருக்கொருவர் திட்டிகொள்ள தொடங்கினர். கி.வா.ஜ எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் பொறுமை இழந்த கி.வா.ஜ கூட்டத்தை விட்டு எழுந்து வெளியே வந்துவிட்டார். வெளியே மழை பெய்துகொண்டிருந்தது.

அப்பொழுது அவர் சொன்னார் "உள்ளேயும் தூற்றல் வெளியேயும் தூற்றல்".

இதை இருசொல் அலங்காரமாக்கவேண்டுமென்றால் இப்படிச் சொல்லலாம்.

பலர்`கூடி சண்டையிட்டால் கேட்பதென்ன?  மேகம் குறைவாகப் பொழிந்தால் வருவதென்ன? - தூற்றல்.

இணயத்தில் நிறைய சிலேடைகள் கிடைக்கின்றன. அவற்றைத் தேடி, இருசொல் அலங்காரமாக்கி மகிழுங்கள்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 612
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by T.N.Balasubramanian Sat Jun 25, 2016 6:43 pm

அந்த காலத்தில் கலைமகள் என்றொரு பத்திரிகை வந்து கொண்டு இருந்தது .
அதில் ஆசிரியர்  கி வ ஜ (விடையவன் ) அவர்களின்  கேள்வி பதில் ரசித்து அனுபவிக்கத் தக்க
முறையில் இருக்கும் . பல பதில்கள் சிலேடையாக பதிலளித்திருப்பார் . இலக்கண விளக்கங்கள் ,
பழைய கவிதைகள் பற்றிய அரிய தகவல்கள் அவர் தந்திருப்பார் .  பொன்னான காலம் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sun Jun 26, 2016 7:09 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by M.Jagadeesan Sun Jun 26, 2016 5:07 pm

பற்கள் விழுவது என் ?
பரமசிவன் களைப்பது ஏன் ?

- ஆடுவதால் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

 ”இருசொல் அலங்காரம்” ! Empty Re: ”இருசொல் அலங்காரம்” !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum