ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 25, 2024 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 25, 2024 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

+5
சிவனாசான்
Hari Prasath
ayyasamy ram
M.Jagadeesan
krishnaamma
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:20 am

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! XZWh4sXGSf61I6ROv7lF+Tamil_News_large_1533401_318_219

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்னும் புதிய அரசு பதவியேற்காத நிலையில், அங்கு புதிய துணைநிலை ஆளுனராக பதவியேற்றுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடி பல புதிய அறிவிப்புக்களை அதிரடியாக அறிவித்துள்ளார்.கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி துணைநிலை ஆளுனராக பதவியேற்றுக் கொண்ட கிரண்பேடி, 1031 என்ற இலவச அழைப்பு எண்ணை அறிவித்துள்ளார்.

ஜூன் 8 ம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் இந்த அழைப்பு எண்ணை தொடர்பு கொண்டு மக்கள், லஞ்சம், ஈவ் டீசிங், சமூக விரோத செயல்பாடுகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்களை அளிக்கலாம். புதுச்சேரியை அமைதியான யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்காக குற்றங்களை தடுக்கவும், சாலை பாதுகாப்பை மேற்படுத்தவும் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இலவச அழைப்பு சேவை எண் மூலம் அளிக்கப்படும் புகார்கள் மிக ரகசியமாக வைக்கப்படும் எனவும் கிரண்பேடி உறுதி அளித்துள்ளார். புகார் அளித்தவர் பற்றிய விபரம் போலீஸ் ஐஜி மற்றும் தலைமை செயலருக்கு மட்டுமே தெரியும் வகையில் இந்த புகார்கள் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொய் புகார்கள் அளிப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குற்றம் தொடர்பாக புகார் அளிப்பவருக்கு உரிய நீதி பெற்று தரும் போலீசாருக்கு பரிசு வழங்கப்படும்.

கல்வித்துறை செயலர் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் ஆகியோர் பள்ளிகளுக்கு அதிரடி விசிட் செய்து ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். இதே போன்று மருத்துவமனைகைளுக்கு ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட வேண்டும். விஐபி.,க்கள் வருகைக்காக போக்குவரத்தை நிறுத்த கூடாது எனவும், இந்த உத்தரவுகள் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வர வேண்டும் எனவும் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

காலில் விழும் கலாச்சாரத்துக்கு கண்டனம்: விஐபி கலாச்சாரத்தை மாற்ற வேண்டும் என்பதை தனது பதவியேற்பு விழாவிலேயே கிரண்பேடி மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. பதவியேற்பு விழாவில் தனது காலில் விழுந்த ஒரு பெண் எம்.எல்.ஏ.,வின் காலில் பதிலுக்கு விழுந்து வணங்கிய கிரண் பேடி, காலி்ல விழுந்து வணங்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினார்.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by krishnaamma Wed Jun 01, 2016 11:21 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by M.Jagadeesan Wed Jun 01, 2016 2:43 pm

நம் இந்திய அரசியல் சட்டப்படி , கவர்னர் என்பவர் ஒரு பொம்மையே ! மந்திரிசபை பதவியேற்றவுடன் இவருடைய கெத்து & கெடுபிடிகள் எல்லாம் அடங்கிவிடும் .

ரோசய்யா தேர்தல் ஆணையத்துடன் மோதி மூக்கு உடைபட்டது இவருக்குத் தெரியாது போலும் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by ayyasamy ram Wed Jun 01, 2016 6:43 pm

புதுச்சேரியில் சமூக விரோத செயல், ஊழல் புகார்களுக்கு 1031-ல் அழைக்கலாம்: கிரண்பேடி புதிய நடைமுறை
-
புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று நடந்த பொதுமக்கள்
கலந்துரையாடல் நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர்
கிரண்பேடி ஆங்கிலத்தில் பேச, அதனை டிஐஜி கண்ணன் ஜெகதீசன்
தமிழில் மொழிபெயர்க்கிறார்.

புதுச்சேரியில் சமூக விரோத செயல்கள், ஊழல், முறைகேடுகள்
குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க ஏதுவாக 1031 என்ற இலவச
தொலைபேசி எண் ஒருவாரத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற கிரண்பேடி,
மாநிலத்தில் குற்றங்கள் தடுப்பு, சாலை போக்குவரத்து பாதுகாப்பு
தொடர்பான வரைவு திட்டங்களை தயாரிக்கும்படி ஐஜி பிரவீர்
ரஞ்சனுக்கு உத்தரவிட்டார்.

இதன்படி காவல்துறை ஐஜி தலைமையிலான குழு வரைவு
திட்டங்களை தயாரித்து வழங்கியுள்ளது. அதன் வெளியீட்டு விழா
மற்றும் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டம் நேற்று இரவு கம்பன்
கலையரங்கில் நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா வரவேற்றார். வரைவுத்
திட்டங்கள் தொடர்பாக ஐஜி பிரவீர் ரஞ்சன் நோக்கவுரை ஆற்றினார்.
வரைவுத் திட்டங்களை வெளியிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
பேசியதாவது:

‘‘புதுச்சேரி மிகவும் அழகான அமைதியான மாநிலமாகும்.
இச்சிறிய யூனியன் பிரதேசத்தில் குற்றங்கள் நடைபெறுவதை முன்
கூட்டியே தடுக்கவில்லை என்றால் காவல்துறை தங்கள் பணிகளை
செய்யவில்லை என்பது தான் பொருளாகும்.

குற்றங்களை தடுப்பதில் காவல்துறை மட்டும் தனித்து செயல்பட
இயலாது. பொதுமக்கள் பங்களிப்பும் அவசியமாகும்.
இரு தரப்பினரும் இணைந்து செயல்பட்டால் குற்றமில்லா நகராக
புதுவையை உருவாக்க முடியும்.

புதுச்சேரியில் நடைபெறும் சமூகவிரோத செயல்கள், ஊழல், முறைகேடு,
ரௌடிகள் குறித்த விவரங்கள் தொடர்பான புகார்களை பொது மக்கள்
தெரிவிக்க காவல்துறை சார்பில் 1031 என்ற இலவச தொலைபேசி எண்
இன்னும் ஒரு வாரத்தில் அறிமுகம் செய்யப்படும்.

அதாவது வரும் புதன்கிழமை முதல் இந்த தொலைபேசி எண் செயல்படும்.
புதுச்சேரியில் குற்றங்களை ,ஊழல், குறித்த தகவல்களை 1031 என்ற
எண்ணில் தெரிவிக்கலாம்.

புகார்கள் தெரிவிப்போரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
துணை நிலை ஆளுநர், தலைமை செயலர், காவல்துறை தலைவர் என
மூவருக்கும் மட்டும் தெரியும். தகவல் தெரிவிப்போர் விரும்பினால் மட்டுமே
அவர்களை பற்றிய விவரங்கள் வெளியிடப்படும். மேலும் தகவல்
உண்மையாக இருந்தால் உரிய வெகுமதியும் தரப்படும்.

வணிகவரி துறை ஆணையர் விற்பனையை வரியை வசூலிக்கும் பணியை து
வங்கி விட்டார். மக்கள் தாங்கள் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும்
ரசீதை கேட்டுப் பெற வேண்டும். மத்திய அரசிடம் புதுவை கடன் பெற்று
தனது நிர்வாகத்தை நடத்தி வருகிறது. இதற்காக ஆண்டுதோறும் நூற்றுக்
கணக்கான கோடி ரூபாயை வட்டியாக செலுத்தி வருகிறோம்.

மத்திய அரசிடம் நிதி பெறாமல் தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாற
அனைவரும் ஒத்துழையுங்கள்.

ஒரு வாரத்திற்குள் வணிகர்கள் தங்களது கணக்குகளை சரியாக்கி
விடுங்கள். அரசு பள்ளிகள் மற்றும் அரசு துறைகளில் செயலர்கள்,
இயக்குநர்கள் திடீர் சோதனை நடத்துவார்கள். ஆசிரியர்கள் பணியில்
உள்ளனரா என்பதை கண்டறிய மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் நல்ல அரசு ஊழியர்களை பாராட்ட இந்த நடவடிக்கை அவசியமாகும்.

ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படுவர். மேலும்
ஒரு வாரத்திற்குள் நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். நடை
பாதைகள் மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். புதுச்சேரியில்
தடை செய்யப்பட்ட இடங்களை வாகனங்களை நிறுத்தினால் போக்குவரத்து
போலீசார் அகற்றுவார்கள்.

போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு சம்பவ இடத்திலேயே உடனடி
அபராதம் வசூலிக்கப்படும்.

விஐபிக்களுக்காக போக்குவரத்து நிறுத்தப்படாது. எந்த விஐபிக்களுக்காகவும்
போக்குவரத்து நிறுத்தப்படாது. மேலும் வாகனங்களில் சைரன் ஒலியும்
இருக்காது. பொதுமக்கள் புகார்களை தெரிவிக்க தனி ஈ-மெயில் முகவரி
அளிக்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய
வேண்டும். இதுதொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்படும்.

அரசு மற்றும் தனியார் மூலம் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.
அரசியல் குறுக்கீடு இருந்தால் அனுமதிக்க மாட்டோம். நல்லதாக இருந்தால்
ஏற்றுக் கொள்ளப்படும்.

அனைத்து துறைகளிலும் மேம்படுத்துவதற்காக மக்கள், தன்னார்வலர்,
நிபுணர்கள் ஆகியோர் கருத்தறியப்படும்.

புதுச்சேரி மக்களின் ஒவ்வொரு ரூபாயும் முறையாக செலவிடப்படும்
தினமும் மாலை 5 மணி முதல் 6 மணி வரை ராஜ்நிவாசில் பொதுமக்கள்
துணை நிலை ஆளுநரை சந்திக்கலாம்.’’ என்றார். முன்னதாக கூட்டத்தில்
பங்கேற்ற பொதுமக்களிடம் தங்கள் கருத்துக்களை தெரிவிப்பதற்கான
படிவங்கள் வழங்கப்பட்டு அவர்கள் அளித்த பதில்களும் பெறப்பட்டன.

அவற்றை மேடையில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாசித்து,
உரிய வகையில் அவை செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
-
--------------------------------------------
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82710
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by Hari Prasath Wed Jun 01, 2016 9:36 pm

ஆளுநர்க்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துகிறார்...மகிழ்ச்சியான விஷயம்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by krishnaamma Thu Jun 02, 2016 12:44 am

Hari Prasath wrote:ஆளுநர்க்கு உரிய அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்துகிறார்...மகிழ்ச்சியான விஷயம்
மேற்கோள் செய்த பதிவு: 1209536

ஆமாம், நல்லவர்கள் கையில் அதிகாரம் இருந்தால் நாட்டுக்கு நல்லதே நடக்கும் புன்னகை .....அதுபோல இவர் நல்லது செய்யட்டும் !..........எனக்கு எப்போதுமே இவர் மேல் ஒரு நல்ல மதிப்பு உண்டு ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by சிவனாசான் Thu Jun 02, 2016 8:47 am

ஆளுநர் என்றால் இப்படித்தாங்க இருக்கனும். அரசுக்கு கம்பங்கொல்லை பொம்மை போல் அல்லாமல் தன் அதிகாரத்தை செயல்படுத்தி அரசு நிர்வாகத்தை நேர்செய்னுங்க. பாராட்டுகள். இவரைப்போன்று நிறைய ஆளுநர்கள் நாட்டுக்கு தேவைங்க.?>>>>>>>>>>>
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by anikuttan Thu Jun 02, 2016 3:02 pm

இப்படி ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசின் தேவை ? புதுச்சேரி அரசுக்கு தலைவலிதான்.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by யினியவன் Thu Jun 02, 2016 3:43 pm

ஒரு 1031 க்கே இவ்ளோ அமர்க்களமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by ராஜா Thu Jun 02, 2016 3:54 pm

M.Jagadeesan wrote:நம் இந்திய அரசியல் சட்டப்படி , கவர்னர் என்பவர் ஒரு பொம்மையே ! மந்திரிசபை பதவியேற்றவுடன் இவருடைய கெத்து & கெடுபிடிகள் எல்லாம் அடங்கிவிடும் .

ரோசய்யா தேர்தல் ஆணையத்துடன் மோதி மூக்கு உடைபட்டது இவருக்குத் தெரியாது போலும் !
சூப்பருங்க நன்றி

கொஞ்ச நாள் ஆனபிறகு தானா சரியாயிடுவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி! Empty Re: அதிரடியில் அசத்தும் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பதவியேற்பு
» தெலுங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் காலமானார்
» கவர்னர் மீது சேற்றை வாரி இறைக்க வேண்டாம்: மம்தா அரசுக்கு கவர்னர் பதிலடி
» கவர்னர் பர்னாலா 20ந் தேதி ஓய்வுபெறுகிறார்: அடுத்த கவர்னர் யார்? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
» மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விடவேண்டும்: கிரண்பேடி உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum