ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

2 posters

Go down

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள் Empty பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

Post by அபிராமிவேலூ Thu Nov 19, 2009 12:21 pm

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்


[You must be registered and logged in to see this image.]இமெயில்கள்
வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல
முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக்
கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு
கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது.
ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில்
புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம்
என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர்.
பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி
பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர்
கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது
தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத்
தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை
கருதி அவை வெளியிடப்படும்.
1. வங்கிகளிலிருந்து (ICICI, HDFC, Axis, PNB, Citi Bank ) வந்தது போல
இமெயில்கள் அனுப்பப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும், உங்களுடைய கணக்கில்
சில தொகை விடுபட்டிருப்பது போல உள்ளது. எனவே கீழே உள்ள லிங்க்கில் கிளிக்
செய்து தகவல்களைத் தரவும் என்று ஒரு லிங்க் தரப்பட்டிருக்கும். அக்கவுண்ட்
இல்லாதவர்களுக்கும் கூட இந்த மெயில் அனுப்பப்படும். லிங்க்கில் கிளிக்
செய்தால் அந்த வங்கியின் லோகோ மற்றும் அதன் இணையதள முகப்பு பாணியில்
அமைந்த ஓர் இணையதளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். பின் பக்கம்
பக்கமாகச் சிறுகச் சிறுக தகவல்கள் வாங்கப்படும். உங்கள் பெயர், ஊர்,
முகவரி, வங்கி அக்கவுண்ட் எண் , இன்டர்நெட் அக்கவுண்ட் யூசர் நேம்,
பாஸ்வேர்ட்,ஆகியவை பெறப்படும். இவற்றைப் பெற்றவுடன் உங்கள் வங்கிக்
கணக்கிலிருந்து இன்டர்நெட் வழியாக நெட் பேங்கிங் வசதி மூலம் பணம் இன்னொரு
அக்கவுண்ட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்யப்படும். இது போல ட்ரான்ஸ்பர்
செய்யப்படும் அக்கவுண்ட் உடனே அந்த வங்கியில் மூடப்படும். பெரும்பாலும்
இவை பாதுகாப்பற்ற வங்கி அக்கவுண்ட் அல்லது வெளிநாட்டு வங்கி கிளை
அக்கவுண்ட்டாக இருக்கும்.
2. மேலே சொன்னது போன்ற வங்கிகளில் இருந்து, கீழ்க்கண்ட தகவல்களை
உறுதிப்படுத்த நீங்கள் பலமுறை கடிதம் அனுப்பியும் முன்வரவில்லை. இதுவே
இறுதி கடிதம். இன்னும் 48 மணி நேரத்தில் சரியான தகவல்களைத் தந்து அப்டேட்
செய்யா விட்டால் உங்கள் அக்கவுண்ட் சேவை நிறுத்தப்படும் என நம் கழுத்தின்
மீது அமர்ந்து கொண்டு பேசுவது போன்ற தோரணையில் கடிதம் வரும். நாம் நம்
அவசர வேலைகளில் இது உண்மை என நம்பி தகவல்களை அளித்துவிடுவோம். எந்த
வங்கியும் இது போன்ற மெயில்களை அனுப்புவதில்லை. எனவே இது போல எந்த
வங்கியின் பெயரில் மெயில் வந்தாலும் திறக்க வேண்டாம். ஆர்வத்தில் கூட இது
என்னதான் பார்த்துவிடுவோமே என்று காரியத்தில் இறங்க வேண்டாம். பின் நம்
பணத்திற்கு காரியம் செய்தவர்களாகிவிடுவோம்.
3. இதே போல Security Alert / Net Bank Alert என சப்ஜெக்ட்
தலைப்பிட்டு, வங்கியின் சர்வர் கிராஷ் ஆகி தற்போது
சரிப்படுத்தப்பட்டதாகவும், உங்கள் அக்கவுண்ட் தகவல்களைச் சரி பார்க்க கீழே
உள்ள லிங்க் கிளிக் செய்திடுமாறு கடிதங்கள் வரும். இவையும் ஏமாற்றுபவையே.
4. வங்கி முகவரியிட்டு எச்சரிக்கைக் கடிதம் போல தந்து ஏமாற்றுபவர்களும்
இருக்கிறார்கள். எங்கள் வங்கியிலிருந்து வந்தது போல மெயில்கள் வரும்; நம்ப
வேண்டாம். உண்மையான லிங்க் இதுதான். நீங்கள் கிளிக் செய்து உங்கள்
தகவல்களைப் பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள் என்று மெயில் வரும். கிளிக்
செய்தால் மீண்டும் அதே கதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு உங்கள் பெர்சனல்
தகவல்களை இழப்பீர்கள்.
5. இமெயில் பயன்படுத்தும் லட்சக்கணக்கான பேர்களில், உங்களையும்
சேர்த்து பல நாடுகளில் ஒரு சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, உங்களுக்கு
வாழ்த்து தெரிவித்து, வெளிநாட்டுக் கார் ஒன்று பரிசாகத் தரப்போவதாக
உங்களுக்கு மெயில் வரும். இதில் என்ன அக்கவுண்ட் நம்பரா தரப்போகிறோம்
என்று அந்த மெயில் கூறும் இமெயில் முகவரிக்குக் கடிதம் எழுதினால்,
உங்களைப் போல அதிர்ஷ்டசாலி உலகிலேயே இல்லை என்ற ரேஞ்சுக்கு பல மெயில்
கடிதங்கள் தொடர்ந்து வரும். அந்தக் கடிதங்களில் சின்ன சின்ன தகவல்கள்
(சொந்த வீடு, மாத வருமானம், முகவரி, கார், இரு சக்கர வாகனம், கடன், பேங்க்
அக்கவுண்ட் போன்றவை) சேகரிக்கப்படும். இவற்றை வைத்து நீங்கள் எவ்வளவு பணம்
வரை இழக்க இருப்பீர்கள் என முடிவு செய்திடுவார்கள். பின் ஒரு நாளில்,
பரிசுக் காரின் மதிப்பு ரூ.89 லட்சம் என்றும் அதனை அனுப்புவதற்கான பணம்
நீங்கள் முதலில் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டு ஒரு தொகையை நெட்
பேங்கிங் மூலம் செலுத்த கேட்டுக் கொள்வார்கள். திட்டமிட்டு ஏமாற்றும் இது
போன்ற மெயில்களை நம்ப வேண்டாம்.
6. இத்தகைய மோசடிகளில் மிகப் பழைய வகை மோசடி இன்றும் தொடர்கிறது.
வெளிநாட்டில், பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடு ஒன்றில், ஒரு பெரும்
பணக்காரர் கோடிக் கணக்கான டாலர் மதிப்புள்ள பணத்தை வங்கியில் விட்டு
விட்டு இறந்துவிட்டதாகவும், அதனை மாற்றி எடுக்க நீங்கள் உதவ வேண்டும்
எனவும் முதலில் மெயில் வரும். பதில் அளிக்க வேண்டிய இமெயில், போன் எண்
எல்லாம் இருக்கும். நீங்கள் தொடர்பு கொண்டால் மிகவும் இரக்கத்துடனும்
ஆசையைத் தூண்டும் விதமாகவும் பேசுவார்கள். பணத்தை உங்கள் அக்கவுண்ட்டில்
செலுத்த அக்கவுண்ட் எண், பாஸ்வேர்டு கேட்கப்படும். அல்லது குறிப்பிட்ட
தொகை சர்வீஸ் சார்ஜாக கட்டச் சொல்லி தொலைபேசி மற்றும் மெயில் வழியாகத்
தொடர்ந்து பேசுவார்கள். குறைந்த பட்ச பணமாவது கட்டச் சொல்வார்கள்.
கட்டியவுடன் வந்தது தான் லாபம் என்று அப்படியே அமைதியாகிவிடுவார்கள். இதே
போல லண்டனில் தனியாக வாரிசு இன்றி, சொந்தம் இன்றி வசிக்கும் பெண்மணி
ஒருவர் எழுதுவதாக மெயில் வரும். தான் சாகப் போவதாகவும், தன் அளவிட முடியாத
சொத்தினை இந்தியாவில் ஒருவருக்குக் கொடுத்து தர்ம காரியங்களுக்குப்
பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரில் நீங்களும் ஒருவர் என்றும், உங்களை தத்து
எடுத்த பின்னரே சொத்துக்களைத் தர முடியும் என்றும் தேன் தடவாத குறையாக
மெயில் வரும். ஏமாந்தால் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் போய்விடும்.
7. வெளிநாட்டில் வேலை தருகிறேன் என்று சி.வி. வாங்கி பதிவதற்குப் பணம்
கட்டு, உங்களுடைய, திறமை அபாரம், ஏன் இன்னும் இந்தியாவில் இருக்கிறீர்கள்,
விசாவிற்கான பணம் மட்டும் கட்டுங்கள், இமெயில் வழியே டாகுமெண்ட் தயார்
செய்து கொடுங்கள், அதற்கு முன் எங்கள் நிறுவனத்தில் 500 டாலர் கட்டிப்
பதிவு செய்து கொள்ளுங்கள் என்றெல்லாம் வரும் மெயில்களை நம்பாதீர்கள்.
8. நிறுவனத்தின் பெயர், லோகோ போட்டு மெயில் வரும். எங்கள்
நிறுவனத்திற்கு உங்கள் நாட்டின் அருகே உள்ள நாடுகளிலிருந்து பணம்
தொடர்ந்து வரும். அதனை உங்கள் அக்கவுண்ட்டிற்கு அனுப்பச் சொல்கிறோம்.
நீங்கள் மொத்தமாக எங்கள் அக்கவுண்ட்டிற்கு மாற்ற வேண்டும். இந்த வேலைக்கு
மாதச் சம்பளமும் மாற்றும் பணத்திற்கேற்ப கமிஷனும், அலுவலகச் செலவிற்குப்
பணமும், எங்களின் ரீஜனல் மேனேஜர் என்ற பதவியும் தருவதாக மெயில் வரும்.
உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைக் கொடுத்தால் எந்த நாட்டு
வங்கிக்கோ உங்கள் பணம் நீங்கள் அறியாமலேயே மாற்றப்பட்டுவிடும். இது போன்ற
ஏமாற்று வேலைகள் இந்தியாவில் மட்டுமல்ல; உலகின் அனைத்து நாடுகளிலும்
நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இன்னும் என்னவெல்லாம் ஏமாற்று வேலைகள்
உருவாகுமோ தெரிய வில்லை. அத்தனையும் தெரிந்து பின் விழிப்பாய்
இருப்பதைவிட, உழைப்பின்றி வரும் பணத்தை எதிர்பார்க்காமல், அடுத்தவர்
பணத்திற்கு முறையின்றி ஆசைப்படாமல் “இருப்பது போதும் ஈசனே’ என்று இருப்பது
பாதுகாப்பல்லவா!

நன்றி: தினமலர் கம்ப்யூட்டர்மலர்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள் Empty Re: பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

Post by தாமு Thu Nov 19, 2009 12:31 pm

[You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள் Empty Re: பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

Post by அபிராமிவேலூ Thu Nov 19, 2009 5:08 pm

[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள் Empty Re: பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum