ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளுக்காக ஒருவன்!

2 posters

Go down

மகளுக்காக ஒருவன்! Empty மகளுக்காக ஒருவன்!

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:43 am

வாழ்க்கையின் மிகப் பெரிய பொறுப்பை நிறைவேற்றும் இடத்தில் நிற்கிறோம்...' என, நினைத்துக் கொண்டார், மந்திரமூர்த்தி. காரணம், மகள் பர்வதா!

அழகு, அறிவு, பண்பு என, நட்சத்திரம் போல ஒளிர்பவள். 23 வயதில், எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியராகி, நல்ல வேலையில் இருந்தாலும், சமையலை, கலையாகப் பயின்று, அம்மாவையும் குஷிப்படுத்துகிறாள். அத்துடன், பால்கனியில் குட்டியாகத் தோட்டம் போட்டு ரோஜா, புதினா, துளசி என்று வீட்டையே குளுமைபடுத்தி விட்டாள்.

கொலு வந்து விட்டால் போதும், அக்கம் பக்கத்து வீட்டு பெண்களும், சிறு பிள்ளைகளும், அவள் பெயரைச் சொல்லியபடி அவளை, 'ஹைஜாக்' செய்து விடுவர். இவளும், ஐ.பி.எல்., கிரிக்கெட், மயிலாப்பூர் கல்யாணம், ஒபாமா பார்லிமென்ட், கறுப்பு - வெள்ளை சினிமாக் காலம் என்று கொலுவை ரம்மியமாக்கி விடுவாள்.

'என் பொண்ணுன்னா சும்மாவா... கன்னியாகுமரி பர்வதவர்தினி கொடுத்த கொடை; இப்படித் தான் சகலகலாவல்லியா இருப்பா...' என்று அலட்டிக் கொள்வாள் மந்திரமூர்த்தியின் மனைவி.

ராஜகுமாரி போன்ற அழகும், பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் மனமும், அவ்வை போல கவிதையுணர்வும், ஜான்சிராணியைப் போன்ற கம்பீரமும் கொண்ட தன் மகளுக்கு, ஒரு நல்ல பாதுகாப்பாளன், கணவனாக வர வேண்டுமே என்ற கவலை அவருக்கு!

மூன்று ஆண்டுகளாக தலைக்கு மேல் இருந்த கவலை, இப்போது, ராம் அல்லது ராகவ் என்ற வடிவத்திற்குள் வந்து அடங்கி நிற்கிறது.

இந்த இருவரில் ஒருவனை, தன் மகளுக்காக பார்க்கலாம் என, மனதிற்குள் என்று பட்டதோ, அன்றே மகளை அழைத்து, 'பர்வதா... என் கூட, 30 வருஷம் வேலை பார்த்த சபேசனோட இரட்டை பசங்க, ராம் அண்ட் ராகவ்... உனக்கும் அவங்கள தெரிஞ்சிருக்குமே... நாம திருப்பூர்ல இருந்த போது, நீ படிச்ச பள்ளியில தான், அவங்களும் படிச்சாங்க. நம்ப வீட்டுக்கு வரப் போக இருந்த குடும்பம் தான்; ரிடயர்மென்ட்டுக்கு பின், இப்ப சென்னையில செட்டிலாயிட்டான் சபேசன்.

உன்னை மருமகளாக்கிக்கணும்ன்னு அவனுக்கும், அவன் மனைவிக்கும் ரொம்ப ஆசை. உன் அம்மாவுக்கும் இதுல விருப்பம் தான்! எனக்கும் கூட இதுல இஷ்டம்... நீ என்ன சொல்றே? உன் விருப்பம் எதுவானாலும் சொல்லு...' என்றார் கனிவாக!

அவள் மென்மையாக புன்னகைத்து, 'அப்பா... நீங்களும், அம்மாவும் எந்த முடிவெடுத்தாலும், எனக்கு முழு சம்மதம். இந்த கண்டதும் காதல், காணாமலே காதல், கன்னா பின்னா காதல்ன்னு, இது எதுலயும் எனக்கு நம்பிக்கை இல்ல; இதுவரைக்கும் நமக்குள்ளே நல்ல ஒற்றுமை இருக்கு. நான், 'செலக்ட்' செய்த கோர்ஸ், போடுற டிரஸ், பாக்குற கொரியன் படம்ன்னு எல்லாமே உங்களுக்கும் பிடிச்சிருக்கு.

அதேமாதிரி, அம்மாவோட சமையல், உங்களோட அரசியல் ஆர்வம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, இந்த மாப்பிள்ளை விஷயத்துலயும், உங்களுக்கும், எனக்கும் நிச்சயம் ஒத்துப் போகும். உங்க ரெண்டு பேருக்கும் என் சந்தோஷத்தை விட, பெரிசா வேற என்ன இருக்க முடியும்... பாத்து செய்யுங்கப்பா...' என்று அப்பாவின் கன்னத்தை தட்டிய மகளைப் பார்த்து, ஆனந்தக் கண்ணீர் விட்டனர், மந்திரமூர்த்தியும், அவர் மனைவியும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில், உயர் தொழிற்படிப்பு முடித்து, பன்னாட்டு கம்பெனியில் உயர்ந்த பதவியில் உள்ளான் ராம். பள்ளி நாளிலிருந்தே கூடைப்பந்து வீரன்; நல்ல உயரம், சிரித்த முகம், அளவான பேச்சு, அப்பாவிடம் பணிவுடன் இருப்பவன். ராகவ் மட்டும் என்ன... அவனும், கட்டடக் கலையில், தேசிய அளவில் ஜெயித்தவன். இரண்டு மிகப் பெரிய கட்டுமானக் கம்பெனிகளில் ஆலோசகராக உள்ளான்.

சதுரங்க விளையாட்டில் கில்லி. உடற்பயிற்சியில் உடலை வலிமையாக வைத்து, அர்னால்ட் போல வளைய வருபவன்.

'இருவரில் ஒருவன் மிகப் பிரமாதம்; மற்றொருவன் கொஞ்சம் சுமார் என்றால், பிரமாதமானவனுக்கு, பர்வதாவை கட்டிக் கொடுக்கலாம்; ஆனால், இரண்டுமே தங்கக் கட்டிகள். இதில் எப்படி ஒருவனை மட்டும் தேர்ந்தெடுப்பது...' என்று மனதுக்குள் குழம்பினார் மந்திரமூர்த்தி.

சபேசன் ரொம்ப நாளாக வீட்டிற்கு வர, அழைப்பு விடுப்பதால், இன்று நேரில் போய்ப் பார்த்து விடலாம் என்று கிளம்பினார் மந்திரமூர்த்தி.

சபேசனும், அவர் மனைவியும் சிரித்தபடி வரவேற்றனர்.

''இப்பத் தான் நாங்கள் எல்லாம் சென்னையில இருக்கிறது உனக்கு நெனைவுக்கு வந்ததாக்கும்...'' என்று சபேசனும், ''அக்காவும், பர்வதா குட்டியும் சவுக்கியமாண்ணா... மருமகளைப் பாக்கணும் போல இருக்கு,'' என்று அவர் மனைவியும் மலர்ச்சியாகக் கேட்டது, மந்திரமூர்த்திக்கு நிறைவாக இருந்தது.

பூச்சரத்தையும், பழங்களையும் சபேசனின் மனைவியிடம் கொடுத்து, சோபாவில் அமர்ந்தார்.
''அப்பறம் எப்படி இருக்கே மூர்த்தி?'' என்றார் சபேசன்.

தொடரும்...................


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளுக்காக ஒருவன்! Empty Re: மகளுக்காக ஒருவன்!

Post by krishnaamma Sun Feb 07, 2016 10:44 am

'பெத்தவங்க ஆசீர்வாதத்துல, ஒரு பிரச்னையும் இல்ல. நீங்க ரெண்டு பேரும், நல்லா இருக்கீங்களா... உன் பையன்க எப்படி இருக்காங்க?'' என்று கேட்டார் மந்திரமூர்த்தி.

''எல்லாம் நல்லா இருக்கோம். 35 வருஷம் உழைச்ச உடம்பு. ஆபீஸ் ஆபீஸ்ன்னு பரபரன்னு ஓடின ஓட்டம் எல்லாம் இப்ப ஒரு புள்ளில வந்து நின்னு, பழசை அசை போடற பசு மாட்டு வாழ்க்கை வாழ்றேன். இதுவும் நல்லாத்தான் இருக்கு,'' என்றார் உற்சாகமாக சபேசன்!

''எனக்கு இன்னும் ஒரு முக்கியமான கடமை இருக்குப்பா... அத நல்லபடியா முடிச்சுட்டேன்னா, நானும் பசு மாட்டு வாழ்க்கைக்கு வந்துடுவேன்,'' என்று, சிரித்தார் மந்திரமூர்த்தி.
கைமுறுக்கும், காபியும் கொண்டு வந்தாள் சபேசனின் மனைவி.

காபியை ரசித்துக் குடித்தபடி, பார்வையால் வீட்டை வலம் வந்தவர், ''எங்கப்பா பசங்களக் காணோம்...'' என்றார்.

''ராம், சிவன் கோவிலுக்கு போயிருக்கான்,''என்றார் சபேசன்.
''கோவிலுக்கா...''

''ஆமாம்; அவன் தினமும் கோவிலுக்குப் போவான். அதுலயும், இன்னிக்கு பிரதோஷம்; சீக்கிரமாவே போயிட்டான்,'' என்றார்.

இதைக் கேட்டதும், மந்திரமூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்ப்பவன், மாதம் பல லட்சம் சம்பாதிக்கிற இளைஞன், பக்தி மயமாக இருப்பது அதிசயமாக இருந்தது.

அவர் பார்த்த வரையில், இளைய சமுதாயம் கூட்டமாக உட்கார்ந்து, மதுபானம் அருந்துவது, விடுதிகளில் நடனமாடுவது, பரபரப்பான தெருக்களில் அதிக வேகத்தில் பைக் விடுவது, பெண்களைப் பின் தொடர்வது என்று தானே இருக்கின்றனர்...

'இவர்களுக்கு மத்தியில், ராம் எவ்வளவு மாறுபட்டு இருக்கிறான்... என் மகளுக்கு இவனை விட நல்லவன் எப்படி கிடைப்பான். வந்த வேலை சுலபமாக முடிந்து விட்டது...' என நினைத்தார் மந்திரமூர்த்தி.
''காபி பிரமாதம்; ஆமாம்... ராகவ் எங்கே?''

''அவனா...'' என்று இழுத்த சபேசன், ''நண்பன் வீடாம்... போயிருக்கான்...'' என்றார் சலிப்புடன்!
''பக்கத்துலயா... இப்ப வந்துடுவானா?''

''நாலு தெரு தள்ளி இருக்கு; எப்ப வருவான்னு சொல்ல முடியாது. அவன விடு... நீ இருந்து சாப்பிட்டுத் தான் போகணும்,'' என்றார்.

''இருக்கட்டும்; சீக்கிரமா, உரிமையா சம்மந்தியாவே வந்து சாப்பிடறேன்,'' என்று சிரித்தபடியே கிளம்பினார் மந்திரமூர்த்தி.

வழியில், வேர்க்கடலையும், வாழைப் பழமும் வாங்கியவர், பிச்சிப்பூவைப் பார்த்ததும், பர்வதாவுக்கு பிடிக்குமே என நினைத்து, வாங்கினார். பணம் கொடுக்கும் போது, ''ஹலோ மாமா... எப்ப வந்தீங்க...'' என்ற குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தார். சிரித்த முகத்துடன் பைக்கில் இருந்து இறங்கி வேகமாக வந்து, அவரை அணைத்து, கையைப் பிடித்துக் குலுக்கினான் ராகவ்.

''எப்படி மாமா இருக்கீங்க... உங்களப் பாத்து எவ்வளவு நாளாச்சு... அத்தை, பர்வதா எல்லாரும் சவுக்கியமா...'' என்றவன், அவர் கையிலிருந்த பிச்சிப்பூவைப் பார்த்ததும், ''பர்வதாவுக்கு பிச்சிப் பூ ரொம்ப பிடிக்குமே மாமா...'' என்றான் கண்கள் மின்ன!

''ஆமாம்; நல்லா ஞாபகம் வெச்சிருக்கியே... குட்! உங்க வீட்டுல இருந்து தான் வரேன்,'' என்றார்.
''அடடா... நான் இல்லாம போயிட்டேனே...'' என்று அங்கலாய்த்தான்.

''ஆமாம்... ராம் கோவிலுக்குப் போயிருக்கான்; நீ எங்க போயிட்டு வரே?'' என்றார் கண்களைச் சுருக்கி!
''என் நண்பன் வீட்டுக்கு போயிட்டு வர்றேன் மாமா... சின்ன வயசுலேயே அவனோட அப்பா இறந்துட்டாரு; அவங்க அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு இன்ஜினியர் ஆக்கினாங்க. இப்ப அவனோட அம்மாவும் உயிரோட இல்ல. கம்பெனி அவனை, வேலை விஷயமா ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியிருக்கு. லோன் போட்டு வாங்கின பிளாட்டை, என்னை நம்பி விட்டுட்டு போயிருக்கான்.

''அப்படியே விட்டுடலாம் தான்; எப்பவாவது போய் பூட்டு சரியா இருக்கான்னு பாக்கலாம்ன்னா மனசு கேக்கல. அதான், வாரத்துல மூணு நாளு, வீட்ட தூசு தட்டி, அவன் வளர்க்கும் தொட்டிச் செடிகளுக்கு தண்ணீர் விட்டு, அவங்க அம்மா படத்துக்கு விளக்கேத்தி, ரெண்டு பூ போட்டுட்டு வருவேன். நம்மள நம்பி ஒப்படைச்சிருக்கான்; சரியா பாரமரிக்கிற பொறுப்பு, நமக்கு இருக்கு இல்லயா...'' என்றதும், ''ராகவ்...'' என்று உணர்ச்சியுடன், அவன் கைளைப் பற்றினார் மந்திரமூர்த்தி.

''நண்பன், நட்புங்கிறதுக்கான அழகான அர்த்தம், இப்பதான் புரிஞ்ச மாதிரி இருக்குப்பா. அதோட, இன்னொரு நல்ல விஷயமும் தெரிஞ்சுக்கிட்டேன்...''
''என்ன மாமா அது...''

''பர்வதாவை அருமையா பாத்துக்க போற மாப்பிள்ளை யாருங்கிற விஷயம்,'' என்றார் நெகிழ்ச்சியுடன்!

வி.உஷா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளுக்காக ஒருவன்! Empty Re: மகளுக்காக ஒருவன்!

Post by சசி Sun Feb 07, 2016 11:14 am

நல்ல கதை அம்மா. நம்பியவர்களிடம் நாணயமாக இருந்தால் நல்லது நடக்கும் என்பதற்கு உதாரண கதை


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

மகளுக்காக ஒருவன்! Empty Re: மகளுக்காக ஒருவன்!

Post by krishnaamma Sun Feb 07, 2016 11:24 am

சசி wrote:நல்ல கதை அம்மா. நம்பியவர்களிடம் நாணயமாக இருந்தால் நல்லது நடக்கும் என்பதற்கு உதாரண கதை
மேற்கோள் செய்த பதிவு: 1192379

//நண்பன், நட்புங்கிறதுக்கான அழகான அர்த்தம், இப்பதான் புரிஞ்ச மாதிரி இருக்குப்பா. அதோட, இன்னொரு நல்ல விஷயமும் தெரிஞ்சுக்கிட்டேன்...''//

ஆமாம் சசி புன்னகை...நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மகளுக்காக ஒருவன்! Empty Re: மகளுக்காக ஒருவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum