ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாயிறு போற்றுதும்...

Go down

ஞாயிறு போற்றுதும்...  Empty ஞாயிறு போற்றுதும்...

Post by ayyasamy ram Tue Jan 12, 2016 6:41 am

ஞாயிறு போற்றுதும்...  9zyDzBPuQ1ypUWe5DrHQ+TM-2
-
தைமாதம் முதல் நாள் வரும் பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்
என்று போற்றப் பெறுகின்றது. அனைவரும் முப்பெருநாளாக
விழாக் கொண்டாடும், இப்பொங்கல் திருநாளின் தலைநாள்
பெரும் பொங்கல் திருநாள்
-
உலகச் சுழற்றியில் ஞாயிறு உத்தராயணம் கொள்ளும் இன்னாளில்
தமிழகத்தை நோக்கி ஞாயிறு வருகை தொடங்குதலை எண்ணி
மக்கள் பொங்கலிட்டு ஞாயிற்றுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர்.
-
ஞாயிறு ஒளிக்கோளம் என்றும், அதன் ஒளிவீசும் தன்மை எது?
ஒளியின் பயன் என்ன? என்றெல்லாம் ஆய்தாய்ந்து அறிவதே அறிவியல்
முறை சார்ந்த வாழ்க்கையாக இருப்பதனினும், ஞாயிறு மெய்த் தன்மையை,
அத்தன்மையின் பெருமையை, நலந்தரும் நன்மையைத் தெரிந்துணர்ந்து
போற்றி "சார்ந்ததன் வண்ணம்' ஆகும் உயிர்ப் பண்பினால்,
ஞாயிறு ஒளியே உயிர் ஒளி விளங்க ஒளிபடைத்த கண்ணும் உறுதிகொண்ட
நெஞ்சும் உயர்வு பூண்ட உளமும் உடைய மக்களாய்த் திகழ பெருமை மிகு
ஆக்கமும் பயனும் விளையக் கண்டனர்.
-
ஞாயிறு ஒளித்தெய்வம் எனவும், விண்ணுக்கும் மண்ணுக்கும் விரிந்த
இவ்வண்டத்திற்கும், விண்மீன் - இராசிமண்டலம், ஒன்பான் கோள்கள்
அனைத்திற்கும் முதன்மையெனவும் வெளி, வளி, தீ, நீர், நிலம்
அனைத்திற்கும் ஆற்றலும் இயக்கமும் அளிப்பதெனவும் பண்டைத் தமிழ்ப்
பெருமக்கள் போற்றி வழிபடுஞ் சிறப்பு என்றும் போற்றத்தகுந்த
பெருஞ்சிறப்பாகும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஞாயிறு போற்றுதும்...  Empty Re: ஞாயிறு போற்றுதும்...

Post by ayyasamy ram Tue Jan 12, 2016 6:42 am


சங்கத் தமிழின் செங்கதிர்ச் செல்வன்:

(இளஞாயிறு - இளமுருகன்)


"உலகம் உவப்ப வலனேர்பு திருதரு
பலர்புகழ் ஞாயிறு கடற் கண்டாங்கு'

-
என்று ஞாயிறு உதயம் உவமையாக செவ்வேள் முருகன் அணிமயில்
மேவித் தோன்றும் பேரழகை பத்துப்பாட்டுள் ஒன்றான
திருமுருகாற்றுப்படையில் உணர்த்துகின்றார் புலவர் நக்கீரர்.
-
இவ்விரண்டடிகளில் "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு... ஞாயிறு'
எனவே உலகம் - இடமும், ஆகுபெயராய் இடத்துள்ள உயிர்களுமாம்.
ஆகவே, உலகும் உலகத்துயிர்களும் மகிழ வலஞ்செய்து எழில் மிகத்
திரிதரு ஞாயிறு எனவும் - எனவே பலரும் போற்றிப்புகழும்
சிறப்புடையது ஞாயிறு என்பார் ""பலர் புகழ் ஞாயிறு'' என்றும்
உச்சிப்போதில் கண்எரிய வெம்மை விரிக்கும் வெங்கதிர் - காலைப்
போதில் கடலுட்குளித் தெழுந்தாற்போல உலகுயிர்கள் கண்ணொளியாய்
செம்மைபுரி வளர் இளங்கதிர் விரிக்கும் திருவருள் உருவாக விளங்கும்.
-
எனவே இளஞாயிறு அழகும் அருளும் சேயோன் முருகன் அழகும்
ஒருமைப் பெருமையாய் உணர்த்துகின்றார் நக்கீரர்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஞாயிறு போற்றுதும்...  Empty Re: ஞாயிறு போற்றுதும்...

Post by ayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


-
அவுணராகிய ஆணவ இருளில் சிக்கித்தவித்த ஒளிமேனியர் தேவர்கட்கு
செல்வேள் முருகன் வேற்கதிர் வீசி அவுண இருள் கட்டழித்துத் தேவர்
துயர்தீர்த்து நீலமயில் மேவிய அருளழகுணர்த்த மையிருட்கணம் போர்த்து
உலகைச் சூழ்ந்த இருளையும் பனியையும் வெங்கதிர் வீசி அழித்து
உலகின் கண்ணொளி வழங்கி நீலவான் கடல் மேவிய வளரிள
ஞாயிறை உவமையாக்கினார் நக்கீரர் பெருமான் எனலாம்.

மேலும் செஞ்ஞாயிறைப் போற்றும் செந்தமிழ்ச் தொடர்கள் சங்க
இலக்கியங்களில் (பெரும்பாண்-12; அகநா-91; புறநா-56,90,91,228) ஆங்காங்கு
அழகுறக் காணப்படுகின்றன.

இத்தொடர்கள் உலகின் இருளை விழுங்கி இரும்பனி துடைத்து ஒளியும்
வெயிலும் வழங்கும் இயல்பில் என்றும் மாறாது விளங்கும் உண்மைப்
புகழுக்கு ஒரு முதலாய் உள்ளது ஞாயிறு என்றும் தமிழ்ப் பெருமக்கள்
ஞாயிறைப் போற்றும் உணர்வையும் தெரிவிக்கின்றன.

தொல்காப்பியப் பொருளதிகாரம் 458ஆம் நூற்பாவின் மேற்கோளாகக்
காட்டப்பெறும் பழம் பாடல் ஒன்று ஞாயிறு சிறப்பையும், அதனை வ
ழிபடும் திறத்தையும் - பயனையும் தெரிவிக்கின்றது.

நெற்தற்கலி 1, 11, 12 என்று வருகின்ற பாடற்பகுதிகள் இனிமையும்
வாய்மையும் அறந்தலை நிறுத்தும் செங்கோன்மையும் வாய்ந்து உலகு
உயிர்களை நல்லாற்றின் வாழ்வித்துக் காக்கும் பேரரசன் ஞாயிறு என
உவமை கண்டு உரைக்குந்திறம் ஞாயிறு ஒன்றே உலகின் அரசன்,
உயர் நீதிபதி, உலகின் அறந்தலை நிறுத்தும் அருளாளன் என்று
உணர்த்துதல் காணலாம்.

திருமூலரின் திருமந்திரத்தினுள், "ஆதித்தன் நிலை' என்ற பகுதியில்
(பாடல்கள் 1967, 1977) ஞாயிறு தன்மையும் சிறப்பும் தெரிவித்து
நன்குணர்துகின்றார். இம்மந்திரப் பாடல்கள் ஞாயிறு திருமால் வடிவம்,
சிவசோதியுருவன், என்றும் உலகுக்கு முதன்மையும் ஆற்றலும் ஒளியும்
ஆகும் என்றும், அன்புக் கனியருள்பவன் என்றும் உணர்த்தியுள்ளார்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஞாயிறு போற்றுதும்...  Empty Re: ஞாயிறு போற்றுதும்...

Post by ayyasamy ram Tue Jan 12, 2016 6:43 am


திருவருளும் திருத்தொண்டும் - செஞ்ஞாயிறு:

-
சிவபெருமான் குருவாக வந்து அருளிய திருவருட்பேற்றைத் திளைத்துணர்ந்து
அன்பினால் உருகிப்பாடும் மாணிக்கவாசகர், "இன்றெனக்கருளி இருள்
கடிந்துள்ளத்து எழுகின்ற ஞாயிறே போன்று' என்று இறைவன் உள்ளத்தின்
மேவிய திருவருட் காட்சிக்கு ஞாயிறு உதயத்தை உவமையாக்கிப் பாடியவர்,
திருப்பள்ளியெழுச்சியில்,
-
"அருணன் இந்திரன் தியைணுகினன்
இருள்போய்அகன்றது;
உதயம் நின் மலர்த்திருமுகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ...'

-
என்றும் ஞாயிறுக்கு இறைவன் திருமுகத்தின் திருஅருட் பொழிவை
உவமையாக்கி உணர்த்துகின்றார்.

மேலும், சங்ககாலம் தொடங்கி தற்காலம் வரை புலவர்களும் கவிஞர்களும்
ஞாயிற்றின் சிறப்பைப் பலவாறு போற்றி வருகின்றனர். ஞாயிறு வழிபாடு,
வேதியர், புலவோர் போற்றுகின்ற வேத்தியல் முறையுடன், பொதுமக்கள்
யாவரும் பொங்கலிட்டுக் கொண்டாடும் பொதுவியல்பாகவும் விளங்குவது
தமிழகத்தின் தனிப்பெரும் தகைமையாகும்.
-
-புலவர் எ.வேலாயுதன்
-
(நூல்: ஞாயிறு போற்றுதும்)
-
---------------------------
By -புலவர் எ.வேலாயுதன்
நன்றி- தமிழ் மணி



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஞாயிறு போற்றுதும்...  Empty Re: ஞாயிறு போற்றுதும்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் ! நூல் : புத்தகம் போற்றுதும் ! ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் விமர்சனம் கொள்ளிடம் காமராஜ்!
» ஞாயிறு
» ஞாயிறு நகைச்சுவை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum