ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:

Go down

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Empty வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:

Post by ayyasamy ram Tue Jan 05, 2016 6:23 am



மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முதல் கட்டமாக, 14 லட்சம் குடும்பங்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 5) அளிக்கப்படுகிறது. மேலும், 30.42 லட்சம் பேருக்கு விலையில்லா வேட்டி, சேலை, 10 கிலோ அரிசியும் நியாய விலைக் கடைகளில் வழங்கப்படுகிறது.
-
சென்னை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், நலத் திட்ட உதவிகள் வழங்குவதை முதல்வர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்.
-
வெள்ள பாதிப்பால் குடிசைகளை இழந்த குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரமும், நிரந்தர வீடுகளைச் சுற்றி பாதிப்புக்கு உள்ளான குடும்பங்களுக்கு ரூ.5 ஆயிரமும், 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, சேலையும் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
-
முதல் கட்டமாக 14 லட்சம்: இதன் அடிப்படையில், 4 லட்சத்து 93 ஆயிரத்து 716 குடிசைகளும், 25 லட்சத்து 48 ஆயிரத்து 152 வீடுகளைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்ததாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 14 லட்சம் குடும்பங்களின் விவரங்கள் கணினியில் பதிவு செய்து, நிவாரணத் தொகை உடனடியாக வழங்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
-
ஜனவரி 11-ஆம் தேதிக்குள்...:
இதன் அடையாளமாக 5 பேருக்கு திங்கள்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமையே (ஜனவரி 5) 14 லட்சம் பேருக்கு நிதியுதவி வழங்கப்படும். மீதமுள்ளவர்களுக்கு 11-ஆம் தேதிக்குள் நிதியுதவி வழங்கப்படும்.
-
வேட்டி-சேலை எப்படி பெறலாம்?

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 30.42 லட்சம் குடும்பத்தினர் 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவற்றை பெறலாம். இதன்படி, சிறப்பு நிவாரண உதவித் தொகை பெற்றவர்கள் தங்களது வங்கிக் கணக்குப் புத்தகம், குடும்ப அட்டையை காண்பித்து பிப்ரவரி இறுதி வரை பெறலாம்.
-
விவசாயிகளுக்கு ரூ.29.48 கோடி நிவாரண நிதி: 3 லட்சத்து 47 ஆயிரத்து 297 ஹெக்டேர் வேளாண் பயிர்களும், 35 ஆயிரத்து 471 ஹெக்டேர் தோட்டக் கலைப் பயிர்களும் சேதமடைந்துள்ளன.
-
இதுவரை 68 ஆயிரத்து 350 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.29.48 கோடி நிவாரண உதவித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
-
மீதமுள்ள பயிர் சேதங்களுக்கான நிவாரண உதவித் தொகை இன்னும் ஒருசில தினங்களில் வழங்கப்படுகிறது.
-
மீனவர்களுக்கு ரூ.12.82 கோடி அளிப்பு: 4 இயந்திரப் படகுகள், 65 வல்லங்கள், 20 கட்டுமரங்கள், 8 ஆயிரத்து 106 வலைகள், 3 ஆயிரத்து 47 இயந்திரங்கள் முழுமையாகவும், 42 இயந்திரப் படகுகள், 654 வல்லங்கள், 231 கட்டுமரங்கள் பகுதியாகவும் சேமடைந்துள்ளன.
-
130.90 ஹெக்டேர் பரப்பில் மீன் விதைப் பண்ணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நிவாரண உதவியாக ரூ.12.82 கோடி வழங்கப்பட்டுள்ளது.
-
ரூ.700 கோடி நிவாரணம்: ரூ.700 கோடி அளவில் நிவாரண உதவிகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிவாரணத் தொகை ஜனவரி 11-க்குள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
பருவ மழைக்கு 421 பேர் உயிரிழப்பு

வடகிழக்குப் பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் சிக்கி 421 பேர் உயிரிழந்தனர் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 28-ல் தொடங்கி டிசம்பர் 31-ல் முடிவடைந்தது. இந்தக் காலத்தில் மழை வெள்ளம், சுவர் இடிந்து இழுந்தது, மின்சாரம் தாக்கியது போன்ற காரணங்களால் 421 பேர் உயிரிழந்தனர்.
இதில், 245 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள குடும்பங்களுக்கு நிவாரண உதவி சில தினங்களில் வழங்கப்படும்.
-
கால்நடைகள் உயிரிழப்பும் நிவாரணம்:

3,785 மாடுகள், 8,136 ஆடுகள், 109 பன்றிகள், 85,895 கோழிகள் உயிரிழந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை நிவாரணத் தொகையாக ரூ.7.78 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி சில நாள்களில் முழுமை பெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வெள்ள நிவாரண உதவி தொடக்கம்: Empty Re: வெள்ள நிவாரண உதவி தொடக்கம்:

Post by ayyasamy ram Tue Jan 05, 2016 6:23 am


இன்று முதல் இரு நாள்களுக்கு மத்தியக் குழு மீண்டும் ஆய்வு[


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்தியக்
குழுவினர் செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழகம் வர உள்ளனர்.
இரு நாள்கள் ஆய்வு நடத்த உள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த நவம்பர் 26 முதல் இரு நாள்கள் மத்திய உள்துறை
அமைச்சகத்தின் இணைச் செயலர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான
மத்தியக் குழுவினர் ஆய்வு நடத்தினர்.

இதையடுத்து, மழை மீண்டும் பெய்ததைத் தொடர்ந்து, துணை அறிக்கையை
மத்திய அரசிடம் தமிழகம் அளித்தது. இதையடுத்து,
மத்தியக் குழு மீண்டும் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) தமிழகம் வரவுள்ளது.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

இயற்கைப் பேரழிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்ய
ரூ.25 ஆயிரத்து 912 கோடியே 45 லட்சம் மத்திய அரசிடம் இருந்து கோரப்பட்டுள்ளது.
முதல் 3 கட்டங்களில் பெய்த மழையால் ஏற்பட்ட பாதிப்பை ஆய்வு செய்த
அதே மத்தியக் குழு செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறது.

இரண்டு நாள்கள் பார்வையிட்டு மத்திய அரசுக்கு அறிக்கையை அளிக்கும்.
அதன் அடிப்படையில், நிவாரணம்-சீரமைப்புப் பணிகளுக்குத் தேவையான
நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என முதல்வர் ஜெயலலிதா
தெரிவித்துள்ளார்.
-
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82681
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum