ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by ayyasamy ram Thu Dec 31, 2015 11:22 pm

-
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் குட்டிக்கதை கூறி
ஸ்டாலினையும், திமுகவையும் முதல்வர் ஜெயலலிதா விமர்சித்துள்ளார்.
-
சென்னை திருவான்மியூரில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,
அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா
பேசியபோது, ''சட்டமன்றத்துக்கான தேர்தல் நெருங்குவதால் திமுக பல
பொய்களை கட்டவிழ்த்துவிடும்.
எனவே, அதிமுக அமைச்சர்கள் திமுக-வின் பொய்களை தோலுரித்துக் காட்ட
மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். இது போன்று எதிர்க்கட்சிகள்
தெரிவிக்கும் பொய்களுக்கு அமைச்சர்கள் உடனுக்குடன் பதில் அளிக்க
வேண்டும்'' என்று பேசினார்.
-
அப்போது முதல்வர் ஜெயலலிதா ஒரு குட்டிக்கதை கூறினார்.
-
''ஒரு கிராமத்தில் ஒரு பண்ணையார் வீடு. அந்த பெரிய வீட்டிற்குள் சுவர் ஏறி
குதித்தான் ஒரு திருடன். வீட்டிற்குள் எல்லா இடங்களிலும் காவலுக்கு ஆட்கள்
நின்று கொண்டிருந்தார்கள். இந்த வீட்டில் திருட முடியாது என்று நினைத்த
திருடன் மெதுவாக வந்த வழியே திரும்ப ஆரம்பித்தான். அந்த சமயத்தில்
அவனுடைய காலில் ஏதோ தட்டுப்பட்டது. சற்று குனிந்து பார்த்தான்.
-
ஒரு பெரிய வெங்காய மூட்டை அங்கு இருந்தது. வந்ததற்கு இதையாவது
எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து ஒரு பெரிய பை நிறைய வெங்காயத்தை
அள்ளிப் போட்டுக் கொண்டான்.
-
புறப்படுகிற சமயத்தில் 'கப்' என்று ஒரு கை வந்து விழுந்தது.
ஆள் மாட்டிக்கொண்டான். மறுநாள் காவலாளிகள் அவனை அரசன் முன் சென்று
நிறுத்தி நடந்ததை கூறினர்.
-
அரசனும் "என்னப்பா இவர்கள் சொல்வது எல்லாம் உண்மை தானா?" என்று கேட்டார்.
"ஆமாம்" என்று திருடனும் ஒத்துக் கொண்டான். உடனே அரசன் திருடனைப் பார்த்து
-
"நீ பண்ணையார் வீட்டில் திருட வந்தது குற்றம். அதற்காக 100 ரூபாய் நீ அபராதம்
செலுத்த வேண்டும். அல்லது 100 கசையடி வாங்க வேண்டும். அல்லது திருடிய
வெங்காயத்தை பச்சையாக என் கண் முன்னாடி சாப்பிட வேண்டும். இதில் எந்த
தண்டனை உனக்கு வேண்டும்?" என்று கேட்டார்.
-
சற்று சிந்தித்த திருடன், "வெங்காயத்தை சாப்பிடுகிறேன்" என்றான்.
வெங்காயத்தை ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். கண்ணிலிருந்து கண்ணீர்
வழிய ஆரம்பித்துவிட்டது. ஒரே எரிச்சல். தாக்கு பிடிக்க முடியவில்லை.
இது நமக்கு சரிபட்டு வராது என்று முடிவு பண்ணிவிட்டான்.
-
அரசரைப் பார்த்து ''என்னை மன்னித்து விடுங்கள். இது என்னால் முடியாது.
பேசாமல் சாட்டை அடி கொடுத்து விடுங்கள்'' என்றான். அரசரும் "சரி" என்றார்.
-
சாட்டையடி விழ ஆரம்பித்தது. 10 அடிகள் விழுகிற வரைக்கும் தாங்கினான்.
அதற்கு மேல் அவனால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. ''இதுவும் எனக்கு சரிபட்டு வராது.
100 ரூபாய் அபராதம் கட்டி விடுகிறேன்'' என்று கூறினான்.
-
இந்த கதையைப் போல, இப்போது முதலமைச்சர் வேட்பாளர் என மனக்கோட்டை
கட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், ஒவ்வொரு ஊராகச் சென்று ''நாங்கள் தெரியாமல்
செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள்; இனி மேல் இது போன்று எந்த தவறையும்
செய்ய மாட்டோம்'' என்று பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்.
-
இவர்கள் ஆட்சியில் செய்த தவறுகள் ஒன்றா இரண்டா?
காவிரிப் பிரச்சனை; முல்லைப் பெரியாறு பிரச்சனை; டெல்டா மாவட்டங்களையே
பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயுத் திட்டம்;
நில அபகரிப்பு; சட்டம் ஒழுங்கு சீர் குலைவு; மின்சாரம் பற்றாக்குறையால் தமிழகத்தையே
இருண்ட காலத்துக்கு கொண்டு சென்றது;
இலங்கைத் தமிழர்கள் மடிய காரணமாயிருந்தது என இவர்கள் தமிழர்களுக்கு
இழைத்த துரோகங்களை எல்லாம் மறந்து மன்னித்துவிட தமிழர்கள் என்ன ஏமாளிகளா?
அந்த நபர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அதற்கு ‘நமக்கு நாமே’ என்ற
திருநாமத்தை சூட்டிக் கொண்டார்.'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
-
-----------------------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by krishnaamma Thu Dec 31, 2015 11:46 pm

ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by ayyasamy ram Fri Jan 01, 2016 12:47 am

krishnaamma wrote:ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184408
-
நிறைய குட்டிக் கதைகளும் கேட்கலாம்...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83751
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by கார்த்திக் செயராம் Fri Jan 01, 2016 6:09 am

ஆமாம் இவங்க பெரிய உத்தமி..
ரெண்டு பேரும் கலவானி பசங்க தானே ..

உங்களுக்கு எல்லாம் மக்கள் ஏன் ஓட்டு போடுராங்க தெரியுமா ?
"எரியுர கொள்ளியில் எது நல்ல கொள்ளி "
"எந்த கொள்ளி சின்ன கொள்ளி"

என்னை பொருத்தவரையில் எல்லா கொள்ளியும் கெட்ட கொள்ளிதான்..
செல கொள்ளி ஸ்டேட் லெவல் னா இன்னொன்று சென்ரல் லெவல் அவ்வளவு தான் வித்தியாசம்.

உங்களுக்கு எல்லாம் ஓட்டு போடுராங்க பார் பப்ளிக் அவங்கதான் வெங்காயம் சாப்புடுராங்க..

நன்றி

எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by krishnaamma Fri Jan 01, 2016 2:26 pm

ayyasamy ram wrote:
krishnaamma wrote:ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184408
-
நிறைய குட்டிக் கதைகளும் கேட்கலாம்...!!
-
ஆமாம் ராம் அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by krishnaamma Fri Jan 01, 2016 2:27 pm

கார்த்திக் செயராம் wrote:ஆமாம் இவங்க பெரிய உத்தமி..
ரெண்டு பேரும் கலவானி பசங்க தானே ..

உங்களுக்கு எல்லாம் மக்கள் ஏன் ஓட்டு போடுராங்க தெரியுமா ?
"எரியுர கொள்ளியில் எது நல்ல கொள்ளி "
"எந்த கொள்ளி சின்ன கொள்ளி"

என்னை பொருத்தவரையில் எல்லா கொள்ளியும் கெட்ட கொள்ளிதான்..
செல கொள்ளி ஸ்டேட் லெவல் னா இன்னொன்று சென்ரல் லெவல் அவ்வளவு தான் வித்தியாசம்.

உங்களுக்கு எல்லாம் ஓட்டு போடுராங்க பார் பப்ளிக் அவங்கதான் வெங்காயம் சாப்புடுராங்க..

நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1184456

நீங்க சொல்வது ரொம்ப சரி கார்த்திக் ............என்ன செய்வது? சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by யினியவன் Fri Jan 01, 2016 3:21 pm

ஒழுக்க சுந்தரி இவங்க ஒழுக்க சீலன் அவரு
ஒழுக்கம் கெட்ட அரசியல் உலகில் உலக்கையால்
உங்களை போட ஒழுக்கமில்லாம திரியற எங்க பேர்ல தான் தப்பு

கதை கேட்கும் நாயை செருப்பால் அடி ன்னு எங்களுக்கு தான் சொல்லி இருக்காங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by விமந்தனி Fri Jan 01, 2016 7:27 pm

krishnaamma wrote:ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை
(காதுல ரத்தம் வர அளவுக்கு போகாம இருந்தா சரி) எதுக்கும் காதை ரெடியா வச்சுக்கோங்க. புன்னகை புன்னகை புன்னகை

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by Hari Prasath Sat Jan 02, 2016 7:48 pm

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...சிரிசிரி

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by யினியவன் Sat Jan 02, 2016 8:03 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:ம்ம்... தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து  விட்டதா?............இனி காது புளிக்கும் அளவுக்கு மாறி மாறி பேசுவாங்க புன்னகை
(காதுல ரத்தம் வர அளவுக்கு போகாம இருந்தா சரி) எதுக்கும் காதை ரெடியா வச்சுக்கோங்க. புன்னகை புன்னகை புன்னகை
கதை ரெடி காது ரெடியான்னு கேக்கறீங்க புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா Empty Re: ஸ்டாலினின் 'நமக்கு நாமே'வை குட்டிக்கதை கூறி கலாய்த்த ஜெயலலிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum