ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்

2 posters

Go down

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Empty சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்

Post by கார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 3:30 pm

ஆட்டையாம்பட்டி: ‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்’ என்ற முதுமொழிக்கு ஏற்ப பெற்ற தாய், தந்தையர் இருவரும் இறந்த பிறகு தான் கட்டிய வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வழிபடும் அதிசய குடும்பத்தை பற்றிய தகவல்கள் கேட்போரின் மனதை மெய் சிலிர்க்க வைக்கிறது.
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் KsAuAJeQZm0LK9KhQS2Y+a7f07b7f-e63b-45ed-bf16-097d773b66ed_S_secvpf.gif
சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டிக்கு அருகே எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொங்கான்காடு அம்மன் கோவில் பாவடி பகுதியில் வசித்து வருபவர்கள் ஆதிமூலம் மீசை (என்ற) பி. சண்முகசுந்தரம் (வயது 56) குடும்பத்தினர்.

நெசவுத்தொழில் செய்து வந்த இவரது தந்தை பழனியப்ப முதலியார் (73) 1999–ம் ஆண்டில் காலமாகி விட்டார்.

தாயார் எல்லம்மாள் (78). கடந்த 23.9.2013–ந் தேதி இறந்துவிட்டார். பழனியப்ப முதலியார் – எல்லம்மாள் தம்பதியருக்கு ஈஸ்வரி, கந்தசாமி, ராஜலட்சுமி, சண்முக சுந்தரம், மல்லிகா, சாஸ்திரி ஆகிய 6 பேர்கள் வாரிசுதாரர்களாக பிறந்தனர்.

இவர்களில் சண்முக சுந்தரம் என்பவர் குடும்பத்தினர் மட்டும் மறைந்த தாய் தந்தையர் இருவருக்கும் தனது தார்சு வீட்டின் மேல்தளத்தில் சிலை அமைத்து தினந்தோறும் வணங்கி வருகிறார்.

பெற்ற தாய், தந்தையரை மதிக்காமல் அடித்தும், உதைத்தும், உண்ண உணவு கொடுக்காமல் ஒதுக்கி வைத்துள்ள மகன்கள் இருக்கும் இந்த உலகத்தில் தாய்–தந்தையருக்கு சிலை அமைத்து வணங்குவது பாராட்டக்கூடிய, அனைவரும் பின்பற்ற வேண்டிய நல்லதொரு வழி என்றே கூறலாம்.

‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.

கடந்த 4 மாதத்திற்கு முன்பு தாய் – தந்தையருக்கு தார்சு வீட்டு கூடாரத்தில் சிலை அமைத்து தினந்தோறும் தீபாராதனை காட்டி வழிபட்டு வருகிறார்கள். விசேஷ நாட்களில் பூ மாலை அணிவித்தும் விரதம் இருந்தும் படையல் செய்து வழிபடுகிறார்கள்.

உயிருடன் இருக்கும் போது உடல் தானம் செய்ய விரும்பியதால் அம்மா எல்லம்மாள் இறந்தவுடன் அவரது உடலை தானம் செய்தனர் அவரது குடும்பத்தினர். மேலும் மற்றவர்களும் கண்தானம், உடல் தானம் செய்வதற்கு வழிகாட்டும் வகையில் தாயின் வழியில் மகன் சண்முகசுந்தரமும், இவரது மனைவி தமிழ் செல்வியும், தாங்கள் இறந்த பிறகு உடலை தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்து உள்ளனர்.

‘அடுத்தவர் காசுக்கு ஆசைப்படக்கூடாது, தெய்வ வழிபாடு, நல்லொழுக்கம், மற்றவர்களுக்கு நன்மை செய்து வாழ்ந்தால் எல்லா நலனும் பெற்று வாழலாம், மன நிம்மதியும் கிடைக்கும் என அப்பாவின் தாரக மந்திரத்தை நினைவு கூர்ந்து வாழ்வதாக ஆதிமூலம் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மீசை என்கிற பி.சண்முகசுந்தரம் கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ‘பிறந்தோம், வாழ்ந்தோம்’ என்று இருக்காமல் சாதிக்க வேண்டும் என்ற செயல்பாட்டோடு வாழ்ந்து வரும் இவரது குடும்பத்தினர் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது மறுக்க முடியாத உண்மை என்றே கூறலாம்.

பெற்ற தாய், தந்தையரை ஆதரிக்காமல், உதாசீனப்படுத்தும் மகன்கள் வாழும் இவ்வுலகில் சண்முக சுந்தரத்தை பின்பற்றி, சிலை வைக்க தேவையில்லை, ஆதரவு காட்டி வாழ்ந்தால் வறுமை ஒழிந்து அனைவரது வாழ்வும் உயர்வு பெறும். பெற்ற தாய், தந்தையரை ஆதரித்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை என உணரமுடிகிறது.

நன்றி நாட்டு நடப்பு


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் Empty Re: சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 7:12 pm

கார்த்திக் செயராம் wrote:
‘கண்ணுக்கு தெரியாத தெய்வத்தை வழிபடுவதை விட, கண்ணுக்கு தெரிந்த நம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய், தந்தையரை தெய்வமாக வணங்குவது ஒவ்வொருவரின் தலையாய கடமை என்று பெருமைப்பட கூறுகிறார்கள் சண்முகசுந்தரம் குடும்பத்தினர்.
மேற்கோள் செய்த பதிவு: 1181325
சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 3838410834 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 103459460 சேலம் அருகே தாய்–தந்தைக்கு சிலை அமைத்து வணங்கும் அதிசய குடும்பம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

Back to top

- Similar topics
» தந்தைக்கு சிலை செய்து தங்கைக்கு திருமணம்
» 9 மணி நேரத்தில் ரயில் நிலையம் அமைத்து அசத்தல்: சீனாவில் அதிசய சாதனை
» தாய்க்கு ரூ.5 கோடியில் கோவில் கட்டும் திருச்சி தொழில் அதிபர்: வெண்கல சிலை அமைத்து வழிபட முடிவு
» இங்கிலாந்தில் பெற்ற மகளைக் கொன்ற தாய்-தந்தைக்கு சிறைத் தண்டனை
» ஒரே நாளில் பிறந்த தாய்- தந்தைக்கு பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கீர்த்தி சுரேஷ்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum