ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணப்ப நாயனார் பக்தி

3 posters

Go down

கண்ணப்ப நாயனார் பக்தி  Empty கண்ணப்ப நாயனார் பக்தி

Post by கார்த்திக் செயராம் Fri Dec 18, 2015 7:08 am

கண்ணப்ப நாயனார் பக்தி
தவம் செய்யும் ஒருவன் அசைவ உணவும் சாப்பிட்டுகொண்டு இறைவனை காண முடியும் கன்னப்ப நாயனார் போல என்று சில யோக நிறுவனத்தை சேர்ந்த அன்பர்களால் சொல்ல படுகிறது.  மேலும் கண்ணப்ப நாயனாரின் பக்தி உயர்ந்ததா என்று தனிப்பட்ட முறையில் கேட்கபடும் அன்பர்களுக்காக இந்த பதிவு.
கண்ணப்ப நாயனார் அவர் இறைவன் என்று நம்பிய.. சிவலிங்க கண்ணிலிருந்து வழிந்த இரத்திற்க்காக தன் கண்ணை பிடுங்கி வைத்தார்….. எத்தனை மனிதர்கள் இப்படி கண்ணை பிடுங்கி வைப்பார்கள் என்பது என் கேள்வி? ஆனால் எத்தனை பேருக்கு இந்த கேள்வியின் முழு அர்த்தம் புரியும் என்பதால் சிறிது விரிவாக பதிய விரும்புகிறேன்.
இப்பொழுது நம்மை போன்று இறைவனே யார் என்று தெரியாதவ்ர்கள்…இறைவனை எப்படி அடைவது என்ற எந்த Basic informationum அறியாதவர்கள் யாரேனும் எந்த ஆசிரமத்திற்க்குள் சென்று… அசைவம் சாப்பிட்டு இறைவனை அடைய முடியுமா என்று கேட்டால்??? அவர்கள் எடுத்து காட்டாக வைப்பது…. “கண்ணப்ப நாயனாரைத்தான்”. இப்படி மேம்போக்கான எடுத்து காட்டை எடுத்து வைப்பவர்கள் “கண்ணப்ப நாயனாரின்” நிலை என்ன??? மற்றும் கேள்வி கேட்பவர்களின் நிலை என்று கூட அறிய கூட முடியாத மனநிலையிலே இருப்பார்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
கண்ணப்ப நாயனாரின்… கதை படிக்காதவர்களுக்காக அவரின் கதையை “கண்ணப்ப நாயனார் கதை“ என்ற பெயரில் இங்கு பதிவு செய்து உள்ளேன். இந்த விடயம் தெரிந்திருந்தால்தான்… நான் என்ன சொல்ல வருகிறேன் என்று படிப்பவர்களுக்கு புரியும் என்பது என் கருத்து…… ஆகையால் கதை தெரியாதவர்கள் (அ) கதையை படித்து மறந்தவர்கள் தயவு செய்து படித்து விட்டு தொடர்ந்து படிக்கவும்.
“கண்ணப்ப நாயனாரின் நிலை” [ Kannappa Nayanar ]
அவர் அசைவம் சாப்பிட்டும் இறைவனை அடைந்தார் என்று மட்டும்தான் பரவியிருகிறதே தவிர…. இந்த விடயங்கள் பற்றி பல பேருக்கு தெரியாது!!! அல்லது இது சமயோசிதமாக மறைக்கப்படுகிறது!!!!
கண்ணப்ப நாயனார் ஒரு காலமும் இறைவனை அடைய வேண்டும் என்றும் எண்ணம் எல்லாம் இல்லை…. தீடிரென வழி தவறி அந்த கோவிலுக்கு செல்கிறார்…. மேலும் அவரின் உள்ளுனர்வு அவரை இழுக்கிறது….
1. லிங்கத்தை கண்டவுடன்… அவர் லிங்கத்தின் வரலாறு எல்லாம் அறிய வில்லை….. அவரை அது ஈர்த்தது… கும்பிட்டார் அவ்வளவுதான்!!! இந்த லிங்கம் எப்படி இங்கு வந்தது என்று எல்லாம் அவர் சிந்திக்கவேயில்லை…. எடுத்த எடுப்பிலே யார் இதை தனியாக இங்கு வைத்தது… மேலும் இதற்க்கு கறி உணவு படைக்கபடவில்லையே என்றுதான் அவர் எண்ணினார்…. just love in first sight
2. மேலும் கோவிலில் யார் இருக்கிறார்கள்… அவர்களிடம் அதை எப்படி வழிபட வேண்டும் என்று எல்லாம் அவர் எதிர்பார்க்கவில்லை….
3. மேலும் தான் சுவைத்த கறி துண்டையே படைக்கிறார். அப்படி எனில் எப்படி படைக்க வேண்டும் என்று கூட அவர் அறியாதவராக இருந்தார். ஆம், அவர் தன் வாயில் நீர் எடுத்து சென்று… அந்த லிங்கத்தை கழுவுகிறார்… என்பதில் இருந்தே அவர் நிலை என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
அவர் லிங்கத்திற்காக உணவு எடுக்க செல்லும் போது கூட தனியாக அந்த லிங்கத்தை விட்டு செல்லமுடியவில்லை நாம் செல்லும் சமயத்தில் காட்டு விலங்குகளால் ஏதேனும் ஆபத்து வருமா என்று அஞ்சினார்!!! ஆம் , அவர் லிங்கத்தை கடவுளாக எல்லாம் கருதவில்லை… அந்த லிங்கதிற்க்கே எல்லாம் நாம்தான் என்று அதை குழந்தை போல பாவித்தார்… எத்தனை பேரால் இது முடியும்.
ஆம், நமக்கு இதை (சிவலிங்கம் – இறைவனை) பிடித்திருக்கிறது மேலும் இதை(இறைவனை) அடைய ஒரு குரு வேண்டும் என்று எல்லாம் அவர் பார்க்கவில்லை. இந்த இடத்தில் சிதறி போகிறது…. “குருட்டினை நீக்கா குருவினை கொள்ளார்” மற்றும் “தெளிவு குருவின் திருமேனி” போன்ற திருமந்திர பாடல்களும் மேலும் “குருவில்லா வித்தை பாழ்” போன்ற விடயங்கள் அனைத்தும் தூள் தூளாகிறது!!!!
உணவு பழக்கமும் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லும் ஆசிரமங்களோ அல்லது குருமார்களோ இப்படி “கண்ணப்ப நாயனார்” போன்று இருப்பவர்களுக்கு குருவே தேவை இல்லை என்பதை சொல்வதேயில்லை (அ) அதை மட்டும் மறந்து விடுவார்கள். இங்கு இருக்கிறது சூட்சுமம். ஆம், கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்கள் எவர் முன் அமர்ந்தும் பாடம் கேட்க மாட்டார்கள்.
படிப்பவர்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்…..
முதலில் “கண்ணப்ப நாயனார்” போன்று இருப்பவ்ர்கள் ஒரு காலும் குருவை தேட மாட்டார்கள்!!!!
குருவை தேட மாட்டார்கள் எனில், ஒரு பொழுதும் ஆசிரம வாசலுக்கோ (அ) யோக நிறுவனங்களுக்குள்ளோ…. நுழையவோ மாட்டார்கள்!!!! அப்படி எவனாவது எந்த ஆசிரமதிலாவது நுழைந்து எனக்கு இறைவனை அடைய வேண்டும் வழி காட்டுங்கள் என்று கேட்டால்… அவன் நிச்சயமாக “கண்ணப்ப நாயனாராக” இருக்க முடியாது…. ஆம், ஒரு காலும் இருக்க முடியாது.
அது மட்டுமில்லாமல், கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்கள் Facebook, Orkut மற்றும் Blog க்குள் எல்லாம் வந்து படிக்கவும் மாட்டார்கள் அல்லது எப்படி இருந்த்தாலும் இறைவனை அடைய முடியும் என்ற தகுதி உடையவர்கள் இணையதளத்திலோ அல்லது நேரிலோ வந்து யாருக்கும் போதிக்கவும் மாட்டார்கள். ஏன் எனில் இறைவன் மீது அவர்களின் பக்தி காட்டாறு போல இருக்கும் அப்படிபட்ட காட்டாறு எங்கும் நின்று யாரிடமும் உபதேசமும் கேட்காது… யாருக்கும் உபதேசமும் வழங்காது என்பதை கண்ணப்ப நாயனாரின் பாதம் பதிந்து சொல்கிறேன்.
உண்மை நிலை இப்படி இருக்க ஆசிரமத்திற்கு வந்திருக்கும் சாதாரன மனிதர்களிடம் இப்படி எது வேண்டுமானலும் சாப்பிட்டு இறைவனை அடைய முடியும் என்று சொல்வது… சரியா??? தவறா??? என்பதை படிப்பவர்களின் மனசாட்சிக்கும் புரியும் என்று நம்புகிறேன்!
கண்டார் லிங்கத்தை…… அது முதல் ஆறு நாட்கள் ஊன், உறக்கம் மறந்தார்…….ஆறே நாட்கள்தான்… இறைவனுடன் கலக்கிறார். வரலாற்றிலே வெறும் ஆறே நாட்களில் இறைவனுடன் கலந்ததில் “கண்ணப்ப நாயனாரை” தவிர யாரும் எங்கும் இல்லை!!!! அப்படி பட்ட “கண்ணப்ப நாயனாரைத்தான்” இன்று இருக்கும் சில போலிகள் நம்மை போன்ற சாதரன மனிதர்களுடன் சேர்த்து வைத்து உதாரணம் காட்டி கொண்டிருக்கின்றன.  என்பதை தாழ்மையுடன் சுட்டி காட்ட விரும்புகிறேன்.
மேலும் கண்ணப்ப நாயனார் அசைவம் உண்டு இறைவனை அடைந்தார் என்று சொல்பவர்கள் கடைசியாக நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டியது ஒன்றுதான். அவரை சிவலிங்கம் ஈர்த்தவுடன் அவர் தனது தூக்கத்தை தொலைத்தார், வேட தலைவன் என்பதை மறந்தார், தன் நாக்கின் சுவையை தனக்கு பயன்படுத்தாமல் இறைவனுக்கு படைக்க போகும் உணவு ருசியாக இருக்கிறதா என்பதை சோதிக்க மாற்றி கொண்டார். தன் வேட்டை தொழிலையே சிவலிங்கத்திற்க்கு உணவு படைப்பதற்க்காக மாற்றி கொண்டார். இறைவனுக்காக இவ்வளவு விடயம் மாற்றி கொண்டவரை போய் வெறுமனே அசைவ உணவை கூட இறைவனை அடையும் தியானத்தில் மறுக்க இயலாதவர்கள் தங்களுக்கு உதாரணமாக சொல்லி கொள்வதை விட மிக பெரிய அறியாமை இருக்க முடியாது! ஆம், நிச்சயமாக இருக்க முடியாது.
இப்படி பட்ட பக்தியை எல்லாம் பழக்கத்தில் எல்லாம் கொண்டு வர முடியாது… திருமூலரை போன்ற 100 மடங்கு சக்தி வாய்ந்த குருவாக இருந்தால் கூட இப்படி பட்ட பக்த்தியை சீடனுக்கு ஊட்ட முடியாது!!!! அது தானே வர வேண்டும்….ஒரு கண்ணை தோண்டி எடுத்தவுடன்… மறு கண்ணையும் தோண்டி எடுக்க வேண்டிய நிலை வரும் போது ஒரு சின்ன சலனம் ஏற்பட்டால் கூட இறைவனை காண முடியாது…. இப்படிபட்ட கண்ணப்ப நாயனாரை… சிறு குரு காணிக்கை குடுத்து இறைவனை அடைய என்னும் என்னை போன்ற சாதாரன பாமரர்களுடன் ஒப்பிட்டு சொல்லும் ஆசிரம நிறவனங்கள் மற்றும் யோக நிறுவனங்களின் ஞான நிலை எந்த அளவில் இருக்கிறது என்று நினைக்கும் போதே புல்லரிக்கிறது.
இப்படி பட்ட அப்பழுக்கில்லாத கண்ணப்ப நாயனாரின் பக்தி கதையை புரிந்து கொள்ள வேண்டும் என்றாலே…. சிறிது சிந்திக்க வேண்டும். இப்பொழுது புரிகிறதா வள்ளல் பெருமான் நம்மை ஏன் ஞானப்பாதைக்கு அழைக்கிரார் என்று!!! ஏன் எனில் அவருக்கு நன்கு தெரியும் பக்தி மார்க்கம் எவ்வளவு கடினம் என்று… மேலும் அவருக்கு புரியும் நாமெல்லாம் கண்ணை அல்ல சிறு தலை முடியை கூட பிடுங்க மாட்டோம் என்பது. உள் நெஞ்சில் கை வைத்து பார்ப்பவர்களுக்கு தெரியும் “கண்ணை பிடுங்குவோமோ” (அ) மாட்டோமா என்று!!
வள்ளல் பெருமான் வியந்து போற்றிய ஞானி “மாணிக்க வாசகர்”… ஆம்
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை,நான்கலந்து பாடுங்கால்,
நற்கருப்பஞ்சற்றினிலேதேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,
என்ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”
நமக்கெல்லாம் இறைவன் எட்ட வேண்டும் என்று எட்டாம் திருமறை(8) தந்த அய்யா மாணிக்க வாசகர்... கண்ணப்ப நாயனாரை பற்றி சொன்னார்?
என்ன சொன்னார்……
“கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்”
கண்ணப்பனுக்கு ஈடான அன்பு என்னிடம் இல்லை என தெறித்து சொல்கிறார்………
இனியும் கண்ணப்ப நாயனாரின் பக்தியை பற்றி சொல்ல என்ன இருக்கிறது!!!!
சிவலிங்கத்தில் ஏன் இரத்தம் வழிந்தது மேலும் ஏன் சிவன் நாயனாரை ( Kannapa Nayanar ) வலகண்ணை நில் (அ) வலகண்ணை தோண்டியதே போதும் என்று சொன்னார் என்று சிந்தித்தால்… அது ஞான பாதைக்கு நம்மை நகர்த்தும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!

நன்றி துளசி


எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

கண்ணப்ப நாயனார் பக்தி  Empty Re: கண்ணப்ப நாயனார் பக்தி

Post by ayyasamy ram Fri Dec 18, 2015 7:24 am

கண்தானம் தொடங்கி வைத்தவர் வரலாறு...!!
-
புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82768
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கண்ணப்ப நாயனார் பக்தி  Empty Re: கண்ணப்ப நாயனார் பக்தி

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 12:42 pm

கண்ணப்ப நாயனாரின் பக்தியால் கண்ணை தானம் செய்து அந்த காலத்திலே உடல் உறுப்பு தானம்
செய்ய முடியும் என்று நமக்கு உணர்த்தி உள்ளார்,நன்றி கார்த்தி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கண்ணப்ப நாயனார் பக்தி  Empty Re: கண்ணப்ப நாயனார் பக்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum