ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
கதையை மாற்றுவோம் ! Poll_c10கதையை மாற்றுவோம் ! Poll_m10கதையை மாற்றுவோம் ! Poll_c10 
VENKUSADAS
கதையை மாற்றுவோம் ! Poll_c10கதையை மாற்றுவோம் ! Poll_m10கதையை மாற்றுவோம் ! Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
கதையை மாற்றுவோம் ! Poll_c10கதையை மாற்றுவோம் ! Poll_m10கதையை மாற்றுவோம் ! Poll_c10 
VENKUSADAS
கதையை மாற்றுவோம் ! Poll_c10கதையை மாற்றுவோம் ! Poll_m10கதையை மாற்றுவோம் ! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கதையை மாற்றுவோம் !

5 posters

Go down

கதையை மாற்றுவோம் ! Empty கதையை மாற்றுவோம் !

Post by M.Jagadeesan Sun Dec 13, 2015 9:27 am

ஒரு கழுகு , தன் குஞ்சுடன் வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்தது .

" அம்மா ! ரொம்பத் தாகமா இருக்கு ! குடிக்கத் தண்ணி வேணும் ! " என்றது குஞ்சு .

" கொஞ்சம் பொறு ! தண்ணி எங்கே இருக்குதுன்னு பார்க்கிறேன் ! ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ......அதோ ! அந்த வீட்டின் கொல்லைப்  புறத்திலே உள்ள ஒரு பானையில் கொஞ்சம் தண்ணீர் உள்ளது ! வா ! நாம் போய்க் குடிக்கலாம் ! " என்றது தாய்க் கழுகு .


கழுகும்  ,குஞ்சும்  பறந்து வந்து அந்தப் பானையின் விளிம்பின் மீது அமர்ந்தன !

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருந்தது . அது கழுகுக்கும் ,அதன் குஞ்சுக்கும் எட்டவில்லை .

" அம்மா ! தண்ணி எனக்கு எட்டலையம்மா ! " என்று சொல்லி அழுதது கழுகுக் குஞ்சு .

" கவலைப் படாதே ! ஏதாவது ஒரு வழி பிறக்கும் . அதுவரையில் அந்த மரத்தின் கிளை மீது உட்கார்ந்திருப்போம் ; வா ! " என்று சொல்லி தன் குஞ்சுடன் அங்கிருந்த ஒரு மரத்தின் கிளை மீது அமர்ந்தது கழுகு .

சிறிது நேரம் சென்றது . அப்போது அங்கு ஒரு காகம் வந்தது . அதுவும் தண்ணீரைத் தேடி அலைந்து களைத்திருந்தது . பானையின் மேலே ஏறி நின்று பார்த்தது .

பானையின் அடியில் கொஞ்சம் தண்ணீர் இருப்பதைக் கண்டு , மிகுந்த மகிழ்ச்சி கொண்டது. தண்ணீரைக் குடிக்க முயற்சி செய்தது . ஆனால் பாவம் ! காகத்திற்கும் தண்ணீர் எட்டவில்லை .

தண்ணீர் எட்டவில்லையே என்று காகம் வருத்தப்படவில்லை .  அங்குமிங்கும் பார்த்தது . பானைக்குப் பக்கத்தில் கொஞ்சம் கூழாங்கற்கள் குவியலாகக் கிடந்ததைப் பார்த்தது . உடனே செயலில் இறங்கியது . ஒவ்வொரு கல்லாக எடுத்து வந்து பானைக்குள் போட்டது . தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்தது . தண்ணீர் பானையின் விளிம்பைத் தொட்டவுடன் , காகம் , மகிழ்வோடு நீரைக் குடிக்க ஆரம்பித்தது .

இந்த தருணத்திற்காகத்தான் கழுகு காத்திருந்தது. மரத்தின் கிளையிலிருந்து சரேலெனக் காக்கையின் மீது பாய்ந்தது . இதைச் சற்றும் எதிர்பாராத காக்கைத் தப்பித்தோம் , பிழைத்தோம் என்று பறந்து மறைந்தது . கழுகு ஆசைதீரத் தண்ணீரைக் குடித்தது . தன் குஞ்சையும் தண்ணீர் அருந்தக் கூப்பிட்டது . குஞ்சு, பறந்துவந்து தாயின் அருகில் அமர்ந்தது. நீர் அருந்தாமல் தாய்க் கழுகையே பார்த்துக் கொண்டிருந்தது .

" ஏன் சும்மா இருக்கிறாய் ? தண்ணீரைக் குடி !"

" அம்மா ! அந்தக் காக்கையின் உழைப்பினால் வந்த நீரை நாம் குடிப்பது பாவம் அல்லவா ! அந்தக் காக்கையையும் நீரைக் குடிக்கும் முன்பாக விரட்டி விட்டாய் ! அடுத்தவர் உழைப்பை நாம்   திருடுவது பாவம் . " என்றது கழுகுக் குஞ்சு .

" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .

இல்லையம்மா ! எனக்கு அந்தத் தண்ணீர் வேண்டாம் . தாகத்தால் நான் செத்தாலும் சாவேனே தவிர , அடுத்தவர் உழைப்பினால் வந்த எதையும் நான் தொடமாட்டேன் . என்று கூறிவிட்டு குஞ்சுக் கழுகு பறந்து சென்றது .


தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினியது இல் . ( இரவச்சம் - 1065 )

பொருள் : நம்முடைய முயற்சியினால் வந்தது கூழ் என்றாலும் , அதை உண்ணும்போது கிடைக்கின்ற இனிமை , வேறு எந்த உணவிலும் கிடைக்காது .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by krishnaamma Sun Dec 13, 2015 9:39 am

மிக அருமையான கதை ஐயா !.................. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ................ஆனால் இப்போது நம்மை சுற்றி நடக்கும் 'ஸ்டிக்கர்' கலாச்சாரத்த பார்க்கும் போது...............வருத்தமும் எதிர்காலத்தை பற்றிய அச்சமும் தான் ஏற்படுகிறது சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 10:58 am

M.Jagadeesan wrote:
" ஏய் மூடனே ! பேசாமல் தண்ணீரைக் குடி ; தத்துவம் பேசாதே . தேனீக்கள் கஷ்டப்பட்டு சேமித்து வைத்திருக்கும் தேனை ,மனிதன் திருடி உண்கிறான் . தன் கன்றுக்காகப் பசு சேமித்து வைத்திருக்கும் பாலை , மனிதன் கறந்து குடிக்கிறான் . அதெல்லாம் தவறு இல்லையென்றால் ,இதுவும் தவறு இல்லை . பிழைக்கின்ற வழியைப் பார் ! பேசாமல் தண்ணீரைக் குடி! " என்று புத்திமதி சொன்னது தாய்க் கழுகு .
மேற்கோள் செய்த பதிவு: 1180112
கழுகு குஞ்சுக்கு இருந்த புத்தி இன்று பலருக்கு இல்லை என்பதே உண்மை.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by ayyasamy ram Sun Dec 13, 2015 1:22 pm

கதையை மாற்றுவோம் ! 103459460 கதையை மாற்றுவோம் ! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by ராஜா Sun Dec 13, 2015 1:37 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:கழுகு குஞ்சுக்கு இருந்த புத்தி இன்று பலருக்கு இல்லை என்பதே உண்மை.
ஆமாம் ஐயா , அதிலும் அந்த தாய்க்கழுகுக்கு சுத்தமாக இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by பழ.முத்துராமலிங்கம் Sun Dec 13, 2015 5:30 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:கழுகு குஞ்சுக்கு இருந்த புத்தி இன்று பலருக்கு இல்லை என்பதே உண்மை.
ஆமாம் ஐயா , அதிலும் அந்த தாய்க்கழுகுக்கு சுத்தமாக இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1180194
இன்று அடுத்தவன் உழைப்பை சுரண்டி தின்பவனே அதிகமாக உள்ளனர் .
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

கதையை மாற்றுவோம் ! Empty Re: கதையை மாற்றுவோம் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum