ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

+2
சாமி
கார்த்திக் செயராம்
6 posters

Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by கார்த்திக் செயராம் Wed Nov 11, 2015 8:37 pm

நமது தாய் மொழி “தமிழ்”. கல் தோன்றா மன் தோன்றா முன்பே பிறந்த இனம் பேசிய மொழி. கல் என்பது கல்வியையும், மன் என்பது மன்னர் ஆட்சியையும் குறிக்கிறது.

 

அதாவது, கல்வியும், மன்னர் ஆட்சியையும் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மாந்தர்கள் கதைத்த மொழி தமிழ் மொழி. இன்றிய உலக மொழிகளும், அம்மொழிகளை பேசும் இன மக்களும் பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இயல், இசை, நாடகத்தில் திளைத்து வளர்ந்த மொழி நமது உலக செம்மொழி தமிழ்.

இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?

உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனும் உயிர் எழுத்துக்கள் நாக்கின் உதவி இன்றி, அதாவது நாக்கு வாயின் மேல் அண்ணத்தில் படாமல் வெறும் காற்றின் உதவியால் மட்டுமே உருவாகும் ஒலிகள் ஆகும். உயிருக்கு முதன்மையானது காற்று என்பதால் காற்றை மட்டும் கொண்டு உருவாகும் இந்த ஒலிகள் உயிர் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மெய் எழுத்துக்கள்

க், ங், ச், ஞ் ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனும் மெய் எழுத்துக்கள் நாக்கின் உதவிக் கொண்டு உருவாகும் எழுத்துக்கள் ஆகும். அதாவது, இந்த எழுத்துக்கள் உருவாகும் போது நாக்கு வாயின் மேல் அன்னத்தைத் தொடும். இந்த ஒலிகள் உருவாகும் போது காற்றின் பங்கு மற்றும் உதவியை விட, உடலின் பங்கு அதிகம் என்பதால் இவை மெய் எழுத்துக்கள் / ஒலிகள் என்று அழைக்கப்பட்டன.

தமிழ் எழுத்துக்களும் உடல் பாகங்களும்

தமிழ் எழுத்துக்கள் நமது மார்பு, கழுத்து, தலை, மூக்கு போன்ற நான்கு இடங்களில் பிறக்கின்றன. இவை ஒலியாக வெளிப்பட உதடு, நாக்கு, பல், அண்பல் (மேல் பல் வரிசையின் அடிப்பகுதி), அண்ணம் (வாயின் மேல் பகுதி) உதவுகின்றன.

தமிழ் எழுத்துக்கள்

உயிர் எழுத்து, மெய் எழுத்து மற்றும் இவை இரண்டின் கலப்பில் பிறந்த உயிர்மெய் எழுத்து மற்றும் “ஃ” எனும் ஆயுத எழுத்தையும் சேர்த்து தமிழில் மொத்தம் 247 எழுத்துக்கள் பிறந்துள்ளன.

உயிர் எழுத்துக்கள்: 12

மெய் எழுத்துக்கள்: 18

உயிர்மெய் எழுத்துக்கள்: 216

ஆய்த எழுத்து: 1 (ஃ)

தமிழ் எழுத்துக்கள் மொத்தம்: 247

வல்லினம், மெல்லினம், இடையினம்

க, ச, ட, த, ப, ற – என்ற ஆறு எழுத்துக்கள் வல்லினம். ங, ஞ, ண, ந, ம, ன – என்ற ஆறு எழுத்துக்கள் மெல்லினம். ய, ர, ல, வ, ழ, ள – என்ற ஆறு எழுத்துக்கள் இடையினம்.

பாவாணர் கருத்து

உலக மாந்தர் முதன் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ (படர்க்கை), இ (தன்னிலை) மற்றும் உ (முன்னிலை) என்பது பாவாணரரின் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெயெழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை தான் த், ம், ழ் என்பவை ஆகும்.

தமிழ் பெயர் பிறந்த விதம்

த், ம், ழ் எனும் இந்த மூன்று மெய்களுடன் உலகின் முதல் உயிரெழுத்துக்களை வரிசைப்படுத்தி முறையே கூட்டி த்+அ = ‘த’ வாகவும், ம்+இ = ‘மி’ யாகவும், ழ்+உ = “ழு” வாகவும் என்று “தமிழு” என்று ஆக்கினர்

உகரத்தை நீக்குதல்

பிறகு கடைசி எழுத்திலுல்ல உகரத்தைத் நீக்கி “தமிழு” என்பதை “தமிழ்” என்று அழைத்தனர். இது தான் நம் தாய் மொழிக்கு “தமிழ்” என்று பெயர் வந்ததன் காரணம்
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by சாமி Wed Nov 11, 2015 9:42 pm

கார்த்திக் செயராம் wrote: இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1174224

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது JXAKUquOQhymXvDP8vSI+vallalar
தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது பஞ்சாட்சர (ஐந்தெழுத்து) மந்திரச் சொல்.

பஞ்சாட்சரம் என்றால் ஐந்து அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது. தமிழ் என்ற சொல்லில்
த் - அ - ம் - இ - ழ்
என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

இப்படி ஒரு பெரிய விளக்கத்தை அருட்பிரகாச வள்ளலார் எனப்புகழ் பெற்ற இராமலிங்க அடிகள் கூறியுள்ளார். விளக்கம் கிட்டத்தட்ட  7 பக்கங்களுக்கு குறையாமல் போகும். படித்துப் பாருங்கள்....
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011

http://arundhtamil.blogspot.in

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 9:03 am

தமிழ் மொழிஎப்படி உருவாகியது என்ற கார்த்தியின் விளக்கம் அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Nov 12, 2015 9:09 am

தமிழ் மொழி பஞ்சாட்சர மந்திரம் ,ஐந்து அட்சரங்கள் அடங்கியது என்ற அருட்பெருஞ்சோதி வள்ளலார் ராமலிங்க அடிகள் கூறியதை குறிப்பிட்ட ஐயா சாமி அவர்களுக்கு நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by SK Thu Nov 12, 2015 4:23 pm

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது 103459460
அருமையான பதிவு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by Hari Prasath Thu Nov 12, 2015 6:01 pm

அருமையான பதிவு



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by jagan Tue Nov 17, 2015 1:20 am

சாமி wrote:
கார்த்திக் செயராம் wrote: இத்தனை சிறப்பு கொண்ட நமது தமிழ் மொழியில் இருக்கும் வார்த்தைகள் எவ்வாறு பிறந்தன, உருவாகின என்பதை பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கோள் செய்த பதிவு: 1174224

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது JXAKUquOQhymXvDP8vSI+vallalar
தமிழ் என்பது ஒரு சாதாரண வெறும் சொல் அல்ல. அது பஞ்சாட்சர (ஐந்தெழுத்து) மந்திரச் சொல்.

பஞ்சாட்சரம் என்றால் ஐந்து அட்சரங்களை, அதாவது ஐந்து எழுத்துக்களை உடையது. தமிழ் என்ற சொல்லில்
த் - அ - ம் - இ - ழ்
என்ற ஐந்து எழுத்துக்கள் இருக்கின்றன.

இப்படி ஒரு பெரிய விளக்கத்தை அருட்பிரகாச வள்ளலார் எனப்புகழ் பெற்ற இராமலிங்க அடிகள் கூறியுள்ளார். விளக்கம் கிட்டத்தட்ட  7 பக்கங்களுக்கு குறையாமல் போகும். படித்துப் பாருங்கள்....
மேற்கோள் செய்த பதிவு: 1174230 நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது 103459460
avatar
jagan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 16/11/2008

Back to top Go down

நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது Empty Re: நமது தாய் மொழி “தமிழ்” என்று ஏன் வந்தது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum