ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

2 posters

Go down

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் Empty கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Post by ChitraGanesan Fri Oct 23, 2015 6:06 pm

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் / மரங்கள்
– உங்கள் வீட்டில் உள்ளதா?

வீட்டுத் தோட்டங்களில் அழகுக்கு செடிகள் மற்றும் மரங்கள் வளர்க்கலாம். அப்படி வளர்க்கப்படும் செடிகளில் சில பூச்சிகளை விரட்டுபவையாக, முக்கியமாக கொசுக்களையும் விரட்ட உதவுபவையாக இருந்தால் இரட்டை சந்தோஷம்தானே! கொசுக்களை விரட்டி நம் இரவுத் தூக்கத்தை இனிமையாக்கும் சில செடிகள் இங்கே…

கொசுக்கடி என்றால் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சில நோய்களையும் பரப்புகின்றன. கொசுக்களை விரட்ட கொசு விரட்டி சுருள்கள், கொசு விரட்டி கிரீம்கள், எலெக்ட்ரானிக் கொசு விரட்டிகள் மற்றும் மூலிகை லோஷன்கள் ஆகியவற்றை பயன்படுத்தினாலும், அனைவருக்கும் அது முழு பயன் தருவதில்லை. மாறாக நாசி குழி, சருமம் மற்றும் தொண்டை பிரச்சனைகள் போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.

கொசுவை விரட்ட சிலர் ரசாயனங்களையும் பயன்படுத்துகின்றனர். இது உடல் நலத்திற்கும், சுற்றுச் சூழலுக்கும் தீய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இதற்கு மாற்றாக இயற்கையான வழியில் கொசுக்களை கட்டுப்படுத்தலாம். அதற்கு உங்கள் வீட்டில் சில கொசு விரட்டி செடிகளை வளர்க்கலாம். இதன் மூலம் கொசுக்களை விரட்டுவது மட்டுமல்லாமல், உங்கள் வீட்டைசுற்றி அழகுபடுத்தியது போலவும் ஆகும்.

எளிய முறையில் வளர்க்க கூடிய கொசு விரட்டி செடிகள்:

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் Empty Re: கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Post by ChitraGanesan Fri Oct 23, 2015 6:07 pm

# துளசி செடி

துளசி என்பது கொசு விரட்டி செடியாகும். சக்காமலேயே நறுமணத்தை பரப்பிடும் மூலிகை செடிகளில் ஒன்று தான் துளசி. கொசுக்களை கட்டுப்படுத்த துளசியை தொட்டியில் வைத்து வீட்டின் முற்றத்தில் அதனை வளர்க்கலாம். கொசுக்கள் அண்டாமல் இருக்க கசக்கிய துளசி செடியை சருமத்தின் மீது தடவிக் கொள்ளலாம். உணவிற்கு சுவையளிக்கவும் துளசி செடி உதவுகிறது. கொசுக்களை கட்டுப்படுத்த எந்த ஒரு துளசி வகையையும் பயன்படுத்தலாம். ஆனால், லவங்கப் பட்டை துளசி, எலுமிச்சை துளசி மற்றும் பெருவியன் துளசிகளில் தான் அடர்த்தியான நறுமணம் வருவதால் அவைகள் சிறப்பாக செயல்படும்.

# கிராம்பு செடி

கிராம்பு மசாலாப் பொருட்களில் ஒன்றான கிராம்பின் நறுமணத்திற்கும் கொசுக்கள் வராது. எனவெ இந்த கிராம்பு செடியை வீட்டில் வளர்த்து, கொசுக்களை விரட்டுங்கள்.

# சாமந்திப்பூ செடி (Marigold)

மஞ்சள் வண்ண பூக்களைக் கொண்ட செடி வகை. இதை கிராமப்புறங்களில் ‘துலுக்கச் சாமந்தி’ என்று குறிப்பிடுவார்கள். சிராய்ப்பு, காயங்கள், தோல் வியாதிகள், தீக்காயம், சொறி, சிரங்கு, மூல நோய் போன்றவற்றுக்கு இதை அரைத்துப் பயன்படுத்துவார்கள். மலச்சிக்கல், குடல் புண்கள், மாதவிடாய் பிரச்னைகளுக்கும் இது அருமருந்து. தாவரங்களின் சாறை உறிஞ்சும் பூச்சிகளை விரட்ட மாரிகோல்ட் உதவுகிறது. இது ஒரு சிறந்த கொசுவிரட்டி. சூரிய ஒளி படும் இடத்தில் வைத்தால் வேகமாய் வளரும்.

இதன் வாசனை பிரச்னை இல்லை என்றால், கொசுக்கள் உற்பத்தியாகும் பாத்ரூம், சமையலறையிலும் மாரிகோல்ட்டை வைத்து வளர்க்கலாம். தினமும் இரண்டு மணி நேரம் எடுத்துப் போய் வெயிலில் காட்டினால் போதும். நன்றாக வளரும், கொசுக்களை விரட்டும்.

# லெமன் பாம் (Lemon balm)

லெமன் பாம் (Lemon Balm) லெமன் பாம் செடியும் புதினா செடியின் வகையைச் சேர்ந்தது. ஆனால் இதில் எலுமிச்சை வாசனை வரும்.

லெமன் பாம் செடியும் கூட கொசுக்களை அண்ட விடாது, வேகமாக வளரும் லெமன் பாம் செடி, பறந்து விரிந்து வளர போதிய இடம் தேவை. லெமன் பாம் இலைகளில் சிட்ரோனெல்லல் பொருட்கள் வளமையாக உள்ளது. பல கமர்ஷியல் கொசு விரட்டிகளில் சிட்ரோனெல்லல் பயன்படுத்தப்படுகிறது. சில வகையான லெமன் பாம்களில் 38% வரையிலான சிட்ரோனெல்லல் உள்ளது. கொசுக்களை கட்டுப்படுத்த லெமன் பாம் செடியை வீட்டின் முற்றத்தில் வளர்க்கலாம். கசக்கிய லெமன் பாம் இலைகளை சருமத்தில் தடவிக் கொண்டால் கொசு அண்டாது.

இந்த செடியை வாசனை திரவியங்கள் தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள். எனவே இத்தகைய செடியை வீட்டில் வளர்த்தால், வீடே வாசனையுடன் இருப்பதோடு, கொசுக்கள் வராமலும் இருக்கும்.

# புதினா (Mint)

டீ தயாரிக்கவும், சளி, ஜூரம் ஆகிய பிரச்னைகளுக்கு சிகிச்சைக்காகவும் பயன்படுவது புதினா. இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும். இதிலிருந்து தயாரிக்கப்படும் திரவத்தை தெளித்தால் கொசுவை விரட்டி விடலாம். வீட்டிலுள்ள தொட்டியில், அறைக்குள் வைத்து மிக எளிதாக இதை வளர்க்கலாம். மண்ணில் ஒருமுறை பயிரிட்டால் தானாக, வேகமாக வளரும்.

# யூகிலிப்டஸ் (Eucalyptus)

தமிழகத்தில், நீலகிரி மாவட்டத்தில் பரவலாகக் காணப்படும் மூலிகை. படுவேகமாக வளரக்கூடியது. ஆனால் இதை வீட்டில் வளர்ப்பது சாத்தியமில்லை. அதே சமயம் இதன் இலைகளை எளிதாக சேகரிக்கலாம். அவற்றைக் காய வைத்து தீ மூட்டினால் அந்த வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.

# லாவெண்டர் செடி

கொசுக்களை விரட்டும் ஒரு அருமையான செடி தான் லாவெண்டர். அதற்கு அதிக கவனிப்பு தேவையில்லை என்பதால் லாவெண்டர் செடியை வளர்ப்பது சுலபமாகும். 4 அடி உயரம் வரை வளரும் இந்த செடிக்கு நன்றாக வெயில் அடிக்க வேண்டும். ரசாயனம் அல்லாத கொசு விரட்டி சொல்யூஷனை தயார் செய்ய வேண்டுமானால், அதிமுக்கிய லாவெண்டர் எண்ணெய்யை தண்ணீரில் கலந்து, சருமம், கழுத்து, மணிக்கட்டு மற்றும் கணுக்காலில் மீது நேரடியாக தடவலாம். கொசுக்களை கட்டுப்படுத்த லாவெண்டர் செடி தொட்டிகளை, உட்காரும் இடத்திற்கு அருகில் வைத்திடவும்.

ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் Empty Re: கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Post by ChitraGanesan Fri Oct 23, 2015 6:07 pm

# ஹார்ஸ் மின்ட் (Horse mint)

ஹார்ஸ்மின்ட் என்பதும் பல்லாண்டு காலம் வாழும் ஒரு செடியாகும். அதற்கென எந்த ஒரு விசேஷ கவனிப்பும் தேவையில்லை. ஹார்ஸ்மின்ட் செடியின் நறுமணம் சிட்ரோனெல்லா புல்லை போலவே இருக்கும். வெப்பமான வானிலையிலும் மணற்பாங்கான நிலத்திலும் இது நன்றாக வளரும். இந்த செடியில் பிங்க் நிற பூக்கள் பூக்கும். ஹார்ஸ்மின்ட் செடியில் இயற்கையான பூஞ்சை கொல்லி மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து நிற்கிற குணங்கள் உள்ளது. அதற்கு காரணம் அதன் அதிமுக்கிய எண்ணெய்களில் இருந்து கிடைக்கும் தைமால் என்ற பொருள். ஃப்ளூ காய்ச்சலுக்கும் இது பயன்படுத்தப்படுகிறது.

# அகிராட்டம் (Ageratum)

அகிராட்டம் செடியில் பூக்கும் வெளிர் ஊதா மற்றும் வெண்ணிற பூக்கள் மூலமாக கெளமாரின் உருவாகும். கெளமாரினில் இருந்து வரும் கடுமையான வாசனை கொசு விரட்டியாக செயல்படுகிறது. இந்த கெளமாரினை தான் சந்தையில் கிடைக்கும் கமர்ஷியல் கொசு விரட்டி மற்றும் பெர்ஃப்யூம் தொழிற்சாலையில் பயன்படுத்துகின்றனர். அகிராட்டத்தை கண்டிப்பாக சருமத்தில் தடவ கூடாது. அதற்கு காரணம் சருமத்திற்கு ஆகாத பொருட்கள் அதில் இருப்பதே. முழுமையான அல்லது லேசான சூரிய ஒளியின் கீழ் அகிராட்டம் வளரும். கோடைக்காலம் முழுவதும் இது மலர்ந்திருக்கும்.

# காட்னிப் (Catnip)

காட்னிப் என்ற செடி புதின குடும்பத்துடன் தொடர்புடையது. இது ஒரு கொசு விரட்டி என சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. சமீபத்திய ஆய்வின் படி, டீட் என்ற ரசாயன பூச்சு கொல்லியை விட இது 10 மடங்கு அதிக சிறப்பாக செயல்படும். பல்லாண்டு வாழ்கிற செடியான காட்னிப்பை சூரிய ஒளி படும் படி அல்லது லேசான நிழலில் வைத்து வளர்த்தால் 3 அடி உயரம் வரை வளரும். காட்னிப் செடியில் வெண்ணிற அல்லது லாவெண்டர் நிற பூக்கள் பூக்கும். கொசுக்களையும் பிற பூச்சிக்களையும் கட்டுப்படுத்த காட்னிப் செடியை வீட்டின் பின்புற தோட்டத்தில் வளர்க்கவும். பூனைகளுக்கு காட்னிப் செடியின் நறுமணம் பிடிப்பதால், அதனை பாதுகாக்க செடியை சுற்றி வேலி போட்டுக் கொள்ளலாம். கொசுவை கட்டுப்படுத்த காட்னிப் செடியை பல வகையால் பயன்படுத்தலாம். கசக்கிய அதன் நற்பதமான இலைகளை அல்லது அதிலிருந்து எடுத்த சாறை சருமத்தில் தடவலாம்.

# சிட்ரோநெல்லா புல் (Citronella – Lemongrass)

சிட்ரோநெல்லா புல் 2 மீட்டர் உயரத்திற்கு வளரும் இது ஆண்டிற்கு ஒரு முறை லாவெண்டர் நிற பூக்களை பூக்கும். இந்த புல்லில் இருந்து எடுக்கபப்டும் சிட்ரோனெல்லா எண்ணெய்யை தான் மெழுகுவர்த்திகள், பெர்ஃப்யூம்கள், விளக்குகள் மற்றும் இதர மூலிகை பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.

கொசுக்களை கட்டுப்படுத்த சிட்ரோனெல்லா எண்ணெய்யை மெழுகுவர்த்தி மற்றும் விளக்குகளில் ஊற்றி அதனை தோட்டத்தில் எரிய விடலாம். சிட்ரோனெல்லா புல்லில் பூசண எதிர்ப்பி குணங்களும் உள்ளது. சிட்ரோனெல்லா புல் நம் சருமத்திற்கு பாதுகாப்பானது. அதனால் அதனை நீண்ட நேரம் தடவிக் கொள்ளலாம். உயிரிகளுக்கும் எந்த ஒரு ஆபத்தையும் ஏற்படுத்தாது.

# வேப்ப மரம்

வலிமையான கொசு விரட்டி மரங்களில் ஒன்றாக விளங்குகிறது வேப்ப மரம். வேப்ப மரத்தில் பூச்சி கொல்லி குணங்கள் அடங்கியுள்ளது. வேப்பிலை சேர்த்த பல கொசு விரட்டிகளும் பாம்களும் சந்தையில் கிடைக்கிறது.வேப்ப இலைகளை எரித்தோ அல்லது வேப்ப எண்ணெய்யை மண்ணெண்ணெய் விளக்கில் போட்டோ பயன்படுத்தலாம். கொசுக்களை விரட்ட வேப்ப எண்ணெய்யை உங்கள் சருமத்தில் தடவலாம். அதிலுள்ள இயற்கையான கொசு விரட்டி குணங்கள் மலேரியாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படும்.

# பூண்டு செடி (Garlic)

மூலிகை சார்ந்த மருத்துவத்தில் பூண்டுக்கு மிக முக்கியமான இடம் உண்டு. மிக அதிகமாக பூண்டு சாப்பிடுபவர்களை கொசுக்கள் கடிப்பதில்லை என்கிறார்கள். பூண்டு செடியை வீட்டினுள் ஒரு தொட்டியில் போட்டு வளர்த்து வந்தால், அதன் அடர்த்தியான நறுமணத்தால் கொசுக்கள் வீட்டினுள் வராமல் இருக்கும்.

பூண்டு எண்ணெயையும் தண்ணீரையும் 1க்கு 5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் கொசு நுழையும் இடங்களில்
தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

நன்றி - குங்குமம் தோழி மற்றும் இணையத்தளம்
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013

http://chitrafunds@gmail.com

Back to top Go down

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் Empty Re: கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Post by shobana sahas Fri Oct 23, 2015 7:41 pm

நல்ல பகிர்வு அய்யா . நன்றி .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

கொசுவை விரட்டியடிக்கும் செடிகள் Empty Re: கொசுவை விரட்டியடிக்கும் செடிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum