Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
2 posters
Page 1 of 1
நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
![நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் ! PGIL0LtgQ7oOq6njyJti+Tamil_News_large_1362904](https://www.filepicker.io/api/file/pGIL0LtgQ7oOq6njyJti+Tamil_News_large_1362904.jpg)
நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் குவிவதால், தமிழகத்தில், சிவகாசி பட்டாசு ஆலைகளுக்கு, 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 'ஆர்டர்'கள் குறைந்துள்ளன. இதனால், பட்டாசு வகையிலான, வணிக வரி மற்றும் கலால் வரிகளில் மட்டும், மத்திய, மாநில அரசுகளுக்கு, 530 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நம் நாட்டில், 95 சதவீத பட்டாசு உற்பத்தி, விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடக்கிறது; இங்கு, 780 பட்டாசு ஆலைகள் உள்ளன. மொத்தம், ஐந்து லட்சம் பேர், நேரடியாகவும், மறைமுகமாகவும் இத்தொழிலைச் சார்ந்துள்ளனர். ஆண்டுதோறும், தீபாவளிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்னதாகவே, கை நிறைய, ஆர்டர்களுடன் சுறுசுறுப்பாகி விடும் இந்த பட்டாசு ஆலைகள், இந்த ஆண்டு வேலை குறைந்து காணப்படுகின்றன; தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வாரத்திற்கு, மூன்று நாட்கள் மட்டுமே வேலை நடக்கிறது.
காரணம் என்ன?
சீன பட்டாசு இறக்குமதிக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் இரும்பு, 'ஸ்கிராப்' மற்றும் பொம்மைகள் என்ற ஆவணப் பெயருடன், சீனாவில் இருந்து பட்டாசுகள், கன்டெய்னர்களில் நிரப்பப்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள துறைமுகங்கள் வழியாக இறக்குமதியாகின்றன.'நம் நாட்டிற்குள் இப்படி கள்ளத்தனமாக வரும், சீன பட்டாசுகளின் ஊடுருவலைத் தடுக்க வேண்டும்' என, சுங்கத் துறை அதிகாரிகளுக்கு, மத்திய வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டுள்ளார். 'மாநில அரசுகளும், சீன பட்டாசு விற்பனையைத் தடுக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார். ஆனாலும், சீன பட்டாசுகள் வரத்து தொடர்வதால், சிவகாசி ஆலைகள் தள்ளாடுகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு பட்டாசு, 'கேப்' வெடி உற்பத்தியாளர் சங்கத் தலைவர் அபிரூபன்
கூறியதாவது: வழக்கமாக, ஜூன் மாதத்திலேயே பட்டாசுக்கான ஆர்டர் வந்து, அதற்கேற்ப உற்பத்தி நடக்கும். ஜூலையில் வினியோகம் துவங்கும். ஆனால், சீன பட்டாசுகள் வரத்தால், ஆர்டர்கள் குறைந்துவிட்டன. வழக்கமாக, 6,000 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கிடைக்கும். இந்த ஆண்டு அதில், 35 சதவீதம் குறைந்து விட்டது; பட்டாசு தொழிற்சாலைகளுக்கு, 2,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
அரசுக்கு இழப்பு:
உள்நாட்டில் தயாராகும் பட்டாசுகளுக்கு, மத்திய அரசுக்கு, 12.5 சதவீதம் கலால் வரியும், மாநில அரசுக்கு, 14.5 சதவீதம் வணிக வரியும் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு, 2,000 கோடி ரூபாய்க்கு, ஆர்டர்கள் குறைந்துள்ளதால், கலால் வரி, 240 கோடி ரூபாய்; வணிக வரி, 290 கோடி ரூபாய் என, 530 கோடி ரூபாய், அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
சுங்கத்துறை அலட்சியம்:
தமிழ்நாடு பட்டாசு தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் ராஜா கூறியதாவது: ஜூனில், மும்பை துறைமுகத்தில், 17.5 கோடி ரூபாய் மதிப்பிலான சீன பட்டாசுகள் கையகப்படுத்தப்பட்டன. இவை யாருக்கு வந்தவை என, இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. பஞ்சாப், உ.பி., மாநிலங்களுக்கு, சமீபத்தில், 2,000 கன்டெய்னர்களில் சீன பட்டாசுகள் வந்துள்ளதால், வட மாநிலங்களில் இருந்து சிவகாசிக்கு, ஆர்டர்கள்
வரவில்லை.சீன பட்டாசுகள் வருகையைத்தடுக்க, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், நம் மாநிலத்தில், ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. உள்ளூர் உற்பத்தியை ஊக்கப்படுத்த, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை அறிவித்த மத்திய அரசு, அதற்கேற்ப, சீன பட்டாசுகளை முற்றிலும் தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
விலை குறைவான சீன பட்டாசு:
சீன பட்டாசுகளில் பெரும்பாலானவை, விலை குறைவாகவே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு, ஐந்து பட்டாசுகள் அடங்கிய, 'குருவி வெடி'க் கட்டு ஒன்று, மொத்த விற்பனையில், 40 ரூபாய்க்கும்; சில்லரையில், 85 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. உள்நாட்டு தயாரிப்பில் இந்த பட்டாசு விலை, மொத்த விற்பனையில், 90 ரூபாய்; சில்லரையில், 120 ரூபாய். சீன பட்டாசின் கொள்முதல் விலையே குறைவாக இருப்பதால், இந்தியாவிலும், அதை குறைந்த விலைக்கு விற்கும் முயற்சி நடக்கிறது.உள்நாட்டில், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும், அலுமினிய துகள், 1 கிலோ, 460 ரூபாய்; சீன பட்டாசுகளில் பயன்படுத்தப்படும், பொட்டாஷியம் குளோரைடு, கிலோ, 40 ரூபாய் தான். அத்துடன், வரி செலுத்தப்படுவதில்லை என்பதால், குறைந்த விலையில், சீன பட்டாசுகள் கிடைக்கின்றன.
பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்?
சீன பட்டாசுகளின் மூலப்பொருள், பொட்டாஷியம் குளோரைடு. நம் நாட்டில், இதற்கு தடை உள்ளது. வெப்பநிலை அதிகரித்தாலோ, பட்டாசு ஒன்றோடு ஒன்று உரசினாலோ, எளிதாக தீப்பற்றி வெடிக்கும் ஆபத்துள்ளது. இது, நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். ஆனால், விலை குறைவு என்பதால், ஆபத்து பற்றி அறியாமல், மக்கள் வாங்குகின்றனர்.
தினமலர்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
தடை செய்யப்பட்ட பட்டாசுகள் எப்படி நாட்டு உள்ளே வரும்?...................
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
![அநியாயம்](/users/1813/71/41/02/smiles/502589.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1168784krishnaamma wrote:தடை செய்யப்பட்ட பட்டாசுகள் எப்படி நாட்டு உள்ளே வரும்?...................![]()
![]()
![]()
-
பிரதமர் வெளிநாடு பயணங்கள் முடிந்ததும்
அடுத்த ஆண்டில் இதற்கான தீர்வு பற்றி யோசிப்பார்...!!
-
Re: நாடு முழுவதும், தடையை மீறி சீன பட்டாசுகள் !
மேற்கோள் செய்த பதிவு: 1168834ayyasamy ram wrote:மேற்கோள் செய்த பதிவு: 1168784krishnaamma wrote:தடை செய்யப்பட்ட பட்டாசுகள் எப்படி நாட்டு உள்ளே வரும்?...................![]()
![]()
![]()
-
பிரதமர் வெளிநாடு பயணங்கள் முடிந்ததும்
அடுத்த ஆண்டில் இதற்கான தீர்வு பற்றி யோசிப்பார்...!!
-
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தடையை மீறி இயங்கும் சாய பட்டறைகள்
» நக்சலைட் பகுதியில் போலீஸ் தடையை மீறி ஜெகன்மோகன் யாத்திரை
» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
» தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
» நக்சலைட் பகுதியில் போலீஸ் தடையை மீறி ஜெகன்மோகன் யாத்திரை
» அமெரிக்க தடையை மீறி ஈரானுக்கு ஐரோப்பிய நாடுகள் உதவி
» தடையை மீறி ஊர்வலம் சென்றதால் இந்திய வம்சாவளியினர் 78 பேர் மலேசியாவில் கைது
» தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி கலாச்சாரத்தை நிலைநாட்டிய நாம் தமிழர்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|