ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 11:46 am


பாட்டி வைத்தியம்....

* கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.

* பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும்

* இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.

* அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.

* போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது

* உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்

* காரட்டை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

* சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும்.
நன்றி-முகநூல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:07 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் SxwuG3ktSdaLKoh8xlUx+மணத்தக்காளி

வாய், வயிற்று புண்ணை குணப்படுத்தும் மணத்தக்காளி கீரை - இயற்கை மருத்துவம்

மணத்தக்காளி இலை சிறிது இனிப்புச்சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. சருமம் தொடர்பான பல நோய்கள் வராமல் கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் வைட்டமின் இ, டி அதிக அளவில் உள்ளன. நார்ச்சத்து மிகுந்தது. இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், வயிற்றில் ஏற்படும் புண்களைக் குணப்படுத்தும்.

மணத்தக்காளிக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால், இருமல், இளைப்பு பிரச்னை குணமாகும். வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும் சக்தி மிகுந்தது இந்தக் கீரை. சிறுநீர், வியர்வையைப் பெருக்கி உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும். மணத்தக்காளி இலைச்சாற்றை 35 மி.லி வீதம் நாள்தோறும் மூன்று வேளைகள் உட்கொண்டுவந்தால், சிறுநீரைப் பெருக்கும்; உடலில் நீர் கோத்து ஏற்படும் வீக்கம், உடல் வெப்பம் ஆகியவற்றைக் குணப்படுத்தும்.

மணத்தக்காளிக் கீரை வாய்ப்புண்களைக் குணமாக்கும் அருமருந்து. இதன் பச்சை இலைகளைத் தேவையான அளவு நெய் சேர்த்து வதக்கி, துவையல் செய்து, சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டுவர வாய்ப்புண் குணமாகும். வெறும் பச்சை இலைகளை, நாள் ஒன்றுக்கு ஐந்துமுறைகள் நன்றாக மென்று சாற்றை விழுங்கினாலும், வாய்ப்புண் முழுமையாக குணம் ஆகும்.

மூட்டுப் பகுதியில் ஏற்படும் வீக்கங்கள் காரணமாக அவதிப்படுபவர்கள், மணத்தக்காளி இலைகளை வதக்கி, மூட்டுப் பகுதியில் ஒத்தடம் கொடுத்தால், நல்ல பலன் கிடைக்கும். மணத்தக்காளிக் காயை வற்றல் செய்து, குழம்புக்குப் பயன்படுத்தலாம். இதன் இலை, வேர் ஆகியவற்றை குடிநீர் செய்து அருந்துவது நோயற்ற வாழ்வைப் பெற உதவும்.

நன்றி-முகநூல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 1:14 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் NgN1BRbaSuSiloJCDi1c+பீர்க்கங்காய்

மூலநோய்க்கு மருந்தாகும், இரத்தத்தை சுத்தப்படுத்தும் பீர்க்கங்காய் - இயற்கை மருத்துவம்

பொதுவாகக் காய், கனிகள் தமக்குள் உடலுக்குப் புத்துணர்வு தந்து சோர்வினைப் போக்கக் கூடிய பல்வேறு சத்துப்பொருட்களை உள்ளடக்கியுள்ளன. இந்த சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்து சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கின்றன. காய், கனிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து நோயற்ற வாழ்வுக்கு வழித் துணையாய் அமைகின்றன.

உள்ளுறுப்புகளுக்கு ஊட்டம் தந்து உற்சாகத்துடன் செயல்படச் செய்கின்றன. பச்சைக் காய்கறிகள் ரத்த நாளங்களில் குறிப்பாக இதயத்தைச் சார்ந்த ரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட்டு மாரடைப்பு என்கிற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க உதவுகின்றன. இதனால் மாரடைப்பு மட்டுமின்றி சில புற்று நோய்களையும் தடுக்க முடிகின்றது. காய்கறிகள் மிகக் குறைந்த எரிசக்தியைக் கொண்டுள்ளன. இதனால் உடல் எடை கூடாத வண்ணம் பாதுகாத்துக் கொள்ள இயலுகிறது.

மேலும் இது இரண்டாம் வகை சர்க்கரை நோயையும், புற்று நோய்களையும் இதயம் மற்றும் இதய நாளங்களில் ஏற்படும் நோய்களையும் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றதாகவும் விளங்குகிறது. பீர்க்கங்காய் மித வெப்பமான சீதோஷ்ண நிலையில் வளரக் கூடிய ஓர் கொடி வகையைச் சார்ந்த தாவரம் ஆகும். பீர்க்கங்காய் ஓர் மலமிளக்கியாக மட்டுமின்றி வயிற்றைக் கழியச் செய்வதாகவும் விளங்குகிறது. சிறுநீரைப் பெருக்கிச் சீராக வெளித்தள்ள வைப்பது, வீக்கங்களைக் கரைக்க உதவுகிறது.

மண்ணீரலின் வீக்கத்தை தணிக்க வல்லது. இருமலைப் போக்க வல்லது. ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் நோயைத் தணிக்க வல்லது. பீர்க்கங்காயின் விதைகள் வாந்தியைத் தூண்டக் கூடியது. சளியை உடைத்துக் கரைத்து வெளித்தள்ளக் கூடியது. ஹோமியோபதி மருத்துவத்தில் இதன் சாறு வலப் பாட்டீரல் மற்றும் இடப்பாட்டீரல் ஆகிய வற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் உணவுப் பாதையின் உட்புறப் பூச்சு போல விளங்கும் மென் தசைகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்கு வதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகின்றது.

மத்திய சித்த ஆயுர்வேதக் கழகம் பீர்க்கங்காயின் இலைச் சாறு, காய்ச் சாறு, வேர்ச் சாறு இவற்றை 10 முதல் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்ளலாம் எனப் பரிந்துரை செய்கின்றது. இதுமட்டுமின்றி பீர்க்கங் காய் உள்ளழலாற்றி (டிமல்சன்ட்) ஆகவும் சிறுநீர்ப் பெருக்கி ஆகவும் சத்துள்ள உணவாகவும் பயன்படுகின்றது. பீர்க்கங்காய் ஓர் சத்தான உணவாவது மட்டுமன்றி அதில் நிறைய நார்சத்து பொதிந்துள்ளது. விட்டமின் பி2, விட்டமின் சி, கரோட்டின், நியாசின், இரும்புச்சத்து, சிறிதளவு அயோடின் மற்றும் புளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.

பீர்க்கங்காய் இனிப்புச் சுவை யுடைது என்பதும் மட்டுமின்றி எளிதில் சீரணமாகக் கூடியது. உடலுக்குக் குளிர்ச்சி தர வல்லது. குறைந்த அளவு எரி சக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு மிக உகந்த உணவாகின்றது. பீர்க்கங்காய் மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருப்பதால் உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்க்கு ஓர் நல்ல உபகரணமாக உதவுகின்றது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் இதற்கோர் முக்கிய காரணமாகும்.

பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் மருந்தாக உதவுகின்றது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப் பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும் இயற்கை மருந்தாக அமைகின்றது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து சலித்து வைத்துக் கொண்டு மூக்குப் பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் என ஆயுர் வேதம் குறிப்பிடுகின்றது. பீர்க்கங்காயில் ரத்தத்தை சுத்தப்படுத்தக் கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன. இதனால் ரத்தம் சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்பட உதவுகின்றது.

மது அருந்துவோர்களுக்கு மது வினால் ஏற்பட்ட குருதிக்கேடு, சீர்படுத்தப்படும் வகையில் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றப்படுகின்றன. பீர்க்கங்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் நல்ல மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயில் சில குறிப்பிடும் படியான பெப்டைட்ஸ் என்னும் வேதிப் பொருட்கள் அடங்கியுள்ளன. இவை இன்சுலின் ஆல்கலாய்ட்ஸ் சோரன்டின் என்பனவாகும். இவ்வேதிப் பொரு-ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் சிறுநீரில் உள்ள சர்க் கரை அளவையும் குறைக்க உதவுகின்றன.

பீர்க்கங்காயில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும் மருந்தாக விளங்குகிறது. அதுமட்டுமின்றி மூல நோய்க்கும் ஓர் முக்கிய மருந்தாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் முற்றிய காய்ந்த நிலை நிறைய கூடு போன்ற நார்ப் பகுதியைப் பெற்றுள்ளது. இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக் குளிப்பது என்பது பன்னெடுங் காலமாகப் பழக்கத்தில் உள்ளது. இப்படிக் குளிப்பதால் தோலின் மேற்பகுதியில் உள்ள இறந்து போன மேற்புறச் செல்கள் அத்தனையும் துடைத்து சுத்தப்படுத்தப்பட்டு தோல் ஆரோக்கியத்தையும் மென்மையையும், பளபளப்பான தன்மையையும் அடைகின்றது.

பீர்க்கங்காயில் உள்ள ரத்தத்தைப் தூய்மை செய்யக் கூடிய வேதிப்பொருள்களால் தோலின் மேலுள்ள முகப் பருக்கள் ஆகியன விரைவில் குணமாக ஏதுவாகின்றது. உடலின் மேலுள்ள துர்நாற்றத் தையும் போக்க வல்ல மருத்துவ குணத்தைப் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது. பீர்க்கங்காயை அன்றாடமோ அல்லது அடிக்கடியோ மற்ற காய்கறிகளோடு சமைத்து உணவாக உண்பதால் நோய் எதிர்ப்பு- சக்தியைத் தர வல்லதாக விளங்குகிறது.

பீர்க்கங்காயில் புதைந்து இருக்கும் அதிக அளவிலான பீட்டா கெரோட்டின் என்னும் வேதிப்பொருள் கண்களின் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. பீர்க்கங்காயின் புதிய சாற்றை ஓரிரு சொட்டுக்கள் கண்களில் விடுவதால் கண் எரிச்சல், கண் சிவப்பு, கண்ணில் மண் கொட்டியது போன்ற உறுத்தல் ஆகிய குற்றங்கள் குணமாகும்.

பீர்க்கங்காய் மருந்தாகும் விதம் :

* ஒரு குவளை பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்கி அந்தி சந்தி என இரண்டு வேளையும் உணவுக்கு முன் பருகி வருவதால் மஞ்சள் காமாலை என்னும் நோய் மறைந்து போகும்.

* பீர்க்கங்காயின் சதைப் பகுதியை நன்றாக நசுக்கி காயங்களின் மேல் பற்றாகப் போட்டுக் கட்டி வைப்பதால் உடனடியாக ரத்தக் கசிவைப் போக்கிக் காயத்தை ஆறச் செய்யும் பணியைச் செய்கின்றது.

* பீர்க்கங்காய் ஒன்றைத் துண்டுகளாக்கி இரண்டு டம்ளர் நீர்விட்டு அடுப்பேற்றி நன்றாகக் கொதிக்க வைத்து அதனோடு சுவைக்காகப் போதிய உப்பிட்டு அன்றாடம் காலை, மாலை என இரு வேளை பருகி வருதலால் வயிற்றினுள் பல்கிப் பெருகித் துன்பம் தருகின்ற வயிற்றுப் பூச்சிகள் வெளித்தள்ளப்பட்டு வயிறு சுத்தமாகும். உடல் ஆரோக்கியம் பெறும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அரை டம்ளர் சாறுடன் போதிய சர்க்கரை சேர்த்து தினம் இருவேளை குடித்து வருதலால் ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டுதல் குணமாகும்.

* பீர்க்கங்காயின் இலைகளை மைய அரைத்து அதனோடு பூண்டை நசுக்கிச் சாறு எடுத்து- சேர்த்து தொழு நோய் எனப்படும் தோல் நோயின் மேலே பூசி வருதலால் தொழு நோய்ப் புண்கள் விரைவில் ஆறும்.

* பீர்க்கங்காயைச் சிறுசிறு துண்டுகளாக்கி வெயிலில் வைத்து நன்றாக உலர்ந்த பின் இடித்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு சாதம் வடித்த கஞ்சியை வைத்திருந்து காலையில் அதனோடு பீர்க்கங்காய் பொடியைக் கலந்து குழைத்து தலைமுடிக்குத் தேய்த்து 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து தலைக்குக் குளித்து வருவதால் இளநரை என்பது- தடை செய்யப்படுவதோடு தலைமுடி மென்மையாகவும் பளபளப்பாகவும் விளங்கும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியைச் சேகரித்து- நன்கு உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு தினம் இருவேளை வெருகடி அளவுக்கு எடுத்து உண்டு வர நாளடைவில் சிறுநீரகக் கற்கள் வெளியேறும். பீர்க்கங் கொடியின் இலைகளை எடுத்து நன்றாக நீர்விட்டு சுத்திகரித்து அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து உள்ளுக்கு சாப்பிட்டு வருதலால் சீதபேதி குணமாகும். வயிற்றுக் கடுப்பும் தணியும்.

* பீர்க்கங் கொடியின் இலை யைக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து நாட்பட்ட ஆறாத புண்களைக் கழுவுவதாலோ அல்லது மேற்பூச்சாகப் பூசி விடுவதாலோ விரைவில் புண்கள் ஆறிவிடும்.

* பீர்க்கங்காய் கொடியின் வேர்ப் பகுதியை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து மேற்பூச்சாகப் பயன்படுத் துவதால் வீக்கமும் வலியும் குறைந்து நெறிகட்டிகள் குணமாகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து உடன் சர்க்கரையோ தேனோ சேர்த்து வெறும் வயிற்றில் சில நாட்கள் குடித்து வருவதால் பித்த மேலீட்டால் வந்த காய்ச்சல் தணிந்து போகும். கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றின் வீக்கம் கரைந்து போகும்.

* பீர்க்கங்காய்ச் சாறு அரை டம்ளர் அளவு அன்றாடம் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வருதலால் அதிலுள்ள பீட்டா கரோட்டின் என்னும் சத்தும் கிடைக்கப் பெற்று கண்பார்வை தெளிவு பெறும். கண்களுக்கு ஆரோக்கியம் மேலோங்கும்.

* பீர்க்கங்காய் பார்ப்பதற்கு கரடு முரடான தோற்றத்தைப் பெற்றிருந்தாலும் மானுடர்க்கு உதவும் பல்வேறு மகத்தான மருத்துவ குணங்களைப் பெற்று கண்கள், ஈரல்கள், தோல், சிறுநீரகம், இரையறை ஆகிய உறுப்புகள் ஆரோக்கியமாகவும், சீராகவும் இயங்க உதவுகிறது என்பதை அனைவரும் மனதில் இறுத்திப் பயன்பெறுவோம்.

நன்றி-முகநூல்.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by T.N.Balasubramanian Sat Oct 10, 2015 2:47 pm

மணத்தக்காளி , பீர்க்கங்காய் தகவல்கள் அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 10, 2015 6:11 pm

T.N.Balasubramanian wrote:மணத்தக்காளி , பீர்க்கங்காய் தகவல்கள் அருமை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1167991

நன்றி ஐயா.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by krishnaamma Sun Oct 11, 2015 12:15 am

நல்ல தகவல் பகிர்வுகள் ஐயா புன்னகை....மிக்க நன்றி !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 8:49 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் G4tqnq7jQg64y8WFcnD1+பழங்கள்
எந்த நோய்க்கு என்ன காய்கறி, பழங்களைச் சேர்க்கலாம் - இயற்கை வைத்தியம்

உடல் பருமன்

முள்ளங்கி, முட்டைக்கோஸ், சுரைக்காய், பச்சைக் காய்கறிகள், உப்பு சேர்த்த எலுமிச்சை ஜூஸ், வெஜ் க்ளியர் சூப், மிதமான அளவு மா, பலா, வாழை, பப்பாளி, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி.

சர்க்கரை நோய்

தினமும் ஒரு கீரை சூப், சௌசௌ, முட்டைக்கோஸ், முள்ளங்கி, முருங்கைக்காய், கத்திரிப் பிஞ்சு, காலிஃப்ளவர், பாகற்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, நூல்கோல், கொத்தவரங்காய், வெங்காயம், பீர்க்கங்காய், வெள்ளரிக்காய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, சின்ன வெங்காயம். சாத்துக்குடி, அன்னாசி, கொய்யா, ஆப்பிள், பேரிக்காய், தர்ப்பூசணி.
நன்றி-முகநூல்.


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sat Oct 17, 2015 8:56 pm; edited 1 time in total
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 8:52 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் AZogzaCiRa9nVe7EBRx1+பழங்கள்
வயிற்று குடல் புண்

மணத்தக்காளிக்கீரை, முட்டைக்கோஸ், தேங்காய், வெள்ளரி, கேரட், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, சப்போட்டா, தர்ப்பூசணி, மாதுளை, ஆரஞ்சு.

மாதவிடாய்க் கோளாறுகள்

வாழைப்பூ, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, நெல்லிக்காய், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், கோஸ், வெங்காயம், திராட்சை, மாதுளை, தர்ப்பூசணி, ஆரஞ்சு, எலுமிச்சை.

ஆஸ்துமா

கேரட், முருங்கை, புதினா, கொத்தமல்லி, ஆரஞ்சு, அன்னாசி, பப்பாளி, திராட்சை, பேரீச்சை, தூதுவளை.

நன்றி -முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 8:55 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் DaViOqASAiOluZDfKmaU+பழங்கள்

ஆஸ்டியோபொராசிஸ்

பாலக் கீரை, எலுமிச்சைச் சாறு, வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, சீதாப்பழம்.

ரத்தசோகை

பூசணி, பீட்ரூட், அவரை, புடலங்காய், பீர்க்கங்காய், பீன்ஸ், வெண்டைக்காய், முருங்கைக்காய், காலிஃப்ளவர், நெல்லிக்காய், கீரை வகைகள், பேரீச்சம்பழம்.

மலச்சிக்கல்

பாலக் கீரை, கறிவேப்பிலை, திராட்சை, அத்திப்பழம், எலுமிச்சை, வாழை, பப்பாளி, கொய்யா, மாம்பழம், பேரிக்காய், பைனாப்பிள், சப்போட்டா.

சிறுநீரகக் கல்

புதினா, கொத்தமல்லி, முள்ளங்கி, வெள்ளரி, கேரட், வாழைத்தண்டு, வாழைப்பூ, கற்றாழை, எலுமிச்சைச் சாறு, ஆப்பிள்.


நன்றி- முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by பழ.முத்துராமலிங்கம் Sat Oct 17, 2015 9:00 pm

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் SWFF0mGCTQyMoxSMhfjk+பழங்கள்

மூலம்

பீட்ரூட், பீன்ஸ், முருங்கைக்காய், முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி, வாழைக்காய், கீரை வகைகள், மாங்காய், பப்பாளி, அத்திப்பழம், நெல்லிக்காய்.

ஹெர்னியா:

முட்டைக்கோஸ், முருங்கை, கொத்தமல்லி, கேரட், நெல்லிக்காய், அன்னாசி, பப்பாளி, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், ஆப்பிள்.

நரம்புக் கோளாறுகள்:

கொத்தமல்லி, வல்லாரை, முருங்கைக்காய், நெல்லி, மாதுளை, கேரட், செவ்வாழை, திராட்சை, ஆப்பிள், மா, பலா.
நன்றி- முகநூல்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம் Empty Re: வீட்டில் மருத்துவம்-பாட்டி வைத்தியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum