ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_m10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10 
VENKUSADAS
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_m10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_m10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10 
VENKUSADAS
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_m10அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

+2
T.N.Balasubramanian
Hari Prasath
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by Hari Prasath Thu Oct 08, 2015 5:19 pm

தமிழகத்தில் அரியும் அரனும் காட்சியளிக் கும் கோவில்கள் சிலதான் உண்டு. இவற்றில் சிவனுக்கும் பெருமாளுக்கும் தனித் தனியாக சந்நிதி இருக்கும்- சைவமும் வைணவமும் ஒன்றே என்று காட்டும் விதத்தில் இறையுரு அமைந்த சங்கரன்கோவிலை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

ஆனால், இரு தெய்வங்களும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் இந்தியாவிலேயே அம்மையப்ப நாயக்கனூரில் மட்டுமே உள்ளது.

திண்டுக்கல்லில் இருந்து மதுரை வரும் தேசிய நெடுஞ்சாலையில் கொடைரோடு அருகில் உள்ளது அம்மையப்ப நாயக்கனூர். இங்கு நெடுஞ்சாலையை ஒட்டியே அமைந் திருக்கும் கதலி நரசிங்கப் பெருமாள் கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் காட்சியளிக்கின்றனர்.

மதுரையை ஆண்ட திருமலை மன்னர் காலத்தில் நிர்வாக வசதிக்காக மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்ப டிப் பிரிக்கப்பட்ட பாளையங்களில் ஒன்றுதான் இந்த அம்மையப்ப நாயக்கன் பாளையம்.

விஸ்வநாத நாயக்கருக்கு போரில் வெற்றி தேடித் தந்த பெஞ்சை மாக்கைய நாயக்கருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது இந்தப் பாளையம். பெஞ்சை மாக்கைய நாயக்கர் பரம்பரையினரே கதரீஸ்வரர் எனும் சிவலிங்கத்தை முதலில் கண்டெடுத்தவர்கள்.

இந்தப் பாளையத்தில் உள்ள சந்தையூர் பகுதி அக்காலத்தில் இலந்தை வனமாக இருந்தது. மாடு மேய்ப்பவர்கள் அங்கே தொழுவம் அமைத் திருந்தனர். தொழுவத்தின் அருகே பெரிய இலந்தை மரம் இருந்தது. ஒரு நாள் வழக்கம் போல யாதவர் ஒருவர் தொழுவத்திலிருந்து பாலைக் கறந்து வந்தபோது கால்தடுக்கி விழுந்த தில், பால் அனைத்தும் அந்த இலந்தை மரத்தின் அடியில் கொட்டி விட்டது. இதனால் கோப முற்ற அவர் அந்த மரத்தை வெட்டினார். அப்போது அங்கு சுயம்பு லிங்கம் காட்சி தருவதைக் கண்டார். அந்த லிங்கத்தின்மீது கோடரி பட்ட காயமும் இருந்தது. அப்படிக் கண்டெடுக்கப் பட்டதே இந்த ஆலய லிங்கம். அந்தக் காயத்தை இன்றும் லிங்கத்தின் தலைப்புறத்தில் காணலாம்.

மரத்தை வெட்டியதற்காக அந்த யாதவருக்கு பார்வை போய், பின் அவன் தன் தவறை உணர்ந்து கதரீஸ்வரரை வணங்கியபின் மீண்டும் பார்வை கிடைத்ததாக செவிவழிக் கதைகள் வழக்கில் உள்ளன.

இந்தப் பாளையத்தின் மூன்றாம் பட்டயதாரர் கொந்தி பொம்மன நாயக்கர். இவரது காலத்தில்தான் கதரீஸ்வரர் கோவில் பெருமாள் கோவிலாகவும் மேம்பாடடைந்தது. ஒருமுறை இந்தப் பாளையத்திற்கு விஜயநகர மன்னர் வந்தார். அப்போது கதரீஸ்வரர் அவருக்குப் பெருமாளாகக் காட்சி அளித்தார்.

"சிவன் கோவில் என்று தரிசனம் செய்ய அழைத்தனர். ஆனால், இறைவனோ பெருமா ளாகக் காட்சி தருகிறாரே...' என்று மன்னர் அதிர்ந்து போனார். ஆனால், சுற்றி இருந்தவர்கள் இது லிங்கம்தான் என சாதித்தனர்.

மன்னருக்கு தன் கண்மீதே சந்தேகம் ஏற்பட்டது. இறுதியில் இது பெருமாளா அல்லது லிங்கமா என்ற உண்மையை அறிய, மூலவரை கண்களை மூடிக்கொண்டு தொட்டுப் பார்த்தார். அப்போது லிங்கத்தின் உருவம்தான் கைகளுக்குத் தட்டுப்பட்டது.

மூடிய கண்களுக்கு லிங்கமாகக் காட்சி தரும் இறைவன் கண்களைத் திறந்தபின் பெருமாளாகக் காட்சி அளிப்பதைக் கண்டு மன்னருக்கு மெய்சிலிர்த்தது.

இது சிவனும் பெருமாளும் கலந்த தலம் என்பதை உணர்ந்தார் விஜயநகர மன்னர். உடனே, அதே கருவறையில் பெருமாளையும் பிரதிஷ்டை செய்ய உத்தரவிட்டார். அது முதல் இந்த இறைவன் கதரி நரசிங்கப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.

1 ஏக்கர் பரப்பளவில் கோவில் அமைந்துள் ளது. கோவிலைச் சுற்றி இருபது அடி உயரத்தில் கோட்டைச்சுவர் நான்கு பக்கமும் உள்ளது. கோவில் மூலஸ்தானத்தில் சிவனும்; உபயநாச்சி யார், ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாளும் காட்சி தருகின்றனர்.

பைரவர், கமலவல்லித் தாயார், சக்கரத்தாழ் வார், விநாயகர், சனீஸ்வர பகவான், உடையவர், நம்மாழ்வார் உள்பட முக்கிய சந்நிதிகள் உள்ளன.

வைகுண்ட ஏகாதசி, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், பைரவர் அஷ்டமி பூஜை, கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி), மார்கழித் திங்கள் பூஜை, புரட்டாசி சனி, நவராத்திரி பூஜை, ஆவணி அவிட்டம் என பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெறுகின்றன.

இங்கு 1978-ல் வந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமி கள், "அரியும் அரனும் இணைந்து காட்சியளிக் கும் இந்தக் கோவில்போல எங்கும் கிடையாது' என்று கூறி ஆலயத்தைப் புதுப்பிக்கும்படிக் கூறினார். அதன்படி திருப்பணிகள் செய்யப் பட்டு, மகா கும்பாபிஷேகமும் வெகு விமரிசை யாக நடந்தேறியது.


நன்றி திருமதி லக்ஷ்மி ஸ்ரீனிவாசன் அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் 1571444738


Last edited by T.N.Balasubramanian on Fri Oct 09, 2015 6:48 am; edited 1 time in total (Reason for editing : addnl.words.)
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by T.N.Balasubramanian Thu Oct 08, 2015 5:53 pm

நன்றி ஹரி பிரசாத் .
நல்ல தகவல்கள் . அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் 103459460
இந்த செய்திகள் வேறு ஊடகத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருந்தால் ,
அந்த ஊடகத்திற்கு நன்றி கூறுவது , ஈகரை கடைப்பிடிக்கும் வழக்கம் .
உங்களுடையது எனில் அவசியமில்லை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by Hari Prasath Thu Oct 08, 2015 9:26 pm

தகவலுக்கு நன்றி
திருமதி லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு இக்கணத்தில் நன்றி கூறி வணங்குகிறேன்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by T.N.Balasubramanian Fri Oct 09, 2015 6:49 am

Hari Prasath wrote:தகவலுக்கு நன்றி
திருமதி லக்ஷ்மி ஸ்ரீநிவாஸன் அவர்களுக்கு இக்கணத்தில் நன்றி கூறி வணங்குகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167419

நன்றியை இணைத்து விட்டேன் ,ஹரி.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Oct 09, 2015 7:58 am

அம்மைநாயக்கனூர் வழியாக என் உத்தப்பநாயக்கனூர் பல முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று தான் சிறப்பு அறிய நேர்ந்த்து. நன்றி.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by Hari Prasath Fri Oct 09, 2015 1:51 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:அம்மைநாயக்கனூர் வழியாக என் உத்தப்பநாயக்கனூர் பல முறை சென்றுள்ளேன் ஆனால் இன்று தான் சிறப்பு அறிய நேர்ந்த்து. நன்றி.
மேற்கோள் செய்த பதிவு: 1167550
இதை தாங்கள் அறிய உதவி புரிந்தமைக்கு பெருமை கொள்கிறேன்...



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty அம்மையநாயக்கனூர்(கொடைரோடு) பாளையம் வரலாறு

Post by Hari Prasath Fri Oct 09, 2015 2:14 pm

அம்மையநாயக்கனூர் பாளையம்


திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு நகரில் தற்போதுஅமைந்துள்ள இந்த ஊர், நாயக்கர்ஆட்சிக்காலத்தில் சிறப்பு பெற்ற பாளையமாகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ஜமினாகவும் இருந்து வந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊர் ,

பாளையம் உருவாகுதல்
பாளையத்தின் முன்னவரான பெஞ்சை மாகையா நாயக்கர் அவர்கள் கி.பி.1435 இல் விஜயநகர மன்னரிடம் போர் வீரர்களாக பணிபுரிந்தவர்கள் . விசுவநாத நாயக்கர் ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் ஒன்றாக இருந்து வந்தது . இவர்கள் மதுரைக்கு காவல் என்ற உரிமையை பெற்றுவந்தனர் . இவர்கள் ராஜகம்பளம்என்ற நாயக்கர் இனத்தின் உட்பிரிவினர் . மதுரைக்கு காவலாக இவர்கள் இருந்ததால் பெஞ்சை மாகையா நாயக்கர் மற்றும் அவர் சார்த்த கம்பளத்து நாயக்கர்கள் மதுரைக்கு வடமேற்கில் சிறுமலை மற்றும் சுற்றில் உள்ள சில கிராமங்களில் குடியமர்ந்தனர் . இதில் இவர்கள் ஒரு கோட்டையை உருவாக்கி அம்மைய நாயக்கனூர்பாளையத்தை உருவாக்கினர் ,
ஊர்களை உருவாக்குதல்
வேடசந்தியூர் , வெள்ளோடு , பச்சைமலன் கோட்டை ம,சம்புதரைகோட்டை, ஒருதநாட்டு கிராமம் , பாளயக்கவுண்டன் பட்டி , எதுலூட்டு , சிதர்னத்தம். மேட்டுப்பட்டி , மட்டப்பாறை , பள்ளப்பட்டி , குள்ளல்குண்டு , குலசேகரன் பேட்டை , தனிசியம் முதலிய ஊர்களை நிர்வகித்தும் , உருவாகியும் வந்துள்ளனர் . 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மகன் அம்மைய லக்கம்மா நாயக்கர் பதவிஏற்றார் . இவரின் மனைவியின் பெயர் ஏற்ரம்மா . இவர்காலத்தில் கதிரீஸ்வருக்கு கோவில் அமைக்கப்பட்டது . இவருக்கு பின் இவரது மகன் வள்ளால மக்கைய நாயக்கர் மற்றும் அவரின் துணைவியார் காமுலம்மாள் ஒருத்தநாட்டு கிராமத்தில் குருநாதசாமி கோவில் அமைத்துள்ளார் , சந்தையூர் கிராமத்தில் கதிலி நரசிங்கப்பெருமாள் கோவிலுக்கு மண்டபம் கட்டி உள்ளார் ,
கள்ளர்களை அடக்குதல்
அம்மைய நாயக்கனூருக்கு பக்கத்தில் இருந்த கள்ளர்கள் கர்நாடக மன்னரின் கால்நடைகளை திருடிச்சென்று விட்டனர் . இதனை அறிந்த வள்ளால மாகைய நாயக்கர் மற்றும் சில சேர்வைகாரர்களை அழைத்து கள்ளர்களை அடக்கி அவர்களிடம் இருந்த கால்நடைகளை மீட்டு கர்நாடக மன்னரிடம் தந்து உள்ளார் , இதனால் மனம் மகிழ்ந்த அவர் வீர வள்ளால மாக்கையா நாயக்கர் என்ற பட்டத்தினை நாயக்கருக்கு தருகிறார் . இவர் கல்லூத்து யோவார்பட்டி , பேதகாளிங்கம்மா நாயக்கர் பட்டி , குய்யம்மா நாயக்கனூர் போன்ற கிராமங்களை உருவாக்கி உள்ளார் . மதுரையில் உள்ள கூடல் அழகுப்பெருமாள் கோவிலில் நடைபெறும் தேரோட்டத்தை இவரே ஆரம்பித்து வைத்துள்ளார் என்பதால் இன்றும் இவர் வாரிசுதாரர்களுக்கு முதல் மரியாதையும் , இவர்கள் தேங்காய் தொட்டவுடன் தான் வடம் இழுப்பார் மேலும் இவர்களுக்கு பரிவட்டமும் கட்டப்படுகின்றன .
கோவில்களை அமைத்தல்
இவருக்கு அடுத்து இவர் மகன் கொந்தி பொம்ம நாயக்கர் அவரின் மனைவி வீரமுத்தம்மா இவர்களுக்கு பொன்னையா நாயக்கர் , காமைய நாயக்கர் என்ற மகன்கள் இருந்தனர் , இவரது காலத்தில் குருவி துறை சித்திரத்து வல்லவர் தேர் உருவாக்கப்பட்டுள்ளது . இவரது காலத்தில் போயர் என்று சொல்லப்படும் ஒட்டர்கள் அதிக அளவில் இங்கு குடியமர்ந்தனர் மேலும் அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் உரிமையும் கிடைத்துள்ளது . இதற்கு பின் பெரியமுதல்ல நாயக்கர் கதிரி நரசிங்கப்பெருமாளுக்கு பல விலை உயர்ந்த பொருட்களை தந்துள்ளார் , சந்தையூர் பகுதியில் கம்பளதார்களின் குல தெய்வமான கன்னிமார் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது . குருநாதசாமி கோவிலுக்கும் பல தானங்களை தந்துள்ளார் . குழந்தைவேலு நாயக்கர் என்ற 16 வது பட்டதுக்காரர் குலசேகரன் கோட்டையில் மலை மேல் பொன்னும் பெருமாள் கோவிலுக்கு கலசக்கம்பம் மற்றும் தானங்கள் தந்துள்ளார் , பழனி தலத்தில் முன் மண்டபமும் கட்டி உள்ளார் .
கதலி நரசிங்கப் பெருமாள் கோவில்
கோவிலில் ஒரே கருவறையில் சிவனும் பெருமாளும் உள்ளனர். பெருமாள் தேவியர் இருவருடன் நிற்கிறார். இங்குச் சிவன் பெயர் கதலீஸ்வரர். பெருமாள் பெயர் கதிர் நரசிங்கப் பெருமாள்.கோவிலின் பெயர் கதலி நரசிங்கப் பெருமாள் கோவில். தமிழ்நாட்டில் அரியும் அரனும் ஒரே கருவையில் அமர்ந்திருக்கும் கோவில் இது ஒன்றுதான்.இந்த கோவில் மிகவும் சக்தி வாய்ந்தது. இக்கோவிலை அமைத்தது இந்த பாளயக்கார்களே.

அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர்
சுமார் 400 வருடங்களுக்கு முன்பு பாளையகார் காமைய சாமி நாயக்கர் கனவில் ஆஞ்சிநேயர் தோன்றி வைகை ஆற்றில் தான் சுயம்புவாக உள்ளதாகவும் கோவில் அமைத்து வழிபடவும் சொல்ல காமைய சாமி நாயக்கரும் கோவில் அமைத்து வீர ஆஞ்சிநேயர் என்று பெயர் சூடி வழிபட்டு வந்தார் , இம்மாவட்டத்தில் உள்ள பழமையான ஆஞ்சிநேயர் கோவில் எனபது சிறப்பு , மேலும் இந்த பாளையதினை ஆட்சி செய்தவர்கள் பல கோவில்கள், ஊர்களை அமைத்துள்ளனர் . மேலும் பல்வேறு சமுக மக்களையும் தாங்கள் அமைத்த ஊர்களில் குடியமர்த்தினர் .
:வணக்கம்: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் 1571444738 :வணக்கம்:

குறிப்பு: பின்னூட்டம் எழுதுங்க
அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் 1571444738  : விக்கிபீடியா


Last edited by Hari Prasath on Fri Oct 09, 2015 2:16 pm; edited 1 time in total (Reason for editing : நன்றி கூற மறந்தேன் நான்)
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:57 pm

நல்ல பகிர்வு ஹரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by krishnaamma Fri Oct 09, 2015 4:59 pm

ஒரே கோவிலைப்பற்றிய பதிவு என்பதால் உங்கள் பதிவுகள் இரண்டையும் இணைக்கிறேன் ஹரி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by Hari Prasath Fri Oct 09, 2015 6:32 pm

krishnaamma wrote:ஒரே கோவிலைப்பற்றிய பதிவு என்பதால் உங்கள் பதிவுகள் இரண்டையும் இணைக்கிறேன் ஹரி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167670
தங்கள் உதவிக்கு நன்றி



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர் Empty Re: அரியும் அரனும் ஒரே கருவறை யில் அருள் வழங்கும் தலம் - அம்மையப்ப நாயக்கனூர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum