ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

4 posters

Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by சிவா Thu Sep 03, 2015 11:00 pm

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! 11923217_1045598692130464_1665083966991301640_n

தற்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு, விவாதங்களுக்கு பதிலளிக்க வேண்டிய அனைத்து அமைச்சர்களும், முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி ஒரு கவிதையை வாசித்த பின்னரே தங்களது பதிலை தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு இன்று நடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது 2 அமைச்சர்கள் வாசித்த கவிதைகள் இங்கே...

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ

தங்க நிகர் முகப் பொலிவும்
சிங்கநிகர் அகத் துணிவும் கொண்டு -
வங்கக் கரை கோட்டை தன்னில்
வானுயர்ந்த புகழ் படைத்து -
என்னாளும் தமிழகத்தை
நன்றாளும் தெய்வமே எங்கள் அம்மா!

இந்தியாவில்
எந்தத் தலைவரும்
சந்திக்காத
சத்திய சோதனைகளை
புத்திக் கூர்மையால்
புறம் போகச் செய்த
புரட்சிப் பூவே எங்கள் அம்மா!

ஒரு ரோஜாப் பூவைச் சுற்றி
எத்தனை, எத்தனை முட்கள்!
எங்கள் இதய பீடத்தில்
என்றும் சிம்மாசனம் இட்டு அமர்ந்திருக்கும்
ஒற்றை நெஞ்சத்தை எதிர்க்க
எத்தனை, எத்தனை கூட்டணிப் படைகள்!
அத்தனைக் கூட்டத்தையும்
ஆட்டம் காண வைத்த
அற்புதத் தலைவி அல்லவா எங்கள் அம்மா!

உலகே உற்றுப் பார்த்த
ஒரு பொய் வழக்கை -
தனியாய்
துணிவாய்
தூக்கி எறிந்த அன்னையே!
துணிவுக் கடலே எங்கள் அம்மா!

ஒரு கோடி சிங்கங்களின் வீரம்
ஒருங்கே குடியிருக்கும்
உறுதி படைத்த நெஞ்சமே !
பகைமைப் பாறைகளைப்
பிளந்து -
பச்சை இலைகளாய்...
அதுவும்
இரட்டை இலைகளாய்
வெளிவர செய்த
வீர விருட்சமே எங்கள் அம்மா !

குடும்பக் கூடாரத்திற்காக
கூட்டுக் கொள்ளையடிப்பவர் -
அரசியல் பாதை தெளிவின்றி
போதையில் புலம்புபவன் -
மகனுக்காக மக்களை ஏமாற்றிவரும்
பூச்சி பிடித்த மாம்பழம் -
என்ன செய்வது,
ஏது செய்வது என்று
எதுவும் புரியாமல்
அர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும் அற்பர் -
கறையே கையாகிப்போன
உயிரில்லாக் கட்சியின் உளறுவாய்ப் பித்தன் -
இவர்களா உங்கள் எதிரிகள் அம்மா?
உங்கள் எதிரிகளாய் இருக்கக்கூட
தகுதியே இல்லாத
அவர்கள் அனைவரும்
உதிரிகள் அம்மா! உதிரிகள்!

அன்புப் பாசறையே அம்மா!
தங்களை புரட்சித் தலைவி என
புகழோங்க அழைப்பதனால்
புரட்சி என்ற சொல்லுக்கே
புது ரத்தம் பாய்கிறது அம்மா!

அம்மா !
என்னைப் பெற்ற
அன்னையை எத்தனை முறை
அம்மா என அழைத்தேனோ - அறியேன்... அம்மா!
ஆனால் அதைக் காட்டிலும்
ஆயிரம், ஆயிரம் மடங்குகள்
தங்களை அம்மா, அம்மா, என
அழைத்திருப்பேன் அம்மா!
அதனால் எனது சுவாசக் காற்று வரம் பெற்றது அம்மா!

தங்கள்
திருமுகம் கண்ட பிறகு -
தெய்வத்தைப் பார்க்கும் ஆசைகூட
எனக்கில்லை அம்மா!
தெய்வத்தைப் பார்த்திருந்தால்கூட -
தாங்கள் எனக்களித்த
பெரும் பேற்றை
பெற்றிருக்க முடியாது அம்மா!

மதுரை மேற்குத் தொகுதியில்
இந்தச் சிறியேன்
எம்.எல்.ஏ. ஆவேன் என்று
யாருக்குத் தெரியும் அம்மா!
உங்களால் அன்றி
இது வேறு யாரால் முடியும் அம்மா!

உங்கள் தொண்டனாய் வாழ்ந்த
இந்த - ஒரு பிறவி போதும் அம்மா! போதும்.
ஒரு வேளை
ஏழு பிறவிகள் இருந்தால் கூட
மீதமுள்ள பிறவிகளை
எவரேனும் எடுத்துக் கொள்ளட்டும் அம்மா ! எடுத்துக் கொள்ளட்டும்

என் மூச்சுக் காற்றே அம்மா!
தங்கள் புண்ணியப் பாதங்களை
எனது இதயக் கோவிலாக
எண்ணி வழிபட்டு -
கூட்டுறவுத்துறை சார்ந்த பதிலுரையை தொடங்குகிறேன்.


உணவுத்துறை அமைச்சர் காமராஜ்

காலத்தை வென்று நிற்கும்
காவியத் தெய்வமே ...
எங்கள் அம்மா!

மக்கள் வேதனை தீர்த்திடும்
வித்தகச் செல்வமே ...
எங்கள் அம்மா!

வேதமும் வணங்கிடும்
கற்பகத் தருவே ...
எங்கள் அம்மா!

ஞானமே, தமிழர் மானமே
வீரமே, கருணை ஈரமே ...
எங்கள் அம்மா!

பொய் வழக்குகளைப் பொடிப் பொடியாக்கிய
பொன்னியின் செல்வியே...
எங்கள் அம்மா!

சோதனைகளை சுக்கு நூறாக்கும்
சொக்கத் தங்கமே ...
எங்கள் அம்மா!

வீணர்களைத் தூளாக்கி
வெற்றிகள் குவிக்கும்
சத்தியச் சித்திரமே...
எங்கள் அம்மா!

ஏழைகளின் வாட்டம் போக்கி
இதயத்தில் கொலுவிருக்கும்
சாதனைச் சரித்திரமே...
எங்கள் அம்மா!

எனக்கும்
என் குடும்பத்திற்கும்
வரமளித்து வாழ்வளித்த
குலதெய்வமே ...
எங்கள் அம்மா!

தங்கள் பொற்பாதங்களுக்கு,
முதற்கண் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.


கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty Re: கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by T.N.Balasubramanian Fri Sep 04, 2015 6:18 am

எங்கே நிதி மந்திரி , கொண்டு வாரும் பொற்கிழி ,
கொடுப்போம் இவர்களுக்கு பரிசாக .
என்று கூறி இருப்பார் அந்த காலமாக இருந்தால் .

வாசித்த கவிதைகள் அருமை .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty Re: கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by ayyasamy ram Fri Sep 04, 2015 6:34 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
கவிதைகளில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது
என எதிர்க்கட்சிப் புலவர்கள் சுட்டவில்லையா..?!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty Re: கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by M.Jagadeesan Fri Sep 04, 2015 7:27 am

இந்தக் கவிதைகளுக்கு எதிர்க்கவிதை பாட முடியும்; ஆனால் பிறர்மனம் புண்படுமே என்று அஞ்சவேண்டியுள்ளது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty Re: கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by T.N.Balasubramanian Fri Sep 04, 2015 9:22 am

ayyasamy ram wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி
-
கவிதைகளில் சொற்குற்றம், பொருள் குற்றம் இருக்கிறது
என எதிர்க்கட்சிப் புலவர்கள் சுட்டவில்லையா..?!
மேற்கோள் செய்த பதிவு: 1160691

பொருள் குற்றம் தெரிந்ததுதானே ,ayyasami ram .
சுடாதவர் யார் அரசியலில் .?

சுட்டதில் , குறைவாக சுட்டவர் ,
தரவரிசையால் நேர்மையாளர் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்! Empty Re: கவிஞர்களாக மாறிய தமிழக அமைச்சர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum