ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆவணி மாத பலன்கள் :)

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:49 pm

மேஷம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தி சாதிப்பதில் வல்லவர்களான நீங்கள், மற்றவர்களை உற்சாகப்படுத்தி மகிழ்பவர்கள். உங்கள் பூர்வ புண்யாதிபதி சூரியன் 5ம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகளும் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களை விரும்பிய பாடப் பிரிவில் சேர்ப்பீர்கள். குரு 5ம் வீட்டில் வலுவாக நிற்பதால் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி, கல்யாணம், காது குத்து, கிரகப் பிரவேசங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

வாகனவசதி பெருகும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் புதிய சிந்தனைகள் தோன்றும். கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும். இளைய சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். 22ம் தேதி முதல் புதன் 6ம் வீட்டில் மறைவதால் சின்னச் சின்ன எதிர்ப்புகள், யூரினரி இன்ஃபெக்சன், நரம்புக் கோளாறு வந்து நீங்கும்.செவ்வாய் 4ம் வீட்டில் நிற்பதால் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். தாய்வழிச் சொந்த பந்தங்களின் ஆதரவு பெருகும். புது வேலை அமையும். 7ம் வீட்டில் வக்ரச்சனி நிற்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்தப் பாருங்கள்.

அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களே! முகப்பரு, தேமல் நீங்கி முகம் ஜொலிக்கும். கெட்ட நண்பர்களை ஒதுக்குவீர்கள்.

மாணவர்களே! நினைவாற்றல் கூடும். மதிப்பெண் உயரும்.

வியாபாரத்தில் லாபம் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து நீக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் கருத்தைக் கேட்டு கடையை இடமாற்றம் செய்வீர்கள். வேலையாட்கள், பங்குதாரர்களின் குறை, நிறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். பிரபலமானவர்களை பயன்படுத்தி விளம்பரம் செய்து கூடுதல் லாபமடைவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் அதிகரிக்கும். கூட்டுத் தொழில் வளர்ச்சி அடையும்.

உத்யோகத்தில் அலுவலகச் சூழ்நிலை அமைதி தரும். சக ஊழியர்களுக்காக மேலதிகாரிகளிடம் பரிந்துப் பேசுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.
கலைத்துறையினர்களே! சிலர் உங்களின் மூளையை பயன்படுத்தி முன்னேறுவார்கள்.

விவசாயிகளே! அரசாங்க சலுகைகளை சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். நிலத்தில் நீர்வசதி பெருகும். திடீர் திருப்பங்களும், யோகங்களும் நிறைந்த மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 21, 28, 29, 30, செப்டம்பர்: 5, 6, 7, 8, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 22 நண்பகல் 12 மணிமுதல் 23 மற்றும் 24 இரவு 8 மணிவரை வாகனங்களில் செல்லும்போது வேகத்தை குறைத்துச் செல்லுங்கள்.

பரிகாரம்: கும்பகோணத்திற்கு அருகேயுள்ள சூரியனார் கோயிலில் அருளும் சூரியபகவானை தரிசித்து வாருங்கள். தந்தையில்லாத குழந்தைகளுக்கு உதவுங்கள்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:49 pm

ரிஷபம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

பள்ளிப் பருவத்திலேயே எதையும் வைராக்கியத்துடன் செய்து முடிக்கும் நீங்கள் மனதில் பட்டதை பளிச்சென பேசும் பழக்கம் உடையவர்கள். உங்களின் பிரபல யோகாதிபதியும், பூர்வ புண்யாதிபதியுமான புதன் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க சென்று கொண்டிருப்பதால் கொஞ்சம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும்.

ராசிநாதன் சுக்கிரன் வலுவாக இருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கி பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். நட்பு வட்டம் விரியும். சூரியன் 4ம் வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்ந்திருப்பதால் பாதிப் பணம் தந்து முடிக்கப்படாமல் இருந்த வீட்டை மீதிப்பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள்.

வங்கிக் கடன் கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். தாய்வழியில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். வக்ரச்சனி 5ம் வீட்டில் ராகு தொடர்வதால் பிள்ளைகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். தாயார் கோபமாக பேசினாலும் நீங்கள் பொறுத்துப் போவது நல்லது.

சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய வீட்டை, மனையை விற்று புதியதாக வாங்குவீர்கள். கல்யாணம் கூடி வரும். கிரகப் பிரவேசம், திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். பிள்ளை பாக்யம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

அரசியல்வாதிகளே! தலைமை உங்களை நம்பி முக்கிய பொறுப்பை ஒப்படைக்கும்.

கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சிகளை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

மாணவர்களே! அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். வியாபாரத்தில் அதிரடியாக முதலீடு செய்யாமல் அமைதியாக செயல்படப் பாருங்கள். லாபம் கணிசமாக உயரும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள். பங்குதாரர்களால் தர்மச்சங்கடமான சூழல்களுக்கு ஆளாவீர்கள். கண்ணாடி, ஆடை, பெட்ரோல், டீசல் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொண்டாலும், மேலதிகாரி குறை கூறத்தான் செய்வார். அநாவசிய விடுப்புகளை தவிர்க்கவும். சக ஊழியர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.

கலைத்துறையினர்களே! ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.

விவசாயிகளே! குறுகிய காலப் பயிர்களை தவிர்த்து விடுங்கள். பம்பு செட் பழுதாகும். அனுபவ அறிவாலும், ஆன்மிக பலத்தாலும் முன்னேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 20, 21, 23, 30, 31, செப்டம்பர் 1, 2, 7, 8, 9, 10, 12, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 24 இரவு 8 மணி முதல் 25, 26 வரை ஜாமீன் கேரண்டர் கையெழுத்து எதுவும் போட வேண்டாம்.

பரிகாரம்: புதுச்சேரி-கடலூர் வழியில் தவளகுப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவும், புதுச்சேரி-விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ள நல்லாத்தூர் வரதராஜரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:50 pm

மிதுனம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

சேமித்து வைப்பதில் தேனீக்களைப் போலவும், செலவழிப்பதில் ஒட்டகத்தைப் போலவும் குணம் கொண்ட நீங்கள், சரியென பட்டதையே செய்வீர்கள். கடந்த ஒருமாத காலமாக ராசிக்கு 2ல் அமர்ந்து உங்களை ஏடாகூடமாக பேசவைத்து, கோபப்பட வைத்து, சில நேரங்களில் வெறுப்பை ஏற்படுத்திய சூரியன் 3ம் வீட்டில் வலுவாக நுழைந்திருப்பதால் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். இளைய சகோதர வகையில் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். ராசிக்கு 2ம் வீட்டில் செவ்வாய் நிற்பதால் சில நேரங்களில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். மற்றவர்களிடம் குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். குரு 3ல் தொடர்வதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும்.

பிரபலங்களுடன் கருத்து மோதல்கள் வரும். சனிபகவான் வக்ரமாகி 5ல் நிற்பதால் ஓரளவு நன்மை உண்டாகும். சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க வலுவடைந்திருப்பதால் பரபரப்பாக காணப்படுவீர்கள். ஒரேநேரத்தில் இரண்டு மூன்று வேலைகளையும் சிறப்பாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். வீடு மாறுவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். தாயார் ஆதரவாக இருப்பார். தாயாரின் உடல் நலம் சரியாகும்.

அரசியல்வாதிகளே! உங்களின் கோரிக்கையை மேலிடத்தில் ஏற்பார்கள்.

கன்னிப் பெண்களே! காதல் கனியும். கல்யாணம் கூடி வரும்.

மாணவர்களே! சமயோஜித புத்தியை பயன்படுத்துங்கள். கெட்ட நண்பர்களை விட்டு விலகுங்கள்.

வியாபாரத்தில் கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். வேலையாட்களைமாற்றி விட்டுஅனுபவமிகுந்தவர்களை பணியில் அமர்ந்துவீர்கள். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். பெரியளவில் யாருக்கும் முன் பணம் தர வேண்டாம். பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். பூ, ஸ்டேஷனரி, மர வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். சில பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும்.

கலைத்துறையினர்களே! மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள்.வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். விவசாயிகளே! தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 23, 24, 25, 26, 30, 31, செப்டம்பர் 1, 2, 3, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 27 முதல் 28ந் தேதி வரையிலும் புதிய முயற்சிகள் எதையும் மேற்கொள்ள வேண்டாம்.

பரிகாரம்: சென்னை-பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள மாங்காடு காமாட்சியை தரிசித்து வாருங்கள். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:50 pm

கடகம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

பொதுவாக அமைதியை விரும்பும் நீங்கள் போட்டியென வந்து விட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள். உங்கள் ராசியிலேயே செவ்வாய் அமர்ந்திருப்பதால் வேகமாக சில முக்கிய காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு, அசதி எல்லாம் நீங்கும். நெருக்கடி நேரத்திலும் புத்திசாலித்தனமாக முடிவெடுப்பீர்கள். சிலநேரங்களில் உடல் உஷ்ணம் அதிகமாகும். லேசாக அடிவயிற்றில் வலி வரக்கூடும். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். பாதிபணம் தந்து முடிக்கப்படாமலிருந்த சொத்தை மீதி பணம் தந்து பத்திரப்பதிவு செய்வீர்கள். குருபகவான் ராசிக்கு 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். அனுபவப் பூர்வமாகப் பேசி பல காரியம் சாதிப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.

வி.ஐ.பிக்கள் அறிமுகமாவார்கள். சிலருக்கு புது வேலை அமையும். சூரியன் இந்த மாதம் முழுக்க 2ம் வீட்டில் நிற்பதால் கண் பார்வையை பரிசோதித்துக் கொள்ளுங்கள். கண்ணில் அடிபட வாய்ப்பிருக்கிறது. இருசக்கர வாகனங்களில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து செல்வது நல்லது. புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியால் சாதிப்பீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். வழக்கு சாதகமாக திரும்பும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளே! எந்த கோஷ்டியிலும் சேராமல் நடுநிலையாக இருக்கப் பாருங்கள்.

கன்னிப் பெண்களே! உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும்.

மாணவர்களே! ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.

வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். பழைய வேலையாட்கள் மீண்டும் பணியில் வந்து சேர்வார்கள். செங்கல் சூளை, ரியல் எஸ்டேட், சிமென்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர் உங்கள் ஆலோசனையை ஏற்பர்.

உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். புது பொறுப்புகளும் தேடி வரும்.

கலைத்துறையினர்களே! உங்கள் புகழ், கௌரவம் கூடும். சம்பள பாக்கி கைக்கு வரும்.

விவசாயிகளே! விளைச்சல் அதிகரிக்கும். பக்கத்து நிலத்தையும் வாங்குமளவிற்கு வருமானம் உயரும். தொட்டது துலங்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 25, 26, 28, செப்டம்பர் 3, 5, 12, 13, 14, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 29, 30 மற்றும் 31 காலை 8 மணிவரை வீண் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

பரிகாரம்: தஞ்சாவூர் அருகேயுள்ள திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்திலுள்ள ஹரிகுரு சிவயோக தட்சிணாமூர்த்தியை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:51 pm

சிம்மம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

முன்னின்று புகழ்பவனும், பின்னின்று தூண்டி விடுபவனும் ஒரே தன்மையாளர்தான் என்பதை அறிந்த நீங்கள், புகழ்ச்சிக்கு மயங்கிவிட மாட்டீர்கள். கடந்த ஒருமாத காலமாக 12ல் மறைந்து கிடந்த உங்கள் ராசிநாதன் சூரியன் இப்பொழுது உங்கள் ராசிக்குள்ளேயே ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி, மனநிம்மதி கிடைக்கும். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். தள்ளிப்போன அரசுக் காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தந்தைவழியில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். முகம் மலரும். செவ்வாய் 12ல் மறைந்திருப்பதாலும், வேலைச்சுமை அதிகரிக்கும். பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். சகோதர, சகோதரிகளால் அலைச்சல் இருக்கும். ரத்தஅழுத்தம் அதிகரிக்கும்.

உடல் நலத்தில் கவனம் தேவை. 3ம் வீட்டில் வக்ரச் சனி நிற்பதால் தடைப்பட்ட காரியங்கள் முடியும். ஆகஸ்ட் 21ம் தேதி வரை புதன் ராசிக்குள்ளேயே நிற்பதால் பழைய நண்பர், உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். ராசிக்குள்ளேயே குரு நிற்பதால் மனக்குழப்பம், தடுமாற்றம் வந்து நீங்கும். யாரை நம்புவது, நம்பாமல் போவது என்ற கலக்கம் வந்துசேரும். வீண் சந்தேகங்கள் வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வரும். சில நேரங்களில் சின்னச் சின்ன கை வைத்தியம் பார்த்துக் கொள்ளலாம். கடுமையாக அடிவயிற்றில் வலி வர வாய்ப்பிருக்கிறது. பழம், காய்கறிகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கார, அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. 2ல் ராகு நிற்பதால் இனந்தெரியாத கவலைகள், மனஇறுக்கம் வந்து செல்லும்.

அரசியல்வாதிகளே! எதிர்க்கட்சிக்காரர்கள் உதவுவார்கள்.

கன்னிப் பெண்களே! வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தேங்கிக்கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள், புரோக்கரேஜ், ஷேர் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும். மூத்த அதிகாரிகளுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். சிலருக்கு தேவையற்ற, விரும்பத்தகாத இடமாற்றம் வரக்கூடும். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.

கலைத்துறையினர்களே! உதாசீனப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும்.

விவசாயிகளே! வற்றிப் போயிருந்த கிணற்றில் நீர் சுரக்கும். மகசூல் இரட்டிப்பாகும். புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பீர்கள். புதிய பாதையில் பயணிக்கும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 19, 20, 22, 27, 28, 29, 30, செப்டம்பர் 5, 6, 7, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்ட் 31 காலை 8 மணி முதல் செப்டம்பர் 1 மற்றும் 2ம் தேதி காலை 10:15 வரை. இரவு நேரப் பயணத்தின்போது கவனம் தேவை.

பரிகாரம்: சென்னைக்கு அருகேயுள்ள சிங்கப்பெருமாள் கோவில் நரசிம்மரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவனுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:51 pm

கன்னி

18.8.2015 முதல் 17.9.2015 வரை

மென்மையையும், மேன்மையையும் விரும்பும் நீங்கள், தவறு செய்பவர்களைக் கண்டால் வன்மையாகக் கண்டிப்பீர்கள். உங்கள் ராசிநாதன் புதன் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் சந்தோஷம் நிலைக்கும். சமயோஜித புத்தியால் சாதித்துக் காட்டுவீர்கள். சவாலான தேர்வில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்கள் ராசிக்கு 2ல் வக்ரசனி தொடர்வதால் பணப் பற்றாக்குறை, அலைச்சல், சின்னச் சின்ன காரியத் தடைகள், இழுபறியான சூழ்நிலைகள் இருக்கும்.

குரு 12ம் வீட்டிலேயே தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். மனக் குழப்பங்களும், தடுமாற்றங்களும் வந்து செல்லும். திடீர் பயணங்களும் அதிகமாகும். செவ்வாய் லாப வீட்டில் நிற்பதால் பேச்சில் கம்பீரம் பிறக்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். சிறுகச் சிறுக சேர்த்து ஒரு வீட்டு மனையாவது ஊரைத் தள்ளியிருக்கும் பகுதியில் வாங்கி விட வேண்டுமென்று நினைப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சூரியன் ராசிக்கு 12ல் அமர்ந்திருப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறைகட்டுவீர்கள். நீண்ட நாட்களாக போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

அரசியல்வாதிகளே! பரபரப்புடன் காணப்படுவீர்கள்.

கன்னிப் பெண்களே! எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். ஆடை அணிகலன்கள் சேரும்.

மாணாக்கர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில் ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து வேலையாட்களை மாற்றுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களை கனிவாக நடத்துங்கள். ஹோட்டல், பதிப்பகம், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களால் அவ்வப்போது குடைச்சல் இருந்தாலும் பிரச்னைகள் பெரிதாக இருக்காது.

உத்யோகத்தில் இடமாற்றம், வேலைச்சுமை இருக்கும். மேலதிகாரி ஒத்துழைப்பு தந்தாலும் சக ஊழியர்களால் சிறுசிறு பிரச்னைகள் வந்துசெல்லும்.

கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களை கற்றுத் தெளிவீர்கள்.

விவசாயிகளே! வங்கிக் கடனுதவி கிடைக்கும். தரிசு நிலங்களையும் இயற்கை உரத்தால் பக்குவப்படுத்தி விளையச் செய்வீர்கள். நீண்டகால கனவுகள் நிறைவேறும் மாதமிது.

ராசியான தேதிகள்: 21, 23, 24, 25, 26, 30, செப்டம்பர் 1, 7, 8, 9, 10, 11, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 2 காலை 10:15 மணி முதல் 3 மற்றும் 4ந் தேதி மதியம் 1:30 மணிவரை புதிய தொழிலைத் தொடங்க வேண்டாம்.

பரிகாரம் : சென்னை-பிராட்வே அருகிலுள்ள காளிகாம்பாள் கோயிலை தரிசித்து வாருங்கள். அன்னதானம் செய்யுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:52 pm

துலாம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

உடுத்தும் உடையையும், உள்ளிருக்கும் மனசையும் வெள்ளையாக வைத்துக் கொள்ளும் நீங்கள் யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டீர்கள். கடந்த ஒருமாதமாக 10ல் நின்று உத்யோகத்தில் பிரச்னைகளை தந்த சூரியன் இப்போது லாப வீட்டில் வந்தமர்ந்திருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. பாகப் பிரிவினை நல்ல விதத்தில் முடியும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். வழக்குகள் சாதகமாகும். தைரியமாக சில பெரிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். புதன் வலுவாக இருப்பதால் பணப்புழக்கம் குறையாது.

எதிர்பார்த்து ஏமாந்த தொகையும் கைக்கு வரும். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தை வழியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டை அழகுபடுத்துவீர்கள். ராசிக்குள் வக்ரசனி நிற்பதால் அவ்வப்போது தலைச்சுற்றல், தூக்கமின்மை, வாந்தி வருவது போல் ஒரு நிலை ஏற்படும். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க வேண்டாம். குருபகவான் லாப வீட்டில் நீடிப்பதால் செல்வாக்கு கூடும். சிலருக்கு பெரிய பதவிகளும், பொறுப்புகளும் தேடி வரும். வீடு வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சியின் மூத்த நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசுவீர்கள்.

கன்னிப் பெண்களே! காதலும் கனியும். உயர்கல்வியிலும் வெற்றி கிட்டும். பெற்றோரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

மாணவர்களே! கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.

வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பால் கணிசமாக லாபம் உயரும். வி.ஐ.பிகளும் வாடிக்கையாளர்களாவார்கள். எலெட்ரானிக்ஸ் சாதனங்கள், துணி, ஏற்றுமதிஇறக்குமதி, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள்.

உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. நீங்கள் எதிர்பார்த்த இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். சக ஊழியர்கள் மத்தியில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும்.

கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புத் திறன் வளரும்.

விவசாயிகளே! வாய்க்கால், வரப்புச் சண்டைகளுக்கெல்லாம் சுமுகமான தீர்வு கிடைக்கும். அடகு வைத்திருந்த பத்திரத்தை மீட்பீர்கள். பணப் புழக்கமும் கௌரவமும் கூடும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 23, 24, 25, 26, 31, செப்டம்பர் 1, 2, 3, 8, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 4 மதியம் 1:30 மணிமுதல் 5 மற்றும் 6ந் தேதி மாலை 6 மணிவரை ஜாமீன், கேரண்டர் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரம்: மருதமலை முருகப் பெருமானை தரிசித்து வாருங்கள். ஏழைகளின் மருத்துவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:52 pm

விருச்சிகம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

கால ஓட்டத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட நீங்கள் எப்போதும் எளிமையை விரும்புவீர்கள். சூரியன் கடந்த ஒரு மாதமாக பகை வீட்டில் அமர்ந்து உங்களுக்கும் தந்தையாருக்கும் சில பிரச்னைகளை ஏற்படுத்தினார். செலவினங்களும் இருந்தது. எதிர்பார்த்த தொகையும் வராமல் போனது. இப்போது சூரியன் 10வது வீட்டில் ஆட்சி பெற்று நுழைந்திருப்பதால் எதிலும் சாதித்துக் காட்டுவீர்கள். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். தந்தையுடனான மனக்கசப்பு நீங்கும். அவரின் உடல் நலம் சீராகும். புது வேலை கிடைக்கும். அரசாங்கத்தால் நன்மை உண்டு. வழக்கு சாதகமாகும். புதனும் சாதகமாக இருப்பதால் நட்பு வட்டம் விரியும்.

வி.ஐ.பிகளின் தொடர்பு கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பொது அறிவுத்திறன் வளரும். பதவிகள் தேடி வரும். பெரிய பதவியில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். செவ்வாய் 9ம் வீட்டில் நிற்பதால் சேமிப்புகள் கரையும். தந்தைக்கு மருத்துவச் செலவுகள், அவருடன் மனத்தாங்கல் வந்து செல்லும். ஒரு சொத்தை விற்று மறு சொத்து வாங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாருடன் அளவாக பழகுங்கள். சகோதர வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. குரு 10ல் நீடிப்பதால் சிலர் உங்களை தவறாகப் புரிந்து கொள்வார்கள். சிலர் உங்களுக்கு தலைக்கனம் என்றும், முன்புபோல் நீங்கள் இல்லையென்றும் பிரித்துப் பேசுவார்கள்.

அரசியல்வாதிகளே! பொதுக் கூட்டம், போராட்டங்களில் முன்னிலை வகிப்பீர்கள்.

கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.

மாணவர்களே! ஆசிரியரின் ஆதரவு கிட்டும். உங்களுடன் போட்டி, பொறாமையுடன் பழகிய சில மாணவர்கள் திருந்துவார்கள்.

வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். சந்தையில் மதிக்கப்படுவீர்கள். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். ஹார்ட்வேர், லாட்ஜிங், டிரான்ஸ்போர்ட் மூலம் ஆதாயமடைவீர்கள்.

உத்யோகத்தில் கூடுதலாக வேலை பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியை அனுசரித்துப் போவது நல்லது. சக ஊழியர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

கலைத்துறையினர்களே! பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களை தேடி வரும்.

விவசாயிகளே! உங்கள் கடன் தள்ளுபடியாகும். ஊரில் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டில் நல்லது நடக்கும். பொறுமையால் பெருமையடையும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 26, 27, 28, செப்டம்பர் 2, 3, 4, 5, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 6ந் தேதி மாலை 6 மணி முதல் 7 மற்றும் 8ந் தேதி வரை வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.

பரிகாரம்: உங்கள் வீட்டிற்கு அருகேயுள்ள ஷீரடி பாபா கோயிலுக்கு சென்று வாருங்கள். ஏழை மாணவனின் கல்விச் செலவுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:53 pm

தனுசு

18.8.2015 முதல் 17.9.2015 வரை

தலைமைப் பண்பு அதிகம் கொண்ட நீங்கள் தலைக்கனம் இல்லாதவர்கள். யார் தயவிலும் வாழாமல் தன்கையே தனக்குதவி என்றிருப்பீர்கள். உங்கள் பிரபல யோகாதிபதியான சூரியன் இந்த மாதம் முழுக்க ஆட்சி பெற்று வலுவாக நிற்பதால் எதிர்பார்த்த பணம் வரும். அரசால் ஆதாயம் உண்டு. தந்தையாரின் உடல் நிலை சீராகும். வேலை கிடைக்கும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். வழக்கில் வெற்றி கிட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தை வழியில் மதிப்பு, மரியாதை கூடும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய நண்பர், உறவினர்கள் தேடிவந்து பேசுவார்கள்.

மனைவி வழியில் ஆதாயமடைவீர்கள். மனைவிக்கு வேலை கிடைக்கும். வெளியூர் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். செவ்வாய் 8ல் இருப்பதால் நஷ்டம், ஏமாற்றம், அடி வயிற்றில் வலி,தொண்டைப் புகைச்சல் வந்து செல்லும். சகோதர, சகோதரிகளை நினைத்து சங்கடப்படுவீர்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். குருபகவான் சாதகமாக இருப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அதை சமாளிக்கும் சக்தியும், எதிலும் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கையும் கிடைக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவு கிட்டும். சனி சாதகமான வீடுகளில் செல்வதால் சமூகத்தில் அந்தஸ்து உயரும். திடீர் யோகம், பணவரவு உண்டாகும். கௌரவப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். ஷேர் லாபம் தரும்.

அரசியல்வாதிகளே! கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும்.

கன்னிப் பெண்களே! எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். கசந்த காதல் இனிக்கும்.

மாணவர்களே! கல்யாணம், திருவிழா என்று அலையாமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வகுப்பறையில் ஆசிரியரிடம் தயங்காமல் சந்தேகங்களை கேளுங்கள்.

வியாபாரத்தில் தரமான சரக்குகளை மொத்த விலையில் வாங்க முடிவு செய்வீர்கள். வேலையாட்கள் உங்களிடமிருந்து தொழில் யுக்திகளை கற்றுக் கொள்வார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். கெமிக்கல், என்டர்பிரைஸ், பிளாஸ்டிக் வகைகளால் ஆதாயம் பெறுவீர்கள். பிரச்னை தந்தவரை நீக்கிவிட்டு புதிய பங்குதாரர்களை சேர்ப்பீர்கள்.

உத்யோகத்தில் பதவி உயர்வுக்காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். அதிகாரிகள் மனம் விட்டுப் பேசுவார்கள். பல ஆலோசனைகள் தருவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

கலைத்துறையினர்களே! புதுமையாக சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள்.

விவசாயிகளே! எள், ஆமணக்கு, சூரியகாந்தி போன்ற எண்ணெய் வித்துப் பயிர்களால் ஆதாயம் அடைவீர்கள். போராட்டங்களில் வெற்றி பெறும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 18, 19, 20, 21, 28, 29, 30, செப்டம்பர் 5, 6, 7, 15, 16, 17.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 9, 10 மற்றும் 11 காலை 10 மணிவரை வாகனங்களில் செல்லும்போது கவனமாகச் செல்லுங்கள்.

பரிகாரம் : நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசித்து வாருங்கள். கட்டிடத் தொழிலாளிகளுக்கு உதவுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by krishnaamma Sun Aug 09, 2015 11:54 pm

மகரம்

18.8.2015 முதல் 17.9.2015 வரை

எல்லோரிடமும் யதார்த்தமாகப் பேசிப் பழகும் நீங்கள், உங்களை பற்றிய விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பீர்கள். சூரியன் 8ல் நிற்பதால் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். அண்டை வீட்டாரின் ஆதரவு பெருகும். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். சொத்து சேரும். பாகப் பிரிவினை பேச்சு வார்த்தை மூலம் சுமுகமாகும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கொஞ்சம் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். முகம் மலரும். வர வேண்டிய பணம் கைக்கு வரும்.

சொந்தபந்தங்களுடன் இருந்த கசப்புணர்வு நீங்கும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.கடன் பிரச்னைகள் ஒரு பக்கம் விரட்டினாலும் இங்கிதமாகப் பேசி வட்டியை தருவீர்கள். ஆகஸ்ட் 25 முதல் சுக்கிரன் 7ல் அமர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். பழுதான டி.வி., ஃப்ரிட்ஜை மாற்றுவீர்கள். செவ்வாய் 7ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உங்களின் ஆளுமைத் திறன், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். 8-ல் குரு தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.

அரசியல்வாதிகளே! தொகுதியில் நடக்கும் நல்லது கெட்டதில் கலந்து கொண்டு மக்களின் அனுதாபத்தை பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். கல்வித் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும்.

மாணவர்களே! முதல் மதிப்பெண் பெறுவதற்காக கடுமையாக உழைப்பீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார்கள்.

வியாபாரத்தில் விளம்பர யுக்திகளை கையாண்டு லாபத்தை இரட்டிப்பாக்குவீர்கள். வேலையாட்களிடம் கறாராக இருங்கள். நழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைக்கு வரும். கடல் உணவு, கமிஷன், மர வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட இடர்பாடுகளை சரி செய்வீர்கள்.

உத்யோகத்தில் நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் அநாவசியமாக நுழையாதீர்கள். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள்.

கலைத்துறையினரே! புது வாய்ப்பு கிடைத்து அதிகம் சம்பாதிப்பீர்கள். விவசாயிகளே! நிலத்தகராறுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.முற்பகுதி அலைச்சலைத் தந்தாலும் பிற்பகுதியில் சாதித்துக்காட்டும் மாதமிது.

ராசியான தேதிகள்: ஆகஸ்ட் 21, 22, 23, 24, 25, செப்டம்பர் 1, 2, 3, 8, 9, 10, 11, 12, 13.

சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 11ம் தேதி காலை 10 மணி முதல் 12 மற்றும் 13 வரையிலும் புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.

பரிகாரம்: திருக்கோவிலூர் திரிவிக்ரம பெருமாளை தரிசியுங்கள். வயதானவர்களுக்கு குடையும், செருப்பும் வாங்கிக் கொடுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆவணி  மாத  பலன்கள்  :)  Empty Re: ஆவணி மாத பலன்கள் :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum