ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_m10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10 
Dr.S.Soundarapandian
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_m10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10 
heezulia
தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_m10தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

4 posters

Go down

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Empty தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

Post by சிவா Sat Aug 01, 2015 2:54 am


அப்துல் கலாமின்
கறைபடாக் கரங்கள்
கடமையின் வரங்கள்
கண்ணியத்தின் உரங்கள்
கட்டுப்பாட்டின் சிகரங்கள்

இந்திய மாணாக்கர்களைக்
கண்ணீரில் மிதக்கச் செய்ய
இயற்கையே
உனக்கு ஏன் இந்த
அவசரம் ?!
- புலவர் தஞ்சை ஆழி


நேற்றைய இந்திய சுதந்திரகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்த்தால், அதன் பக்கங்களில் தேசத் தலைவர்கள் மகாத்மா காந்தி போன்றோரின் பெயர் மேலோங்கி இருக்கும். ஆனால், தற்கால இந்திய சரித்திரத்தைப் புரட்டினால் அதில் கலாம் என்ற வார்த்தையும் வைரம்போல் பதிந்திருக்கும்.

குறிப்பாக தற்போதைய தலைமுறையாக இருந்தாலும் சரி, இனி வருங்காலத் தலைமுறைகளாக இருந்தாலும் சரி மாணவர்களின் நெஞ்சங்களில் காலம்தோறும் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆலய மணியாக கலாமின் பெயர் நீடித்திருக்கும் என்றால் அது மிகையல்ல.

தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம். இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.

ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ’மாணவர்களே கனவு காணுங்கள்’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அது போல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.

ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.

அக்னிச் சிறகுகள்’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.

நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.

’நான் யார் தெரியுமா’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூவை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.

எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.

எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ’நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’ என்று அடிக்கடி கூறுவார்.

இந்திய அரசியல் வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை ’தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’

உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இது வரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ’நல்ல நாள், கெட்ட நாள் எது?’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ’பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’ என்றார்.

அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.

அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தரவர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.

அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர்

அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.

அப்துல் கலாம் இளம் வயதில் போர் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.

அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954ம் ஆண்டு பிஎஸ்சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார். ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.

அப்துல் காலமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.

ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ’சந்தனப்பாடி’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.

அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

1950களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.

1998ம் ஆண்டு மே மாதம் 11ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.

1958ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.

இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்று கோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட்

கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ’கலாம் ஸ்டெண்டு’என்றே பெயராகும்.

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.

இவர் எழுதிய ’எனது பயணம்’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.

குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள

வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.

இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.

அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.

அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ’இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’ என்றார்.

பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.

அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ’இறைவா!

உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’ எனும் வரிகளாகும்.இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950களில் அப்துல் கலாம், ’த லைட் பிரம் மெனி லேம்ப்ஸ்’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இது பற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை

கண்டுபிடித்தார். இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 30 பல்கலைக்கழகங்கள் அப்துல்கலாமின் அறிவியல் சாதனைகளை பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்து உள்ளன.

இந்தியாவில் இத்தனை பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற விஞ்ஞானி அப்துல் கலாம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், பெல்ஜியம் நாடுகளும் 10-க்கும் மேற்பட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளன.

அப்துல் கலாம் ஏராளமான தேசிய விருதுகளையும் பெற்றவர். டாக்டர் பைரன்ராய் விண்வெளி விருது, தேசிய வடிவமைப்பு விருது, மத்திய பிரதேச அரசு விருது, ஓம்பிரகாஷ் பாஷின் விருது, 1996-ம் ஆண்டு நாயுடு அம்மாள் நினைவு தங்கப்பதக்க விருது,

அறிவியல் தொடர்பான தேசிய அளவிலான 'மோடி' விருது, விஞ்ஞான தொழில்நுட்பத் திறனுக்கான தேசிய விருது ஆகியவை குறிப்பிடத்தக்கவை.அப்துல்கலாமின் சேவையை பாராட்டி, மத்திய அரசு 1981-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும், 1990-ல் பத்ம விபூஷண் விருதும் வழங்கி கவுரவித்தது. அதைத் தொடர்ந்து 1997-ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.

பள்ளி ஒன்றில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நடந்தது. அதில் அப்துல் கலாம் பேசியதாவது;

திருக்குறள் எனக்கு மிகவும் பிடித்ததாகும். அறிவு என்பது அழிவு வராமல் காக்கும் கருவி. எந்த பகைவராலும் அறிவை அழிக்க முடியாது; அறிவு என்பது கற்பனை சக்தி, மனத்தூய்மை உள்ள உறுதி ஆகிய மூன்றும் சேர்ந்தது தான். கற்றல், கற்பனை சக்தியை வளர்க்கிறது; கற்பனை சக்தி, சிந்திக்கும் திறனை தூண்டுகிறது; சிந்தனை, அறிவை வளர்க்கிறது. எனவே, அறிவு உன்னை மகானாக்கும்.உள்ளத்தில் உறுதி இருந்தால், முடியாததையும் கண்டு பிடிக்கலாம்; சவால்களை தோற்கடித்து, வெற்றி பெறலாம். எனவே, விடாமுயற்சியால், தோல்வியை தோல்வியடையச் செய்து, வாழ்க்கையில் வெற்றி பெற்று, நாட்டை வளமான நாடாக்குவேன் என, உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நமது வாழ்க்கையில் முன்னேற, நான்கு முக்கிய விஷயங்கள் தேவை. முதலில், மிகப்பெரிய லட்சியம் வேண்டும்; சிறு லட்சியம் குற்றமாகும்.அடுத்து, அறிவை

தேடித் தேடிப் பெற வேண்டும். மூன்றாவது, கடுமையாக உழைக்க வேண்டும். நான்காவது, விடாமுயற்சி வேண்டும். இந்த நான்கும் இருந்தால், எண்ணிய லட்சியத்தை அடையலாம் என்றார்.

ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ’காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். ஜூலை 27 திங்கள்கிழமை அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

இவர் எழுதிய, 'மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங் டிரீம்ஸ் இன்டு ஆக் ஷன்ஸ்' என்ற புத்தகம், அவரது வாழ்க்கை பயணத்தை விரிவாக விவரித்து உள்ளது.

அப்புத்தகத்தில் கலாம் கூறியுள்ளதாவது: விமானம் ஓட்டுவதில் எனக்கு அலாதி பிரியம்; அதிலும், போர் விமானம் ஓட்டுவது, மறக்க முடியாத விருப்பக் கனவு. விமானத்தில் அமர்ந்து, விண்ணின் மேலே, உயர உயர பறக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக எண்ணம் வளர்த்தேன்.ஒரு சமயம், உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில், இந்திய விமானப் படை அலுவலகத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதே சமயம், மத்திய பாதுகாப்புத் துறையின், டி.டி.டி.பி., எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி இயக்குனரகமும் நேர்முகத் தேர்வுக்கு அழைத்தது.டி.டி.டி.பி., நேர்முகத் தேர்வு மிக எளிதாக இருந்தது.

விமானப்படை நேர்முகத் தேர்வில், ஒன்பதாம் இடமே கிடைத்தது. ஆனால், எட்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டதால் நான் தேர்வாகவில்லை. அத்துடன், விமானப்படை விமானியாக வேண்டுமென்ற என் கனவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.அதன்பின், டி.டி.டி.பி.,யில் மூத்த அறிவியல் உதவியாளர் பணியில் சேர்ந்தேன். ராக்கெட் விஞ்ஞானத்தில் கவனம் செலுத்தினேன்.இவ்வாறு, அப்துல் கலாம் கூறியுள்ளார்.

உலகிலேயே மிக வசதியானது என்பது எளிமைதான்' என்றார்பிரமாண்டங்களைப் படைத்த இத்தாலியின் லியனார்டோ டாவின்சி. 'ஆழ்ந்த சிந்தனையின்விளைவாக இயற்கையிலேயே எழுகிற குணாதிசயம்தான் எளிமை' என்றார் வில்லியம் ஹாஸ்லிட் என்ற தத்துவ ஞானி.

இதுபோன்று எளிமைக்குஎத்தனையோ பேர் எத்தனையோவிதங்களில் விளக்க முயன்றிருக்கிறார்கள். ஆனால், நாடு பேதமில்லாமல் தற்போது உலகில் வாழும் அனைத்து தலைவர்களுக்கும், சிறந்த முன்னுதாரணமான எளிமைவாதியை பார்க்க முடியும் என்றால் அவர்தான் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்.


தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Empty Re: தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

Post by krishnaamma Sat Aug 01, 2015 12:33 pm

நல்ல பகிர்வு சிவா ஜாலி....நன்றி ! நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Empty Re: தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

Post by ஜாஹீதாபானு Sat Aug 01, 2015 5:28 pm

அப்துல் கலாம் பற்றிய அனைத்து தகவல்களும் அருமை பகிர்வுக்கு நன்றி தம்பி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Empty Re: தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

Post by வேல்முருகன் Sat Aug 01, 2015 6:59 pm

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் 3838410834 தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் 103459460


விதைத்தவன் உறங்கினாலும் .... விதைகள் உறங்குவதில்லை ...
வேல்முருகன்
வேல்முருகன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 588
இணைந்தது : 21/04/2012

http://velmurugan.webs.com

Back to top Go down

தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம் Empty Re: தோல்வியை தோல்வியடைய செய்யுங்கள் - அப்துல் கலாம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum