ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

+5
பாலாஜி
தாமு
ரூபன்
Tamilzhan
மீனு
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 12:23 am

[You must be registered and logged in to see this image.]


என்ன எல்லோரும் விழிக்கிறீர்கள்.. ஆம் இன்றைய ஈகரைல சில பேய்கள் உலா வருவதாக செய்தி ,, மீனு இன்னும் காணலை..ஆனா இந்த செய்தி அறிந்ததும் ..பேய் பற்றி இங்கே கொஞ்சம் விவாதிக்கலாம் என்று ஈகரை நண்பர்களுடம் விவாதித்தேன் ..அபப்டி விவாதித்த போது ஒவோருத்தங்களும் என்ன என்ன சொன்னார்கள் என்பதை இன்றைய கண்ணோட்டத்தில் தருகிறேன் ,,

காலை ஈகரை வந்ததும் எல்லோரும் ..அமைதியாக இருந்தார்கள்,,மீனுவும் ஈகரை வந்தேன் ,,மீனு வந்தால் பேசாம இருக்க மாட்டாளே..மற்றவர்களையும் சும்மா உக்கார விட மாட்டாளே ,,எதுக்கு எல்லோரும் பேசாது அமைதியா இருக்கின்றீர்கள் என்று கேட்டதும் ,,நம்ம விஜய் அரக்க பறக்க ஓடி வந்து மீனு நீ வந்திட்டியா ,,உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?ஈகரைல பேய் உலாவுதாம் ,நீ பார்த்தியா மீனு என்று பயந்து பயந்து சொன்னான் ,மீனுவும் இதென்ன புது கதையா இருக்கே என்று விட்டு , விஜய் நீ பேயை நம்புகிறாயா என்று கேட்ட போது ,,ஆமா என்றான்.. மற்றவர்களை கேட்ட போது ,,எல்லோருமே ஆம் மீனு நம்பறோம் என்றார்கள்..

அப்போ இறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றதும்..நிறைய சொன்னார்கள்..

இளவரசன் சொன்னதாவது :::::இறப்பு வாழ்வின் முடிவு அல்ல ,இறப்பு ஒரு நிகழ்வு . நாம் இறந்ததும் ஆன்மா அழியாம இருக்க வேண்டும் என்றால் ,,ஆன்மாவை இறப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் ,,நாம் பல நன்மைகளை செய்தல் வேண்டும்..
தன்னையே கொடுப்பது சிறந்த குணம்..அதிலும் சிறந்த குணம் ,,ஒருவரின் தேவைய உணர்ந்து கொடுப்பது ,அன்பை பகிரனும், அன்பை கொடுக்கணும் பிறரோடு அனுசரித்து போகும் பண்பை வளருங்கள் ..
வனத்தில் பூக்கும் பூக்கள் எல்லாம் மணம் வீசுவதில்லை ,அதே போல தான் பிறக்கின்ற மனிதன் அனைவரும் புண்ணியம் அடைவது இல்லை .. அவரவர் வாழ்ந்த விதத்தை வைத்தே போற்ற படுகின்றனர்.

ராஜா அண்ணா சொன்னாரு ::::நாம் பேயாக அலைவது நல்லது அல்ல.. நாம் நல்ல செயலை செய்தால் ,நாம் மீண்டும் சிறப்பான பிறப்பை அடையலாம்..
மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.

ஷெரின் சொன்னது என்ன என்றால் ::::கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.

பாலாஜி சொன்னவை :::அவரவர் செய்த பாவ, புண்ணியங்களுக்கேற்பவும், அந்த ஆன்மாவின் தவ ஆற்றலைப் (பரி பக்குவம்) பொறுத்தும் மனிதன் இறந்த பிறகு இவ்வகை உலகங்களை அடைகிறான். இந்த ஆவிகள் உலகம் கொடிய பாவம் செய்தவர்களுக்கு மிகவும் துன்பத்தைத் தரும் ஒன்றாக இருக்கும். பேராசை கொண்ட அவர்கள், உயிருடன் இருந்த காலத்தில் தங்கள் உடலாகிய காரண சரீரம் மூலம் பல்வேறு தீச்செயல்களைச் செய்திருப்பர். பிறரைத் துன்புறுத்தி பல இன்பங்களை அனுபவித்திருப்பர். தற்போது உடலாகிய காரண சரீரம் இல்லாததால் அவர்களால் அது போன்ற இன்பங்களை நுகர முடியாது. ஆகவே அவர்கள் இறந்த பிறகும் அதே நினைவுடன் இருப்பர். தங்களைப் போன்ற தீய ஆவிகளுடன் கூட்டாக வசிப்பர். அவற்றில் சில ஆன்மாக்கள் தாங்கள் இறந்து விட்டோம் என்ற உண்மையைக் கூட உணராது இருப்பர். சில ஆன்மாக்கள் தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பலவீனமான மனம் கொண்டவரது உடலைப் பயன்படுத்திக் கொள்வர். அவர்களைப் பீடித்து தங்களது எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வர். இதனையே பேய் பிடித்தல் என்று கூறுகிறோம்.

விஜய் சொன்னவை :::ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.

தமிழன் அண்ணா சொன்னவை :::நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.

இன்று பேய் பற்றியும் ஆவி பற்றியும்.. இதில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் பலர் பயனுள்ள விதமாக தகவலை மீனுவிடம் சொன்னார்கள் ,,அதை மீனு இங்கே தந்துள்ளேன் ..
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடை பெறுவது ஈகரை ஆவி (பேய் பற்றி பேய் கிட்டேயே சொன்ன விஜயும் ஒரு பேய்தான் ) [You must be registered and logged in to see this image.]

பிரியமுடன் மீனு [You must be registered and logged in to see this image.]


Last edited by மீனு on Fri Nov 13, 2009 1:16 am; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by Tamilzhan Fri Nov 13, 2009 12:34 am

இவ்வள்வு சொன்னே...! பேய் ஓட்ட ஒரு வழி சொல்ல... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 1:13 am

பேய் ஓட்டுவதற்கான வழிகள் நாளைய கண்ணோட்டத்தில் ,,தமிழன் அண்ணாவின் வேண்டுகோளுக்கிணங்க தருகிறேன் ..

முக்கியமாக ..ஈகரை பேய்களை ஓட்ட வழிகள் சொல்ல மாட்டேன்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 3:49 am

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by ரூபன் Fri Nov 13, 2009 3:53 am

அய்யய்யோ திரும்பவும் பேயா இது பேக்கு பேன்பார்த்த கதைபோல இருக்கே
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 3:58 am

ரூபன் wrote:அய்யய்யோ திரும்பவும் பேயா இது பேக்கு பேன்பார்த்த கதைபோல இருக்கே

நீ பேய்க்கு பெண் பார்த்தியா ரூபன்..எங்கே கொஞ்சம் விபரமா சொல்லுடா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by ரூபன் Fri Nov 13, 2009 4:03 am

மீனு என்ன இன்னைக்கு பிரான்ட் மாத்தி அடிச்சிட்டியாடி கண் மங்கலாகுதா என்ன
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 4:08 am

ஆமா சரக்கை தப்பா தந்திட்டான் ,கடை காரன். [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by ரூபன் Fri Nov 13, 2009 4:11 am

என்னமீனு வழமையா வாங்கிற உனக்கு தெரியாதா கடைக்காரன் மாத்தி தந்திட்டான் என்று [You must be registered and logged in to see this image.]
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by மீனு Fri Nov 13, 2009 4:21 am

தெரியலைடா..அவன் என்னமோ பேச்சு கொடுத்து கொண்டே ..இப்படி மாற்றி தந்திட்டான்,..இருக்கு அவனுக்கு கச்சேரி..ஒரு நாள் செமையா தண்ணி போட்டு விட்டு அவனை உண்டு இல்லை என்று ஆக்கிடுறேன்


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம் Empty Re: ஈகரை கண்ணோட்டம் ,இன்று ,பேய் கண்ணோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum