ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் அழகு தேவதை

Go down

 இந்தியாவின் அழகு தேவதை Empty இந்தியாவின் அழகு தேவதை

Post by ayyasamy ram Mon Jul 13, 2015 6:53 am


 இந்தியாவின் அழகு தேவதை DuO27e8TDGW0pIXbyxuw+201507121518251196_India-Beauty-Angel_SECVPF.gif
-
‘இந்தியாவின் அழகு தேவதை’ என்ற பட்டத்தை
வென்றிருக்கிறார் பிரபல இந்தி நடிகை கரீனா கபூர்.
பல வெற்றிப் படங்களிலும், விளம்பரங்களிலும்
நடித்துக் கொண்டிருக்கும் கரீனாவின் அழகு ரகசியம்
என்ன என்பதை அவரிடமே கேட்போம்!

‘இந்தியாவின் சிறந்த அழகி’யாக நீங்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டதும் உங்கள் மகிழ்ச்சி எப்படி
இருந்தது?

‘‘என் அம்மாதான் ரொம்ப மகிழ்ச்சியடைந்தார்.
பலருக்கு போன் செய்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து
கொண்டார். படப்பிடிப்பில் இருந்த என்னையும்
கூப்பிட்டு வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு நான், என் அம்மா, அக்கா கரீஷ்மா, அவரது
இரண்டு குழந்தைகளுடன் தேவாலயம் சென்று
கடவுளுக்கு நன்றி தெரிவித்தோம். அம்மா எனக்காக
சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்தார்.

பிரார்த்  தனைக்கு பின்பு எனக்கு திருஷ்டி கழித்தார்.
அவருக்கு எல்லா மதமும் சம்மதம். எல்லா மக்களும்
உறவுக்காரர்கள். அடுத்தபடியாக அதிக
மகிழ்ச்சியடைந்தவர் என் கணவர்!

உங்கள் பார்வையில் அழகு என்பது என்ன?

அழகு என்பது மனோபலம். நல்ல எண்ணங்கள்,
மற்றவரை மதிக்கும் குணம், பணிவு, பொறுமை
இவைகள்தான் அழகின் அடிப்படை குணங்கள்.
-
 இந்தியாவின் அழகு தேவதை GNhCrlgKTW2OTAJd7dS4+C57B0AE9-4A2B-48B5-8E57-E540B7408F3B_L_styvpf.gif
-
உங்களைவிட அழகான நடிகை யார்?

கரீஷ்மா கபூர்தான் ரொம்ப அழகானவர்.
அழகான உடலமைப்பு, வசீகரிக்கும் கண்கள்.. அவை
எல்லாம் அவரது பிளஸ் பாயிண்ட். என்றும் அவர்தான்
நம்பர் ஒன்!

நீங்கள் எந்த உடையில் அழகாக இருப்பதாக
நினைக்கிறீர்கள்?

ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்வெட்டர் போன்றவைகளை
அணியும்போது நான் மிக அழகாக இருப்பதாக
நினைத்துக்கொள்வேன்.

உங்கள் கணவர் சைய்ப் அலிகான், உங்களுக்கு எந்த
உடை அழகு என்று கூறுவார்?

புடவையில் நான் அழகாக இருப்பதாக பாராட்டுவார்.
என் மாமியார் ஷர்மிளா தாகூர்கூட எனக்கு
புடவைதான் அழகு என்று பலமுறை கூறியிருக்கிறார்.

என் நாத்தனார் சோஹாவின் திருமணத்தின்போதும்
நான் புடவைதான் உடுத்தியிருந்தேன். எனக்கும்
புடவைதான் ரொம்ப பிடிக்கும்.

அழகை பராமரிக்க எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?

சாப்பிடவும், தூங்கவும் நேரம் ஒதுக்குவது போன்று
அழகு பராமரிப்பிற்கும் கட்டாயம் நேரம் ஒதுக்க
வேண்டும். நான் அழகுக்காக பெரிதாக ஒன்றும்
செய்வதில்லை. பச்சை காய்கறிகள் நிறைய
சாப்பிடுவேன். நிறைய தண்ணீர் குடிப்பேன். அதுதான்
என்னுடைய அழகு ‘டிப்ஸ்’.

எந்த மாதிரியான அழகு சாதனங்களை விரும்பி
பயன்படுத்துவீர்கள்?

அதிகமான ரசாயனம் கொண்ட அழகு சாதனப்
பொருட்களை நான் பயன்படுத்துவதில்லை.
என் பேக்கில் லிப்ஸ்டிக், கண் மை, லிப்குளோஸ்
போன்றவைதான் இருக்கும். அதுவும் இயற்கை
பொருட்களால் உருவானதுதான்.

தயிர், சந்தனம், பாதாம் எண்ணெய்
போன்றவைகளைதான் முகத்திற்கும், கூந்தலுக்கும்
பயன்படுத்துகிறேன்.

உங்கள் கூந்தல் பராமரிப்பு பற்றி சொல்லுங்கள்?

பாரம்பரிய முறைப்படியே கூந்தலை பராமரிக்கிறேன்.
புதிய பொருள் எதையும் தொட்டுக்கூட பார்க்கமாட்டேன்.
சிறுவயதிலிருந்தே தலைக்கு பாதாம் எண்ணெய்
மசாஜ் செய்கிறேன். கூந்தலுக்கு அவை அற்புதமான
பளபளப்பை தரும்.

வயதாகும்போது கூந்தலுக்கு ‘டை’ பயன்படுத்துவீர்களா?

நிச்சயமாக பயன்படுத்தமாட்டேன். வயதாவது
குற்றமில்லை. எந்த அழகு சாதனப் பொருளாலும்
வயோதிகத்தை தடுக்கமுடியாது. இயற்கையான
அழகுதான் எப்போதும் மரியாதைக்குரியது.

முதுமையை நினைத்து பயப்படுவீர்களா?

இல்லை. உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்க
வேண்டும். முதுமை என்பது அனுபவங்களின் தொகுப்பு.
அனுபவம் என்றும் அழகானது.

முதுமையை யாருடன், எப்படி செலவிடுவீர்கள்?

என் குடும்பத்துடன் செலவிடுவேன். என்னை சுற்றி
என் உறவுகள் நிறைந்திருக்க வேண்டும்.
எனக்கு 70 வயதாகிவிட்டால் பெரிய டைனிங் டேபிளில்
அமர்ந்து என் பேரன், பேத்திகளோடு மகிழ்ச்சி
குதூகலத்தோடு சாப்பிடுவேன்.

அழகை பறிக்கும் விஷயம் என்று எதை கருதுவீர்கள்?

முகம் பளபளப்பாக மாறும், சுருக்கங்கள் மறையும்,
கொழுகொழுவென்று கன்னங்கள் மிளிரும், நிறம்
சீக்கிரமே கிடைக்கும்.. என்றெல்லாம் கூறிக்கொண்டு
நிறைய அழகு சாதன பொருட்கள் வந்துவிட்டன.

அவைகளில் எது, எந்த மாதிரியான பின்விளைவுகளை
ஏற்படுத்தும் என்று யாருக்கும் தெரியாது. நான் ஒரு
நடிகையாக இருப்பதால் மேக்–அப் தவிர்க்க முடியாதது.
ஒவ்வொரு முறை மேக்–அப் போடும்போதும் எனக்கு
பதற்றமாகவே இருக்கும். நான் பயப்படுவது என்னுடைய
இயற்கை அழகு பறிபோய்விடுமோ என்றுதான்!

சருமம் பளபளப்பாக இருக்க என்ன செய்யவேண்டும்?

சருமத்தை பாதுகாக்க சந்தனத்தை முகம், கை–கால்களில்
தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும்.
சருமத்தை பாதுகாக்க சந்தனத்தைவிட சிறந்த பொருள்
எதுவுமில்லை. சருமத்தை குளிர்ச்சியாகவும், பள
பளப்பாகவும் வைத்திருக்க சந்தனம் உதவும்.

என் கணவர் சைய்ப்பிற்கும் இந்த முறையை கற்றுக்
கொடுத்திருக்கிறேன். விடுமுறையை கழிக்க
ஐரோப்பியாவிற்கு சென்றிருந்தபோதும், ஒரு நாளைக்கு
2 முறையாவது முகத்தை கழுவுவேன்.

வெளியிலிருந்து வந்தால் நிச்சயம் முகம் கைகால் கழுவ
வேண்டும். வெயில்–குளிர் இரண்டின் பாதிப்பையும்
சந்தனம் போக்கும். சருமத்தை கிருமிகளிடமிருந்தும்
பாதுகாக்கும்.

உங்களுக்கு அழகு ஆலோசனைகளை வழங்குவது யார்?

என் சகோதரி கரீஷ்மா கபூர்தான்! மிக சிறந்த அழகு
ஆலோசனைகளை அவள் எனக்கு தருகிறாள். எதையும்
ஒருமுறை அவர் பயன்படுத்திப் பார்த்து விட்டுதான்
எனக்கு சொல்வார்.

இந்திய பெண்களின் அழகு பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்திய பெண்கள் இதிகாச காலம் தொட்டே தெய்வீக
அழகு படைத்தவர்கள். இனிமையான பேச்சும்,
பொறுமையும் அவர்களை மேலும் அழகாக்குகிறது.
நல்ல எண்ணங்கள் ஒருவர் முகத்தில் பிரதிபலிக்கும்
போது அவர் முகம் மேலும் ஜொலிக்கும்.
-
--------------------------------------------


நன்றி- தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum