ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10 
kavithasankar
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10 
mohamed nizamudeen
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10 
Barushree
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_m10ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

+12
உமா
கோவை. மு. சரளா
அப்புகுட்டி
megastar
அருண்
gunashan
தாமு
sham
அபிராமிவேலூ
sathy
மீனு
balakarthik
16 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Thu Nov 12, 2009 12:35 pm

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருக்கிறாள் என்பதே உண்மை. இந்த கேள்விக்கு இன்னொரு எதிர் கேள்வி கேட்டால் உங்களின் சந்தேகத்திற்கு விடை கிடைக்க வாய்ப்புண்டு என்று எண்ணுகிறேன். பெண்களின் வெற்றிக்கு எந்த ஆணாவது உதவி புரிந்திருக்கின்றானா? அவளை வெற்றியடையவைத்து எந்த ஆணாவது சந்தோஷப்பட்டிருக்கின்றானா ?. பெண்கள் வென்றுவிட்டால் தன்னுடைய மானமே போய்விட்டதாக கருதும் ஆண் இனத்தால் பெண்களின் வெற்றியை எவ்வாறு பொறுத்துக்கொள்ள இயலும்? பெண்கள் ஆண்களை வென்றுவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெண்களின் தோல்விக்கு வழிவகுக்கும் ஆண்களை நான் கண்டிருக்கிறேன். பெண்ணின் வெற்றியை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் ஆண்கள். பெண்களுக்கு திறமை இருக்க கூடாதா?. எத்தனை பெண் சங்கீத கலைஞர்கள், பெண் நடனக்கலைஞர்கள் அவர்களின் அற்புதமான கலைகளை தங்களின் திருமணத்திற்கு பிறகு துறக்க வேண்டி வந்திருக்கிறது என்பதை நினைக்கும்போது என் நெஞ்சம் பதைக்கிறது. அவர்கள் செய்த தவறு என்ன? திருமணம் செய்துகொண்டதா? எதற்காக அவர்களின் கலையை திருமணத்திற்கு பிறகு துறக்கவேண்டும். அவர்கள் கற்றுக்கொண்ட கலை அவர்களோடு அழிந்துபோக வேண்டுமா? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஆணாதிக்கம்.

இந்நிலையிலும் பெண் என்பவள், தான் சார்திருக்கும் ஆணின் வெற்றியை தான் அடையும் வெற்றியாக கருதி அவனின் ஒவ்வொரு முயற்சியிலும் அவனோடு கூடவே நிற்கிறாள். அப்படி செய்வது அவளின் இயலாமையால் அல்ல. மாறாக அவன் மீதுகொண்ட அன்பினால். அதுபோன்ற பெண்கள் ஆண்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவனை ஊக்குவித்து உறுதுணையாக இருந்து சிறப்பான வெற்றிகளை அடைய வழிவகுக்கிறார்கள். அதனாலயே ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்ற கருத்தை ஆண்களே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள். அவள் அவனது சகோதரியாக இருக்கலாம், தோழியாக இருக்கலாம், காதலியாக இருக்கலாம், துணைவியாக இருக்கலாம் அல்லது தனது தாயாக இருக்கலாம்.

சகோதரியின் அன்பு, தோழியின் அரவணைப்பு, துணைவியின் காதல், தாயின் பாசம், இந்த ஈடு இணையில்லா அன்பு ஒரு பெண்ணிடமிருந்தே ஆணுக்கு கிடைக்கிறது. அவளால் மட்டுமே அத்தகைய அன்பை பொழிய முடியும். தோல்வி அடைந்த ஒரு ஆணின் இதயத்திற்கு காதலியின் மார்பும், தாயின் மடியும் கொடுக்கும் ஆறுதலை உலகில் இருக்கும் வேறு எந்த பொருளாலும் கொடுக்க இயலாது. ஒரு பெண்ணால் ஆணின் இரும்பாலான இதயத்தை உடைக்கவும் முடியும், அவனின் உடைந்தபோன இதயத்தை உயிர்ப்பிக்கவும் முடியும். தோல்வியால் துவண்ட ஒருவனை நிலைநிறுத்தி அவனுக்கு ஊக்கம் அளித்து களத்தில் இறக்கி வெற்றியடையச் செய்ய ஒரு பெண்ணால் முடியும்.

"காரிகைகள் கண்ணசைத்தால் மாமலையும் சிறு கடுகாம்" என்று கூறினானே பாவேந்தர் பாரதிதாசன். இந்த வார்த்தையை அவன் கவிதைக்காக சொல்லவில்லை. அது வாழ்கையின் உண்மை. காதலி ஊக்கப்படுத்தினால் காதலனால் ஒரு பெரிய மலையை கூட சிறிய கடுகை தூக்குவது போன்று பெயர்த்து எடுக்க முடியும் என்பதை அப்பெரும் கவிஞனே ஒப்புக்கொண்டு விட்டான். இது அந்த காதல் அவனுக்கு கொடுக்கும் சக்தி. இந்த சக்தியை ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு வழங்க முடியும்.

பெண்கள் ஏதோ திறமை இல்லாதவர்கள், அவர்கள் ஆண்களை அண்டி பிழைத்து வாழ்பவர்கள் பெண்கள் என்றெல்லாம் தயவுசெய்து எண்ணிவிடாதீர்கள். ஆண்களின் அறிவிற்கும் திறமைக்கும் சற்றும் குறைவில்லாதது பெண்களின் அறிவும் ஆற்றலும். இந்த இயற்கையே பெண் இனத்தை நம்பித்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். பெண்ணே சக்தி. அவள் இல்லையென்றால் இந்த உலகம் இல்லை. நான் இப்படி சொல்வதை ஒரு சராசரி ஆணால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண் தன்னுடைய கர்வத்தை விட்டு சிந்திப்பானேயானால் இந்த உண்மையை அவனால் புரிந்துக்கொள்ள முடியும். வாழ்வில் வெற்றி பெற்ற ஆண்களை தேடி அவர்கள் பின்னால் நிற்க்கின்றார்கள் பெண்கள் என்று கொஞ்சம் கூட நாகூசாமல் ஆண்களால் எப்படி பேசமுடிகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண்ணாள் தன்னுடைய ஈகோ-வை விட்டு ஆணின் பின்னால் நின்று வாழ முடியும். அவளுக்கு வேண்டியதெல்லாம் அவனுடையே அன்பு மட்டுமே. அது கிடைத்துவிட்டால் போதும் அவளுக்கு. தனக்கென்று கர்வம் ஏதும் இல்லாமல் அவன் பின்னால் ஆயுள் முழுதும் நிற்ப்பாள் பெண். ஆனால் ஒரு ஆணால் தன் EGO-வை விட்டு ஒரு பெண்ணின் பின்னால் நிற்கமுடியுமா? நிச்சயமாக முடியாது. அவனுடைய கவுரவமும் அவனது கர்வமும் தடுக்கும். ஏனென்றால் அவனுக்கு அவனது அன்பைவிட கவுரவம் முக்கியம்.. ஒரு பெண் ஆணின் பின் நிற்பது அவன் அவளுக்கு போடும் சோற்றுக்காகவோ அல்லது அவன் அவளுக்காக செலவழிக்கும் பணத்திற்காகவோ இல்லை என்பதை ஆண்கள் புரிந்துக்கொள்ளவேண்டும் . அவன் பின்னால் அவள் நிற்பது அவன் மீதுகொண்ட அழியா அன்பினால் மட்டுமே. இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் ஆண்கள். தயவுசெய்து அந்தஅன்பை கொச்சை படுத்தாதீர்கள். அத்தகைய அன்பை ஆண்களால் புரிந்துகொள்ள இயலாது. அவ்வன்பை புரிந்துகொள்ள இயலாமல் போனது ஆண்களின் துரதிர்ஷ்டம்.

ஆண்கள் செய்யும் அத்துணை வேலைகளையும் பெண்களாலும் செய்ய இயலும். ஆனால் ஒரு குழந்தையை தன் வயிற்றில் சுமந்து தன் சுகங்களை எல்லாம் தாரைவார்த்து ஒரு ஆணுக்கு பிள்ளை பெற்று கொடுக்கின்றாளே பெண், அந்த ஒரு செயலுக்காக ஒவ்வொரு ஆணும் அவளை தெய்வமாக கருதவேண்டும் . தன் வயிற்றில் ஒரு கரு வளர்வதாக ஆண் கற்ப்பனை செய்து பார்க்கமுடியுமா? பைத்தியம் பிடித்துவிடும் அவனுக்கு. பெண்ணின் உண்ணதத்தை ஆண்கள் உணர்ந்துகொள்ள மறுப்பது ஏன்? தான் சிறுமை ஆகிவிடுவோம் என்பதாலா?

எந்தப்பெண்ணாவது படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக வாழ்வில் கோழையாக இருக்கும் எந்த ஆண் பின்னாலாவது நின்று அவனை வாழ்வில் உயர்த்தியதாக சரித்திரம் உண்டா? என்று ஆண்கள் கேட்கிறார்கள். இந்த கேள்விக்கான என்னுடய பதில் இனிவரும் கேள்விகளே. படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கும் ஆண்களுக்கு திருமணம் நடப்பதில்லையா? அல்லது அவர்களின் வாழ்வில் காதல் என்ற அனுபவமே வருவதில்லையா? ஆண்கள் படிப்பில் குறைவாக பணத்தில் ஏழையாக இருக்கலாம். அவர்களை பெண்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். ஆனால் கோழைகளை பெண்கள் விரும்பவேண்டும் என்று ஆண்கள் எதிர்பார்கிறார்களே. இது எந்தவகையில் நியாயம்? . ஒரு ஆண் நிலையிலிருந்து இது பற்றி சிந்தித்தால் இதற்க்கு பதில் கிடைப்பது அரிது. ஒரு பெண்ணின் நிலையிலிருந்து யோசித்துப் பாருங்கள். அறிவுள்ள யாரும் ஒரு கோழையை விரும்புவதில்லை. பெண்களுக்கு அறிவு இருக்க கூடாதென்று எதிர்பார்கிறார்களா ஆண்கள்? பெண்ணுக்கு பாதுகாப்பு அவசியம். ஒரு பெண்ணை ஆணிடமிருந்து காப்பாற்ற இன்னொரு ஆணால் மட்டுமே முடியும். இந்த அடிப்படை விஷயத்தை மறந்துவிட்டு தனது பாதுகாப்பிற்கு உலை வைத்துக்கொல்லும்படியாக பெண்கள் கோழைகளை விரும்பமுடியுமா? பெண்கள் சிந்திக்க கூடாதா?.. ஆனால், அப்படி இருந்தும், கோழையை மணந்துகொண்டு வாழ்கை நடத்தும் பெண்களும் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அக்கோழைகளை வாழ்கையில் சோபிக்க செய்கிறார்கள் அவகளது துணைவியர். இவையெல்லாம் பெண்களை குறைசொல்லும் ஆண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

ஒரு ஆணிடம் ஏற்கனவெ எதாவது ஓர் திறமை இருந்திருக்கலாம். ஆனால் அவனுக்கு சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருந்து இருக்காது. எப்போது ஒரு பெண்ணை பார்கின்றானோ அப்போது அவளின் மனதை வெற்றிகொள்வதற்க்காக அவன் தனது முழு திறமைகளையும் உபயோகித்து வெற்றி அடைகின்றான் என்று ஆணின் சிறப்பு பேசுகிறார்கள். இந்த வாக்கியத்திலேயே இருக்கிறது அதற்கான பதில். விறகுக்கு எரியும் சக்தி இருந்தாலும் அதனை பற்றவைக்க ஒரு தீக்குச்சி தேவைபடுகிறது. இந்த சிறிய தீக்குச்சி இல்லையென்றால் அவவிறகினால் பயனுண்டா? அவ்விறகு என்னத்தை சாதித்துவிடமுடியும் என்று நினைக்கிறீர்கள்?. பெண் என்பவள் தீக்குச்சியாக இருந்து செயல்படுகிறாள் என்பதை ஆண்கள் இதிலிருந்தே புரிந்துகொள்ளவேண்டும்.

பெண் இருந்தால் அங்கு காதல் இருக்கும். காதல் இருந்தால் அதில் வெற்றியும் இருக்கும் தோல்வியும் இருக்கும். இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். காதல் தோல்விக்கு பெண்கள் மட்டும்தான் காரணமா? பெண்ணின் பெற்றோர்கள் காரணமாக இருக்கலாம், அல்லது அவளது சூழ்நிலை அவளது காதலை நிறைவேறாமல் பண்ணி இருக்கலாம். ஒரு ஆண் கண்ணீர் சிந்துகிறான் என்று இவ்வளவு கரிசனம் கொள்ளும் ஆண்கள், இதே காதல் தோல்வியால் கண்ணீர் வடிக்கும் பெண்களை பற்றி பேச மறுக்கிறார்களே ஏன்?. ஆண்களால் ஏமாற்றப்பட்டு தன் வாழ்வை இழந்து தெருவில் நிற்கும் பெண்களுக்கு இவர்கள் சொல்லும் பதில் என்ன? ஆண் வெளியில் சொல்லி அழுகிறான். அவனது வேதனை வெளியில் தெரிகிறது. வெளியில் சொல்லமுடியாமல் தன் சோகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி கண்ணீர் வடிக்கிறாளே பெண் , அந்த பாவத்தை யார் சுமப்பார்கள்? ஒரு ஆணாக இருந்து பெண்களை பற்றி பேசாதீர்கள்.. ஒரு பெண்ணாக இருந்து எண்ணிப்பாருங்கள்..அப்போது புரியும் அவர்களின் கஷ்டம் என்னவென்று.

தாயிற்சிறந்த கோவில் இல்லை
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதா பிதா குரு இம்மூவரும் தெய்வத்திற்கு சமம்
ஒரு குழந்தையின் முதல் ஆசான் அதன் தாய்
தாய் சொல்லை தட்டாதே
இல்லாள் அகத்திருக்க இல்லாததொன்ருமில்லை
மனைவி ஒரு மந்திரி
மனைவி சொல்லே மந்திரம்

என்று பெண் பெருமை பேசிவிட்டு ... அவள் துவைத்துக்கொடுத்த துணி உடுத்தி, அவள் செய்த உணவை சாப்பிட்டு ...இப்படி வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் ஏதாவது ஒரு பெண்ணை சார்ந்து இருந்து அவளின் அன்பு, வழிகாட்டுதல், உழைப்பு இவற்றை அனுபவித்துவிட்டு, இன்று வெற்றி வந்தவுடன் அது என்னவோ தன்னால் மட்டுமே நடந்தேறியது என்று மார்தட்டி கொண்டு இவ்வெற்றியில் பெண்களின் பங்கு ஒன்றுமே இல்லை என்று காட்ட முனைவது எந்தவகையில் நியாயம்?



மாதர் தம்மை இழிவுபடுத்தும்
மடமையை கொளுத்துவோம்
-- பாரதியார்

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 539w
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. KnGATES_wideweb__470x358,0
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 2008-9-22-1-35-46-31cb853e65a54d6380c8aaed35b83577-31cb853e65a54d6380c8aaed35b83577-2
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. LATHA
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by மீனு Thu Nov 12, 2009 1:08 pm

கார்த்திக் அருமையான கட்டுரை.. பெண்கள் இல்லையேல் இந்த ஆண்கள் மண் புழுக்கள் தான்.. பெண்களை பாராட்ட தெரியாது ,,எப்பவும் குறை தான் சொல்லுவார்கள்.. ஆண்கள் வெளியே வெற்றியின் மிதப்பில் இருப்பதுக்கு காரணம்.. பெண்கள் பெண்கள் பெண்கள் மட்டுமே


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by sathy Thu Nov 12, 2009 2:03 pm

Mr. Bala,

Excellent, Keep it up. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 678642 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 806360
avatar
sathy
பண்பாளர்


பதிவுகள் : 54
இணைந்தது : 10/02/2009

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Thu Nov 12, 2009 2:17 pm

நன்றி நன்றி நன்றி
என்னை பொறுத்தவரை God's best creature is human and masterpiece is women நன்றி


Last edited by balakarthik on Thu Aug 05, 2010 7:43 pm; edited 1 time in total
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by அபிராமிவேலூ Thu Nov 12, 2009 2:20 pm

balakarthik wrote:நன்றி நன்றி நன்றி
என்னை பொறுத்தவரை Gos's best creature is human and masterpiece is women நன்றி
இதை அப்படியே தமிழில் சொல்லுங்க அப்பதான் சில பேருக்கு புரியும்
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Thu Nov 12, 2009 2:34 pm

மாமியார் என்ற பெண்

மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என இருக்கிறேன்.

மாமியார் என்பவர் யார்?

மாமியார் என்பவர் ஒரு ஆணின் தாய்.இன்னொரு ஆணின் மனைவி.இந்த இரு வேலைகளையும் செய்து களைத்துபோய், உடல் இளைத்து,நலிந்துபோன ஒரு அடிமை.மருமகளாய் வீட்டுக்கு வந்து அடிமையாய் ரிடையர் ஆன ஒரு பெண்.தான் பெற்ற பிள்ளையை தானே வளர்க்க முன்வராத ஆண்வர்க்கத்தின் சார்பாக குழந்தையை வளர்க்கும் முழுநேர பொறுப்பையும் கையில் எடுத்துக்கொண்டு அந்த சுமை காரணமாக தனது கெரியரை இழந்தவர்.மன்னன் மனைவியானாலும் நம் நாட்டில் ஒரு பெண்ணுக்கும் நடுத்தெருவுக்கும் இடையில் நிற்பது ஒரு ஆண் மட்டுமே...அந்த ஆண் இல்லையென்றால் அந்த பெண் நடுதெருவில் தான் என்ர நிலையில் தான் நாம் நமது பெண்களை வைத்திருக்கிறோம்.அந்த விதியின் கீழ் தாய்,மனைவி என்ற இருசுமைகளை சுமந்து பணிசெய்து இளைத்து, குடும்பத்தின் முதல் அடிமை மாமியார்.

மருமகள் என்பவர் யார்?

மாமியார் எனும் அடிமை ரிடையர் ஆனதால் அவரது பணிகளை செய்ய புது அடிமை தேவைப்படுகிறது.அதனால் கல்யாண சந்தையில் பேரம் பேசி மருமகள் என்ற இன்னொரு அடிமையை கொண்டுவருகின்றனர் ஆண்கள்.மருமகள் என்பவர் ஒரு குடும்பத்தில் மாமியரை ரீப்ளேஸ் செய்யும் அடிமை.

மாமியார் என்பது கவுரவத்துக்குரிய பட்டமா?

ஜெயிலில் சீனியர் கைதிகளை கன்விக்ட் வார்டர் என்ற பதவி கொடுத்து ஜூனியர் கைதிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.அந்த பொறுப்புக்கு பரிசாக அந்த கன்விக்ட் வார்டருக்கு கிடைக்கும் சலுகைகள் கால் காசுக்கு பெறாத கான்விக்ட் வார்டர் என்ற பட்டம்.மற்ற கைதிகளை விட நல்ல உணவு.நல்ல ஜெயில் அறை.சூபரெண்டிடம் மதிப்பு...இதுமாதிரி அலங்கார பட்டம் தான் மாமியார் என்ற பட்டமும்.குடும்பத்துக்கு வந்த ஜூனியர் அடிமைகளை மேற்பார்வை செய்யும் சீனியர் அடிமை மாமியார்.

மாமியார் மருமகள் சண்டை ஏன்?

ஆங்கிலத்தில் zero sum game என்று சொல்வார்கள்..மாமியாரின் நலன் மருமகளை ஒடுக்குவதில் தான் இருக்கிறது என்பது போல் ஆக்கப்பட்டதால் மாமியார்,மருமகள் இருவரும் கிடைக்கும் கால்காசு அதிகாரத்துக்கும்,அந்தஸ்துக்கும் போட்டியிட வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.கோழிப்பண்னையில் கோழிகளை கூண்டில் அடைத்துவிட்டு உணவை வீசினால் கோழிகள் உணவுக்காக அடித்துக்கொள்ளத்தான் செய்யும்.இல்லத்திலும் நிலைமை அதுதான்.

மாமியாரும், மருமகளும் ஒரே குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட இரு பெண்கள்.அந்த முறையில் அவர்களுக்கிடையே இரு பெண்களுக்கிடையே நிலவும் இயல்பான சகோதரபாசம் மறைந்து அவர்கள் எதிரிகளானதற்கான காரணம் முழுக்க இந்த ஆணாதிக்க சமூகத்தின் வடிவமைப்பாலேயே நிகழ்ந்தது.

கணவனின் வயதான பெற்றோரை பார்த்துக்கொள்வது மருமகளின் கடமை ஆகாதா?

இல்லை.ஆணாதிக்க உலகில் பெண்களிடம் சுமத்தப்ப்டும் இப்படிப்பட்ட மருமகள் கடமை, தாயின் கடமை ஆகிய அனைத்தும் ஆண்கள் தமது பொறுப்பை தட்டிகழித்துவிட்டு பெண்களை அடிமைப்படுத்த செய்யும் சூழ்ச்சியே ஆகும்.தனது குழந்தையை தான் கவனிக்கும் கடமையை தட்டிகழித்து மனைவியின் தலையில் அதை கட்ட தாய்மை என்ற பொறுப்பு பெண்களின் தலையில் கட்டப்படுகிறது.அதேபோல் தனது பெற்றோரை தான் தான் கவனித்துகொள்லவேண்டும் என்ற ஆணின் கடமை மனைவியின் தலையில் கட்ட மருமகள் என்ற இன்னொரு கடமை பெண்ணின் தலையில் கட்டப்படுகிறது.

இப்படி ஆணின் வேலையை பெண் செய்வதால் அவளது career அழிந்து ஆணை சார்ந்திருக்க வேண்டியவளாகிறாள்.இத்தகைய சார்ந்திருத்தல் ஆணின் பலத்தை அதிகரித்து பெண்ணை நிரந்தர அடிமையாக்குகிறது.

இதற்கான தீர்வு என்ன?

பெண்னை பெண்ணாக வளர்ப்பதும், ஆணை ஆணாக வளர்ப்பதும் ஒழியவேண்டும்.ஆண் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுதரவேண்டும்.வீட்டுவேலைகள் அனைத்தும் செய்ய அவர்கள் பழக்கப்படுத்தப்படவேண்டும்.பெண் குழந்தைகளை மட்டும் இதை செய்ய வைத்துவிட்டு ஆண்குழந்தைகளை கிரிக்கட் ஆட அனுப்பும் போக்கு ஒழியவேண்டும்.

ஆணாதிக்கம் ஒழிய பெண் ஆணைப்போல் வேலை,கெரியர் என்ற கண்ணோட்டத்தில் வளர்க்கப்டுவதும், ஆண்கள் பெண்களைபோல் குடும்ப பொறுப்பை ஏற்று நடத்தும் விதத்திலும் வலர்க்கபடவேண்டியது முக்கியமாகிறது.தனது வீட்டின் வேலைகள் எதுவாக இருந்தாலும் அதை கணவனும், மனைவியும் பக்ரிந்து செய்யவேண்டும்.துணி துவைப்பது,பாத்திரம் கழுவுவது ஆகியவை அசிங்கமல்ல,ஆண்மைக்கு இழுக்கல்ல என்பதை ஆண்கள் உணரவேண்டும்.அடிமைகளை மேலும், மேலும் உருவாக்கும் கூட்டுகுடும்பமுறை ஒழிந்து காதல்மணங்களும், தனிகுடித்தனங்களும் பெருகவேண்டும்.

குறிப்பு:- இவை எல்லாம் இந்த ஜென்மத்தில் நடக்காது என்பது யதார்த்தம் என்றாலும் ஒரு விஷயம் இருக்கவேண்டியது இப்படித்தான் என்பதையாவது உலகம் அறிந்தால் நன்று
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by sham Thu Nov 12, 2009 3:02 pm

good
sham
sham
பண்பாளர்


பதிவுகள் : 100
இணைந்தது : 11/11/2009

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by தாமு Thu Nov 12, 2009 4:28 pm

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 677196 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 677196 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 677196 ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by balakarthik Thu Aug 05, 2010 7:13 pm

இன்றைய மக்கள் அறியாமையாலும், வறுமையினாலும், பல்வேறு பொருளாதார சிக்கல்களாலும் பெண்ணின் பெருமையை அறியாமல் இருக்கிறார்கள்.

பெண்குலமே!
உலக மக்கள் வறுமையாலும், பல்வேறு கஷ்டங்களாலும் சூழ்ந்திருப்பது நீங்கள் அறியாததா? தாய்மைக்குதான் எல்லாமே எளிமையாக புரியுமே.

இந்திய தேசிய நதிகளை இணைத்து வளமடைந்தால்தான் வளமான பாரதம் அமையும். உலகம் அமைதி பெறும். நீங்கள் சக்தியின் அவதாரம்தானே! தேசிய நதிகளை இணைக்க நீீங்கள் குரல் கொடுத்தால் சும்மா அதிருமில்ல! பெண்களால் உலக சரித்திரம் திருத்தி எழுதுவதற்கு இதுவே சரியான தருணம்.
உலக மக்கள் தொகையில் சரி பாதி பெண்களாகும். மற்ற பாதிதான் ஆண்கள். சரி பாதியான ஆண்கள் அனைவரையும் பெற்று, வளர்த்து, ஒவ்வொருவருடைய வாழ்விலும் பாதுகாப்பாகவும், பராமரிப்பவர்களாகவும் உள்ளவர்கள் பெண்மணிகளேயாகும்.

"எல்லையற்ற ஆற்றலுள்ள இறைவன் திருவுள்ளமென்ன? எவ்வுயிரும் தோன்றுவதற்கு ஏற்றதொரு திருவழியாய் வல்லமையாய்ப் பெண்ணினத்தை வடிவமைத்தான் அற்புதமே வாழுகின்ற மக்களில் இவ்வளம் அறிந்தோர் எத்தனை பேர்?"

பெண்களுக்கு 'தையலர்' என்ற ஒரு மதிப்புச் சொல்லும் இருக்கிறது. தையல் என்றால் இணைப்பு என்ற பொருள். குடும்பங்கள் பலவற்றையும் ஒன்றோடு மற்றதை இணைத்து, உலகம் முழுவதையும் ஒரே கோவையாக செய்திருக்கும் அருளாற்றல் பெண்ணினத்திற்கே உரியதாகும். இத்தகைய தெய்வீக இணைப்பை வாழ்வில் இயல்பாக கொண்டுள்ள பெண்ணினத்தைத் தையலர் என்று கூறுவது எவ்வளவு ஆராய்ச்சியும் அறிவுடைமையுமாகும் என்று கவனிக்க வேண்டும்.

மேலும், திருப்பாவை என்ற ஒரு நூலில் பெண்களைப் பற்றி ஒரு உவமைப் கூறப்பட்டுள்ளது. அது 'நேரிழையாள்' என்பதாகும். ஒரு துணியை நெய்ய வேண்டுமானால் நேரிழைகள் என்னும் பாவு முதலாவதாக வேண்டும். அந்த நேரிழைகளின் குறுக்கே செலுத்தப்படும் நூலிழைக்கு, 'ஊடு இழை' என்று பெயர். நேரிழை இல்லாமல் ஊடு இழைக்கு என்ன பெருமையுண்டு? நேரிழையை வைத்துத்தான் ஊடு இழையைச் செலுத்தி, எந்த ஆடையும் உற்பத்தி செய்கிறார்கள். ஆகவே, ஆடையில் முதற்பொருளாக இருப்பது நேரிழை.

அதேபோல உலகம் முழுவதும் மக்கள் குலத்தில் நேரிழையாக இருப்பவர்கள் பெண்மணிகள். அவர்களை முன் வைத்து ஊடு இழைகளாக விளங்குபவர்கள்தான் ஆண் மக்கள். எவ்வளவு ஆராய்ச்சியோடு திருப்பாவை என்ற பாசுரத்தில் இந்த உண்மை விளக்கப்பட்டிருக்கிறது என்று அறியும்போது பெண்களைப் பற்றி, நமது அன்னைகளாகவும், சகோதரிகளாகவும், குடும்பத்தைக் காப்பவர்களாகவும் பெண்மக்கள் ஆற்றும் தொண்டு எவ்வளவு சிறந்தது என்று விளங்கிக் கொள்கிறோம்.

சங்க கால பெண்கள்

சங்க காலத்தில் பெண்கல்வி ஓங்கிய நிலையில் இருந்திருக்கின்றது. சங்கப் புலவர்களில் பெண்பாற் புலவர்கள் பலர் இருந்திருக்கின்றனர். ஒளவையார், பெருங்கோப்பெண்டு போன்ற புலவர்கள் இதில் அடங்குவர். காப்பிய காலத்தில் கண்ணகி பிறந்த இடத்தை விட்டு வெளியேறி வேற்று ஊருக்குச் சென்று மன்னனுடன் வாதாடும் அளவுக்குத் திறன் பெற்றிருக்கிறாள்.


ஈகரை தமிழ் களஞ்சியம் ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by gunashan Thu Aug 05, 2010 7:21 pm

அசத்துறைங்க பாலா..........எங்க பின்னாலயும் எங்க
பொம்மனாட்டிங்க இருக்காங்க.........
பொம்மனாட்டி சொல்ல கேட்டா, ஆம்படையான் மன்னன்...கேக்குலேனா பொன்னன்........ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்…. Empty Re: ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும்….

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum