ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

3 posters

Go down

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் Empty சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Post by சரவணன் Sat May 23, 2015 10:35 am

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் BZclKz9NSVqGP7puqE20+mayandi_2412675g

தெளிவு குருவின் திருமேனி கண்டல்

தெளிவு குருவின் திருநாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே

நம்முடைய ஆன்மிகத் தேடலுக்கும் அடைய விரும்பும் பேரின்பத்துக்கும் நல்ல குரு ஒருவரே வழிகாட்ட முடியும் . ஒரு குருவை நாம் தேடிக் கண்டடையும் போது அவரின் திருமேனியைத் தரிசிப்பதும் அவருடைய திருநாமத்தைச் சொல்லுவதும் அவருடைய உபதேசத்தைக் கேட்பதும் அவருடைய திருவுருவை நம் மனதில் வைத்துத் தியானிப்பதும் ஞானத்தை அளிக்கும். நமக்கு நல்ல கொடுப்பினை இருந்தால் சிவனே குருவாக வந்து நமக்கு மெய்யுணர்வை அளிக்கிறார் என்று திருமூலர் கூறுகிறார் .

அதனால்தானோ என்னவோ சிவனாகவே மாறிவிட்ட மாயாண்டி சுவாமிகள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக’ என்று ஒரு நல்ல குருவாக இருந்து பல சித்தர்களை உருவாக்கியிருக்கிறார் .

சிறுவனைச் சுற்றிய நாகம்

மதுரையிலிருந்து மானாமதுரை செல்லும் வழியில் இருக்கும் திருப்பாச்சேத்தியிலிருந்து தெற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கட்டிக்குளம் . அங்கு குப்பமுத்து வேளாளர், கூத்தாயி அம்மாள் ஆகியோரின் மகனாக காளயுக்தி வருடம் ஆடி மாதம் பூராட நட்சத்திரத்தில் (1855 ஜூலையில்) மாயாண்டி சுவாமிகள் அவதரித்தார் . சிறு வயது முதலே ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

கட்டிக்குளத்தில் உள்ள அய்யனார் கோயிலின் பூசாரியாக இருந்த குப்பமுத்து வேளாளர் ஒரு நாள் தம் மகன் மாயாண்டியையும் பூசை செய்வதற்காக அழைத்துச் சென்றார் . வெளிக்கூடத்தில் மகனை உட்காரவைத்துவிட்டு உள்ளே சென்று பூசைகளைச் செய்துவிட்டுத் திரும்பியவர் அதிர்ச்சியடைந்தார் .

குத்துக்காலிட்டு மகன் தியானம் செய்துகொண்டிருப்பதையும் அவனுடைய உடலை நாகம் ஒன்று சுற்றிக்கொண்டு தலையின் மீது படம் எடுத்து நிற்பதையும் கண்டார் . “அய்யனாரப்பா என் மகனைக் காப்பாற்று” என்று குரல் எழுப்ப அந்தப் பாம்பு சட்டென்று மறைந்துவிட்டது. அதைக் கண்ட அவர் தம் மகன் சாதாரணப் பிறவியல்ல என்று உணர்ந்து கொண்டார்.

சிறு வயதில் மாயாண்டி சுவாமிகள், சித்தர் பாடல்களைத் தேடித் தேடிப் படிப்பதையும் அடிக்கடி ஆலய யாத்திரைகள் சென்று வருவதையும் கண்டு அச்சமுற்ற பெற்றோர் அவருக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் அவரது ஆன்மிகத் தேடல் குறையவில்லை. அவர் தமது தேடல்களுக்குச் சரியான வழிகாட்டும் குரு ஒருவரைத் தேடியலைந்தார். இறைவன் அதற்கும் வழிகாட்டினான்.

குரு செல்லப்ப சுவாமிகள்

மன்னார்குடியைச் சேர்ந்த சூட்டுக்கோல் ராமலிங்க சுவாமிகளின் சீடரான செல்லப்ப சுவாமிகள் இராமேசுவர யாத்திரை செல்லும் வழியில் கட்டிக்குளத்துக்கு வந்திருந்தார். அவரைச் சந்தித்த மாயாண்டி சுவாமிகள் அவரிடம் தம் விருப்பத்தைக் கூறியதும் உடனே அவருக்குத் தீட்சையளித்தார். அந்த நிமிடமே அனைத்தையும் துறந்த மாயாண்டி சுவாமிகள் கட்டிய கோவணத்துடன் வீட்டை விட்டுப் புறப்பட்டார்.

பல புனித ஸ்தலங்களுக்குச் சென்று யோக சமாதியில் ஆழ்ந்த அவர் இறுதியாகத் திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலைக்கு வந்து சேர்ந்தார்.(இன்றைக்கும் காகபுஜண்டர் அந்த மலையில் யோக சாமதியில் இருப்பதாகக் கூறப்படுகிறது). அந்த மலையில் அரூபமாக இருக்கும் சித்தர்கள் அவரை வரவேற்று, இங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடும்படி அருளாசி கூறினர் . அதன்படி மாயாண்டி சுவாமிகள் அங்கிருக்கும் குகை ஒன்றில் லிங்கம் ஒன்றைப் பிரிதிஷ்டை செய்து யோக சமாதியில் ஆழ்ந்து அட்டமாசித்திகளையும் பெற்றார் .

ஆசிர்வாதமும் வழிநடத்தலும்

ஒருநாள் சுவாமிகள் மதுரைக்கு அருகே ஒரு சிறு கிராமத்தில் வசித்த பிராமணத்துக் தம்பதியினரின் இல்லத்திற்குள் திடீரென நுழைந்தார் . அத்தம்பதியினரிடம், “உங்களுக்குப் பத்தாவதாக ஒரு பிள்ளை பிறக்கப்போகிறது . அதற்குச் சுப்பிரமணி என்று பெயர் வை .

ஆனால் அவன் சில காலம் மட்டும் உங்களுடன் இருப்பான் . பின்னர் அவனை இந்த உலகமே கொண்டாடும்” என்று ஆசி வழங்கினார் . அதன்படி பிறந்த சுப்பிரமணி தான் பின்னர் சுவாமிகளிடம் தீட்சை பெற்று ‘சாந்தானந்த சுவாமிகள்’ ஆனார். சேலம் புதுக்கோட்டை போன்ற இடங்களில் உள்ள ‘ஸ்கந்தாஸ்ரமம்’ அமைத்துப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்தார் .

ஒருமுறை சுவாமிகள் நாகப்பட்டினம் சென்றிருந்தார். சுவாமிகளைத் தரிசித்துத் திருநீறு பெறுவதற்காகப் பெரும் கூட்டம் கூடியிருந்தது . அப்போது ஒரு சிறுவன் திருநீறு வாங்குவதற்காக நீட்டிய கையைத் தொட்டதும் சுவாமிகள் மகிழ்ச்சியுடன் “நீ யோகக்காரனப்பா! உன் பேச்சைக் கேட்கப் பணத்தைக் கொட்டிக் கொடுப்பார்கள் .

அதனைக் கொண்டு ஏராளமான ஆலயங்களுக்குத் திருப்பணிகள் செய்யும் யோகமும் உனக்கு இருக்கிறது” என்று கூறி ஆசிர்வதித்தார் . அந்தச் சிறுவன்தான் பின்னாளில் திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் எனப் புகழ் பெற்றார் . சுவாமிகள் கூறியபடி சுமார் நாற்பது திருத்தலங்களுக்குத் திருப்பணிகளும் செய்தார் .

சுவாமிகளின் நெருங்கிய சீடரான இருளப்பக் கோனார் சுவாமிகளின் அறிவுரையின்படி திருக்கூடல் மலையில், தண்டாயுதபாணியின் சொரூபத்தைப் பிரதிஷ்டை செய்தார். இப்போது அங்கு பெரும் ஆலயம் ஒன்று எழுப்பப்பட்டிருக்கிறது. சுவாமிகளிடம் தீட்சை பெற்றுச் சீடர்கள் பலர் சித்தரானார்கள். கற்றங்குடி ரெட்டி சுவாமிகள், மூக்கையா சுவாமிகள், கச்சைகட்டி சுவாமிகள், வேலம்மாள், முத்துமாணிக்கம் சுவாமிகள், சோமப்பா சுவாமிகள், சாந்தானந்த சுவாமிகள் ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள் .

சட்டையைக் கழற்றிவிடலாமா?

நீரின் மீது நடந்தது தண்ணீரில் விளக் கேற்றியது போன்ற பல சித்துக்களைச் செய்த மாயாண்டி சுவாமிகள் 1928-ம் ஆண்டு புரட்டாசி மாதம் ஆறாம் தேதி, தமது பக்தர்களிடம் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அடக்கம் ஏற்படும் என்று தெரிவித்தார் . அடக்கம் செய்ய வேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அங்கே சமாதிக் குழியும் வெட்டச் செய்தார் .

சுவாமிகள் கூறியபடி 1930-ம் ஆண்டு புரட்டாசி மாதம் 11-ம் தேதி இரவு இருளப்பக் கோனாரின் இடது தோளில் சாய்ந்து “அப்பு இந்தச் சட்டையைக் கழற்றிவிடலாமா?” என்று கேட்டுவிட்டுச் சமாதியானார் . சமாதிக் குழிக்குள் சுவாமிகளின் பூத உடலை வைக்கும்போது அவரது ஜீவநாடி ஓடிக்கொண்டிருந்ததாம் . சுவாமிகளின் விருப்பப்படி அவரது சமாதிப் பீடத்தில் சுவாமிகள் பூசித்துவந்த விநாயகரின் சொரூபம் பிரதிஷ்டை செய்யப்பட்டது .

திருக்கூடல் மலை என்ற காகபுஜண்டர் மலையில் காகபுஜண்டர் இன்றும் அரூபமாக யோக சமாதியில் இருக்கின்றார் என்றும் அங்கு பல சித்தர்கள் அரூபமாக வாழ்ந்துவருவதாகவும் கூறப்படுகிறது . இப்படிப்பட்ட புனிதமான அந்த மலையின் அடிவாரத்தில் மாயாண்டி சுவாமிகள் ஜீவசமாதியடைந்து அதனை மேலும் புனிதமாக்கியிருக்கிறார்.

நன்றி: எஸ்.ஆர்.விவேகானந்தம் - தமிழ் ஹிந்து நாளிதழ்


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் Empty Re: சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Post by விமந்தனி Sat May 23, 2015 11:18 am

நல்ல பகிர்வு. சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் 3838410834


சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் Empty Re: சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Post by T.N.Balasubramanian Sat May 23, 2015 12:48 pm

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் 3838410834 சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் 103459460 சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் 1571444738

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள் Empty Re: சித்தர்கள் அறிவோம்: சித்தர்களை உருவாக்கிய சித்தர்- கட்டிக்குளம் சூட்டுக்கோல் ஸ்ரீ மாயாண்டி சுவாமிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அருள்மிகு ஸ்ரீ மனோன்மனி அம்பாள் தேவஸ்தானம் ஸ்ரீ ஜய வருட பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2
» சிதம்பரம் - ஸ்ரீ மூலநாதருக்கும் ஸ்ரீ உமயபார்வதி அம்பாளுக்கும் நடைபெற இருக்கும் கும்பாபிஷேகம்
» ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் புண்ய தினம்
» திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள்
» ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பெரியவாளின் மகிமை ! - “பேசும் தெய்வம்”

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum