ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Poll_c10அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Poll_m10அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவா Wed May 13, 2015 10:18 pm


புதுடெல்லி: அரசு விளம்பரங்களில் பிரதமரை தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சித் தலைவர் புகைப்படத்தையும் வெளியிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தலைமையிலான தன்னார்வ தொண்டு நிறுவனம் உள்ளிட்ட சில தொண்டு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், பொதுமக்களின் வரிபணத்திலிருந்து அரசியல் ஆதாயத்திற்காக அரசியல் தலைவர்களின் புகைப்படம் இடம்பெறுவதாகவும், எனவே பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதை தடுக்கும் வகையில் இது தொடர்பாக விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இம்மனுக்கள் மீது இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, "அரசாங்கத்தாலும், அரசு அங்கங்களாலும் அளிக்கப்படும் விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் புகைப்படம் பிரசுரிக்கப்படக் கூடாது. அவ்வாறு அரசியல் தலைவர்கள் புகைப்படத்தை பயன்படுத்துவது தனிநபர் போற்றுதலுக்கு வழிவகுக்கும். இது ஜனநாயகத்துக்கு விரோதமானது. எனவே இத்தகைய பழக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்கிறது.

இருப்பினும், தேசத் தந்தை மகாத்மா காந்தி, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை" என கூறியுள்ளது.

முதலமைச்சர்கள், கவர்னர்கள் படங்கள் இடம்பெற முடியாது

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவினால், இனிமேல் மாநில அரசு விளம்பரங்களில் முதலமைச்சர்கள் மற்றும் கவர்னர்கள் படங்களை இடம்பெறச் செய்ய முடியாது. இதனை கண்காணிக்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட கமிட்டி ஒன்றையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.

முன்னதாக இவ்வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தபோது, பொதுமக்களுடன் அரசாங்கம் எப்படி தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விஷயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது என மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டம் சாதாரண முதல்வருகளுக்கு மட்டுமே, எங்கள் புடம் போட்ட தங்கத்திற்குப் பொருந்தாது என்பதை இங்கே கூறிக்கொள்ள விரும்புகிறேன்!


அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சரவணன் Wed May 13, 2015 10:20 pm

சபாஷ், சரியான தீர்ப்பு.

அப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....?


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவா Wed May 13, 2015 10:25 pm

சரவணன் wrote:சபாஷ், சரியான தீர்ப்பு.

அப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....?


மத்திய அரசின் விளம்பரம் வேறு, மாநில அரசின் விளம்பரம் வேறு என்று புது கொள்கை வகுப்பார்கள்! அதற்கும் உடன்படவில்லையென்றால் தமிழ்நாட்டைத் தனி நாடாக அறிவித்து இவர்கள் புகைப்படங்களை வெளியிடுவார்கள்!

எவன் எக்கேடு கெட்டாலும், இவர்களின் புகைப்படம் அனைத்திலும் நீக்கமற நிறைந்திருக்க வேண்டும்! அதுதான் அவர்களுக்கும், அவர்களின் அடிமைகளுக்கும் முக்கியம்!


அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சரவணன் Wed May 13, 2015 10:30 pm

sஅரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! 2Q==

செஞ்சாலும் செய்வாங்க. நாட்டை பத்தி கவலை இவங்களுக்கு இல்லையே~


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவா Thu May 14, 2015 2:05 am

அரசு விளம்பரம் குறித்த வழக்கில் தீர்ப்பு: விஜயகாந்த் வரவேற்பு

தே.மு.தி.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசு விளம்பரங்களில் அரசியல் ஆதாயத்திற்காக மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்தியாவின் உச்சநீதிமன்றம் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களின் படங்களை வெளியிட தடைவிதித்துள்ளது. பிரசாந்த் பூஷண் பொதுநலன் கருதி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம், இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

அரசு விளம்பரங்களை ஒழுங்குபடுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளிடம் ஏற்கனவே மத்திய அரசு ஆலோசனை கேட்டபோது தே.மு.தி.க. இந்த கருத்தை வலியுறுத்தியது. அதை இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பாகவே தந்துள்ளதை தே.மு.தி.க. சார்பில் நான் வரவேற்கிறேன்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவினை தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக அமல்படுத்தவேண்டும். கடந்த ஜனவரி 7-ந்தேதி கோவையில் நடந்த தே.மு.தி.க. பொதுக்குழுவில் இதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியும், தமிழக அரசு இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அதற்கு வலுசேர்க்கும் வகையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவனாசான் Thu May 14, 2015 5:26 am

ஏன் நாட்டில் ஜனாதிபதியே ஆட்சிசெய்தால் இவ்வாரான எந்த நிகழ்வுகளும் வீண் செலவுகளும் ஏற்படாது.....எல்லோரும் அரசுஊழியர்களை சட்டப்படி செய்கிறார்களாஎன கண்காணிப்பர் .... கட்சி அதிகாரம் கோலோச்சாது........கஜானா காலியாகாது மாதம்மும்மாரி.......மழையும்பெய்யும்...............ஏற்பார்களா...சுயநல வாதிகள்........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by krishnaamma Thu May 14, 2015 12:09 pm

சரவணன் wrote:சபாஷ், சரியான தீர்ப்பு.

அப்படி போடு அருவாளை. இனி கலைஞர், ஜெயா நிலைமை....?
மேற்கோள் செய்த பதிவு: 1136549

இந்தத் தீர்ப்பெல்லம்  இவங்களுக்கு பொருந்தாது சரவணன் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by T.N.Balasubramanian Thu May 14, 2015 1:04 pm

அரசு விளம்பரம் குறித்த வழக்கில் தீர்ப்பு: விஜயகாந்த் வரவேற்பு

புரிஞ்சுடுத்தா ? எப்பிடி முக்கினாலும் முதல் அமைச்சர் ஆகமுடியாது என்று.!
வரவேற்பை பார்த்தால் அப்பிடிதான் தெரிகிறது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவா Thu May 14, 2015 3:31 pm

அரசு விளம்பரங்களில் முதல்வர் படத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை: கருணாநிதி கடும் எதிர்ப்பு

அரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் கட்சித் தலைவர்கள் படங்களை வெளியிட தடை விதித்திருப்பது மாநில உரிமைகளை பறிக்கின்ற செயலாகும் என்று திமுக தலைவர் கருணாநிதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நாளிதழ்கள், தொலைக்காட்சிகள் உட்பட ஊடகங்களில் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம் பெற வேண்டும்; முதலமைச்சர் உட்பட மற்ற அரசியல் கட்சித் தலைவர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அரசு சார்பில் செய்யப்படுகின்ற விளம்பரங்களில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் படங்களையும், குடியரசுத் தலைவரின் படங்களையும் வெளியிடலாம், மாநில முதலமைச்சர்களின் படங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தீர்ப்பு மாநில உரிமைகளையெல்லாம் பறிக்கின்ற செயலாகும்.

இந்திய அரசியல் சட்டத்தின்படி, கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்தியப் பிரதமருக்கும், மாநில முதல் அமைச்சர்களுக்கும் சமமான அந்தஸ்து தான்.

இன்னும் சொல்லப் போனால் மாநிலங்களிலே பிரதமரை விட அந்தந்த மாநில முதல் அமைச்சர்களுக்குத் தான் பொது மக்கள் முக்கியத்துவம் தருகிறார்கள்.

பிரதமரும் பெரும்பான்மை அரசியல் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்படுவர் தான். அதைப் போலவே குடியரசுத் தலைவரும் அரசியல் கட்சியின் ஆதரவைப் பெற்றவர் தான். மாநிலங்களில் பெரும்பான்மை அரசியல் கட்சியின் ஆதரவோடு தான் முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

எனவே அரசு விளம்பரங்களில் பிரதமர், குடியரசு தலைவர் படங்கள் இடம்பெறுவதற்கு என்ன அடிப்படைக் காரணங்கள் உண்டோ, அவை அனைத்தும் மாநில முதல்வரின் படம் இடம் பெற வேண்டும் என்பதற்கும் உண்டு.

கல்வியறிவு படைத்த மக்கள் குறைவாக உள்ள இந்தியா போன்ற நாட்டில், பக்கம் பக்கமாக வார்த்தைகளைக் கொட்டி விளக்குவதைக் காட்டிலும் உருவப்படம் ஒன்றை வெளியிட்டு, சுருக்கமான வாசகங்களை வெளியிடுவதன் வாயிலாகவே விளம்பரத்தின் நோக்கத்தினை மக்கள் புரிந்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இந்திய ஜனநாயகத்தில் மத்திய நிர்வாகத்தின் உருவகமாக பிரதமரையும், மாநில நிர்வாகத்தின் உருவகமாக முதல்வரையும் முன்னிலைப்படுத்துவது நீண்ட காலமாக நடைமுறையில் இருந்து வருவது மட்டுமல்லாமல், இந்திய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமாகும்.

எனவே அரசு விளம்பரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்களின் படங்கள் இடம் பெறுவது தவிர்க்க முடியாதது என்பது தான் என்னுடைய கருத்தாகும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by சிவா Thu May 14, 2015 3:32 pm

அரசு விளம்பரங்கள்: அரசு திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு விளம்பரங்களில் முதல்வர், அரசியல் தலைவர்கள் படத்தை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்திருக்கும் தடை அரசு திட்டங்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய, மாநில அரசு சார்பில் வழங்கப்படும் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு வரவேற்கத் தக்கதாகும்.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், மக்கள் வரிப்பணத்தில் வெளியிடப்படும் ஊடக விளம்பரங்கள் ஆளுங்கட்சியின் புகழ்பாடும் வகையிலும், பிரச்சாரம் செய்யும் வகையிலும் தான் அமைகின்றன. ஆளுங்கட்சிகள் தங்களின் இல்லாத பெருமைகளை அரசு செலவில் பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகவே அரசு விளம்பரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக பெருகி வந்த இந்தக் கலாச்சாரம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் சரியான நேரத்தில் தலையிட்டு ஆளுங்கட்சிகளின் விளம்பர மோகத்துக்கு கடிவாளம் போட்டிருப்பது பாராட்டத்தக்கது.

ஒரு குறிப்பிட்ட திட்டம் குறித்த அரசு விளம்பரங்களில் ஆளுங்கட்சித் தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறும் போது, அத்திட்டத்தையே சம்பந்தப்பட்ட தலைவர் தான் உருவாக்கியது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

இது தனிநபர் துதிபாடும் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி.ரமணா ஆகியோர் கூறியிருக்கும் கருத்துக்கள் தமிழ்நாட்டுக்கு முழுமையாகப் பொருந்தக் கூடியவை ஆகும்.

ஒரு கட்சி ஆட்சிப் பொறுப்பேற்றால் 5 ஆண்டுகளுக்கு மக்கள் பணியாற்ற வேண்டும் என்பது தான் அரசியலமைப்புச் சட்டம் காட்டும் வழியாகும். இந்தப் பணியை பொறுப்புடைமையுடன் மேற்கொள்ள வேண்டியது ஆளுங்கட்சியின் கடமை ஆகும்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்ததும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களில் படங்களை பெரிய அளவில் போட்டு, மக்கள் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்து அந்த ஆண்டில் செயல்படுத்தப்பட்ட அனைத்து திட்டங்களுமே அவர்களின் சொந்தப் பணத்தில் செய்யப்பட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்வது தொடர்கதையாகிவிட்டது.

அதுமட்டுமின்றி, ஊடகங்களுக்கு அதிக அளவில் விளம்பரங்களைத் தருவதன் மூலம் அவற்றை தங்களின் கைப்பாவையாக மாற்றும் செயலும் தமிழகத்தில் அதிகரித்து விட்டது. இது ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும்.

தமிழ்நாட்டில் விளம்பரங்கள் மூலம் பிரச்சாரம் செய்வதைவிட அரசுத் திட்டங்களின் மூலம் தங்கள் புகழ் பாடிக்கொள்வதையே ஆளுங்கட்சிகள் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன.

ஒரு கட்சி ஆட்சி செய்யும் போது அக்கட்சித் தலைவர் பெயரில் திட்டங்கள் தொடங்கப்படுவதும், அந்தக் கட்சி ஆட்சி முடிந்து வேறு கட்சி ஆட்சிக்கு வரும் போது அனைத்து திட்டங்களின் பெயர்களும் மாற்றப்படுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.

கடந்த ஆட்சியில் அப்போதைய முதல்வரின் பெயரில் செயல்படுத்தப்பட்ட பல திட்டங்கள் ஆட்சி மாறியதும் புதிய முதல்வரின் பெயருக்கு மாற்றப்பட்டதும், பல்வேறு புதியத் திட்டங்கள் அப்போது முதலமைச்சராக இருந்தவரைக் குறிக்கும் வகையிலான பொதுப் பெயரில் தொடங்கி நடத்தப்படுவதும் அனைவரும் அறிந்தது தான்.

ஆட்சியைப் பிடிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தங்களின் விளம்பர மோகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காக மக்களின் பணத்தில் விளம்பரம் தருவதையோ, திட்டங்களைத் தொடங்கி நடத்துவதையோ இனியும் அனுமதிக்கக் கூடாது.

இதைக் கருத்தில் கொண்டு அரசு விளம்பரங்கள் தொடர்பாக இந்திய உச்சநீதிமன்றம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் அனைத்தும் முழுமையாக கடைபிடிக்கப்படுவதை மத்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்.

அதுமட்டுமின்றி, அரசு விளம்பரங்களுக்காக விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் அரசு திட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அரசு செலவில் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திற்கும் தனி நபர்களின் பெயர்களையோ அல்லது அவர்களைக் குறிக்கும் பெயர்களையோ சூட்டக்கூடாது.

ஏற்கனவே அவ்வாறு பெயர்கள் சூட்டப்பட்டிருந்தால் அந்தப் பெயர்களை நீக்கிவிட்டு அனைத்துத் திட்டங்களும் அரசுத் திட்டங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதற்காக உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேவையான விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.


அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை! Empty Re: அரசு விளம்பரங்களில் அரசியல் தலைவர்கள் புகைப்படத்துக்கு தடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum