ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

+6
சிங்கம்
பாலாஜி
krishnaamma
விமந்தனி
T.N.Balasubramanian
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by சிவா Fri May 01, 2015 9:59 pm


நடிகர் : கமல்
நடிகை : பூஜா குமார்
இயக்குனர் : ரமேஷ் அரவிந்த்
இசை : ஜிப்ரான்
ஓளிப்பதிவு : ஷாம்தத்


கமலஹாசன் ஒரு மிகப்பெரிய நடிகர். இவர் தனது மனைவி ஊர்வசி, மகன் மற்றும் மாமனார் விஸ்வநாத்துடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். கமலுக்கும் அவரது குடும்ப டாக்டரான ஆண்ட்ரியாவுக்கும் நெருக்கமான உறவு இருந்து வருகிறது. இந்நிலையில், கமல் நடித்து முடித்த ஒரு படத்துக்கு படக்குழுவினர் ஒரு பெரிய ஓட்டலில் பார்ட்டி நடத்துகின்றனர். இதில் கமலின் குடும்பத்தினர் கலந்துகொள்கின்றனர்.

அப்போது, அந்த பார்ட்டிக்கு வரும் ஜெயராம், கமலை தனியாக சந்தித்து அவருக்கு ஒரு பெண் இருப்பதாகவும், இதுபற்றி விவரம் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் தன்னை தொடர்புகொள்ளுமாறும் கூறிவிட்டு அவரிடம் தன்னுடைய விசிட்டிங் கார்டை கொடுத்துவிட்டு செல்கிறார்.

அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கும் கமலஹாசன், தனது மேனேஜரிடம் கூறி இதுகுறித்து விசாரிக்க சொல்கிறார். ஆனால், இதற்குள் கமலுக்கு அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வதற்கான ஆர்வம் அதிகமாகவே, ஜெயராமை தேடிச் சென்று சந்திக்கிறார். அப்போது, கமல் கல்யாணத்துக்கு முன்பே ஒரு பெண்ணிடம் நெருக்கமாக பழகியதையும், அந்த பெண் கர்ப்பமுற்று, அந்த பெண்ணின் கருவை கலைக்க இவரது மாமாவான விஸ்வநாத் பணம் கொடுத்ததையும், அந்த பெண் அதை வாங்க மறுத்து, அந்த கருவுடனேயே கமலை விட்டு பிரிந்து சென்றதையும், அந்த பெண்ணை தான் திருமணம் செய்துகொண்டதையும் அவரிடம் விளக்கிக் கூறுகிறார்.

அந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைதான் மாளவிகா மேனன். அவள் தற்போது கல்லூரியில் படித்து வருவதாக கமலிடம் கூறும் ஜெயராம், ‘அவள் உங்களை ஒரு வில்லனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்’ என்கிறார். தன் தவறை உணர்ந்த கமல், அவளை பார்க்கத் துடிக்கிறார்.

இந்நிலையில், கமலுக்கு ஆரம்பத்திலிருந்தே இருக்கும் தலைவலி தற்போது அதிகமாகிறது. ஸ்கேன் செய்து பார்க்கும்போது, கமலின் தலையில் ஒரு கட்டி இருப்பதாகவும், நீண்ட நாளைக்கு உயிரோடு இருக்கமாட்டார் என்றும் டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனவேதனையடையும் கமல், தான் ஒரு நடிகர் என்பதால், தான் இறப்பதற்குள் தன்னுடைய ரசிகர்களுக்கு ஒரு நல்ல, நகைச்சுவை கலந்த படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்று தீர்மானிக்கிறார்.

இதற்காக தனது குருநாதர் கே.பாலச்சந்தரிடம் சென்று ‘உங்களையும் என்னையும் இந்த மக்கள் மறக்க முடியாத அளவுக்கு ஒரு படத்தை இயக்க வேண்டும்’ என்று கேட்கிறார். ஏற்கெனவே, கமல் மீதும், அவரது மாமனார் விஸ்வநாத் மீதும் மனஸ்தாபத்தில் இருக்கும் கே.பாலச்சந்தர் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார். தன்னுடைய கதையை கேட்டுவிட்டு பின்னர் உங்கள் முடிவை தெரிவிக்குமாறு கமல் கூற, அவரும் வேண்டா விருப்பாக கதையை கேட்கத் தொடங்குகிறார். இறுதியில், அந்த கதை கமலுடைய நிஜவாழ்வில் நடந்த கதை என்பது தெரிந்ததும் கமலை வைத்து ‘உத்தமவில்லன்’ என்ற படத்தை இயக்க ஒப்புக் கொள்கிறார்.

கமல்-கே.பாலச்சந்தர் மீண்டும் இணைந்தது கமலுடைய குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது. கமலுக்கும் அவரது மாமனாருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. கமல் தன் மாமனாரை கோபத்தில் திட்ட, இதனால் கமலுடைய மனைவி தனது மகன் மற்றும் அப்பாவுடன் அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார். இருப்பினும், தன்னுடைய லட்சியத்தில் விடாப்பிடியாக இருக்கும் கமல், இதையெல்லாம் தாங்கிக் கொண்டு படத்தில் நடிக்க ஆரம்பிக்கிறார்.

இறுதியில், கமல் அந்த படத்தை திட்டமிட்டபடி முடித்தாரா? பிரிந்துபோன இவர் குடும்பம் மீண்டும் ஒன்று சேர்ந்ததா? என்பதே மீதிக்கதை.

கமல் ஒரு மகா கலைஞன் என்பதை இந்த படத்தில் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒரு படத்தில் சாதாரண கதாபாத்திரம் என்றாலே நடிப்பில் வெளுத்து வாங்குவார். அதிலும், இந்த படத்தில் ஒரு நடிகர் கதாபாத்திரம். சொல்லவா? வேண்டும். ஒவ்வொரு காட்சியிலும், அதற்கேற்ற முகபாவனை, வசன உச்சரிப்பு, நக்கல், நையாண்டி என அனைத்தையும் கச்சிதமாக செய்து அசத்தியிருக்கிறார். சென்டிமெண்ட் காட்சிகளில் அவருக்கே உரித்த அழுத்தமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது.

மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர், இந்த படத்தில் சில காட்சிகளே வந்தாலும் அற்புதமான நடிப்பு. இவருடைய கோபம் கலந்த வசனங்கள் தியேட்டரையே அதிரவைக்கிறது. அதேபோல், கமலின் மாமனாராக வரும் கே.விஸ்வநாத்தும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அழகாக நடித்திருக்கிறார்.

இரண்டாம் பாதியிலேயே பூஜாகுமாருக்கு வேலை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அவருடைய பகுதியை அவர் சிறப்பாகவே செய்திருக்கிறார். நடனக் காட்சிகளில் அழகான முகபாவனையில் கவர்கிறார். ஆண்ட்ரியாவுக்கும் இந்த படத்தில் சில காட்சிகள்தான். அதேபோல், கமலின் மனைவியாக வரும் ஊர்வசி, அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் பளிச்சிடுகிறார். கமலின் மேனேஜராக வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு இப்படத்தில் ரொம்பவும் வலிமையான கதாபாத்திரம். இவருடைய முந்தைய படங்களில் இவர் காமெடியராகத்தான் கலக்கியிருந்தார். இந்த படத்தில் அதையெல்லாம் தாண்டி சிறப்பாக நடித்து கைதட்டலை பெறுகிறார்.

ஜெயராமுக்கும் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரம்தான். சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார். நாசர், கமல் படங்களில் கமலைவிட ஒரு பங்கு தனது நடிப்பு மேலோங்கி இருக்கவேண்டும் என்று நினைத்து நடிப்பார்போல. அதேபோல், இந்த படத்திலும் அவருடைய நடிப்பு பலே.

இயக்குனர் ரமேஷ் அரவிந்த், தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை கையாண்டிருக்கிறார். அதை திறம்பட செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், கமல் - கே.பாலச்சந்தர் போன்ற மிகப்பெரிய மகா கலைஞர்களை வைத்து படத்தை இயக்குவது என்பது சாதாரண விஷயமல்ல. அதை பக்குவமாக கையாண்டு வெற்றி பெற்றிருக்கிறார். படைப்பாளிகள் இறந்துவிட்டாலும், அவர்களுடைய படைப்புகளும், புகழும் என்றும் மறைவதில்லை என்பதை இப்படத்தில் அழகாக பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக, கமல்-கே.பாலச்சந்தர் இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் அவர்களுடைய நிஜவாழ்க்கையை பதிவு செய்வதாக அமைந்துள்ளது அற்புதம்.

அதேபோல், படத்தின் ஒளிப்பதிவும் அற்புதமாக அமைந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க வைக்க இவரது கேமரா அழகாக உதவியிருக்கிறது. ஜிப்ரான் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்றாலும், பின்னணி இசை அசத்தல்.

மொத்தத்தில் 'உத்தமவில்லன்' வாழ்வியல் யதார்த்தம்.

மாலைமலர்


 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by T.N.Balasubramanian Fri May 01, 2015 10:11 pm

நன்றி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by விமந்தனி Sat May 02, 2015 11:55 am

சூப்பருங்க  உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் 1571444738


 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by krishnaamma Sat May 02, 2015 11:59 am

நன்றி சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by சிவா Fri May 08, 2015 1:56 am

உத்தமவில்லன் - சினிமா விமர்சனம்

உச்ச நட்சத்திர நடிகன், நிழலில் தனக்குப் பிடித்த 'உத்தமனாக’ நடித்துக்கொண்டே நிஜத்தில் தனது 'வில்லன்’ வேடங்களைக் கலைத்தால்..?!

ஆச்சர்யம்... கமல், 'அசல் கமல்’ போல நடித்திருக்கும் சினிமா. நிஜத்தைப் பிரதிபலிக்கும் சினிமா. அதற்குள் ஒரு சினிமா. இரண்டும் இணையும் புள்ளியில் தொடங்குகிறது, ஒரு முடிவும் சில அபிப்பிராயங்களும்!

பிரபல நடிகர் 'மனோரஞ்சன்’ கமலுக்கு மூளையில் கட்டி (ஆம்... அதேதான்!). அதுவரை சினிமாவில் கமர்ஷியல் கலாட்டா நடத்திக்கொண்டிருப்பவர், தன் ஆத்மார்த்தமான கடைசிப் படத்தை, தன் குரு கே.பாலசந்தர் இயக்க வேண்டுமென விரும்புகிறார். அந்தச் சமயம் மனைவி பிரிய, மகன் வெறுப்பை உமிழ, முன்னாள் காதலி மூலம் தனக்குப் பிறந்த பெண் கண் முன் நிற்க, இடைவிடாமல் மரணம் துரத்த... கமலுக்கு என்ன நடக்கிறது என்பதே சினிமா!

கமல் கமலாக இருக்கிறார்... அதுவும் உண்மைக்கு மிக நெருக்கமாக. ஓர் உச்ச நடிகனாக திரைக்கு வெளியே அனுபவிப்பதை, காட்சிக்குக் காட்சி கடத்தியிருக்கிறார் கமல். ரசிகர்களின் கைதட்டலுக்கு ஏங்குபவராக, மனைவியின் அன்பை, மகனின் நம்பிக்கையை இழந்தவராக, திரைமறைவுக் காதலுக்கு நெகிழ்பவராக, மகளுடனான முதல் சந்திப்பிலேயே கூனிக் குறுகி நிற்பவராக... அட்டகாசம் கமல்!

அதட்டலும் நெகிழ்ச்சியுமாக ஆச்சர்யப்படுத்துகிறார் கே.பாலசந்தர். படத்தில் 'மரணம் துரத்தும்’ கமல் கதாபாத்திரம், நிஜத்தில் கே.பாலசந்தருக்கு உரியது. நடிப்பின் ஒவ்வொரு துடிப்பிலும் அந்த மரண அவசரம். கமல் படத்தில் அவருக்கே சவால் கொடுப்பதுபோல கே.விஸ்வநாத், நாசர், ஆண்ட்ரியா, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, பார்வதி மேனன்... என அனைவரும் அப்ளாஸ் அள்ளுகிறார்கள்.

'நான் சினிமா படிச்சுட்டு வந்து, கோடம்பாக்கத்துக்கு நீங்க யாருனு புரியவைக்கிற மாதிரி ஒரு படம் எடுப்பேன்!’ என கமலிடம் மகன் உருகும் இடம், 'நான் அழகாத்தான் இருந்தேன். ஆனா, அதைத் தின்னே தீர்த்தேன்’ என ஊர்வசி ஆதங்கப்படும் இடம், 'இந்த கார்ல இருக்கிற மூணு ஆம்பளைங்களைத் தவிர வேற யாருக்கும் இந்த விஷயம் தெரியக் கூடாது’ என ஆண்ட்ரியா கலங்கும் இடம், தான் கொண்டு சேர்க்காத கடிதத்தை எம்.எஸ்.பாஸ்கர் வாசித்து வெடித்து அழும் இடம், தான் எழுதிய கடிதத்தை மகள் படிக்கப் படிக்க கமல் ஒப்பனை கலைக்கும் இடம்... மனித மனங்களின் புரியாத பிரியங்களை உருக்கமும் நெருக்கமுமாக பதிவுசெய்த கிளாஸிக் தருணங்கள்!

இப்படி, மனோரஞ்சன் வாழ்க்கையில் ஒவ்வோர் அத்தியாயமும் உணர்வுகளால் மனம் கலைக்க, 'உத்தமன் சினிமா’வோ செம சலிப்பு. மன்னன், இளவரசி, புலி, சாகாவரம்... என படத்தின் சரிபாதி நீளத்துக்கு காமாசோமா மெகா டிராமா. நாசருக்கு ஒரு காது கேட்காது என்பதை நமக்கு காது வலிக்கும் அளவுக்கு அத்தனை தடவை சொல்வது அலுப்பு! அந்த சினிமாவிலும் நாசர் ஸ்கோர் செய்ய, 'வாவ்... என்னமா நடிக்கிறான்ல!’ என கமலுக்குப் பாராட்டு குவிவது... என்னா வாத்தியாரே!

'நான் முதல்ல ஆண்... பிறகுதான் நடிகன்!’, 'சித்ரகுப்தன் கேப்பானே...’ 'பொய் சொல்லிரலாம்... நான்தான் நடிகனாச்சே!’ - 'நறுக் சுருக்’காகத் தெறிக்கின்றன வசனங்கள்.

வாழ்க்கை முழுக்க பிறர் மனங்களைக் காயப்படுத்திவிட்டு, மரணம் துரத்தும்போது உண்மையை ஒப்புக்கொண்டால், வில்லன் உத்தமன் ஆகிவிடுவானா என்ன?

ஆனாலும், உத்தமனைக் காட்டிலும் வில்லனே ஈர்க்கிறான்!

- விகடன் விமர்சனக் குழு


 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by பாலாஜி Fri May 08, 2015 4:44 pm

பகிர்வுக்கு நன்றி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by சிங்கம் Fri May 08, 2015 5:28 pm

பகிர்வுக்கு நன்றி....


எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by ayyasamy ram Sun May 10, 2015 8:24 am

பகிர்வுக்கு நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82813
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by ராஜா Sun May 10, 2015 12:39 pm

i'm waiting ......... புன்னகை

for tamilrockers அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by T.N.Balasubramanian Sun May 10, 2015 2:05 pm

ராஜா wrote:i'm waiting ......... புன்னகை

for tamilrockers அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1135823

இதை ஏதோ ஹிந்தி பாஷையில் எழுதி உள்ளீர் போல் இருக்கே !
ஒன்றும் புரியவில்லை .
இருந்தாலும் பொதுவாக வாழ்த்துவோம் ,
விரும்பியது கூடிய சீக்கிரத்திலேயே கிடைக்கட்டும் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35032
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 உத்தமவில்லன்  - திரைவிமர்சனம் Empty Re: உத்தமவில்லன் - திரைவிமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum