ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
Dr.S.Soundarapandian
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 
heezulia
நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_m10நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Go down

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Empty நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Post by சிவா Mon Apr 27, 2015 1:43 am


நேபாளத்தில் கடந்த 80 வருடங்களில் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிலநடுக்கத்தினால் காத்மண்டு பள்ளத்தாக்கு மற்றம் அதனை சுற்றியுள்ள பல பகுதிகளில் பல்வேறு இந்து கோவில்கள் அழிந்து விட்டன. நிலநடுக்கத்தினால், கஸ்தமண்டபம், பாஞ்சிடேல் கோவில், 9 அடுக்கு பசந்தபூர் தர்பார், தசவதார கோவில், கிருஷ்ண மந்திர் உள்ளிட்ட பல்வேறு கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டு என்ற பெயர் ஏற்பட காரணமான கஸ்தமண்டபம் கடந்த 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மர சிற்பங்கள் கொண்ட கோவில் ஆகும். வரலாற்று ஆய்வாளரான புருஷோத்தம லோசன சிரேஸ்தா என்பவர் கூறும்போது, இந்த சிற்பங்கள் முழுவதுமாக அழிந்துபோக கூடும். இவற்றை மீண்டும் உருவாக்குவது என்பது தொழில் நுட்ப ரீதியில் கடினமானது மற்றும் அதிக செலவு மிக்கது.

காத்மண்டு, பக்தாபூர் மற்றும் லலித்பூர் பகுதிகளில் உலக பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பெரும்பான்மையான சிற்பங்களை நாம் இழந்து விட்டோம். அவற்றின் பழைமையான நிலைக்கு அவற்றை திரும்ப கொண்டு வர முடியாது என்று அவர் கூறியுள்ளார். நேபாளத்தில் ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான நிலநடுக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக நாள் முழுவதும் நடந்த நிலஅதிர்வுகள் ஆகியவற்றால் காத்மண்டு நகரில் உள்ள பசந்தபூர் தர்பார் சதுக்கத்தில் உள்ள 80 சதவீத கோவில்கள் அழிந்து விட்டன.

காத்மண்டுவில் உள்ள புகழ் பெற்ற தரஹாரா உள்ளிட்ட நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று சிற்பங்கள் ஆகியவை சிதைந்து போய் விட்டன. கடந்த 83 வருடங்களுக்கு முன்பு 1934ம் ஆண்டு இதுபோன்று நடந்த நிலநடுக்கத்தில் 10 ஆயிரம் பேர் பலியானதுடன், தரஹாரா துண்டுகளாக உடைந்தும் போனது. அதேபோன்று பதான் மற்றும் பக்தபூரில் உள்ள 12க்கும் மேற்பட்ட கோவில்கள் மற்றும் வரலாற்று கட்டிடங்கள் சிதைந்தும் அல்லது பகுதி சிதைந்தும் உள்ளன.


நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Empty Re: நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Post by சிவா Mon Apr 27, 2015 1:43 am

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் CDcfx4kUgAETXBA

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்தது, ‘பீம்சென் கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த ‘தாரஹரா கோபுரம்’.

பிரதமர் பெயரிலானது

நகரின் மையப்பகுதியில் சுந்தரா என்ற இடத்தில், இந்தக் கோபுரம் 1832–ம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கது.

9 அடுக்குகளை கொண்டதும், 203 அடி உயரம் உடையதுமான இந்த கோபுரத்தை காட்மாண்டின் கட்டிடக் கலையாக ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்திருந்தது.

நேபாளத்தில் பிரதமராக இருந்த பீம்சென் தாபா கட்டியதால் அவரது பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

தரை மட்டமானது

இந்த கோபுரத்தின் 8–வது தளத்தில் அமைந்துள்ள சுழலும் மாடத்தில் இருந்து பார்த்தால், ரம்மியமான நேபாள பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க முடியும். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்வையிடுவதற்காக குவிந்தனர்.

நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்தக் கோபுரம் தரை மட்டமானதில், சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். பல 100 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு கோபுரம்

இந்த கோபுரத்தை கட்டுவதற்கு முன்பாக 1824–ம் ஆண்டு, பீம்சென் தாபா 11 அடுக்குகள் கொண்ட ஒரு கோபுரத்தை கட்டி இருந்தார்.

இந்த கோபுரம், 110 ஆண்டுகள் ஆன நிலையில், 1934–ம் ஆண்டு ஜனவரி 15–ந் தேதி ஏற்பட்ட நில நடுக்கத்தில் தரை மட்டமாகி விட்டது நினைவுகூரத்தக்கது.

பசுபதி நாதர் கோவில்

இதே போன்று இந்தியாவின் ஆன்மிக பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில், நில நடுக்கத்துக்கு பின்னர் என்ன ஆயிற்று என்று உறுதியான எந்த தகவலும் இல்லை.

இருப்பினும், உத்தரகாண்ட் பாரதீய ஜனதா மூத்த தலைவர் பகத் கோஷ்யாரி, ‘‘பசுபதிநாதர் கோவில் பற்றி நேபாள அரசு அதிகாரியிடம் பேசினேன். நேபாள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்களிடமும் கேட்டேன். கோவிலுக்கு லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்’’ என்றார்.

அதே நேரத்தில் அந்தக் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என பத்திரிகையாளர் நளினி சிங் தெரிவித்தார்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தர்பார் சதுக்கமும், நில நடுக்கத்தில் உருக்குலைந்து போனது வேதனை அளிப்பதாக அமைந்துள்ளது.



நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Empty Re: நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Post by சிவா Tue Apr 28, 2015 1:08 am

பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை- பக்தர்கள் தகவல்

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் 201504271651289694_Pashupatinath-Temple-unharmed-in-Nepal-s-devastating-quake_SECVPFநேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

இமயமலை நாடு என்று அழைக்கப்படுகிற நேபாளம் என்ற அழகான நாட்டை நிலநடுக்கம் என்ற பெயரில் இயற்கை சீற்றம், சின்னாபின்னப்படுத்தியது. நேபாளம் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3700-ஐ தாண்டியது. 6,500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

நேபாளத்தின் தலைநகர் காட்மாண்டுவின் அடையாளச் சின்னமாக திகழ்ந்து வந்த, ‘பீம்சென் கோபுரம்’ என்று அழைக்கப்பட்டு வந்த ‘தாரஹரா கோபுரம்’ நிலநடுக்கத்தில் தரைமட்டம் ஆகிவிட்டது. காட்மாண்டு நகரின் மையப்பகுதியில் சுந்தரா என்ற இடத்தில், இந்தக் கோபுரம் 1832–ம் ஆண்டு கட்டப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்கது. 9 அடுக்குகளை கொண்டதும், 203 அடி உயரம் உடையதுமான இந்த கோபுரத்தை காட்மாண்டின் கட்டிடக் கலையாக ‘யுனெஸ்கோ’ அங்கீகரித்திருந்தது. நேபாளத்தில் பிரதமராக இருந்த பீம்சென் தாபா கட்டியதால் அவரது பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டு வந்தது.

இந்த கோபுரத்தின் 8–வது தளத்தில் அமைந்துள்ள சுழலும் மாடத்தில் இருந்து பார்த்தால், ரம்மியமான நேபாள பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்த அழகையும் ரசிக்க முடியும். இதனால் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் இதைப் பார்வையிடுவதற்காக குவிந்தனர். நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டு, அந்தக் கோபுரம் தரை மட்டமானதில், சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். 200-க்கும் மேற்பட்டோர் பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று இந்தியாவின் ஆன்மிக பயணிகளை பெரிதும் கவர்ந்து வந்த பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவில், நில நடுக்கத்துக்கு பின்னர் என்ன ஆயிற்று என்று உறுதியான எந்ததகவலும் வெளியாகாமல் இருந்தது. .இந்நிலையில் நேபாளம் பேரழிவு பூகம்பத்தில் பிரசித்தி பெற்ற பசுபதிநாதர் கோவிலுக்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பாக கோவிலில் இருந்த பக்தர்கள் பேசுகையில், “பசுபதிநாத் கோவில் மிகவும் பாதுகாப்பாக உள்ளது, நாங்கள் கோவிலை பலமுறை சோதித்து பார்த்தோம், அங்கு ஒரு விரிசல்கூட காணப்படவில்லை,” என்று தெரிவித்து உள்ளனர்.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான தர்பார் சதுக்கத்தில் பசுபதிநாதர் கோவிலும் ஒன்று ஆகும். “நாங்கள் அலுவலகம், கடைகள் மற்றும் வீடுகளுக்கு செல்லவில்லை ஏனென்றால் இந்த அழிவுகரமாண நேரத்தில் கோவில் ஒன்றே பாதுகாப்பான பகுதி என்று உணர்கிறோம்,” என்று பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.

அங்கு பூகம்பத்தால் பலியானவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு கூட போதிய தகன மேடை வசதி இல்லை. இதன் காரணமாக எங்கெல்லாம் உடல்களை தகனம் செய்ய இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் மொத்த மொத்தமாக உடல்களை தகனம் செய்கின்றனர். பிரசித்தி பெற்ற பசுபதி நாதர் கோவில் அருகே அமைந்துள்ள தகன மையத்தில் கடும் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த தகன மையத்துக்கு வெளியே கிடைத்த இடத்தில் எல்லாம் உரிய இறுதிச்சடங்குகளை முறையாக செய்ய முடியாமல் உடல்களை தகனம் செய்து வருகின்றனர். நேற்று அங்கு நூற்றுக்கணக்கான உடல்கள் தகனம் செய்யப்பட்டன.


நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள் Empty Re: நேபாளத்தில் நிலநடுக்க பாதிப்பால் அழிந்து போன இந்து கோவில்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum