ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by சிவா Mon Apr 20, 2015 4:39 pm

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 11159527_972760286080972_6381567904456958501_n

மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் வழக்குகளில் பெரும் பாலானவைகள் குடும்ப பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. நீதி கேட்டு மகளிர் காவல் நிலைய வாசலை தட்டுபவர்களுக்கு அங்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது சமீபகாலமாக மகளிர் காவல்நிலையங்களுக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு!

சம்பவம் 1:

சென்னை நீலாங்கரையை அடுத்த கானத்தூர் ரெட்டிகுப்பத்தைச் சேர்ந்தவர் ரேணுகா. இவரது மகன் ஆனந்துக்கும், சத்யா என்ற பெண்ணுக்கும் 2013 நவம்பரில் திருமணம் ஆனது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். சத்யா வீட்டினர் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்துவதாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸார், ரேணுகா, அவரது தாயார் மணியம்மாள், ஆனந்த் உள்ளிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையின் போது பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், 65 வயதான மூதாட்டியை மணியம்மாளை லத்தியால் அடித்துள்ளார். இதன்காரணமாக அடுத்த மூன்று மாதத்துக்குள் மணியம்மாள் இறந்தார்.

இது தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டது. இறுதியில் ரேணுகாவுக்கு போலீஸார் கொடுத்த கெடுபிடியால் வழக்கு முடித்து வைக்கப்பட்டு விட்டது. இப்போது இந்த சம்பவம் தொடர்பாக ரேணுகாவிடம் விசாரித்தால் போலீசுக்குப் பயந்து அவர் எதையும் சொல்ல மறுக்கிறார்.

சம்பவம் 2:

பெயரை குறிப்பிட விரும்பாத ஐ.டி. நிறுவன ஊழியர் ஒருவரின் நிஜக்கதை இது...

"சொந்த ஊர் நெல்லை மாவட்டம் நாங்குநேரி. சென்னையில் இன்ஜினியர் பணி. உடன் பணியாற்றும் பெண்ணை காதலித்து திருமணம் செய்தேன். சில மாதங்கள் சந்தோஷமாக கழிந்தன. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னைகள் வரத்தொடங்கின. விட்டுக் கொடுத்து வாழப்பழகினேன். கடைசியில் இன்னொரு வருடன் அவளுக்கு பழக்கம் ஏற்பட்டது. கண்டித்தேன்.

பிரச்னை விஸ்வரூபமாக வெடித்தது. ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றாள். இதுதொடர்பாக என் மீது மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காதலித்து திருமணம் செய்ததால் மகளே இல்லை என்று கூறியவர்கள், என் மீது வரதட்சணை, குடித்து விட்டு செக்ஸ் டார்ச்சர் என புகார்களை அடுக்கினார்கள்.

விசாரணைக்கு மகளிர் காவல் நிலையத்திலிருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. விசாரணைக்கு சென்றேன். காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், ஒருவரை காதில் கேட்கமுடியாத வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டு இருந்தார். அவரது பார்வை என் பக்கம் திரும்பியது. "அந்த வரதட்சணை கொடுமை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்ற கேஸ் தானே... நில்லு வந்து விசாரிக்கிறேன்!" என்றார். அவரது பேச்சு ஒருவித மிரட்டலுடன் இருந்தது.

மூன்று மணி நேரத்துக்கு பிறகு உள்ளே அழைத்தார் பெண் அதிகாரி. அங்கு என்னிடம் விசாரணை என்ற பெயரில் அசிங்க அசிங்கமாக திட்டினார். நான் கூனிக் குறுகி நின்றேன். 'ஏன்டா பொம்பளைன்னா உனக்கு அவ்வளவு இளக்காரமா... பேண்ட அவிழ்த்து முட்டிக்கு முட்டி தட்டி உள்ளே அடைச்சா தான் உனக்கு புத்தி வரும்' என்றார். 'மேடம் எனக்கும் அவளுக்கும் எந்தப்பிரச்னையும் இல்ல... வரதட்சணை எல்லாம் யாரிடமும் கேட்கல... லவ் பண்ணிதான் மேரெஜ் பண்ணினோம்!' என்ற என் பதிலை அந்த அதிகாரி காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கடுமையாக அடித்து, ஜெயில்ல அடைச்சிட்டாங்க.

ஜாமீனில் வந்த பிறகு என் மீதான புகாரை என்னுடைய மனைவியே திரும்பப் பெற்றாள். ஆனால், அந்த அவமானத்திலிருந்து என்னால் மீளமுடியவில்லை. அன்றைக்கு நான் சொன்னதை மட்டும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் காது கொடுத்து கேட்டு இருந்தா எனக்கு இந்த அவமானம் ஏற்பட்டு இருக்காது. அந்த களங்கத்தை யார் நீக்க முடியும் சார்?" என்று முடித்தார்.

சம்பவம் 3:

ஆவடியை சேர்ந்தவர் டெய்சி. இவருக்கும் அருண் என்பவருக்கும் 2011ல் திருமணம் நடந்துள்ளது. டெய்சி வுடன் வாழப்பிடிக்காமல் அருண் தலைமறைவாகி இருக்கிறார். இதுகுறித்து டெய்சி, அடையார் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதற்கு சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியை அருண் தரப்பினர் நன்கு கவனித்து இருக்கிறார்கள். இப்போது இரண்டரை வயது குழந்தையுடன் டெய்சி தனிமரமாக தவித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் போலீஸ் நிலையத்தில் இந்த வழக்கு சமரச தீர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சமூக சேவகர் பொன்சேகரிடம் பேசினோம். "குற்றச்செயல்களில் ஈடுபடும் பெண்களிடம் விசாரிக்கவும், தங்களது பிரச்னைகளை தயங்காமல் பெண் போலீஸாரிடம் சொல்லவும் வசதியாக முதல் மகளிர் போலீஸ் நிலையம், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் 1992ல் தொடங்கப்பட்டது. இப்போது சென்னை உள்பட தமிழகத்தில் 198 மகளிர் போலீஸ் நிலையங்கள் செயல்படுகின்றன.

ஆனால் இந்த மகளிர் போலீஸ் நிலையங்களில் விசாரணை என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்களுக்கு அளவே இல்லை. விசாரணைக்கு அழைத்து வருபவர்களிடம், அங்குள்ள அதிகாரிகள் அநாகரீகமாக கேள்விகளை கேட்கின்றனர்.

ஜட்டியோடு ஆண்களிடம் விசாரணை நடத்தும் சம்பவங்களும் சில ஸ்டேஷன்களில் நடக்கின்றன. இதையெல்லாம் தட்டிக் கேட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினர் மிரட்டப்படுகிறார்கள்" என்றார்.

இதுகுறித்து வழக்கறிஞர் முஜிபூர் ரகுமான் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள மகளிர் போலீஸ் நிலையங் களில் கவுன்சலிங் என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். குடும்ப பிரச்னைகளுக்கு கவுன்சலிங் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நாட்டாண்மை போல மகளிர் இன்ஸ்பெக்டர்கள் செயல்படுகிறார் கள். காவல் துறையினர் நடுநிலைமையோடு செயல்பட வேண்டும். குற்றம் செய்திருந்தால் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதே காவல்துறையின் கடமை.

அதை விட்டு ஒரு தரப்பினருக்கு மட்டும் ஆதரவாக செயல்படுகிறார்கள். இது ஒட்டுமொத்த தமிழக காவல் துறையினருக்கு களங்கத்தை ஏற்படுத்தும். காவல் நிலையங்களில் அநாகரீகமாக நடந்த காவல்துறை யினர் மீது பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மாநில மனித உரிமை ஆணையத்தில் முறையிட்டு நீதி பெற்று இருக்கிறார்கள்" என்றார்.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்களை விசாரித்து பாதிக்கப்பட் டவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப பிரச்னைகள் தொடர்பான புகார்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட கவுன்சலிங் மையத்தில் கணவன், மனைவி இருவருக்கும் கவுன்சலிங் வழங்க பரிந்துரைக்கப்படுகிறது. கவுன்சலிங் மூலம் ஏராளமான புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

மனித உரிமை மீறல்கள் காவல் நிலையத்தில் நடந்து, பாதிக்கப்பட்டவர்கள் தயங்காமலும், யாருக்கும் பயப்படாமலும் மாநில மனித உரிமை ஆணையத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது புகார் கொடுக்கலாம். மகளிர் காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக சொல்வதை ஏற்க முடியாது. புகார் கொடுத்தால் இரு தரப்பிலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல்துறை அதிகாரிகளின் கடமை" என்றார்.

அதிகாரியின் கருத்தை பின்பற்றுமா மகளிர் காவல் நிலையங்கள்...?

விகடன்


ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by ayyasamy ram Mon Apr 20, 2015 6:11 pm

சமூக ஆர்வலர்கள் ரகசிய வீடியோ பதிவு செய்து
வெளிச்சத்துக்கு கொண்டு வந்தால் நல்லது...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by கோ. செந்தில்குமார் Tue Apr 21, 2015 12:17 am

என்னுடைய அனுபவத்தையே இங்கு எனது கருத்தாக பதிவிடுகிறேன்....

வரதட்சணை வழக்குகளில் 100 க்கு 95 வழக்குகள் போலியானவை. போலியான வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகி விடுகின்றன. இருப்பினும் இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு யார் மருந்து தருவார்கள்? பொய் வழக்கு போட்டவர்களுக்கும் அதை அரசு சார்பில் நடத்திய மகளீர் காவல் நிலைய அதிகாரிகளுக்கும் தண்டனை தர வேண்டும். காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து நடப்பது 100% உண்மை. இதை யாராலும் பொய் என நிரூபிக்க இயலாது.

அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்து வெகு நாட்கள் ஆகி விட்டது. இதில் மகளீர் காவல் நிலையங்களும் அடக்கம். அனைத்து காவல் நிலையங்களும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்டும். மகளீர் காவல் நிலையங்களும் இந்த வளையத்திற்குள் வரும். அப்போதும் ஜட்டியோடு ஆண்களை நிற்க வைத்து விசாரணை செய்வார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

காவல்துறையும், நீதித்துறையும் ஒழுங்காக இருந்தால் நாட்டில் பிரச்சனைகளே எழாது. ஆனால் தற்போது நிலைமையே வேறு. இரண்டு துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலைவிரித்தாடுகிறது. அவரவர் பதவிக்கும், திறமைக்கும் ஏற்றவாறு கொள்ளையடிக்கிறார்கள்.

பெண்கள் கையில் சட்டத்தினை கொடுத்தால் இப்படித்தான். அவர்களுக்கு போதிய மனவளர்ச்சி இல்லை. அதிகாரம் இருக்கிறது என்று எதை வேண்டுமானாலும் செய்ய இயலாது. இது அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலம். அதன் முன்னர் இவர்கள் எல்லாம் நிற்க இயலாது. கண்டிப்பாக மாட்டிக் கொள்வார்கள். அப்போது யார் காப்பாற்றுவார்கள் என்று பார்ப்போம்.

சாராய வழக்குகளில் வாங்கப்டும் லஞ்சத்தை விட போலி வரதட்சணை வழக்குகளில் வாங்கப்படும் லஞ்சமே அதிகம். லஞ்சம் வாங்குவதில் போட்டி வேறு. லஞ்சம் வாங்கும் காவல் துறையினரின் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதில்லை. அழிந்து தான் போய் இருக்கிறது. அப்பாவிகளின் பாவம் சும்மா விடுமா? இது எமது அனுபவம்.

இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி சொல்வதென்றால் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டி வரும். வேண்டாம். இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 103459460 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by M.M.SENTHIL Tue Apr 21, 2015 12:00 pm

நன்றி திரு. கோ. செந்தில் குமார், சார்.. சிறப்பான பதில் கொடுத்துள்ளீர்கள்... கட்டப்பஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது காவல் நிலையங்களில்... இது நான் கடந்த இருபது நாட்களுக்கு முன் கண்ட அனுபவம்...

மிகவும் கேவலமாக ஒரு ஆணை ஒரு பெண் திட்டுகிறாள் என்றால் அது மகளிர் காவல் நிலையத்தில்தான். சீச்சீ... இப்படியுமா...............................


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by ராஜா Tue Apr 21, 2015 12:16 pm

தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by கோ. செந்தில்குமார் Tue Apr 21, 2015 4:06 pm

M.M.SENTHIL wrote:நன்றி திரு. கோ. செந்தில் குமார், சார்.. சிறப்பான பதில் கொடுத்துள்ளீர்கள்... கட்டப்பஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது காவல் நிலையங்களில்... இது நான் கடந்த இருபது நாட்களுக்கு முன் கண்ட அனுபவம்...

மிகவும் கேவலமாக ஒரு ஆணை ஒரு பெண் திட்டுகிறாள் என்றால் அது மகளிர் காவல் நிலையத்தில்தான். சீச்சீ... இப்படியுமா...............................
மேற்கோள் செய்த பதிவு: 1131941

நீங்கள் கண்டது கொஞ்சம் தான் நண்பரே... இது போல் நிறைய நடக்கிறது. அதை எம்மால் தோலுரித்து காட்ட முடியும்...

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by கோ. செந்தில்குமார் Tue Apr 21, 2015 4:08 pm

ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
மேற்கோள் செய்த பதிவு: 1131950

தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by M.M.SENTHIL Tue Apr 21, 2015 4:54 pm

கோ. செந்தில்குமார் wrote:
ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
மேற்கோள் செய்த பதிவு: 1131950

தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1132004

வேண்டாம் சார், நீங்கள் ஒரு கண்ணியமான உத்தியோகத்தில் இருப்பவர்.. நீங்கள் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. மேலும் இங்கே அனைவரும் குடும்ப உறுப்பினர்களே, ஒரு குடும்பத்தில் பேசும்போது, நமக்கு கண்ணியம் முக்கியம்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by கோ. செந்தில்குமார் Tue Apr 21, 2015 4:58 pm

M.M.SENTHIL wrote:
கோ. செந்தில்குமார் wrote:
ராஜா wrote:தங்கள் கருத்துக்கு நன்றி கோ.செந்தில்குமார் அவர்களே , நேற்று இந்த பதிவை படித்ததுமே உங்களிடம் இருந்து என்ன பதில் வரபோகிறது என்று ஆவலுடன் இருந்தேன். உண்மையை தயங்காமல் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். salute
மேற்கோள் செய்த பதிவு: 1131950

தயவு செய்து ஈகரையின் விதிமுறைகளை கொஞ்சம் இந்த பதிவிற்காக தளர்த்துங்கள். என்னுடைய அனுபவங்களை கடுமையான வார்த்தைகளால் மழையாக பொழிய வேண்டும்.

மேற்கோள் செய்த பதிவு: 1132004

வேண்டாம் சார், நீங்கள் ஒரு கண்ணியமான உத்தியோகத்தில் இருப்பவர்.. நீங்கள் எழுதும் எழுத்துக்களைக் கொண்டு உங்கள் மேல் ஒரு தவறான எண்ணம் யாருக்கும் வரக் கூடாது. மேலும் இங்கே அனைவரும் குடும்ப உறுப்பினர்களே, ஒரு குடும்பத்தில் பேசும்போது, நமக்கு கண்ணியம் முக்கியம்.
மேற்கோள் செய்த பதிவு: 1132009

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by M.M.SENTHIL Tue Apr 21, 2015 5:00 pm

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738 ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! 1571444738


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்! Empty Re: ஜட்டியோடு விசாரணை... கட்டப்பஞ்சாயத்து... கல்லா கட்டும் மகளிர் காவல் நிலையங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum