ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

+3
ayyasamy ram
விமந்தனி
சிவா
7 posters

Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by சிவா Mon Apr 13, 2015 11:00 pm

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Netnutrility_400_4

இனிமேல்....ஈஸியாக, வாட்ஸ் ஆப்பில்... போட்டோ அனுப்ப முடியாது! யூ- டியூபில் படம் பார்க்க முடியாது. ஸ்கைபில் பேச முடியாது. புதுசு புதுசாக கண்ணில் படும் ஆப்ஸ்களை எல்லாம் டவுன் லோடு செய்து பயன்படுத்த முடியாது.


ஏர்டெல், ரிலையன்ஸ்... என்று யாருடைய சர்வீஸை பயன்படுத்துகிறோமோ அந்த சர்வீஸ் புரோவைடர்கள் சொல்லும் ஆப்ஸை மட்டுமே டவுன் லோடு செய்து... அவர்கள் காட்டும் மெசெஞ்சரில் மட்டுமே செய்திகளை பரிமாறிக் கொண்டு அவர்கள் சொல்லும் வலைத்தளத்தில் மட்டுமே வீடியோக்களைப் பார்க்கும் அடிமைகளாக வெகு சீக்கிரமே ஆகப்போகிறோம்.

இது சாபம் அல்ல. அத்தனை பேரும் ஒன்று திரண்டு இப்போது குரல் கொடுக்காவிட்டால் நிச்சயம் நம் நிலைமை இதைவிட கேவலமாகிப் போய்விடும் என்பதுதான் அப்பட்டமான உண்மை!

ஆம், இணையத்தில் நாம் இப்போது அனுபவிக்கும் கட்டற்ற சுதந்திரத்துக்கு குறுக்கே சுவரைக்கட்ட இன்டர்னெட் சர்வீஸ் புரோவைடர்கள் பூனையைப் போல பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். இன்னொருபுறம் வாடிக்கையார்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் உதவிக்கு ஓடோடிவரவேண்டிய டிராய் (Telecom Regulatory Authority of India (TRAI)) எனப்படும் கண்காணிப்பு அமைப்பையும் ஏறக்குறைய தங்களின் அனுதாபியாகவே அவர்கள் மாற்றிவிட்டார்கள்.

இப்போது நாம் மகிழ்ச்சியாக அனுபவத்திக் கொண்டிருக்கும் Net neutrality எனப்படும் சுதந்திரத்துக்கு ஆப்பு வைக்க சர்வீஸ் புரோவைடர்ஸ் இப்படி வரிந்து கட்டுவது ஏன்? சில வருடங்களுக்கு முன்புவரை எஸ்.எம்.எஸ் என்றால் இவ்வளவு... உள்ளூர் அழைப்பாக இருந்தால் அவ்வளவு, வெளியூர் அழைப்பாக இருந்தால் உலகளவு... என்று கட்டு கட்டாக கட்டணம் வாங்கி தங்கள் கல்லாப் பெட்டியில் போட்டுக் கொண்டிருந்த சர்வீஸ் புரோவைடர்களுக்கு 'வாட்ஸ் ஆப்', 'ஸ்கைப்' போன்றவற்றின் வருகையால் வருமானம் அடிப்பட்டுவிட்டது. இண்டர்நெட் மூலமான தொலைபேசி சேவையும் கூடிய விரைவில் பிரபலமடைந்தால்... இவர்களின் வருமான இழப்பு மேலும் அதிகமாகும்.

டி.வி. விளம்பரம், பத்திரிக்கை விளம்பரம், பேனர் விளம்பரம், கிரிக்கெட் விளம்பரம், விதவிதமான ஸ்கீம்ஸ், நாடு முழுதும் நெட் வொர்க், சேல்ஸ் மென், ஷோ ரூம், இலவச சிம் கார்டு... எல்லாவற்றுக்கும் மேலாக அரசுக்கு கோடி கோடியாக லைசன்ஸ் தொகை,அதற்கு மேலாக அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இத்தனை பர்சன்டேஜ் என்று கணக்கு பார்க்காமல் பணத்தை கொட்டிக் கொடுத்து நாம் வாடிக்கையாளர்களை பிடித்தால்... நோகாமல் நோன்பு கும்பிடுவது மாதிரி வாட்ஸ் ஆப், ஸ்கைப் மாதிரியான கம்பெனிகள்... நாம் பயிரிட்டதை சந்தடியில்லாமல் அறுவடை செய்வதா... என்ற கோபம் சர்வீஸ் பிரோவைடர்களை தூக்கம் இழக்க செய்துவிட்டது.

அதனால் தங்களுக்கு கப்பம் கட்டும் ஆப்ஸ் கம்பெனிகளை மட்டும் வாடிக்கையாளர்களிடம் பிரதானப்படுத்தும் முயற்சியில் சர்வீஸ் புரொவைடர்ஸ் இறங்க நல்ல முகூர்த்த நாளாக பார்த்து கொண்டிருக்கிறார்கள். (ஒரு சிலர் இதற்கு ஏற்கனவே கால்கோல் விழா நடத்திவிட்டனர்). இந்த சர்வீஸ் புரொவைடர்களின் எண்ணம் ஈடேறினால்... ஒரு சர்வீஸ் புரொவைடர் குகூல்-க்கு பதிலாக வேறு ஒரு சர்ச் இன்ஜினை பிரோமோட் செய்வார். யூ டியூபுக்கு மாற்றாக வேறு ஒரு வலைத்தளத்தை பரிந்துரைப்பார். வாடிக்கையாளர்கள், 'இல்லை இல்லை எனக்கு கூகுல்தான் வேண்டும். யூ டியூப்தான் வேண்டும்' என்று அவற்றைப் பயன்படுத்தினால்... அதன் வேகத்தை சர்வீஸ் புரொவைடர் மட்டுப்படுத்தும். அதனால் வேறு வழியின்றி காலப்போக்கில் பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ சர்வீஸ் புரொவைடர் பரிந்துரைக்கும் சர்ச் இன்சினுடனேயே குடும்பம் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு வாடிக்கையாளர் தள்ளப்படுவார்.

சாதாரண அண்ணாச்சி கடையாக இருந்தாலே தனக்கு கோல்கேட் பற்பசை வேண்டுமா அல்லது கோபால் பற்பசை வேண்டுமா என்பதை தீர்மாணிக்கும் உரிமை ஒரு வாடிக்கையாளருக்குத்தான் உண்டு. அப்படியிருக்க தனக்கு தேவை Bing ஆ அல்லது Google ஆ, Wynk ஆ அல்லது You Tube ஆ என்பதை தேர்ந்தெடுக்கும் உரிமை வாடிக்கையாளருக்குத்தானே இருக்க வேண்டும். ஆனால் சர்வீஸ் புரொவைடர்களின் மீது அனுதாபத்தோடு இருக்கும் Telecom Regulatory Authority of India (TRAI) இப்போது வெளியிட்டிருக்கும் அறிக்கை (Consultation Paper) அதன் பரிந்துரையாக அப்படியே அரசுக்குப் போனால்... நாம் அஞ்சும் அனைத்தும் நடந்துவிடும்.

'கோடி கோடியாக பணத்தை கொட்டி எண்பது கோடி வாடிக்கையாளர்களை சேர்த்து வைத்திருக்கும் சர்வீஸ் புரொவைடர்களுக்கு வருமான இழப்பு நிகழ்ந்துவிடக்கூடாது' என்பதை காரணமாக காட்டி அவர்களுக்கு பரிந்து பேசும் Telecom Regulatory Authority of India (TRAI) யின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே அல்ல. காரணம். அவர்கள் இத்தனை வருடங்களாக போட்ட பணத்துக்கு மேல் பல மடங்கு சம்பாதித்து விட்டார்கள். ('அப்படியெல்லாம் இல்லை. இந்த கம்பெனி அவ்வளவாக சம்பாதிக்கவில்லையே?!" என்று யாராவது சொன்னால்... அதற்கு பதில்: எந்தத் தொழிலாக இருந்தாலும் அதில் ஈடுபடும் அனைத்து கம்பெனிகளும் லாபம் அடைவதில்லை. ஒரு சில கம்பெனிகள் நட்டம் அடைவது வியாபாரத்தில் சாதாரணம்). அடுத்து எந்த தொழிலாக இருந்தாலும்... எந்த ஒரு கம்பெனி வாடிக்கையாளர்களின் தேவைகளை புரிந்து கொண்டு மாறிக்கொண்டிருக்கிறதோ அதுதான் ஜெயிக்கும். இந்த விதி தொலைபேசி சேவை மற்றும் இணைய சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்களுக்கும் பொருந்தும். அதனால் அரசால் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் Telecom Regulatory Authority of India (TRAI) 80 கோடி வாடிக்கையாளர்களின் நலனைதான் பார்க்க வேண்டுமே தவிர நான்கு ஐந்து சர்வீஸ் புரொவைடர்களின் லாபத்தைப் பார்க்கக்கூடாது.

இணையதள சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்கள் யாராக இருந்தாலும் Net Neutralityயோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேச கோட்பாடு. வேண்டப்பட்டவரின் வலைதளம், வேண்டப்படாதவரின் வலைத்தளம்... என்று எந்த விதமான பாகுபாடும் பார்க்காமல் வாடிக்கையாளர்களுக்கு அவற்றை அவை வழங்க வேண்டும். சுருக்கமாக சொன்னால் ஒரு லேண்ட் லைன் போன் சர்வீஸ் வழங்கும் பிஎஸ்என்எல் போன்ற கம்பெனிகள்... 'இந்த போனில் ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட ஒரு சில வாடிக்கையாளர்களோடு மட்டும்தான் பேச முடியும்.' என்று கட்டுப்பாடுகள் விதித்தால் அது எத்தனை அபத்தமோ அத்தனை அபத்தம் இணைய சேவையை வழங்கும் சர்வீஸ் புரொவைடர்கள் இது போன்ற கட்டுப்பாடுகளை தங்கள் வாடிக்கையாளர்கள் மீது மறைமுகமாக திணிக்க முயற்சிப்பது. ஆகையால் இது கண்டிப்பாக எதிர்க்க வேண்டிய ஒரு நடவடிக்கை.

விகடன்


என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by விமந்தனி Tue Apr 14, 2015 12:49 am

அதிர்ச்சி அதிர்ச்சி அடக்கடவுளே ...! என்ன செய்வது....?


என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by ayyasamy ram Tue Apr 14, 2015 2:39 am

விழிப்புணர்வு கட்டுரை... என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82675
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by anikuttan Tue Apr 14, 2015 8:31 am

Telecom Regulatory Authority of India இடம் நமது எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது.
anikuttan
anikuttan
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 09/09/2012

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by T.N.Balasubramanian Tue Apr 14, 2015 9:07 am

anikuttan wrote: Telecom Regulatory Authority of India இடம் நமது எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது.
மேற்கோள் செய்த பதிவு: 1130448


நல்லக் கேள்வி !
இணைவோம் இணைவோம் 
போராடுவோம் போராடுவோம் 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by SajeevJino Tue Apr 14, 2015 9:17 am

இணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக சேவ் தி இன்டெர்நெட் (http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.

இதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி (http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்!

தி இந்து


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by T.N.Balasubramanian Tue Apr 14, 2015 11:32 am

நன்றி ,சஜீவ் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by ராஜா Tue Apr 14, 2015 11:46 am

anikuttan wrote: Telecom Regulatory Authority of India இடம் நமது எதிர்ப்பை எப்படி தெரிவிப்பது.
இங்கு சென்று உங்கள் எதிர்ப்பை பதிவு செய்யவும் புன்னகை

http://www.eegarai.net/t120217-net-neutrality
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை! Empty Re: என் இணையம்... என் உரிமை! - இனிமேல் இந்த உரிமை உங்களுக்கு இல்லை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum