ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

+4
monikaa sri
M.Saranya
ராஜா
சிவா
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:18 pm

ஒவ்வொரு வினாடியும் கோடானு கோடி நியூட்ரினோக்கள் நம் உடலைத் துளைத்துச் செல்கின்றன. இவை பூமியையும் துளைத்துச் செல்பவை. சூரியனிலிருந்து வரும் இந்தப் புதிரான துகள்கள்பற்றி ஆராய்வதற்காகத்தான் தேனி மாவட்டத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.

பூமியில் தாவரங்களும் விலங்குகளும் மனிதனும் தோன்றிய காலத்துக்கு முன்பிருந்தே சூரியனிலிருந்து நியூட்ரினோ துகள்கள் வந்துகொண்டிருக்கின்றன. எனினும், சுமார் 30 ஆண்டுகளாகத்தான் நியூட்ரினோக்கள் பற்றி விரிவான ஆராய்ச்சி நடைபெற்றுவருகிறது. உலகில் ஏற்கெனவே பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. நியூட்ரினோ பற்றி ஆராய இந்தியாவில் இப்போதுதான் முதல் தடவையாக ஆராய்ச்சிக்கூடம் அமைக்கப்படுவதாகச் சொல்ல முடியாது.

கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்கச் சுரங்கத்தின் அடியில் 1965-ம் ஆண்டிலேயே சிறிய அளவில் நியூட்ரினோக்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அப்போது ஒரு முக்கியக் கண்டுபிடிப்பும் செய்யப்பட்டது. இப்போது தேனி அருகே பெரிய அளவில் ஆய்வுக்கூடம் அமைக்கப்படுகிறது.

எலெக்ட்ரான் பற்றி அனைவருக்கும் தெரியும். எலெக்ட்ரான் துகளே மிகமிக நுண்மையானது. நியூட்ரினோ அதையும்விட நுண்மையானது. எலெக்ட்ரான் நேர் மின்னேற்றம் கொண்டது. நியூட்ரினோவுக்கு எந்த மின்னேற்றமும் கிடையாது. மிக மிகச் சிறியது என்பதாலும், மின்னேற்றம் இல்லை என்பதாலும் நியூட்ரி னோக்களால் எதையும் துளைத்துச் செல்ல முடிகிறது.

சூரியனில் நான்கு ஹைட்ரஜன் புரோட்டான்கள் சேர்ந்து ஹீலியம் என்ற வேறு பொருளாக மாறுகிறது. இதுவே அணுச் சேர்க்கை. இதன் பலனாகத்தான் பூமிக்கு ஒளியும் வெப்பமும் கிடைக்கின்றன. இந்த அணுச்சேர்க்கையின்போதுதான் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 60 கோடி டன் ஹைட்ரஜன் ஹீலியமாக மாறு கிறது. ஆகவேதான் அங்கிருந்து கோடிக்கோடிக் கணக்கான நியூட்ரினோக்கள் பூமிக்கு வருகின்றன.


நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:18 pm

நியூட்ரான் வேறு; நியூட்ரினோ வேறு!

இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். நியூட்ரினோ வேறு. நியூட்ரான் வேறு. நியூட்ரான்கள் அனேகமாக எல்லா அணுக்களிலும் மையப்பகுதியில் வெவ்வேறு எண்ணிக்கையில் இருப்பவை. நாம் குடிக்கும் தண்ணீரிலும் நியூட்ரான்கள் உள்ளன. பொதுவில் இவை அணுக்களுக்குள்ளாகச் சமர்த்தாக இருப்பவை. சில சந்தர்ப்பங்களில் இவை வெளியே வந்து தாக்கினால் உடலுக்குக் கடும் தீங்கு நேரிடும். இத்துடன் ஒப்பிட்டால் நியூட்ரினோக்கள் பரம சாது. அவை எந்தத் தீங்கையும் ஏற்படுத்துவதில்லை.

பகல் நேரத்தில் சூரியனிலிருந்து வரும் நியூட்ரினோக்கள் நமது உடலைத் துளைத்துக்கொண்டு பின்னர் பூமியையும் துளைத்துச் செல்கின்றன. எனவே, பகலில்தான் நியூட்ரினோக்கள் நம் உடல் வழியே செல்கின்றன என்று நினைத்துவிடக் கூடாது. நமக்கு இரவு என்றால், அமெரிக்காவில் பகல். அப்போது நியூட்ரினோக்கள் அமெரிக்கரின் உடல் வழியே பாய்ந்து பூமியைத் துளைத்து நம்மைத் துளைத்துச் செல்கின்றன. பகலில் நம் தலைக்கு மேலிருந்து வருகின்றன. இரவில் நிற்கையில் காலுக்கு அடியிலிருந்து வருகின்றன.

தேனி ஆய்வுக்கூடம்பற்றி விவரமாகத் தெரியாமல் இருந்த காலகட்டத்தில் நியூட்ரினோக்களால் பாறை உருகிவிடும் என்றும் நியூட்ரினோக்கள் நிலநடுக்கத்தை உண்டாக்கலாம் என்றும் தகவல்கள் கிளம்பின. அப்படி நடப்பதாக இருந்தால், இமயமலை என்றோ உருகியிருக்க வேண்டும். தினமும் நிலநடுக்கம் நிகழ வேண்டும். ஆனால், அப்படி எதுவும் ஏற்பட்டுவிடவில்லை.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தைக் கட்டி முடிக்கும் வரை தற்காலிக அளவில் ஓரளவு சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அது உண்மைதான். அது கடுமையானதா அல்லது ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்பதை வைத்து வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. அது தனி விஷயம்.

சரி, நியூட்ரினோக்களை ஏன் ஆராய வேண்டும்? நியூட்ரினோ என்று ஒன்று இருப்பதாலேயே அதுபற்றி ஆராய வேண்டும். இதுதான் விஞ்ஞானிகள் கூறும் பதில். நியூட்ரினோ என்பது அடிப்படையான துகள்களில் ஒன்று. மற்ற துகள்கள்பற்றி ஏற்கெனவே அறிந்துகொண்டுள்ளது போலவே நியூட்ரினோ பற்றியும் அறிந்துகொள்ள விஞ்ஞானிகள் விரும்புகிறார்கள்.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:19 pm

என்ன பயன்?

நியூட்ரினோ பற்றிய ஆராய்ச்சியால் மக்களுக்கு ஏதேனும் பலன் இருக்குமா என்பது மற்றொரு கேள்வியாகும். ஜே.ஜே. தாம்சன் என்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி 1897- ல் முதன்முதலில் எலெக்ட்ரான் என்ற அடிப்படைத் துகளைக் கண்டுபிடித்தார். அப்போது இந்தக் கண்டுபிடிப்பால் பெரிய பலன் இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இன்றோ எலெக்ட்ரானிக்ஸ் என்பது பெரிய துறையாக வளர்ந்து, எண்ணற்ற மின்னணுக் கருவிகள் பயனுக்கு வந்துள்ளன. கணிப்பொறிகளும் கைபேசிகளும் இதில் அடக்கம்.

ஆகவே, நியூட்ரினோ ஆராய்ச்சியால் உடனடிப் பலன் இருக்குமா என்பதுபற்றித் திட்டவட்டமாக எதுவும் கூற முடியாது. அடிப்படையான ஆராய்ச்சி என்பது உடனடிப் பலனை எதிர் பார்த்துச் செய்யப்படுவது அல்ல.

எனினும், அமெரிக்காவில் நடந்த ஓர் ஆராய்ச்சியின்போது, நியூட்ரினோ துகள்களை உண்டாக்கி அவற்றைச் சில எழுத்துகளைக் கொண்ட ஒரு சொல்லாக மாற்றி 800 மீட்டர் குறுக்களவுள்ள பாறை வழியே செலுத்தியபோது, அந்தச் சொல் மறுபுறத்தில் அதே சொல்லாக வந்து சேர்ந்தது. எனவே, எதிர்காலத்தில் தகவல் தொடர்புக்கு ஒருவேளை நியூட்ரினோக்களைப் பயன்படுத்த முடியலாம். இதுகுறித்து இன்னும் நிறைய ஆராய்ச்சி செய்யப்பட வேண்டியுள்ளது.

நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வருவதாகச் சொன்னோம். நடுப் பகலில் புறங்கையைக் காட்டினால் கட்டை விரல் நகம் வழியே மட்டும் வினாடிக்கு 6,500 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன. நியூட்ரினோக்கள் எதையும் துளைத்துச் செல்பவை. சொல்லப் போனால் பத்து பூமிகளை அடுக்கி வைத்தாலும், அந்தப் பத்து பூமிகளையும் நியூட்ரினோக்கள் துளைத்துக்கொண்டு மறுபக்கம் சென்றுவிடும்.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:19 pm

எப்படிப் பிடிப்பது?

நியூட்ரினோக்களை எதனாலும் தடுத்து நிறுத்த முடியாது. அப்படியானால், நியூட்ரினோக்களை எப்படிப் ‘பிடித்து’ ஆய்வு செய்கிறார்கள்? நியூட்ரினோக்களைப் பிடிக்க ‘கண்ணி’எதுவும் கிடையாது. இரவில் பாலைக் குடிக்க வந்த பூனையை விரட்டும்போது, அது தப்பிச் செல்லும்போது பாத்திரங்களை உருட்டிச் செல்கிறது. அதுபோல நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்லும்போது மிக அபூர்வமாகச் சில அணுக்களை ஒரு தள்ளு தள்ளிவிட்டுச் செல்கின்றன. அல்லது அணுக்களைச் சுற்றியுள்ள எலெக்ட்ரான்கள் மீது மோதித் தள்ளிவிட்டுச் செல்கின்றன.

நியூட்ரினோக்கள் இப்படி ‘உதைத்துத் தள்ளுவதால்’ ஏற்படும் விளைவுகளைக் கண்காணிக்க நுட்பமான கருவிகள் உள்ளன. அக்கருவிகளில் பதிவாகும் தகவல்களை வைத்து நியூட்ரினோக் களின் தன்மைகளை அறிவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

நியூட்ரினோக்கள் ஏற்படுத்தும் விளைவுகளைக் கண்டறிவதற்கு வெவ்வேறான பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஜப்பானில் மிக சுத்தமான தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. கனடாவில் உள்ள ஆய்வுக்கூடத்தில் கனநீர் பயன்படுத்தப்படுகிறது. ரஷ்யாவில் பைகால் ஏரிக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் உள்ளது. இத்தாலிக்கு அருகிலும் கடலுக்கு அடியில் ஓர் ஆய்வுக்கூடம் உள்ளது. பனிக்கட்டியால் நிரந்தரமாக மூடப்பட்ட அண்டார்டிகாவில் பனிக்கட்டிக்கு அடியில் பெரியதொரு ஆய்வுக்கூடம் சில ஆண்டுக் காலம் செயல்பட்டது.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:20 pm

தேனி ஆய்வுக்கூடம்

இந்தியாவில் தேனியில் அமையும் நியூட்ரினோ ஆய்வுக் கூடத்தில் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட இரும்புத் தகடுகள் பயன்படுத்தப்படும். இவற்றின் மொத்த எடை 50 ஆயிரம் டன். இரும்புத் தகடுகளுக்கு நடுவே சீலிடப்பட்ட கண்ணாடிக் கூடுகளில் பதிவுக் கருவிகள் இருக்கும். அமெரிக்காவில் மின்னிசோட்டா நகருக்கு அருகே ஒரு சுரங்கத்தின் அடியில் அமைக்கப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வுக் கூடத்திலும் இதே போல இரும்புத் தகடுகள் (எடை 5,400 டன்) பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் ஒப்பிட்டால் தேனி நியூட்ரினோ ஆய்வுக்கூடம் மிகவும் பெரியது.

போகிறபோக்கில் நியூட்ரினோக்கள் விளைவுகளை ஏற்படுத்திச் செல்வதாகக் குறிப்பிட்டோம். கோடானு கோடி நியூட்ரினோக்கள் பாய்ந்து சென்றாலும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் ஒரு நாளில் மூன்றுகூட இராது. பெரும்பாலான நியூட்ரினோக்கள் எதன் மீதும் மோதாமல் அணுவுக்குள்ளும் ஊடுருவிச் சென்றுவிடுவதே அதற்குக் காரணம். அப்படியும்கூட விஞ்ஞானிகள் விடுவதாக இல்லை.

நியூட்ரினோக்கள் பற்றி விஞ்ஞானிகள் அப்படி என்ன கண்டுபிடிக்க விரும்புகிறார்கள் என்று கேட்கலாம். நியூட்ரினோக் களுக்கு நிறை என்பது (மாஸ்) கிடையாது என்று ஒரு சமயம் கருதப்பட்டது. ஆனால், அவற்றுக்கு மிக நுண்ணிய அளவில் அதாவது, எலெக்ட்ரான் எடையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கு அளவுக்கு எடை இருக்கலாம் என்று பின்னர் ரஷ்யாவில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தெரியவந்தது.

சூரியனில் உற்பத்தியாவதை சோலார் நியூட்ரினோக்கள் என்று குறிப்பிட்டாலும் அவை எலெக்ட்ரான் நியூட்ரினோக்களே. இவை அல்லாமல் மியுவான் நியூட்ரினோ, டாவ் நியூட்ரினோ என்ற வேறு வகை நியூட்ரினோக்கள் உள்ளன. இவை பற்றியும் தேனி ஆய்வுக்கூடத்தில் விரிவாக ஆராயப்படும்.

பிரபஞ்சம் பற்றி மேலும் விரிவாக அறியவும் அதே போல சூரியன் பற்றி மேலும் அறிந்துகொள்ளவும் நியூட்ரினோ ஆய்வுகள் உதவும் என்று கருதப்படுகிறது.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:20 pm

தேனியைத் தேர்ந்தெடுத்தது ஏன்?

உலகில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங்கள் சுரங்கங்களுக்கு அடியில் அமைந்துள்ளன. அல்லது மலையில் சுரங்கப்பாதை அமைத்து அதற்குள்ளாக அமைந்துள்ளன. இதற்குக் காரணம் உண்டு.

காற்று மண்டலத்தில் பல வகையான துகள்கள் உள்ளன. ஆகவே, நியூட்ரினோ விளைவுகளைப் பதிவதற்கான கருவிகளில் நியூட்ரினோ துகள்கள் மட்டுமே வந்து சேர வேண்டும் என்பதில் விஞ்ஞானிகள் குறியாக இருக்கிறார்கள். வேறு துகள்கள் பதிவானால் ஆய்வின் நோக்கமே கெட்டுவிடும். சுரங்கத்துக்கு அடியில் ஆய்வுக்கூடம் அமைத்தால் பிற துகள்கள் பாறை அடுக்குகளால் வடிகட்டப்பட்டுவிடும். நியூட்ரினோ துகள்கள் எதையும் துளைத்துச் செல்பவை என்பதால், அவை மட்டும் பாறைகளைத் துளைத்துக்கொண்டு பிரச்சினையின்றி வந்து சேரும்.

தேனி அருகே உள்ள குன்று தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், இந்தியாவில் இமயமலை வட்டாரத்திலும் பிற இடங்களிலும் பாறைகள் உருமாறிய, படிவுப் பாறைகளாக உள்ளன. ஆனால், நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க, இரும்பை உருக்கி வார்த்த கட்டிபோல ஒரே வகைப் பாறையிலான குன்றாக இருக்க வேண்டும். உறுதியான, கடினமான, பாறையாக இருக்க வேண்டும். அருகே பெரிய நகரம் இருக்க வேண்டும். அதிக மழை கூடாது. பூகம்ப வாய்ப்பு இருத்தல் கூடாது. கூடிய வரை பூமியின் நடுக்கோட்டுக்கு அருகே இருக்க வேண்டும். இப்படியான அம்சங்களை வைத்து இடம் தேடப்பட்டது. நாட்டின் பிற இடங்களில் உள்ள பாறைகளுடன் ஒப்பிட்டால், தென்னிந்தியாவில் உள்ள பாறைகள் மிகப் பழமையானவை. தரமானவை.

முதலில் நீலகிரிக்கு அருகே ஓர் இடம் தேர்வு செய்யப்பட்டது. அது வனவிலங்குகள் நடமாடும் இடமாக இருந்ததால் ஆட்சேபம் எழுப்பப்பட்டது. ஆகவே, அந்த இடம் கைவிடப்பட்டது. தேனி அருகே அமைந்துள்ள குன்று மேற்படியான எல்லா அம்சங்களையும் பூர்த்திசெய்ததால் அது தேர்ந்தெடுக்கப்பட்டது.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:20 pm

பூமிக்கு ஒரு எக்ஸ்ரே

எதிர்காலத்தில் ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடங் களிலிருந்து தேனி நியூட்ரினோ ஆய்வுக் கூடத்துக்கு பூமியின் வழியே நியூட்ரினோக்கள் அனுப்பப் படலாம். அவை தேனி ஆய்வுக் கூடத்தில் பதிவாகும்.

இப்படி அனுப்பும்போது நியூட்ரினோக்கள் பூமியின் மையப் பகுதியைக் கடந்து வந்தாக வேண்டும். இதன் மூலம் பூமியின் மையப் பகுதி எவ்விதமாக உள்ளது என்பது பற்றி அறிய முடியலாம் என்று கருதப்படுகிறது. இது பூமியை எக்ஸ்ரே எடுப்பது போன்றதே.

நியூட்ரினோக்கள் சூரியனிலிருந்து வருவதாகச் சொன்னோம். நடுப் பகலில் புறங்கையைக் காட்டினால் கட்டை விரல் நகம் வழியே மட்டும் வினாடிக்கு 6,500 கோடி நியூட்ரினோக்கள் ஊடுருவிச் செல்கின்றன.

எவ்வளவு வகை நியூட்ரினோக்கள் உள்ளன?

சூரியனிலிருந்து மட்டுமின்றி நட்சத்திரங்களிலிருந்தும், பெரு நட்சத்திரங்கள் வெடிப்பிலிருந்தும் (சூப்பர்நோவா) நியூட்ரினோக்கள் வருகின்றன. விண்வெளியில் எங்கிருந்தோ வரும் அண்டவெளிக் கதிர்கள் (காஸ்மிக் ரேய்ஸ்) பூமியின் காற்று மண்டலத்தில் உள்ள அணுக்களைத் தாக்கும்போதும் நியூட்ரினோக்கள் தோன்றுகின்றன. இவை காற்றுமண்டல நியூட்ரினோக்கள் எனப்படுகின்றன. கோலார் தங்கச் சுரங்கத்தில் 1965-ம் ஆண்டில் நடந்த ஆராய்ச்சியின்போதுதான் இவ்வித நியூட்ரினோக்கள் இருப்பது முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

பூமிக்குள் யுரேனியம் போன்ற கதிரியக்கத் தனிமங்கள் உள்ளன. இவை இயற்கையாகச் சிதையும்போது சிறு அளவில் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. தவிர, அமெரிக்காவில் சிகாகோ அருகிலும், ஐரோப்பாவில் ஜெனீவா அருகிலும் பாதாளத்தில் அமைந்த ஆராய்ச்சிக் கூடங்களில் அடிப்படைத் துகள்களை அதிவேகத்தில் பாயச் செய்யும் ராட்சதத் துகள் முடுக்கிகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி, புரோட்டான்களிலிருந்து நியூட்ரினோக்களைப் பிரித்தெடுக்க முடியும். அதாவது, நியூட்ரினோக்களை உற்பத்தி செய்ய முடியும்.

தேனியில் அமையவிருக்கும் ஆய்வுக்கூடம் முதலில் காற்றுமண்டல நியூட்ரினோக்களை ஆராயும். பின்னர், இதர நியூட்ரினோக்களையும் ஆராயும்.



நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Sun Apr 12, 2015 2:22 pm

பூமி வழியே நியூட்ரினோ பார்சல்

ஜெனீவா அருகே நிலத்துக்கு அடியில் பிரம்மாண்டமான துகள் முடுக்கி இயந்திரம் உள்ளது. அங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் இத்தாலியில் மலைக்கு அடியில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் உள்ளது. ஜெனீவாவில் நியூட்ரினோக்களை உற்பத்தி செய்து, அவற்றை இத்தாலியில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு ‘பார்சல்’ அனுப்பி ஆராய்ச்சி செய்துவருகின்றனர். நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகள் வழியே நியூட்ரான்கள் செல்லக்கூடியவை என்பதால், இதற்கெனத் தனிச் சுரங்கப் பாதை தேவையில்லை.

அமெரிக்காவில் சிகாகோ அருகே உள்ள பெர்மிலாப் ஆய்வுக்கூடத்திலிருந்து இதே போல சில நூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மின்னிசோட்டா நியூட்ரினோ ஆய்வுக்கூடத்துக்கு நியூட்ரினோக்களை அனுப்பிவருகின்றனர். ஜப்பானிலும் இதே போல நிலத்துக்கு அடியில் பாறைகள் வழியே நியூட்ரினோக்களை அனுப்பி ஆராய்கின்றனர்.

ஜெனீவா பரிசோதனைகளின்போது 2011-ல் ஒரு குழப்பம் ஏற்பட்டது. ஜெனீவாவி லிருந்து இத்தாலிக்கு வந்துசேரும் நியூட்ரி னோக்கள் ஒளி வேகத்தை மிஞ்சும் வேகத்தில் செல்வதாகக் கருவிகள் காட்டின. எதுவுமே, ஒளி வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்ல முடியாது என்று மேதை ஐன்ஸ்டைன் 1905-ல் ஆண்டில் திட்டவட்டமாகக் கூறி யிருக்கிறார். நியூட்ரினோக்கள் அதைப் பொய்ப்பித்துவிட்டனவோ என்று சில விஞ்ஞானிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

கடைசியில் நியூட்ரினோக்களின் வேகத்தைப் பதிவுசெய்யும் கருவி களில்தான் கோளாறு என்பது மறு ஆண்டில் தெரியவந்தது. ஐன்ஸ்டைன் கூறிய கொள்கை சரியானதே என்பது நிரூபிக்கப்பட்டது.

‘சட்டை மாற்றும்’

நியூட்ரினோக்கள் சூரியனில் ஒவ்வொரு வினாடியும் எவ்வளவு சோலார் (எலெக்ட்ரான்) நியூட்ரி னோக்கள் உற்பத்தியாகின்றன என்று விஞ் ஞானிகள் கணக்குப் போட்டு வைத்திருந் தனர். அங்கிருந்து எவ்வளவு சோலார் நியூட்ரினோக்கள் பூமிக்கு வந்துசேர்கின்றன என்று 1968-ல் பரிசோதனைகள் மூலம் ஆராய்ந்தபோது, மூன்றில் ஒரு பங்கு நியூட்ரினோக்களே வந்துசேர்வதாகக் கருவிகள் காட்டின. பல இடங்களில் நடத்திய பரிசோதனைகளிலும் இதே விடைகள்தான் கிடைத்தன. சூரியனில் நிகழும் அணுச் சேர்க்கை பற்றித் தாங்கள் போட்ட கணக்கு தவறோ என்று என்று விஞ்ஞானிகள் சிந்திக்க முற்பட்டார்கள். ‘காணாமல் போன’ நியூட்ரினோக்கள் விஞ்ஞானிகளைக் குழப் பத்தில் ஆழ்த்தின.

ரயில் ஏறும் பயணிகள் நடுவழியில் சட்டை மாற்றிக்கொள்வதுபோல சூரியனி லிருந்து கிளம்பும் சோலார் நியூட்ரினோக் களில் பலவும் நடுவழியில் டாவ் நியூட்ரினோ அல்லது மியுவான் நியூட்ரினோக்களாக மாறுகின்றன என்பது 2002 வாக்கில் கண்டு பிடிக்கப்பட்டது. அந்த நியூட்ரினோக்களையும் சேர்த்து எண்ணியபோது கணக்கு சரியாக வந்தது.

தேனியில் அமையும் ஆய்வுக்கூடத்தில் நியூட்ரினோக்கள் இப்படி மாறுவதுகுறித்தும் ஆராயப்படும்.

என். ராமதுரை
தி இந்து
நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Purple10


நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by ராஜா Sun Apr 12, 2015 3:06 pm

என்னமோ சொல்லுறாங்க ஒண்ணுமே புரியல.

நடப்பது நடந்தே தீரும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by சிவா Mon Apr 13, 2015 12:27 pm

நியூட்ரினோ திட்டத்தால் நமக்கு ஒரு வாட்ச்மேன் வேலை கூட கிடைக்காது...!

கடந்த மார்ச் 26 ஆம் தேதி நியூட்ரினோ திட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை. அதனை தொடர்ந்து, தங்கள் குல தெய்வ கோவிலில் வழிபாடு, திட்டத்திற்கு முழுதடை விதிக்க நியூட்ரினோ ஆய்வக முற்றுகை என நியூட்ரினோ திட்டத்தை எதிர்க்க மக்கள் முழு மூச்சோடு இறங்கினார்கள். அதன் ஒரு பகுதியாக பூவுலகின் நண்பர்கள் மற்றும் நாணல் நண்பர்கள் இணைந்து மக்களுக்கான அறிவியல் பேரவையின் கீழ் ''நியூட்ரினோ என்பது அறிவியலா" என்ற தலைப்பில் தேனி வாசவி மஹாலில் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய கலிலியோ அறிவியல் மையத்தை சேர்ந்த சத்யமாணிக்கம், ''நியூட்ரினோ, அணு உலை, மீத்தேன் போன்ற அறிவியல் வார்த்தைகளையெல்லாம் போராட்ட வார்த்தைகளாக போதித்த அரசுக்கு முதலில் நன்றியை தெரிவிப்போம். இந்த திட்டத்தால், இங்குள்ள கிரம மக்களுக்கு வேலை தரப்படும் என முதலில் சொல்லியிருக்கிறார்கள். தேவாரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் வேலை கிடையாது என விஞ்ஞானி தா.வி.வெங்கடேஷ்வரன் கூறினார். கடந்த வாரம் திட்ட இயக்குனர் நபா மண்டல் கிராம மக்களுக்கு வேலை தருவதாக சொல்கிறார்கள்.

யார் சொல்வதை நம்புவது? எப்போது வேண்டுமானாலும் மக்கள் உள்ளே போய் பார்க்கலாம் என்கிறார்கள். கொடைக்கானலில், சூரியனில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகளை ஆராய்ச்சி செய்யக்கூடிய ஆய்வகத்தின் உள்ளே போக ஏகப்பட்ட வரையறைகள் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக பேசப்பட்டு வந்த திட்டத்தில் வேலை செய்யும் விஞ்ஞானிகள் ஒருவர் கூட கிராம மக்களை சந்தித்து பேசியதில்லை. இதைகேட்டால், அது எங்க வேலை இல்லை என்கிறார்கள். இதை எதிர்த்து எங்கள் போராட்டம் தொடரும்" என்றார்.

தேவாரம் பகுதியை சேர்ந்த விவசாயி மாறன், ''இந்தியாவில் கிடைக்கும் இட ஒதுக்கீட்டில் படித்து, சலுகைகளை அனுபவித்து, பட்டம் பெற்ற விஞ்ஞானிகள் தங்களுடைய ஆய்வறிக்கைகளை ஆங்கிலத்தில் மட்டுமே எழுதி, அதனை அமெரிக்காவில் சமர்பித்துவிட்டு வந்து இங்கே இந்தியா வல்லரசு ஆங்குமென்றால் எப்படியாகும்? இந்திய விஞ்ஞானிகள் மட்டுமே கண்டுபிடித்ததாக சொல்லப்படும் நியூட்ரினோ திட்டத்தை பற்றி இந்திய விஞ்ஞானிகள் 2010லிருந்து பேசுகிறார்கள். ஆனால், அமெரிக்கா அதனை 1930லேயே நியூட்ரினோக்களை கண்டறிந்து, 1950களில் அதற்கான ஆய்வுகளை துவக்கிவிட்டது.

ஆக, இது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட திட்டம் அல்ல. நியூட்ரினோவிற்கு முதன் முதலில் பெயர் வைத்தவரும், அணுகுண்டை முதன்முதலில் தயாரித்தவருமான ஹென்றிகோ பெர்மி என்பவரின் நினைவாக பெர்மி லேப் என்ற அமெரிக்க தேசிய விஞ்ஞான ஆய்வகம் 68 ஆயிரம் ஏக்கரில் அமெரிக்காவில் உள்ளது. இயற்கையான நியூட்ரினோக்களுக்கு அடர்த்தி, நிறை, மின்னூட்டம் ஆகியவை இல்லை என ஆரம்பத்தில் விஞ்ஞானிகள் சொல்லி வந்தனர். அதன்பின் சில அரிதான சமயங்களில் நிறை, மின்னூட்டம் ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும் போன்ற ஆய்வுகளும் வந்தன. அவற்றின் பண்புகளில் மாற்றத்தால் ஒரு வகையிலிருந்து இன்னொரு வகை நியூட்ரினோக்களாக மாற்றமடைதல், பிற பொருட்களுடன் சேர்தல் ஆகியவற்றால், அவற்றின் ஒத்த பண்புகளை ஓரிடத்தில் சீராக குவிக்க இயலவில்லை போன்ற காரணங்களால் விஞ்ஞானிகள் எதிர்பார்த்த முடிவுகள் இந்த இயற்கை நியூட்ரினோக்களில் சாத்தியமில்லை என உணர்ந்து செயற்கை நியூட்ரினோக்களை உருவாக்கினர்.

இந்த செயற்கை நியூட்ரினோவிற்கு அடர்த்தி, வேகமாக செயல்படும் திறன் ஆகியவை உண்டு என்பதோடு அதனை கற்றையாக்கில் மிகநீண்ட தூரம் பயணிக்க வைக்கலாம். இதன்மூலம் தொழிற்சாலை உருவாக்கும் நியூட்ரினோக்களை முடுக்கி பூமிக்கடியில் செலுத்தி எங்கோ இருக்கும் ஒரு உணர் கருவியின் மூலம் உணர வைக்க செய்யலாம். இதற்கு, LONG BASELINE NUETRINO EXPERIMENT என்று பெயர். தற்போது, DEEP UNDERGROUND NUETRINO EXPERIMENT என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக செயற்கை நியூட்ரினோக்களை தொழிற்சாலையிலிருந்து குறைந்த தொலைவில் உள்ள ஆய்வகத்து அனுப்புதல், அதன்பிறகு அதிக தொலைவிற்கு அனுப்புதல் என திட்டங்களை வகுத்தனர்.

முதல்கட்டமாக பெர்மி லேப் என்ற நியூட்ரினோ தொழிற்சாலையிலிருந்து, அமெரிக்காவிலுள்ள சான் ஃபோர்டு என்னுமிடத்திற்கு 1,400 கிலோ மீட்டர் அனுப்ப முடிவு செய்தபோது 800 மில்லியன் டாலர் தேவைப்பட்டது. ஆனால், அமெரிக்க எரிசக்தி துறை ஒதுக்கீடு செய்ததோ 486 மில்லியன் டாலர் மட்டுமே. பெர்மி லேப்–பின் இயக்குனரான W.F.ப்ரிங் மேன், அணு சக்தி துறை செயலாளருக்கு எழுதியுள்ள கடித்ததில் இந்த தொகை போதாது என எழுதியுள்ளார். அதற்காக, உலக நாடுகளை சேர்த்துக்கொள்ளாலாம் என்ற முடிவு அப்போது பெறப்பட்டது. மீதிதொகைக்கான உலகிலுள்ள நாடுகளை கூட்டு சேர்ந்துக்கொள்ளலாம் என டிசம்பரில் ஒப்பந்தம் கையெழுத்தாக, 2013 ஆம் ஜனவரி மாதம் இந்தியா அதனுடன் சேர்ந்தது.

இதனை, மதுரையை சேர்ந்த ராஜசேகர் என்ற விஞ்ஞானி 2003 ஆம் ஆண்டு கலிபோர்னியா மாகாணத்தில் ஐ.என்.ஓ. என்பது நீண்ட தூரத்திலிருந்து செயற்கையான நியூட்ரினோக்களை பெறும் உணர்கருவி எனப் பெயரிட்டு அதன் கீழே பெர்மி லேபிலிருந்து நம் நாட்டில் அப்போது அமைக்கவிருந்த மேற்கு வங்கத்தின் கம்மம் மற்றும் தமிழகத்தின் பகுதிக்கும் இடையே உள்ள தொலைவு, சுவிட்சர்லாந்தில் உள்ள CERN ஆய்வ்கத்திலிருந்து வரை உள்ள தொலைவுகள் அனைத்தையும் குறிப்பிட்டுள்ளார். ஐ.என்.ஓ. திட்ட இயக்குனர் நபா மண்டலும், மும்பையில் இந்துமதியும் இதையே விளக்கியுள்ளனர். உலகின் அனைத்து பகுதிகளிலிருந்து செயற்கை நியூட்ரினோக்களை ஈர்க்கத்தான் 50 ஆயிரம் டன் எடையுள்ள காந்தத்தை வைத்துள்ளனர்.

அதோடில்லாமல் பெர்மி லேப் அருகில் ஒரு சிறிய ஆய்வகத்தையும் இந்தியா உருவாக்கி, அவர்களுக்காக நாம் தரப்போகிறோம். இதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த செயற்கை நியூட்ரினோக்கள் மூலம் பூமிக்கடியில் உள்ள அணு ஆயுதங்களை அழிக்கலாம். அந்த இடம் தெரியாமல் உருக்குலைக்க செய்யலாம் என்பதே இவற்றின் பயன். அதனை அமெரிக்கா அடையும்" என்றார்.

அணு உலைக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான முகிலன் பேசும்போது, ''கூடங்குளம் அணு உலை பூங்கா, மீத்தேன், தாதுமணல் கொள்ளை போன்ற அழிவுகளை ஒரு இடத்தில் கூட பேசாத சி.பி.எம். தோழர்கள், நியூட்ரினோ திட்டம் பற்றி மட்டும் ஆர்வமாக பேசுவதன் காரணம் என்ன? கல்லூரிகளில் நியூட்ரினோ குறித்த விளக்க கூட்டங்கள் நடந்தபோது, நியூட்ரினோவிற்கு எதிரானவர்களின் கருத்துக்களை அறிய முற்படாமல் இருந்ததன் நோக்கம் என்ன? 1965 ஆம் ஆண்டிலேயே கோலார் சுரங்கத்தில் நியூட்ரினோ ஆய்வகப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், தங்க வயல் மூடப்பட்டதும் அந்த ஆய்வகத்திட்டமும் மூடபட்டது.

எந்த தடையும் இல்லாத நிலையில், ஆய்வகத்தினை தொடர்ச்சியாக இயக்கி இருக்கலாமே? இந்த பகுதியும், இடுக்கி அணை உள்ள பகுதியும் நிலநடுக்கம் உள்ள பகுதியில் நிலை மூன்றில் வருகிறது. ஆனால், இவர்கள் அதனை நிலை இரண்டாக மாற்றி காட்டியுள்ளனர். இதுதான் அறிவியலா? திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தோல் கழிவுகள், சாயப்பட்டறை கழிவுகளால் ஏகப்பட்ட பிரச்னைகள் வருகின்றன. அவற்றை சுத்திகரிப்பு செய்து மண்ணை காப்பாற்ற நினைக்காத அரசு, இந்த திட்டத்தினை கொண்டுவர பல கோடிகள் ஒதுக்குவது ஏன்" என்று கொதித்தார்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜன், ''இயற்கை நியூட்ரினோக்களுக்கு ஆற்றல், அடர்த்தி, இலக்கினை நோக்கி தாக்கும் திறன் ஆகியவை குறைவு. அதே நேரம், செயற்கை நியூட்ரினோக்களுக்கு இத்தகைய பண்புகள் அதிகம். அதிக ஆற்றல் உடைய நியூட்ரினோக்கள் மற்ற துகள்களுடன் வினைபுரியும் தன்மையுடவை. அத்தகைய பண்புகளை உடைய நியூட்ரினோக்களை தான் இங்கே ஆய்வு செய்ய போகிறார்கள்.

நம்முடைய இந்தியா தழைத்தோங்க மேற்கு தொடர்ச்சி மலை அவசியம். இது ஐ.நா. சபையின் பாதுக்காக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், இரு நாடுகளுக்கும் இடையே சண்டை ஏற்பட்டால் கூட இந்த பகுதிகளில் குண்டுகள் வீசக் கூடாது. ஒரு மரத்தை கூட வெட்டக் கூடாது. காட்கில் கமிட்டியும், கஸ்தூரி ரங்கன் கமிட்டியும் இதையே சொல்கிறது. இப்படிப்பட்ட பகுதியில், எட்டு முதல் பத்து லட்சம் எடையுள்ள பாறைகளை உடைப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

இந்த திட்டத்திற்கான சுற்றுசூழல் தாக்கீது அறிக்கையை கோவையை சேர்ந்த சலீம் அலி நிறுவனத்திடம் பெற்றுள்ளார்கள். அந்த நிறுவனம், இந்த ஆய்வறிக்கையை தாக்கல் செய்யவதற்கான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமே கிடையாது. இங்கே நடக்கும் எந்த திட்டத்திற்கும், எங்களால் உறுதி அளித்து அங்கீகாரம் அளிக்க முடியாது. எங்களுடைய அறிக்கைக்கு மட்டும் அங்கீகாரம் அளிக்கிறோம். அங்கே வெடி வைப்பது, மலையை உடைக்கும்போது ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை நாங்கள் ஆய்வு செய்யவில்லை எனவும் சொல்லியிருக்கிறார்கள். பல்லுயிர் தன்மையை பாதிக்குமா என்பது மட்டுமே அவர்களுடைய ஆய்வு.

வரும் காலத்தில் நியூட்ரினோ ஆயுதங்கள் உண்டாக வாய்ப்புள்ளது. இந்த நியூட்ரினோ ஆயுதங்களை பயன்படுத்தி அணு ஆயுங்களை அழிக்கலாம். அப்படி அணு ஆயுதங்களை அழிக்க, அணுக்கழிவுகள் தேவை. அதனால், உலக நாடுகளிலிருந்து அணுக்கழிவுகள் இங்கே கொண்டு வந்து கொட்டப்படும் என்பதே உண்மை. இங்கே வெறும் 20 குடும்பங்கள் மட்டுமே தங்கப்போகிறார்கள். அவர்கள் அனைவரும் விஞ்ஞானிகள். இங்கே நமக்கு ஒரு வாட்ச் மேன் வேலை கூட கிடைக்காது என்பது உறுதி. ஒரு மணி நேரத்திற்கு 3,000 யூனிட் மின்சாரமும், ஒரு நாளைக்கு 3.5 லட்சம் லிட்டர் தண்ணீரும் இங்கே பயன்படுத்த போகிறார்கள். இது நமக்கான நீர், மின்சாரம். இது தொடர்பாக நாங்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடந்துள்ளோம். நீதிமன்றத்திலும் போராட வேண்டும், மக்கள் மன்றத்திலும் போராட வேண்டும். அதனால், தொடர்ச்சியாக போராடுவோம்" என்றார்.

உ.சிவராமன்


நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நியூட்ரினோ என்னும் புதிரான துகள் Empty Re: நியூட்ரினோ என்னும் புதிரான துகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum