ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Page 1 of 2 1, 2  Next

Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:39 pm

கோடையை குளிர்விக்கும் பீச் பழம் !

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! HVSFEb20RcSIZw76UQXS+ht2475

பீச் பழங்களின் பூர்வீகம் சீனா என்றாலும் குளிர் காலத்தில் பெரும்பாலான நாடுகளில் பயிரிடப்படுகிறது. பீச் பழத்தில் உள்ள ஆரோக்கிய நலன்களை ஆராய்ச்சியாளர்கள் பல ஆராய்ச்சிக்கு பின்பு தெரியபடுத்தி இருக்கின்றனர். இது கோடைக்கால பழங்களில் ஒன்று. பீச் பழங்களை ஸ்டோன் பழங்கள் என அழைக்கின்றனர். மேலும் பிளம்ஸ், செர்ரி பழங்கள், நெக்ட்ரைன் போன்றவையும் ஸ்டோன் ப்ரூட் பழங்களை சார்ந்தவையே.

பீச் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகமுள்ளதால் இந்த பழத்தை வைத்து ஃபேசியல் செய்தால் சரும சுருக்கங்கள் நீங்குவதோடு சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சுத்தமாகவும் முகம் பொலிவுடனும் இருக்கும்.பீச்பழத்துடன் முட்டையின் வெள்ளை கருவை சேர்த்து முகத்திற்கு போட்டால் முகத்தில் கலர் மாற்றங்கள் ஏற்படும் பொதுவாக பீச் பழங்கள் முடி உதிர்வதை கட்டுபடுத்தும்.

பீச் பழங்கள் தொற்று நோய்கள், இதயநோய்கள் ஆகியவற்றை குணபடுத்தி இரத்த ஒட்டத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுபாட்டுக்குள் வைத்துக்கொள்கிறது. கீழ்வாதம், ரூமட்டிக் நோயால் அவதி படுகின்றவர்கள் பீச் பழத்தின் மூலம் தீர்வு காண முடியும். வலிப்போடு கூடிய இருமல் இருப்பவர்களுக்கு பீச்பழத்தில் தேநீர் தயாரித்து பயன்படுத்துகையில் அதிக செயல் திறன் மிக்கதாக உள்ளது.

பீச் பழங்கள் ஆற்றலை அதிகரிக்ககூடிய சிறந்த பழங்களில் ஒன்று. ஏனெனில் மூலதனமாக கார்போஹைட்ரேட் கொண்டிருக்கிறது. இதில் பொட்டாசியம், இரும்பு, ஃபுளோரைடு போன்ற சத்துகளை அதிகளவு கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை தரக்சுடியது. பீச் பழத்தில் வைட்டமின் பி6 கொண்டிருப்பதால் கர்ப்பிணிகள் சாப்பிடவேண்டிய பழங்களில் ஒன்றாக உள்ளது.

மனஅழுத்தம், மனநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களை மீட்க பீச் பழங்கள் உதவுகின்றது. பீச்பழங்களை உட்கொள்வதால் நரம்பு மண்டலம் மூலமாக நரம்பின் செல்களை பாதுகாக்கிறது மேலும் சீறு நீரகத்தில் உருவாகும் கல் மற்றும் கட்டிகளை பீச்பழம் சாப்பிடுவதால் தடுக்க முடியும் . இப்பழத்தில் நீர்சத்து அதிகம் காணப்படுவதால் உணவு கட்டுபாட்டில் இருப்பவர்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும் இது கொழுப்பை குறைக்கும் திறன் கொண்டது.

கோடையில் வெளியில் சென்று களைப்புடன் வந்தால் பீச்பழத்தினை சாப்பிடலாம். ஏனெனில் இதில் நீர்சத்து அதிகம் கொண்ட பீட்டா கரோட்டின் இருப்பதால் உடல் வறட்சியை போக்குகிறது. இது மலமிளக்கியாக செயல்படுவதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகப்பையில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:41 pm

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! 9ZAZebjrSMm6aYlxp9gU+ht3366

உலக அளவில் தென்னை சாகுபடியில் இந்தியா 3வது இடம் வகிக்கிறது. தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 4வது இடம் வகிக்கும் இலங்கை தென்னை சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முன்னிலையில் உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 122 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய் உற்பத்தி செய்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் சுமார் 7 ஆயிரம் கோடி தென்னை மரங்கள் வளர்கின்றன. 40 ஆயிரம் கோடி இளநீர் மற்றும் தேங்காய்கள் உற்பத்தியாகிறது. தேங்காய் 50 சதவீதம் வீட்டு உபயோகத்துக்கும், 35 சதவீதம் பூஜை, பரிசு தாம்பூலம் போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. 15 சதவீதம் மட்டுமே இளநீராக பயன்படுத்தப்படுகிறது. இளநீர் பயன்பாடு மிகவும் குறைவு. ஆனால் அதன் பயன் அதிகம். ஒரு நபர்

தினமும் ஒரு இளநீர் குடித்தால் இளநீரின் தேவை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும்.

இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. தென்னை மரங்களில் பாளை (பூ) விரிந்த 2 வாரங்களில் ஆண் பூக்கள் மலர்ந்து உதிர்ந்துவிடும். 3வது வாரம் முதல் பெண் பூக்கள் கருவுறுதல் நிகழ்ந்து பிஞ்சுகளாக வளர தொடங்கும். சுமார் 150 நாட்களில் இருந்து 180 நாட்களுக்குள் இளநீர் கிடைக்கும். மே, ஜூன் மாதம் மற்றும் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள நாட்களில் கோடைக்கு ஏற்ற இயற்கை பானமாக உள்ளது. கோடைக்காலங்களில் வெப்பநிலை மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து பல்வேறு பிரச்னைகளை உண்டாக்கும்.

அதிக விலை கொடுத்து பல்வேறு விதமான செயற்கை பானங்களை வாங்கி குடித்து தாகத்தை தீர்த்துக்கொள்கின்றனர். ஆனால் அந்த குளிர் பானங்களால் வரும் பின்விளைவுகளை மக்கள் அறிவதில்லை. இயற்கை அளித்த இளநீரை குடித்தால் தாகத்தை தணிப்பதுடன் புத்துணர்ச்சியை பெற்று நோயின்றியும் வாழலாம். கேரளாவில் மினரல் பாட்டில்களைவிட இளநீர் அதிகம் விற்பதற்கு இதுவே மிக முக்கியமான காரணம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:44 pm

இளநீரின் பயன்கள்!

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! 97oLA0PTA6xcxwc7qdQL+index

வெப்ப நாடுகளில் வாழ்பவர்களின் உடல்நிலை அதன் தன்மைக்கேற்ப அமையும். மாறுபாட்டால் உடலில் பித்தநீர் அதிகரித்து, உடல் அதிக உஷ்ணமாகும். இதனால் உஷ்ண சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படும். இவை நீங்க தினமும் இளநீர் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். கண்கள் குளிர்ச்சி பெறும்.

வயிற்றில் வாயு தொல்லை அதிகரித்து வயிற்றின் உட்புறச் சுவர்களை தாக்கி புண்களை ஏற்படுத்தும். நீண்ட பட்டினி, அதிக உணவு, உடலுக்கு ஒவ்வாத உணவு இவற்றால் ஏற்படும் அஜீரணக் கோளாறு அனைத்தையும் தீர்க்கும் குணம் இளநீருக்கு உண்டு.

இளநீர் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற அசுத்த நீர்களை நீக்கும். ரத்தச் சோகையைப் போக்கும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும் சக்தி இளநீருக்கு உண்டு. அதனால் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். கோடை காலங்களில் அம்மை நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இளநீர் கொடுத்து வந்தால் நோயின் வீரியம் குறையும். நாவறட்சி, தொண்டைவலி நீங்கும்.

இளநீரை உடலில் பூசிக்கொண்டால் தட்டம்மை, சின்னம்மை, பெரியம்மை, ஆகியவைகளால் ஏற்படும் உடல் அரிப்பைத் தடுக்கலாம். மூளைக்கு புத்துணர்வும், நரம்புகளுக்கு வலுவும் ஏற்படுத்துகிறது. நினைவாற்றல் தூண்டப்படுகிறது. மது பழக்கம் உள்ளவர்களின் கல்லீரல் அதிகம் பாதிப்படையும். அதனை சீர்படுத்தும் குணம் இளநீருக்கு உண்டு. ரத்த ஓட்டத்தை சீர்படுத்துவதால் இருதயம் சீராக செயல்படும். இதய வால்வுகளை பலப்படுத்தும். தினமும் இளநீர் குடித்து வந்தால் இதய நோய் ஏதும் அணுகாது.

பெண்களுக்கு மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் அடிவயிறு வலிக்கு இளநீர் சிறந்த மருந்தாகும். டைபாய்டு, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இளநீர் அருந்தினால் உடல் விரைவாகத் தேறும். குழந்தைகளுக்கு கொடுத்தால் இதிலுள்ள சத்துக்கள் எலும்புகளுக்கும், உறுப்புகளுக்கும் வலுகொடுக்கும். உடல் வளர்ச்சி சீராக இருக்கும். குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரை நன்கு உற்பத்தி செய்து, சிறுநீரகம் சீராக இயங்க செய்கிறது. சிறுநீரக கல்லடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மஞ்சள் காமாலை நோயாளிகள், மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீர் தவறாமல் குடிக்க வேண்டும். காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும்.

குழந்தைகள் இதை அருந்தினால் ஒடுங்கிப் போகாமல் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் உள்ள சர்க்கரையை உடல் உடனடியாக கிரகித்துக் கொள்கிறது.  ஆண், பெண் பருவ கால முகப்பருக்கள் வராமல் தடுக்க இரவு தூங்க போகும்முன் இளநீரை வடிக்கட்டி முகத்தில் நன்கு பூசி துடைக்காமல் தூங்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் நன்கு முகத்தை கழுவி துடைத்து விடவேண்டும். 2 அல்லது 3 வாரங்கள் தொடர்ந்து இதுபோன்று செய்தால் முகப்பருக்கள் வராது. முக சுருக்கம் நீக்கி பளபளப்பாக அழகாக தென்படும், சிறுசிறு தழும்புகளும் நீங்கிவிடும். உடலில் பூசி கொண்டால் தோல் சுருக்கமின்றி அழகு தோற்றம்தரும். இளமை தோற்றம் அளிக்கும்.


Last edited by krishnaamma on Tue Mar 31, 2015 2:49 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:45 pm

இளநீரில் உள்ள சத்துகள்

காலையில் இளநீர் குடிப்பது நல்லது. இளநீரில் உள்ள கொழுப்பின் அளவு மிகவும் குறைவு. அதுவும் ரத்தத்துடன் கரையும் கொலஸ்ட்ரால் கெடுதல் செய்யாத கொழுப்பு வகையாகும். அதனால் இளநீர் குடிப்பவர்கள் எடை பாதுகாக்கப்படுகிறது.

100 கிராம் இளநீரில் பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான 29 மில்லி கிராம் சுண்ணாம்புச் சத்தும், ரத்த விருத்திக்கு தேவையான 0.1 மில்லி கிராம் இரும்புச்சத்தும் உள்ளது. இவற்றை உடல் நன்கு கிரகித்துக் கொள்ள செம்பு 0.04 மில்லி கிராமும் உள்ளது.

ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குளோரின் உப்பு 183 மில்லி கிராமும், வயிற்றில் ஹைடிரோ குளோரிக் அமிலம் சுரக்கவும் தசைப்பகுதியில் அதிகமாக சுண்ணாம்புச்சத்து தங்கிவிடாமல் தடுக்கவும் சோடியம் உப்பு மிகவும் உதவும். இது இளநீரில் அதிக அளவு உள்ளது.

கால்சியம், அயன், மாக்னீசியம், துத்தநாகம் போன்ற தாது சத்துக்கள் உள்ளது. இதனால் இளநீர் குடிப்பவர்களின் தோல் பளபளப்புடன் இளமையுடன் காணப்படும்.

மூளையும் நரம்பு மண்டலமும் கோளாறு இல்லாமல் இயங்கவும் உடலுக்கு முக்கியமாக உதவும் தாது உப்பான பாஸ்பரஸ் 37 மில்லி கிராமும் இளநீரில் உள்ளது. பற்கள் பாதுகாப்புக்கும், எலும்பு வளர்ச்சிக்கும் தேவையான சுண்ணாம்புச்சத்து 29 சதவீதம் இளநீரில் உள்ளது.  அயன்சத்து குளோரைடு சத்துகளும் ரத்த விருத்திக்கு உதவுகிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:46 pm

தாகத்துக்கும் தேகத்துக்கும் உகந்த தர்பூசணி !

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! JbOHZwoHSeCEedNBNAuy+ht3312

ஜில்லென்ற தர்பூசணியின் சுவையில் மயங்காதவர்கள் இருக்க முடியாது. கொளுத்தும் வெயிலில் சுவைக்கும்போது, தாகம் தணியும். உடலும், உள்ளமும் குளிரும். தர்பூசணியில் ஏராளமான மருத்துவக்குணங்கள் உள்ளன என்பது பலர் அறியாத விஷயம். தர்பூசணியில் பசலைக்கீரைக்குச் சமமான அளவு இரும்புச் சத்து அதிகம் உள்ளது. வைட்டமின் சி, ஏ, பி 6, பி1 உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் காணப்படுகின்றன. 100 கிராம் தர்பூசணியில் 90 சதவீதம் தண்ணீர் மற்றும் 46 கலோரி, கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு ஏற்படும் வேதியியல் மாற்றம் காரணமாக சிட்ரூலின் அர்ஜினைன் என்ற வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்தையும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. சிட்ரூலின் அர்ஜினைன் வேதி மாற்றம் சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை செய்கிறதாம். கண்களைப் பராமரிக்க வைட்டமின் ஏ, மூளை மற்றும் செல் பாதிப்பை தடுக்க வைட்டமின் சியையும் கொண்டு செயல்படுகிறது.

தமனி, ரத்த ஓட்டம், இதய ஆரோக்கியத்தை காக்கும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை சீராக இயக்கக் கூடியது. உடலிற்கு தேவையான இன்சுலினையும் மேம்படுத்தும். கட்டி, ஆஸ்துமா, பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்று நோய் மற்றும் கீல் வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும். சதையுடன் விதையும் பலன் தரக்கூடியது. விதையில் அதிக அளவில் ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்க வல்லது.

தர்பூசணியை சாப்பிட மட்டுமல்லாமல், தற்போது பதார்த்தங்கள் செய்வதற்கும் பயன்படுத்துகிறார்கள். தர்பூசணி ஜுஸ், பாயசம், ஸ்வீட், ஐஸ்கிரீம் என இதில் ஏராளமான உணவுப்பொருட்களும் தயாரிக்கிறார்கள். மதிப்புக்கூட்டிய பொருட்களாக மாற்றி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பம், தர்பூசணியில் தற்போதுதான் சாத்தியமாகிவருகிறது. தர்பூசணி தென் ஆப்ரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. முதலில் எகிப்தில் அதிகளவில் பயிரிடப்பட்டது. 7ம் நூற்றாண்டில் இந்தியாவிலும், 10ம் நூற்றாண்டில் சீனாவிலும் தர்பூசணி அறிமுகமாகியுள்ளது. உலகில் தர்பூசணியை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடாக சீனா விளங்குவது குறிப்பிடத்தக்கது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:47 pm

இயற்கை வயக்ரா

தர்பூசணியில் இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், இந்தப் பழம் ஒரு இயற்கை வயாக்ரா என்பது பலருக்கும் தெரியாத உண்மை. தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளது. இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் சத்துகள் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன. இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. தர்பூசணியில் உள்ள சிட்ரூலின் சத்துப்பொருள், வயாக்ராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

ஆனால் பலருக்கும் இது தெரியாததால், இனிப்பான சிவப்பு பகுதியை சுவைத்தவுடன் மீதம் உள்ள தோலை அப்படியே எறிந்து விடுகின்றனர். தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது, அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவல் இன்ப அதிர்ச்சியாகும். தர்பூசணிக்கு ஆசையை அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தர்பூசணியின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டு வெள்ளைப்பகுதியையும் மறக்காமல் சாப்பிடுங்கள். நாவுக்கு வேண்டுமானால் அப்பகுதி சுவையில்லாமல் இருக்கலாம் ஆனால் இல்லற சுவையை கூட்டுவதில் அது வயாக்ராவுக்கு சவால் விடும் பகுதி என்பதை மறந்து விட வேண்டாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:50 pm

கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பதநீர் !

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! 2amNgC5sS6efCgkYjWPE+ht3369

இந்த பதநீர் ஒரு சைவ பானம் அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூறலாம். இது கலப்படமில்லாமல் அருந்தினால் இதன் சிறப்பே தனி எனலாம். நம் நாட்டில் பெரிய அளவில் இதை உற்பத்தி செய்து மருத்துவத்திற்கு பயன்படுத்தினால் இதன் செயல்பாடுகள் அளப்பரியது பல்வேறு நோய்களை நீக்கவல்லது. இந்த பதநீரிலும், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் உள்ளது என கண்டு அறிந்திருக்கிறார்கள். கோடை காலத்தில் தாகம் தணிக்க அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. இதை பருகினால் உடலுக்குநல்ல குளிர்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம்

தொழு நோயை நீக்கும் பதநீர்

நாளும் ஒரே பனை மரத்தில் இருந்து பதநீர் இறக்கி காலை ,மாலை அருந்தி பனைஓலைப்பாயில் படுத்து பனைவிசிரியியை பயன்படுத்தி பனைஓலையில் உணவு உண்டு பனைஓலை குடுசையில் 96 நாள்கள் தாங்கி இருந்தால் தொழு நோய் நீங்கும் என ஒருமருத்துவ் குறிப்பு உண்டு .

மாதவிடாய் தடை

மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி . வாய்வு , காட்டி முதலியவற்றினால் பெண்கள்அவதிபடுவார்கள் அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் மார்பகம் விம்மி பருத்து ஒருவிதமான சன்னி நோய்போல உண்டாகும் இந்த நோய்களுக்கு பனையின் குருத்தை அதன் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும் .

இரத்த கடுப்பு

வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் நீங்கும் .

பதநீர்

இந்த பதநீர் ஒரு சிறப்பான நம் தேசிய குடிநீர் எண்பது நாம் அறிந்ததே இந்த பதநீரை இறக்க தமிழ் நாட்டில் தடை உள்ளது காரணம் வேலைவாய்ப்பில்லாத தமிழர்கள் வேலை பெற்றுவிடுவார்கள் என்பதாக இருக்குமோ ? அதுமட்டும் அல்லாமல் இந்த பதநீர் இறக்குவதால் மற்ற மயக்கப் பொருட்கள் (அரசுவிற்பதுதன் ) விற்பனை குறையும்தானே ?அதனால் முதலாளித்துவம் பயனடையாது தானே ? வருகிற புதிய அரசாகிலும் இந்த பதநீர் இறக்க மக்களுக்கு வாய்பளித்து பனைபொருட்களை சந்தை படுத்த நடவடிக்கை எடுக்கலாம்.

ஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்

சக்கரை 28 .8 கிராம்
காரம் 7 .௨ கிராம்
சுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்
இரும்பு சத்து 5 .5 மி.கிராம்
பாசுபரசு 32 .4 மி.கிராம்
தயமின் 82 .3 மி.கிராம்
ரிபோபிலவின் 44 .5 மி.கிராம்
அசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்
நிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்
10 புரதம் 49 .7 மி.கிராம்
கலோரிகள் 113 .3 மி.கிராம்

இதில் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது . இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.

இதில் இயல்பாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவகுரிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள் கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:52 pm

நீர் எனும் அற்புதம்!....................கோடையில் அதிக தண்ணீர் பருகுங்கள் !

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! GBlV8vJCThuCPmJlAyQC+ht2956

இயற்கையின் பரிசு

‘நீரின் அருமை தெரியும் கோடையிலே’ என்பார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் இன்றியமையாது உயிர்நாடியாக விளங்குவது தண்ணீர். ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற வள்ளுவர் வாக்கில் புதைந்திருக்கும் உண்மையை இவ்வுலகில் ஜீவித்த உயிர்கள் யாவும் உணரும். மூன்றாம் உலகப் போரே உதிக்கலாம் என்கிற சூழ்நிலையைக் கூட உருவாக்கும் அளவு நீரின் தேவை உலகை வியாபித்திருக்கிறது.

நீரற்ற உலகை ஒரு நிமிடம் கற்பனை செய்து பாருங்கள்... தாகத்துக்கு ஏங்கியபடி ஜீவராசிகள் அலைந்து கொண்டிருக்கும்... எல்லா நீர்நிலைகளிலும் எத்தனை கூழாங்கற்கள் இருக்கின்றன என்பதை சுலபமாக எண்ணி விடலாம்... கடல் பகுதிகள் அத்தனையும் பொட்டல் வெளிகளாக காட்சி தரும்... நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறதா? இத்தனை அருமை பெருமைகளை உடைய தண்ணீரை சரியான முறையில் அருந்தினால் நம் உடலுக்கு அருமருந்தாகும். நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது. நமது மூளையில் 74 சதவிகிதம், ரத்தத்தில் 83 சதவிகிதம், தசைகளில் 75 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. எலும்பில் கூட 22 சதவிகிதம் தண்ணீர் இருக்கிறது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:53 pm

தண்ணீரே பல நோய்களை குணப்படுத்தும் மருந்தாகும். எப்படி?

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! ReNGdly1T6imNBxBRoSl+Earthenware-Water-Pot

தண்ணீர் சிறுநீரகக் கற்களை வர விடாமல் செய்கிறது. முறையாக தண்ணீர் குடிக்காத தாலும் சிறுநீரகக்கற்கள் ஏற்படும். தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிப்பவர்களின் சிறுநீரகங்களில் கற்கள் சிறிய அளவில் இருக்கும்போதே கரைந்து விடுகிறது. சிறுநீர் வரும் வழியில் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தாலும்  தண்ணீர் அதை சுத்தப்படுத்தி வெளியேற்றி விடுகிறது. கேடு விளைவிக்கும் பாக்டீரியா சிறுநீர்ப்பையில் இருந்தாலும்கூட நிறைய தண்ணீர் குடிப்பவர்களுக்கு பிரச்னை வராது...

தண்ணீர் அதனை துவம்சம் பண்ணி வெளியேற்றி விடும். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தண்ணீர் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றுப்போக்கால் உடலில் நீர்ச்சத்தை இழந்தவர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீருடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை மற்றும் கால் டீஸ்பூன் உப்பையும் கலந்து கொடுத்தால் இழந்த நீர்ச்சத்தை மீட்டு, போதிய சக்தி பெற உதவும்.காய்ச்சலில் பாதிக்கப்பட்டவர்களின்
உடலில் அதிக சூடு  இருக்கும்.

நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் சிறுநீர் அடிக்கடி வரும். இதனால் காய்ச்சல் விரைவில் குறைகிறது. இருமல், சளி, தொண்டைப்புண், சுவாசப்பாதை தொற்று போன்றவை குணமாகக் கூட தண்ணீர் உதவுகிறது. கெட்டியான சளியை கூட தண்ணீர் இலகுவாக்கி வெளியேற்றிவிடும். நுரையீரலில் தங்கி இருக்கும் தேவையில்லாத கோழையையும் வெளியேற்றும் தன்மை உடையது தண்ணீர். உணவு சாப்பிட்ட பின் தேவையான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கலாம். வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள நச்சுகள் அனைத்தும் வெளியேறிவிடும். மலத்தையும் இலகுவாக்கும். தண்ணீர் உங்கள் உடலில் உள்ள சக்தியை நீட்டிக்கச் செய்கிறது.

ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மூளை சோர்ந்து இருக்கும் வேளையில் தண்ணீர் குடித்தால் சுறுசுறுப்படையச் செய்கிறது. தலைவலி கூட இதனால் சரியாகிறது. தண்ணீர், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. சாப்பிடுவதற்கு முன்னால் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடித்தால் அதன் பிறகு எவ்வளவு சாப்பிட்டாலும் கொழுப்பு உடலில் தங்காமல் செய்து விடும். தண்ணீர் தோலை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்க உதவுகிறது. நீர்ச்சத்து குறைவாக இருப்பவர்களின் தோல் உலர்ந்தும் கண்கள் குழி விழுந்தும் காணப்படும். அழகிய சருமத்தை பெற நிறைய தண்ணீர் குடியுங்கள்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by krishnaamma Tue Mar 31, 2015 2:55 pm

தண்ணீர் குடிக்க சரியான வழிகள் :-

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

தூக்கத்தின் போது உடலில் இருக்கும் தண்ணீரின் அளவு குறைந்து விடும். தூங்கப்போகும் முன்னால் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. காலையில் எழுந்தவுடன் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து சோர்வாக இருக்கும். காலையில் போதுமான நீரைக் குடிப்பதன் மூலம் உடலில் இருக்கும் தேவையில்லாத கழிவுகள் எளிதில் வெளியேறி உங்களை சுறுசுறுப்புடன் வைத்திருக்கும்.

தினமும் 8 முதல் 12 கிளாஸ் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ஏன்?

55 கிலோ எடையுள்ளவருக்கு தினமும் 8 கிளாஸ் தண்ணீர் தேவை. 86 கிலோ எடையுள்ளவருக்கு 12 கிளாஸ் தண்ணீர் அவசியம்.  அவ்வப்போது சிறுநீரின் நிறத்தையும்  கவனிக்க வேண்டும். வெளிர் நிறத்தில் இருக்க வேண்டும் என்கிறது அமெரிக்க நலவாழ்வியல் அமைப்பான மாயோ கிளினிக். தினம் 16 கிளாஸ்களுக்கு அதிகமாகவும் தண்ணீர் அருந்த வேண்டாம்.

தண்ணீரை ஒரே மூச்சில் மடக் மடக் என்று குடிக்காமல் மிடறு மிடறாகப் பருகுவது நல்லது. ஏன்?

ஒரு சொம்பு தண்ணீரை ஒரேடியாக குடித்தால் இதயம் வெகு வேகமாக வேலை செய்யும். இது நல்லதல்ல. மிடறு மிடறாகப் பருகினால் இதயத்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும். உடல் தண்ணீரை மெதுவாக எடுக்கும். இதனால் சோர்வு வெகுவாகக் குறையும்.

தண்ணீர் குடிக்க தாகம் எடுக்கும் வரை காத்திருக்கக் கூடாது. ஏன்?

தாகம் எடுக்கும்போது மட்டும் தண்ணீர் குடித்தால் உங்கள் உடலுக்கு தேவையான தண்ணீரில் 2 கிளாஸ் குறைவாகவே குடிப்பீர்கள். முதியோருக்கு சரியாக தாகம் எடுக்காது. அதனால், குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்லது.

தண்ணீருக்கு மாற்றாக வேறு பானங்கள் அருந்தக்கூடாது. ஏன்?

சிலர் தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக வேறு குளிர்பானங்கள் அல்லது கேன்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகளை அருந்துவார்கள். இதில் அதிக சர்க்கரையும் பாஸ்பரஸுசும் சேர்க்கப்பட்டிருக்கும். இதனால் எலும்புகளின் வலுவை குறைக்கும் ஆஸ்டியோபோரசிஸ் பிரச்னை, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. காபி அதிகமாக குடிப்பவர்களுக்கும் உடலில் நீர்ச்சத்தின் அளவு குறைகிறது. மதுபானங்கள் அருந்துபவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் மூலம் உடலில் உள்ள நீர்ச்சத்துகள் சுத்தமாக வெளியேறும். அதனால் சோர்வடையச் செய்கிறது.

குழந்தைகளுக்கு முறையாக தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏன்?

குழந்தைகள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை அவர்களுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளிக்கு அவர்கள் கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டிலில் போதுமான தண்ணீரை கொடுத்து அனுப்ப வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு வரும் சிறுநீரகக் கற்களை தவிர்க்கலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடற்பயிற்சி செய்யும் போது உடலில் இருந்து அதிக வியர்வை வெளியேறுகிறது. அதனால் உடல் திரவச் சமநிலையை அடைய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

உடல்நலமில்லாமல் இருக்கும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

உடல்நலமில்லாமல் இருக்கும் போது உடலில் நீர்ச்சத்து குறைந்து காணப்படும். நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் போதுமான அளவு நீர்ச்சத்து கிடைத்து, உடலில் உள்ள தொற்றுக் கிருமிகளையும் வெளியேற்றி, உடலை நல்ல நிலைக்கு மீட்க தண்ணீர் உதவுகிறது.

கர்ப்பிணிகள் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். ஏன்?

பால் சுரப்பதற்கும் குழந்தைக்குப் பாலூட்டவும் தண்ணீர் நிறைய குடிப்பது அவசியம். கர்ப்பமாக இருக்கும் போது தினமும்  10 கிளாஸ் தண்ணீரும், பாலூட்டும் போது  13 கிளாஸ் தண்ணீரும் குடிக்க வேண்டும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் ! Empty Re: கோடை காலத்தில் தாகத்தை தணிக்க சிறந்த வழிகள் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum