ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:09

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்குபஞ்சர்

Go down

அக்குபஞ்சர் Empty அக்குபஞ்சர்

Post by சிவா Sun 29 Mar 2015 - 13:24

அக்குபஞ்சர் Acupuncture_2356100f

மனித உயிருக்குச் சிகிச்சை தருவதற்கு, அந்த உயிரின் உயிர் ஆற்றலைப் படிக்கத் தெரிந்தவரே மருத்துவம் செய்பவராக இருக்கமுடியும். உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் நேர்நிலைக்குக் கொண்டுவந்து ஆரோக்கியத்தைத் தரக்கூடிய மருத்துவ முறையாக அக்குபஞ்சர் கருதப்படுகிறது.

அக்குபஞ்சர் பரவல்

நவீன அக்குபஞ்சர் மருத்துவம் உலகம் முழுக்கத் தற்போது பிரபலமாக இருப்பதற்குச் சீனாவின் முன்னாள் ஜனாதிபதி மாவோதான் காரணம். 1949-ல் கம்யூனிசப் புரட்சி ஏற்படுவதற்கு முன்பே சீனா போன்ற பரந்த, மக்கள்தொகை மிகுந்த ஒரு நாட்டின் ஆரோக்கியப் பிரச்சினைகளை மேற்கத்திய மருத்துவர்களால் மட்டும் தீர்க்கமுடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருந்தார். அக்காலத்தில் சீனாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 5-ல் 1 ஆக இருந்தது. ஆயிரம் பேருக்கு 30 பேர் வீதம் ஆண்டுதோறும் இறந்துகொண்டிருந்தனர்.

ஊட்டச்சத்தின்மை, தொற்றுநோய்கள், நவீன மருத்துவர்கள் கேள்விப்பட்டிராத மர்ம நோய்கள், மலேரியா, பிளேக், அம்மை நோய்கள், காசநோய் எனப் பலவிதமான நோய்கள் சீனாவை உலுக்கிவந்த வேளை அது. 50 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவை வெறுமனே 20 ஆயிரம் அலோபதி மருத்துவர்களால் காப்பாற்ற முடியாது என்பதை உணர்ந்திருந்தார் மாவோ.

சீனாவில் சிதறிக்கிடந்த பாரம்பரிய மருத்துவ முறைகளையும் பாரம்பரிய மருத்துவர்களையும் ஒருங்கிணைக்க அவர் கொண்டு வந்த திட்டம்தான் ‘பேர்ஃபுட் டாக்டர்ஸ்’. இதன் மூலம் ஐந்து லட்சம் பாரம்பரிய மருத்துவர்களை அவர் ஒருங்கிணைத்தார்.

மேற்கத்திய மருத்துவத்தையும் புறக்கணிக்காமல் சீன மருத்துவத்தை இணைத்தார். அத்துடன், அக்குபஞ்சர் மற்றும் மூலிகை மருத்துவக் குறிப்புகளைப் பாரம்பரிய மருத்துவர்களை வைத்து எழுதச் சொல்லி ஆவணப்படுத்தினார். 1949-ல் மேற்கத்திய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற சீனரான ஷூ லியான் என்பவரால் நவீன அக்குபஞ்சர் நூல் எழுதப்பட்டது. அதுதான் இன்றைய மருத்துவர்களுக்கு அக்குபஞ்சர் கையேடாக உதவுகிறது.

உடனடி நிவாரணம்

அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் அலுவல் பயணமாக 1971-ல் சீனாவுக்கு வருகை தந்தபோதுதான் அமெரிக்காவுக்கு அக்குபஞ்சர் அறிமுகம் ஆனது.

அவரது பயணம் குறித்துச் செய்தி சேகரிப்பதற்காக நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர் ஜேம்ஸ் ரெஸ்டன் உடன் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே குடல்வால் அறுவைசிகிச்சை செய்யப்பட்டிருந்தது. சீனாவுக்கு வந்து இறங்கியதிலிருந்து அவருக்கு வயிற்று வலி இருந்துவந்தது. என்னென்னவோ செய்துபார்த்தார்கள். நிவாரணம் கிடைக்கவில்லை.

சீன ஜனாதிபதி மாவோவின் தனி மருத்துவர் ஒரு மூங்கிலை வேகமாகச் சீவி, அவரது உடலில் ஒரு குத்து குத்தினார். குத்தின இடத்தில் வலி இருந்தாலும், அந்தப் பத்திரிகையாளருக்கு வயிற்றுவலி போய்விட்டது. அமெரிக்கா திரும்பிய பிறகு ஜேம்ஸ் ரெஸ்டன், அக்குபஞ்சர் பற்றி எழுதிய கட்டுரை மேற்குலகில் அக்குபஞ்சர் மறுஅறிமுகம் ஆவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது.

ஆறாயிரம் ஆண்டு வரலாறு

அக்குபஞ்சர், ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து சீனாவில் நடைமுறையில் இருந்துவருகிறது. நைஜிங் (Neijing) என்பதுதான் சீனப் பாரம்பரிய அக்குபஞ்சர் மருத்துவத்தின் ஆதார நூல். அதன் அர்த்தம் உள்ளோடும் உயிர்சக்தி. அந்த நூலின் வயது 5,000 வருடங்கள். ஹங்டி என்ற மன்னருக்கும், ச்சி போ (Qi Bo) என்ற மந்திரிக்கும் இடையே நடந்த உரையாடல்களின் தொகுப்புதான் இப்புத்தகம்.

எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், கால, தேச, வர்த்தமானங்களைத் தாண்டி இன்னும் நிரூபிக்கப்பட்ட மருத்துவத் தீர்வுகளை விளக்கும் அக்குபஞ்சரின் பிரதான நூல் இது. உடலின் ஒரு இடத்தில் குத்தினால் குறிப்பிட்ட வலி அகன்றுவிடும் என்று அந்நூலில் சொல்லப்பட்டுள்ள குறிப்புகள், இன்றும் விளைவைத் தருவதாக இருக்கின்றன.

மரபு மருத்துவ முறைகளைப் பற்றி ஆராய்வதற்காக, உலகச் சுகாதார நிறுவனம் 1967-ல் அல்மா அட்டா (Alma Ata) அறிவிப்பு என்ற ஒன்றை வெளியிட்டது. அப்போது எல்லா நாடுகளுடைய சுகாதார அமைச்சர்களையும் அழைத்துப் பேசினார்கள்.

நடைமுறையில் உள்ள மருத்துவ முறையின் போதாமைகள், தீர்வுகாண முடியாத பிரச்சினைகள் குறித்து அந்தக் கருத்தரங்கத்தில் விவாதிக்கப்பட்டது. அந்தந்த நாட்டில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறைகளை ஆய்வு செய்யக் கோரியது. அதன்படி உலகப் பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒன்றாக அக்குபஞ்சர் மருத்துவத்தை உலகச் சுகாதார நிறுவனம் அங்கீகரித்துள்ளது.


அக்குபஞ்சர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்குபஞ்சர் Empty Re: அக்குபஞ்சர்

Post by சிவா Sun 29 Mar 2015 - 13:25

பரிசோதனை முறைகள்

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை நோயைப் பரிசோதிப்பதற்கு 12 உறுப்புகளின் செயல்பாடுகள், இரண்டு கைகளின் நாடி வழியாகப் பார்க்கப்படுகிறது. யின் மெரிடியன் என்ற வகைக்குக் கீழ் வரும் இதயம், கல்லீரல், சிறுநீரகச் செயல்பாடுகளை இடதுகை நாடி வழியாகப் பரிசோதிப்பார்கள்.

இதயத்துக்கு ஜோடியாகச் சிறுகுடல், கல்லீரலுக்கு ஜோடியாகப் பித்தப்பை, சிறுநீரகத்தின் ஜோடியாகச் சிறுநீர்ப்பை என ஆறு உறுப்புகளின் செயல்பாடுகள் கணிக்கப்படுகின்றன.

வலது கையைப் பொறுத்தவரை, நுரையீரல் (பெருங்குடல்), மண்ணீரல் (வயிறு), இதய உறை-சிரை ஆகிய மூன்று உறுப்புகளின் செயல்பாடுகளும் அவற்றின் ஜோடி உறுப்புகளாக முறையே பெருங்குடல், வயிறு மற்றும் இடுப்பு வளையம், நெஞ்சுக்கூட்டுப் பகுதி, அடிவயிறு ஆகியவற்றின் நிலைகள் பரிசோதிக்கப்படுகின்றன. இந்தப் பரிசோதனைகளின் அடிப்படையில்தான் மருத்துவர்கள் சிகிச்சையைத் தொடங்குகின்றனர்.

உடலில் அதிகப்படியான உயிராற்றல் இருந்தால் நோயும் வலியும் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. குறைவான ஆற்றல் இருந்தாலும் நோய், வலி ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு.

உயிராற்றல் பாதை

‘மருந்தில்லா மருத்துவம், மருத்துவர் வேண்டா உலகம்!' என்னும் நோக்கத்துடன் அக்குபஞ்சர், ஹோமியோபதி, சித்த மருத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மருத்துவம் செய்துவருகிறார் சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்த மருத்துவர் லக்ஷ்மி நரசிம்மன். அக்குபஞ்சரின் அடிப்படை குறித்து அவர் பகிர்ந்துகொண்டது:

"அக்குபஞ்சர் என்பது லத்தீன் மொழியில் அகுஸ் (ஊசி), பஞ்சர் (குத்துதல்) என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்து உருவான சொல். ஊசியால் குத்துவதன் மூலமாக, உடலில் இருக்கக்கூடிய உயிர் ஆற்றல் பாதைகளில் நேரக்கூடிய அடைப்புகளைச் சரிசெய்வதுதான் அக்குபஞ்சரின் அடிப்படை.

மருத்துவ அறிவியலைப் பொறுத்தவரை உடற்கூறியல், உடலியக்கவியல், நோய்க்குறியியல், குறை களைவது ஆகிய நான்கு அடிப்படைகள் அவசியம். அக்குபஞ்சருக்கும் இத்தகைய நான்கு அடிப்படைகள் உண்டு. அந்த வகையில் இந்தப் பூமியின் தலையாய மருத்துவ முறை அக்குபஞ்சர்தான். தர்க்கவாதம், நடைமுறை இரண்டுக்கும் பொருந்தக்கூடிய மருத்துவம் இது.

சமநிலையும் சமன்குலைவும்

உயிர் ஆற்றலை நேர்மறை, எதிர்மறை ஆற்றல்களாக யின், யான்- ஆகப் பார்க்கிறது அக்குபஞ்சர். இவற்றின் இணைவுதான் இயக்கம். யின் என்பது பெண். பெண்மை, குளிர்ச்சி, கருமை என இது வகுக்கப்பட்டுள்ளது. யான் என்பது ஆண். ஆண்மை, வெப்பம், உறுதி, வெளிச்சம் என வகுக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு அம்சங்களுக்கு இடையிலான சமன்குலைவு, நோய் என வரையறுக்கப்பட்டுள்ளது.

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை பிரபஞ்சத்தை ஆட்சி செய்யும் பஞ்சபூதச் சக்திகளின் கட்டமைப்பாகத்தான் நமது உடலும் இருக்கிறது. இந்தப் பஞ்சபூதச் சக்திகள்தான் 12 உயிர் உறுப்புகள் வழியாக உயிராற்றலாக ஓடுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அல்லது 12 உயிர் உறுப்புகளுக்கு இடையே எப்போது சமநிலை குலைகிறதோ, அப்போது நோய் ஏற்படுகிறது.

அக்குபஞ்சரைப் பொறுத்தவரை ஒரு உடல் உறுப்புக்குச் சக்தியைக் கொடுக்கும் உறுப்பு தாய் ஆகிவிடுகிறது. சக்தியைப் பெறும் உறுப்பு வாரிசாகிவிடுகிறது. அதேபோல ஜோடி உறுப்புகளும் உண்டு. ஆதிக்கம் செலுத்தும் உறுப்பு கணவன் உறுப்பாக இருக்கும். மனைவி உறுப்பும் இருக்கும்.


அக்குபஞ்சர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்குபஞ்சர் Empty Re: அக்குபஞ்சர்

Post by சிவா Sun 29 Mar 2015 - 13:26

ஊசிகளின் அற்புதம்

அக்குபஞ்சர் மருத்துவத்தைப் பொறுத்தவரை இலங்கையைச் சேர்ந்த ஆண்டன் ஜெயசூர்யா மிகப்பெரிய வல்லுநர். அவர் சொல்லும் விளக்கம் இதுதான் - "மனிதக் குலம் அனைத்துக்குமான தீர்வை அக்குபஞ்சர் கையில் வைத்திருக்கவில்லை. அக்குபஞ்சர் தத்துவார்த்த அடிப்படையிலான அறிவியல். அதை முழுமையாக உணர்ந்து மருத்துவம் செய்யக்கூடியவர்களின் கையில் உள்ள ஊசியால் பல அற்புதங்களைச் செய்துவிடமுடியும்". இதன் மூலம் அக்குபஞ்சரை அவர் வரையறுத்து விடுகிறார்.

சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்த சீன மருத்துவர்கள் இப்போதும் இங்கே பல் மருத்துவர்களாக அறியப்படுகின்றனர். தமிழகத்தில் எல்லா நகரங்களிலும் சீனப் பல் மருத்துவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அக்குபஞ்சர் முறையைக் கொண்டே பல் ஈறை மரத்துப்போக வைத்துப் பற்களை எடுத்தனர். ஆனால் அவர்கள் பாரம்பரிய அக்குபஞ்சரில் இருந்து விலக்கப்பட்டு, பல் மருத்துவர்களாகவே அறியப்படுகின்றனர்."

கல்வி

இந்தியாவைப் பொறுத்தவரை அக்குபஞ்சர் முறைப்படுத்தப்படாத மருத்துவமாகவே உள்ளது. இலங்கையில் உள்ள ‘இண்டர்நேஷனல் ஓபன் யுனிவர்சிட்டி ஆஃப் காம்ப்ளிமெண்டரி மெடிசன்’-ஸில் அக்குபஞ்சர் குறித்து அஞ்சல் வழிப் படிப்பு இருக்கிறது. அக்குபஞ்சர் கோட்பாடுகளைப் படித்துவிட்டுக் குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளித்த அனுபவம் இருப்பது ஒரு மருத்துவருக்கு அவசியம். இந்தியாவைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர்கள்கூட அக்குபஞ்சர் முறைகளையும் சேர்த்து மருத்துவம் செய்கிறார்கள்.

தீர்வுகள்

இடியோபதிக் என்று சொல்லக்கூடிய, மருத்துவர்களால் காரணமே அறியமுடியாத நோயாளிகளை அக்குபஞ்சரால் குணப்படுத்த முடியும். உயிராற்றலை மேம்படுத்துவதன் மூலம் நோய்களைக் குணப்படுத்த முடியும். தி பிரிட்டிஷ் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் நடத்திய ஆய்வில் பல்வேறு குறைபாடுகளுக்கு அக்குபஞ்சர் தீர்வளிப்பது தெரிய வந்துள்ளது.

பல் வலி, தாடை வலி, முதுகு வலி, அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் குமட்டலை அக்குபஞ்சர் சீரமைக்கிறது. கருத்தரிப்புக் குறைபாடு, பெண்களுக்கு ஏற்படும் மூட்டு வலிகள் ஆகியவற்றைத் தீர்ப்பதில் அக்குபஞ்சர் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

நடத்தைக் குறைபாடுள்ளவர்களுக்குத் தொடர்ந்து அக்குபஞ்சர் சிகிச்சை அளிப்பதன் மூலம், அவர்களது மனநிலையை மேம்படுத்த முடியும் என்கிறார் லக்ஷ்மி நரசிம்மன்.

ஊசி என்ன செய்கிறது?

உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் பரிசீலனை செய்து சிகிச்சை தருவதுதான் அக்குபஞ்சர். அக்குபஞ்சரில் பயன்படுத்தப்படும் ஊசி ஆத்மாவையும் தொடுகிறது. உடலை யின், யாங் என்று இரண்டாகப் பிரிக்கிறது அக்குபஞ்சர்.

சந்திரன்தான் யின். சூரியன்தான் யாங். அக்குபஞ்சர் ஊசி மூலமாகப் பிரபஞ்சத்தின் அதிர்வலைகளை உடலைச் நோக்கி ஈர்த்து உடலை சமநிலைப்படுத்துவதால் நோய் குணமாகிறது என்பதே இம்மருத்துவத்தின் கோட்பாடு.

உடலில் உள்ள உயிராற்றலை அக்குபஞ்சரில் ‘ச்சி’ (qi) என்று அழைக்கிறார்கள். அந்த உயிராற்றல் கண்ணுக்குத் தெரியாதது. அந்த உயிராற்றலைத் தூண்டிச் சமநிலைபடுத்துவதுதான் அக்குபஞ்சர் மருத்துவம்.

உடலில் மெரிடியன் (meridian) என்று சொல்லப்படும் நடுப்பகுதி வரைதான், உயிர் ஆற்றல் பாதை இருக்கிறது. அதில் ஊசியைச் செலுத்தி ஆற்றல் மண்டலத்தைச் சீர்படுத்துவதுதான் இம்மருத்துவம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அக்குபஞ்சர் ஊசி செலுத்தப்படுகிறது.

ஊசி பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதச் சக்திகளை ஈர்க்கிறது. நீர், நிலம், காற்று, நெருப்பு, வானம் என உடலையும் பஞ்சபூதங்களாக அக்குபஞ்சர் பார்க்கிறது. அக்குபஞ்சர் மருத்துவம் யோக அறிவியலைப் போலவே உடலை ஏழு சக்கரங்களாகப் பிரிக்கிறது. இந்த ஏழு சக்கரங்களை இணைக்கும் இரு உயிர்சக்தி ஓட்டப்பாதைகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன. இந்த இரு சக்தி ஓட்டப்பாதை வழியாக, நமது உள்ளுறுப்புகளுக்கு ஆற்றல் வழங்கப்படுகிறது.

லக்ஷ்மி நரசிம்மன் @ தி இந்து


அக்குபஞ்சர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அக்குபஞ்சர் Empty Re: அக்குபஞ்சர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum