ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

2 posters

Go down

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Empty காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 7:55 pm

மகாத்மா காந்தியை 'பிரிட்டிஷின் ஏஜென்ட்' என்று விமரித்தும், 'நேதாஜியை நேபாளத்தவர்' என்றும் குறிப்பிட்டும் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவை நடவடிக்கை தொடங்கியதும், மார்கண்டேய கட்ஜூவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனை அடுத்து, அனைத்து கட்சிகளின் ஆதரவோடும் முன்னாள் நீதிபதி கட்ஜுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்தை சபாநாயகர் ஹமீது அன்சாரி வாசித்தார். அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அப்போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, "முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவின் கருத்து விபரீதமானது. மகாத்மா காந்தி நிச்சயமாக இந்தியாவுக்கு கிடைத்த பொக்கிஷம். அவர் நாம் அனைவருக்கும் முன்னோடியாக திகழும் இந்தியர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" என்றார்.

மேலும், இவ்வாறான கருத்துக்களை கூறும் இவர்களை போன்ற நபர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டது பெறும் ஆச்சிரியமாக உள்ளது என்று கருத்து தெரிவித்த அவர், இந்த நிலையை மாற்றும் முயற்சி நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

பிரஸ் கவுன்சிலின் முன்னாள் தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான மார்கண்டேய கட்ஜு சமீபத்தில் தனது வலைப்பதிவு தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில், மகாத்மா காந்தியை பிரிட்டிஷின் ஏஜென்ட் என்றும், நேதாஜியை நேபாளத்தவர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டிஷ்காரர்களுடன் மகாத்மா காந்தி சேர்ந்து நாட்டை பிளவுப்படுத்தியதாகவும், புரட்சிகரமான சுதந்திரப் போராட்டத்தை சத்யாகிரகம் என்ற முட்டாள்தனமான திசைக்கு வெற்றிகரமாக அவர் எடுத்து சென்றதாகவும் கட்ஜு விமர்சித்திருந்தது கவனிக்கத்தக்கது.
-
தமிழ் தி இந்து காம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Empty Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

Post by Dr.S.Soundarapandian Wed Mar 11, 2015 8:55 pm

நன்றி ஐயாசாமி அவர்களே !
காந்தியைப் போலொரு சாந்தசொ ரூபனைப்
பாரினில் கண்ட துண்டோ ? - மகாத்மா!....


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Empty Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

Post by ayyasamy ram Wed Mar 11, 2015 10:22 pm

லூயி பிஷர் என்பவர் காந்தி பற்றி எழுதிய
கட்டுரையில், இவர் ஏன் பெரியவர் என்றால்
-
He preached what he practised and
practised what he preached.
Had he lived two thousand years ago
in India, they would have built him
a temple for him by this time.
-

பொருள்:-- “அவர் (காந்தி) எதை உபதேசித்தாரோ
அதை வாழ்க்கையில் பின்பற்றினார். அவர் எதை
வாழ்க்கையில் பின்பற்றினாரோ அதைத்தான்
மற்றவர்களுக்கும் உபதேசித்தார். அவர் மட்டும்
2000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில்
வாழ்ந்திருந்தால் இந்நேரம் இந்தியர்கள் அவருக்கு
கோவிலே எழிப்பி இருப்பார்கள்” -- என்று எழுதினார்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Empty Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

Post by ayyasamy ram Thu Mar 12, 2015 6:30 am




....கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையி்ல் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
-
இது குறித்து கட்ஜூ கூறியிருப்பபதாவது:
-
நாட்டின் தலைவர்கள் குறித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து
தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது போதாது. தற்போது நான் வெளிநாட்டில் உள்ளேன் .
நாடு திரும்பியதும் என்னைக் கைது செய்து எந்தவிதமான
விசாரைணை
இன்றி தூக்கில் போடுவது என பார்லிமென்ட்டில் தீர்மானம்
நிறைவேற்றுங்கள் என சவால் விடுத்துள்ளார்.
-
அதே நேரத்தில் தான் தெரிவித்த கருத்துக்களுக்காக
ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக அனுபவித்து வரும்
வசதிககளை ரத்து செய்ய வேண்டும் என சிலர் விருப்பம்
தெரிவித்துள்ளனர்.

அவர்கள் விருப்பம் நிறைவேற வேண்டுமானால்
உரிய சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும்
என கட்ஜூ தெரிவித்துள்ளார்.
-
--------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம் Empty Re: காந்தியை விமர்சித்த கட்ஜுக்கு எதிராக மாநிலங்களவையில் கண்டனத் தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum