ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாட்டை எடுத்த ஜெ.!!!!!

2 posters

Go down

சாட்டை எடுத்த ஜெ.!!!!! Empty சாட்டை எடுத்த ஜெ.!!!!!

Post by Powenraj Sun Mar 08, 2015 8:21 pm

கழுகார் உள்ளே நுழைவதற்கும், அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவிகளை ஜெயலலிதா பறிப்பதற்கும் சரியாக இருந்தது!

''இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்றுதான் கோட்டையில் பேச்சு! ஆனால் அனைவரது எதிர்பார்ப்பையும் முந்திச் செயல்படுத்துவதுதானே ஜெயலலிதாவின் பாணி!' என்றபடி கழுகார் ஆரம்பித்தார்!

''திருநெல்வேலியில் இருந்து உமது நிருபர் எழுதிய உருக்கமும் கோபமுமான கட்டுரைதான் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் கட்சிப் பதவியை காவு வாங்கி இருக்கிறது. எந்த நேரமும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் பதவியும் பறிபோகலாம் என்றும் சொல்கிறார்கள். 'நாளும் பொழுதும் பார்த்து கேள்விப்பட்டுக் கடந்துபோகும் எத்தனையோ தற்கொலைகளைப் போன்றது அல்ல, இந்த மனிதனின் மரணம். அதிகாரத்தின் கொடும் நாக்குக்குக் கட்டுப்பட முடியாத, நரக வேதனையைத் தாங்குவதைவிட செத்துப்போவது மேல் என்று துடித்து அந்த மனிதர் தண்டவாளத்தில் போய் விழுந்திருக்கிறார். இப்படி மரணத்தைத் தேடிக் கொண்டவர் சாதாரணமானவர் அல்ல. நெல்லை மாவட்ட வேளாண்மைத் துறையில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றி வந்த முத்துக்குமாரசாமி’ என்று உமது நிருபர் எழுதி இருந்தார் அல்லவா? அந்தத் தற்கொலை சம்பவத்துக்கும் இந்தப் பதவி பறிப்புக்கும் முடிச்சுப் போட்டுச் சொல்கிறார்கள் கோட்டையில்!'

''சொல்லும்!'

சாட்டை எடுத்த ஜெ.!!!!! N7Ws3BLVRdiOprcKutlW+p42

''திருநெல்வேலி வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை விரிவாக விசாரித்த உளவுத் துறை ஐ.ஜியான கண்ணப்பன் டீம் தங்களது ரிப்போர்ட்டை அரசு மேலிடத்துக்கு அனுப்பியது. அமைச்சரின் உதவியாளர் யாராவது கடைசி நிமிடத்தில் முத்துக்குமாரசாமியுடன் போனில் பேசினார்களா என்பது குறித்து விசாரித்தது. முக்கியத் தடயம் ஒன்று சுட்டிக்காட்டப்பட்டு இருந்ததாம் அந்த ரிப்போர்ட்டில்! டிரைவர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்வதில் அமைச்சரின் தலையீடு இருந்ததாகத்தான் குற்றச்சாட்டு. விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் ரகசிய போலீஸார் விசாரித்து ஆதாரங்களைத் திரட்டினார்கள். பத்திரிகை செய்தியும் இவர்கள் திரட்டியதும் ஒற்றுமையாக இருந்தது. அதனையே மேலிடத்துக்கு எதையும் மறைக்காமல் அறிக்கையாகக் கொடுத்திருக்கிறார்கள். புதிய நியமனங்கள், பணிமாறுதல்கள் ஆகியவற்றில்தான் அதிகப்படியான தொகைகள் கைமாறி, அரசு அதிகாரிகள் அவஸ்தையை அனுபவிப்பதாகத் தகவல் போனது. உடனே இதுபற்றி முழுமையாக விசாரிக்கச் சொன்னாராம் ஜெயலலிதா. வேளாண்மைத் துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளிலும் இதுபற்றிய விசாரணைப் படலம் நடந்தது!'

''போக்குவரத்துத் துறையில் டிரைவர், கண்டக்டர் வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பதில் நடந்துவரும் பயங்கர குளறுபடிகளை எழுந்தியிருந்தோமே?'

''ஆமாம்! இப்படி பள்ளிக் கல்வி, சுகாதாரம், உயர்கல்வி, போக்குவரத்து ஆகிய முக்கியத் துறைகளில்தான் ஆட்களை நியமிப்பதில் நிறைய தவறுகள் நடப்பதாகத் தகவல் வந்தது. உடனே அனைத்து அமைச்சர்களுக்கும் கார்டனில் இருந்து அழைப்பு போனது. விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள். அவர்களிடம் ஒரு பேப்பரை கொடுத்து ஒவ்வொரு துறையிலும், 'ஆட்கள் நியமனம் எவ்வளவு பெண்டிங்?’ என்று விசாரித்து எழுதித்தரும்படி கேட்டார்களாம். அமைச்சர்கள் தேர்வு எழுதும் மாணவர்களைப்போல் கார்டனில் இருந்தபடியே அவரவர் துறை அதிகாரிகளைக் கூப்பிட்டு விவரங்களைக் கேட்டு எழுதிக் கொடுத்தார்களாம். இதற்கே ஒருமணிநேரம் ஆனது. அதன் பிறகுதான் ஜெயலலிதா அவர்களை சந்தித்திருக்கிறார். அவர் முகத்தில் கோபம் கொப்பளித்து இருந்ததாம்! 'இனி, ஆட்கள் நியமன விஷயத்தில் எக்காரணம் கொண்டும் வசூல் பேரம் கூடாது. எனக்கு அப்படி புகார் வரவும் கூடாது’ என்று கறாராக அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாம்!'

''ஓஹோ!

''கட்சியின் கீழ்மட்டப் பதவிகளில் இருப்பவர்கள் அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். காரணம், புது நியமனங்களுக்குக் கீழ்மட்டத்தில் இருப்பவர்களிடமே சிலர் வசூல் செய்தார்களாம். இவர்களது புலம்பலையும் உளவுத் துறை பதிவு செய்துள்ளது. இதையெல்லாம் சொல்லிவிட்டு முதலமைச்சர் பன்னீரை பார்த்துள்ளார் ஜெயலலிதா. 'உளவுத் துறை ரிப்போர்ட்டை படித்துப் பார்த்தீர்களா?’ என்று கேட்டாராம். பன்னீரிடமிருந்து பதில் இல்லையாம்! அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அழைத்து விசாரணை படலம் நடந்தது. 'என்னுடைய அரசியல் எதிரிகள் இதனை கிளப்புகிறார்கள்’ என்றாராம் அக்ரி. ஆனால், இது எதையும் ஜெயலலிதா நம்பவில்லை. 'திருவண்ணாமலையில் அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு சில கல்வி நிறுவனங்கள் உள்ளன. இதற்கு அருகிலேயே வேளாண்மைக் கல்லூரி அமைப்பதற்காக இடம் பார்த்ததாகவும் சொல்கிறார்கள். நெடுஞ்சாலையில் இருந்த புளிய மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. வேளாண்மைத் துறையில் கணக்குக் காட்டப்படும் செலவு பில்களுக்கு உரிய பொருட்கள் வரத்து இல்லை’ என்றும் இவர் மீது புகார்கள் வந்துள்ளதாம். இவை எல்லாம் சேர்த்துத்தான் கட்சிப் பதவியை காவு வாங்கி உள்ளது. இதைக் கேள்விப்பட்டு அமைச்சர்கள் அனைவரும் ஆடிப் போய்விட்டார்கள்!'

''சென்னை மாநகராட்சி மண்டல நிலைக்குழு தலைவர் சந்தானம் உள்ளிட்ட சிலரை திடீரென கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறாரே?'

''பிப்ரவரி 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் விழா, தலைமைக் கழகத்தில் நடந்தது. அப்போது வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் பாபுவுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் தகராறு ஏற்பட்டது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று வெங்கடேஷ் பாபு ஆட்கள் விசாரித்தார்கள். கிடைத்த பெயர்களைக் குறிப்பிட்டு போலீஸில் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரை அப்படியே கார்டனுக்கும் தட்டிவிட்டார்கள். அதன் பின்னணியில்தான் சந்தானம் நீக்கப்பட்டுள்ளார். அவரோடு வட்டச் செயலாளர் வெங்கடேசனும் நீக்கப்பட்டுள்ளார். இந்த சந்தானம்தான் மாநகராட்சி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யக்கூடிய அதிகாரம் படைத்த நிலைக்குழுத் தலைவர். மேயர் சைதை துரைசாமிக்குக் குடைச்சல் கொடுத்து வந்தவரும் இவர்தான். இதற்கு இன்னொரு பின்னணியும் சொல்லப்படுகிறது. கட்சித் தேர்தல் நடக்க இருக்கிறது. அப்போது இன்றைய மாவட்டச் செயலாளர் வெங்கடேஷ் பாபுவுக்கு எதிராக அனைத்து வட்டங்களிலும் போட்டி வேட்பாளர்களை சந்தானம் டீம் நிறுத்தப்போவதாகவும் தகவல். அதனால்தான் போட்டுக்கொடுத்து தூக்க வைத்துவிட்டார்களாம்!' என்ற கழுகார் தி.மு.க மேட்டருக்கு வந்தார்!

சாட்டை எடுத்த ஜெ.!!!!! 877ZRohJQ3GfcUV1gqfz+p45

''மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க செயற்குழு சப்பென்று முடிந்துவிட்டது! 'ஆறாவது முறை முதல்வராக விரும்பவில்லை’ என ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் கருணாநிதி பேசிய பிறகு தி.மு.க-வின் செயற்குழு கூட்டம் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கிவிட்டது. அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்துவிட்ட பிறகு தி.மு.கவும் ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பார்களா என்ற ஆர்வத்துடன் செயற்குழுவுக்கு வந்தார்கள் தி.மு.க நிர்வாகிகள். அப்படி ஒரு நிலைமை இருப்பதாகத்தான் முந்தைய நாள் வரை இருந்தது. ஸ்டாலினும் அவர் மனைவி துர்க்காவும் கருணாநிதியை சந்தித்து இதனை வலியுறுத்தியதாகவும் தகவல். அன்றைய தினம் வெளியான 'முரசொலி’யின் கடைசிப் பக்கத்தில், 'தி.மு.கவில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் தளபதி ஸ்டாலின். தேர்தலில் தி.மு.க வெற்றி பெறும்போது அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரையை மொழிபெயர்த்து போட்டிருந்தார்கள். 'ஸ்டாலினை முதலமைச்​சர் வேட்பாளர்’ என்று கருணாநிதி அறிவித்து​விடுவார் என்று நம்பவைத்தது இந்தச் செய்தி!'

''ஒருவேளை கருணாநிதியை சொல்ல வைப்பதற்காக வெளியிடப்பட்டதா?'

''இருக்கலாம்! கருணாநிதி அந்தச் செய்தியையும் தலைப்பையும் பார்த்து அதிர்ச்சி ஆனதாகத்தான் சொல்கிறார்கள். கட்சி பொதுக்குழு இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தபோது காலை 9 மணிக்கெல்லாம் வந்த கருணாநிதி, இந்தச் செயற்குழுவுக்கு 11 மணிக்குத்தான் வந்தார். இந்த செயற்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் 70 சதவிகிதம் பேர் புதுமுகங்கள் என்பதால், காலை 8 மணிக்கே வந்து காத்திருந்தார்கள். இறுக்கமான முகத்துடன் வந்தார் கருணாநிதி. ஏராளமான தீர்மானங்களை ஒருமணிநேரம் வாசித்தார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு தருவோம் என்று ஸ்டாலின் சொன்னதால் பிரபலங்கள் பேசவில்லை. புதியவர்களில் வளவளவென்று சிலர் பேசியபோது கருணாநிதியே அவர்களை நிறுத்தச் சொன்னதாகச் சொல்கிறார்கள். கன்னியாகுமரி முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் பேசும்போது, 'இளைஞர் அணியைவிட மகளிர் அணி சிறப்பாக செயல்படும்’ என்று கனிமொழிக்கு ஐஸ் வைத்தார். கனிமொழி தான் பயந்துபோனார். அவர் பேசும்போது, 'இளைஞர் அணி அளவுக்கு எங்களால் செயல்பட முடியாது’ என்று ஜகா வாங்கியிருக்கிறார். 'மகளிர் அணிக்கு மாவட்ட நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்’ என்று அண்ணனுக்குக் கோரிக்கை வைத்து முடித்தார். அடுத்து பேசிய ஸ்டாலின், செயல்படாத நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். 'திருப்பூர் திருமணத்தில் என்னை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'ஸ்ரீரங்கத்தில் நீங்கள் தோற்றாலும் நீங்கள்தான் ஜெயித்தீர்கள்’ என்றார். 'இனி மூன்றாவது அணி என்பது சாத்தியமா என்பதே தெரியவில்லை’ என்றும் சொன்னார். அந்தளவுக்குக் கட்சி உற்சாகம் அடைந்துள்ளது’ என்றார்!'

''அன்பழகன்?'

''அவர் பேசவில்லை! 'சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது’ என்று மட்டும் அவர் பேசினார். அதனை ஏற்றுக்கொண்டு கருணாநிதி மைக் பிடித்தார். 'கழகத்தின் எதிர்காலமாக இருக்கிற பொருளாளர் தளபதி அவர்களே’ என்று சொன்னபோது கைதட்டல் வந்தது. நீண்டநேரம் பேசினார். கடைசியில் உட்கார்ந்திருந்த பலருக்கும் கேட்கவில்லை. 'முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பு’க்காகவே அனைவரும் காத்திருந்தார்கள். இறுதியாக, 'உங்கள் பசியைப் போக்குவதற்கான செய்தியை சொல்லலாம் என்று வந்தேன். ஆனால் பேராசிரியருக்கு பசி வந்துவிட்டதால் மேலும் பேசவிடாமல் தடுக்கிறார். நன்றி’ என்று சொல்லிவிட்டு முடித்தார் கருணாநிதி. மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் சாப்பாடு பலருக்கும் ருசிக்கவில்லையாம்!' என்றபடி பறந்தார் கழுகார்!



ஜூ.வி-க்கு வந்த கண்ணீர் கடிதம்!

தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி பற்றி தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க மதுரை மாவட்ட அமைப்புச் செயலாளர் க.ந.செந்தில்குமாரவேல் அனுப்பியுள்ள கடிதம் இது...

''நான் 1982-ம் வருட காலகட்டத்தில் பழநி மேற்குத் தொடர்ச்சி மலை அபிவிருத்தித் திட்டம் (வேளாண்மைப் பொறியியல் துறை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணிபுரிந்த போது பொறியியல் பட்டம் படித்த இளைஞர்கள் இருவர் முதன்முதலாக அங்கே அரசு பணியாற்றினர். இருவரும் துடிப்பு மிக்க இளைஞர்கள். நேர்மை, ஒழுங்கு, பணிவு, துணிவு, வேகம், விவேகம் நிறைந்த இந்த இளைஞர்களைப் பார்த்து வியப்புற்றேன். இக்காலத்திலும் இத்தகையவர்களா என்று எனக்குள் பேசிக்கொள்வேன்.
சாட்டை எடுத்த ஜெ.!!!!! DHlGoyJRVysEDmZGdlmR+p43

அதில் ஓர் இளைஞர் தெய்வேந்திரன் என்பவர் மட்டும் அசாத்திய துணிச்சலு​டனிருந்தார். மற்றொரு இளைஞர்தான் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி. இவர் மென்மையான குணம்கொண்டவர். நாங்கள் மூவரும் ஒன்றாகத்தான் அலுவலகம் முடிந்தபின்பு வெளியே செல்வோம். அரசு அலுவலகம் ஒன்றை புதியதாக வாடகைக்கு அமர்த்த, பழநியில் பல பகுதிகளில் இடம்தேடி அலைந்து திரிந்தோம்.

அந்தச் சூழ்நிலையில் பழநி, அண்ணாநகர் பகுதியில் பங்களா வீட்டில் செயினால் கட்டி வைக்கப்பட்ட அல்சேசன் நாய், செயின் அறுந்த நிலையில் வெளியே வந்து எங்கள் மீது பாய்ந்தது. நானும் முத்துக்குமாரசாமியும் அங்கே இருந்து ஓடிவிட்டோம். மற்றொரு பொறியாளர் அந்த அல்சேசன் நாயை பிடித்து அலேக்காக தூக்கி எறிந்தார். அல்சேசன் நாய் பயந்து ஓடிவிட்டது.

நான் உதவியாளராகப் பதிவு உயர்வுபெற்று வேறு மாவட்டம் செல்லும் நிலை ஏற்பட்டது. நாங்கள் பழகிய அந்தக் குறுகிய காலத்தில் அந்த இரண்டு பொறியாளர்களும் என் மனதில் கல்வெட்டாகப் பதிந்துவிட்டார்கள். மாறிச் செல்லும் எனக்கு நினைவுப்​பரிசாக இருவரும் ஒவ்வொரு வகையான புத்தகத்தை அன்பளிப்பாக அளித்தார்கள். முத்துக்குமாரசாமி எனக்கு வழங்கிய புத்தகம் 'மகாத்மா காந்தியின் சத்திய சோதனை.’ செல்லமாக நான் அவரை, 'அனிச்சமலர்’ என்றுதான் சொல்வேன்.

32 வருடங்களுக்கு முன்பு 30 வயதுக்குட்பட்ட வயதில் எனக்கு சத்திய சோதனை புத்தகம் வழங்கிய அந்த முத்துக்குமாரசாமி என்ற பொறியாளருக்குத் தற்கொலை என்ற இந்த நிலையா? காலச்சூழலில் நான் அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எனது மீளாதுயில் காலம் வரை முத்துக்குமாரசாமியின் வேதனை நினைவு மட்டும் மாறாது. முத்துக்குமாரசாமிக்கு நடந்த கொடுமையான நிகழ்வுகளைத் தமிழக மக்கள் தெள்ளத் தெளிவுற தெரியும்படியான செய்தியினை வழங்கிய ஜூ.விக்கு மனமார்ந்த நன்றி..!

''தேர்தல் நேரத்தில் முறைகேடு நடக்கும் மாநிலம் இது!'
சாட்டை எடுத்த ஜெ.!!!!! QuEsQKrOTTKc1wODucuc+p46
60 லட்சம் பேரை தமிழக பி.ஜே.பி உறுப்பினர்கள் ஆக்க வேண்டும் என்று உத்தரவிட்டுச் சென்று இருந்தார் அமித்ஷா. இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை எப்படி நடக்கிறது என்பதை ஆய்வு செய்ய கடந்த 5-ம் தேதி தமிழகம் வந்துள்ளார். அமித்ஷா சொன்ன அளவுக்கு இன்னும் உறுப்பினர்கள் சேரவில்லை. ஆனால், 19 லட்சம் உறுப்பினர்கள்தான் (?)சேர்க்கப்பட்டுள்ளார்களாம். 'தமிழகத்தில் பி.ஜே.பி வலிமை பெறவேண்டும். இந்தியாவில் தேர்தல் நேரத்தில் முறைகேடு நடக்கும் மாநிலங்களில் முதன்மையானதாக தமிழகம் இருக்கிறது. இதை மாற்ற நாம் பூத் வாரியாக வலிமையோடு இருக்க வேண்டும்' என்று சொன்னார்.

நன்றி-ஜூனியர் விகடன்


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

சாட்டை எடுத்த ஜெ.!!!!! Empty Re: சாட்டை எடுத்த ஜெ.!!!!!

Post by ayyasamy ram Mon Mar 09, 2015 7:54 am

;nnlh சாட்டை எடுத்த ஜெ.!!!!! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum