ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Today at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Today at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம்!

2 posters

Go down

நிலம்! Empty நிலம்!

Post by krishnaamma Sun Mar 01, 2015 7:33 pm

டவுன் பஸ்சில் செல்லும் போது,'பொட்டல்பட்டி கிராமத்தில் இருக்கும் காலி நிலத்தில ஏதோ யுனிவர்சிட்டி வரப் போகுது...' என்று அரசல் புரசலாக அய்யாசாமியின் காதில் விழுந்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன், அந்த வழியாக பஸ்சில், குடும்பத்துடன் கோவிலுக்கு போகும் போது, நீலநிற சீருடை, குல்லா அணிந்த சிலர், கேமரா ஸ்டாண்டு மாதிரி மூன்று கால்களை உடைய கருவிகளை பரப்பி வைத்து, அந்த நிலத்தை அளந்தது அய்யாசாமிக்கு ஞாபகம் வந்தது.

'ஓ... அதுதான் விசயமா?' என்று நினைத்த அய்யாசாமி, உடனே, டில்லியில் அரசு உயர் அதிகாரியாக இருக்கும் தூரத்து உறவினருக்கு போன் போட்டு, ''ராமசாமி அண்ணே... வணக்கம்ண்ணே... நல்லா இருக்கீங்களா... என்னது... ரொம்ப பிசியா இருக்கீங்களா... சரி... சரி ஒரு நிமிஷம் மட்டும் பேசிட்டு வச்சிடறேன்.

நம்ம பொட்டல்பட்டி கிராமம் இருக்குல்ல, அங்கிட்டு ஏதோ ஒரு பெரிய யுனிவர்சிட்டி ஒண்ணு வரப் போவுதுன்னு பேச்சு அடிபடுது. அது என்னன்னு தகவல் தெரிஞ்சுக்கலாம்ன்னு தான்... அதுவேற டிபார்ட்மென்ட்டா... கேட்டு தான் சொல்லணுமா... சரி, ஒரு நாலஞ்சு நாள் கழிச்சு போன் செய்யறேன், வச்சுடவா?” என்று கேட்டு, இணைப்பை துண்டித்தார்.

அய்யாசாமிக்கு ஒரே டென்ஷன்; விவரம் தெரிந்தால், அடுத்த நடவடிக்கையில் இறங்கலாம். மத்தவங்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டால் சிக்கலாகிடுமே என்ற கலவரத்துடனேயே நான்கு நாட்களை ஓட்டினார்.
போன முறை ஆபீஸ் நேரத்தில் போன் செய்யப் போய், சரியாக பேச முடியவில்லை என்பதால், இம்முறை கொஞ்சம் உஷாராக, காலை, 8:00 மணிக்கே போன் செய்தார்.

''ஆமாம் அய்யாசாமி... நீ கேள்விப்பட்டது சரிதான்; உங்க ஊர் பக்கம் ஒரு யுனிவர்சிட்டி அப்புரூவ் ஆகியிருக்கு. தனியார் ஆரம்பிக்கிற யுனிவர்சிட்டி; பேக்வர்டு ஏரியா டெவலப் மென்ட் திட்டம். பூர்வாங்க வேலைகள் முடிஞ்சு, ரிப்போர்ட் வந்து போன வாரம் தான், திட்டத்துக்கு அமைச்சகத்தில அனுமதி தந்துருக்காங்க. ஸ்பாட்ல வேலை ஆரம்பிக்க, இன்னும் சில, பல மாசம் ஆகலாம். அது சரி... நீ எதுக்கு இது பத்தி இத்தனை விலாவாரியா கேக்றே?” என்று கேட்டார்.

'இவரிடம் சொல்லலாமா வேண்டாமா...' என்று யோசித்த அய்யாசாமி, 'இப்போ சொல்ல வேணாம்; ராமசாமி எக்கச்சக்கமா காசு, பணம் வச்சிருக்கான்; அவன் முந்திக்கிட்டு கோதாவில இறங்கிட்டா, நமக்கு எதுவும் மிஞ்சாது. அப்புறம், நம்ம வேலை கெட்டு போயிடும். முதல்ல, நம்ம வேலையை முடிச்சுட்டு அப்புறம் சொல்வோம்...' என்று நினைத்தவர்,

''ஒண்ணுமில்லண்ணே... நம்மூருக்கு பக்கமா ஒரு பெரிய காலேஜ் வருதுன்னா அது, சாதாரண பட்ட விசயமா... இந்த செய்திய முதல்ல ஊருக்குள்ள சொன்னா, எனக்கு கொஞ்சம், 'கெத்'தா இருக்கும்ல... 'டில்லியில் எனக்கு நெருங்கிய சொந்தக்காரரு இருக்காரு; அவரு தான் விசயத்தை சொன்னாரு'ன்னு பெருமையா சொல்லி, தம்பட்டம் அடிச்சுப்பேன்ல,” என்றவர், ''ஆமா... யுனிவர்சிட்டியோட பேரு என்ன?” என்று கேட்டார்.

அந்த சமயம், இரைச்சலுடன் ஒரு மண் லாரி முக்கி முனகி கடந்து போனதில், அவர் சொன்னது சரியாக காதில் விழவில்லை.

''என்ன பேரு? ஓ... வச்சவால் யுனிவர்சிட்டியா... ஏதோ வட மாநில தலைவரு பேரு போல இருக்கு. இங்க ஒரே சத்தம், சரியா கேக்கல; எத்தனை நாளுதான் காந்தி, நேரு பேரையே வச்சிகிட்டு இருப்பாங்க. அது சரி, பேர் எதுவாயிருந்தா என்ன... ஆக மொத்தம் பசங்க, வாத்தி, படிப்பு சம்பந்தப்பட்ட யுனிவர்சிட்டி தானே?” என்று கேட்டார் அய்யாசாமி.

''ஆமாம்; அதேதான். அப்புறம், நான் அடுத்த மாச கடைசில அங்கிட்டு வர்றேன், அப்ப விவரமா சொல்றேன். ஆட்சி மாறிடுச்சா, ஒரே கெடுபிடி. காலைல, 9:00 மணிக்கே ஆபீசில இருக்கணுமாம். தினமும் அமைச்சரோட மீட்டிங்ன்னு உயிரை வாங்கறானுவ; அப்புறம் பேசலாம்; வச்சிடறேன்,” என்றார் ராமசாமி.

மொபைலை அணைத்த அய்யாசாமி மகிழ்ச்சி பொங்க, 'இனிமே உங்கூட பேச என்ன இருக்கு... அதான் விஷயம் உள்ளங்கை நெல்லி கனி மாதிரி தெரிஞ்சு போச்சே... பக்கத்து ஊர்ல, பெரிய யுனிவர்சிட்டி வருது. பல்கலைக் கழகம்ன்னா சும்மாவா... அன்னிக்கு அவங்க அளந்து பார்த்த அந்த புறம்போக்கு நிலம், 5 ஏக்கர் தான் இருக்கும். அது கல்லூரி கட்டடத்துக்கே போதுமோ என்னமோ... தவிர ஆசிரியர்களுக்கு குவார்ட்டர்ஸ், மாணவர்களுக்கு ஹாஸ்டல், லேபரட்டரி, கேன்டீன், விளையாட்டு திடல், அது, இதுன்னு இன்னும் 20 - 25 ஏக்கராவது தேவைப்படும்.

சுத்தி, முத்தி இருக்கிற நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கிட்டா, நல்ல லாபத்துக்கு விக்கலாமே... அரசாங்க யுனிவர்சிட்டின்னா, நஷ்ட ஈடுன்னு ஒரு பிச்சைக்கார தொகைய கொடுப்பாங்க. தனியார்ன்னா, தடாலடியா பேசி ஒரு நல்ல தொகைய கறந்துடலாம்...' என்று நினைத்தார்.
யாரும் சீண்டாமல் கிடந்த பொட்டல்பட்டி நிலங்களை, சல்லிசாக, கொஞ்சம் கொஞ்சமாக வாங்க ஆரம்பித்தார் அய்யாசாமி. மனைவி, மகள் மற்றும் மகன் என்று நெருங்கிய உறவினர்கள் பெயரில் பினாமியாக வாங்கிக் குவித்தார்.

நாற்பது கிலோ மீட்டர் தள்ளி, டவுனில் இருந்த ரிஜிஸ்டிரார் ஆபீஸ் மூலம், விஷயம் கசிந்து, அய்யாசாமி மொத்தமாக நிலத்தை வாங்குவதாக அறிந்த ஊர் மக்கள், இதில், ஏதோ பெரிய உள்குத்து இருக்கிறது என ஊகித்து, போட்டி போட்டு வாங்க ஆரம்பிக்க, கிரவுண்டு விலை, ஏகத்துக்கு எகிறியது. சென்ட் 5,000க்கு விலை போகாமல் கிடந்த இடம், 50,000த்தை தொட்டது. ரிஜிஸ்டிரார் ஆபீஸ் ஊழியர்களே, ஆளுக்கு ஐந்து, பத்து கிரவுண்ட் வாங்கிப் போட்டனர்.
ஓரிரு மாதங்கள் கழிந்தன.

ஒரு சுப நிகழ்ச்சிக்காக, டில்லியிலிருந்து ஒரு வார லீவில் வந்திருந்தார் ராமசாமி.
''என்ன அய்யாசாமி... ஊர்ல எல்லாரும் பொட்டல்பட்டியையே விலைக்கு வாங்கிட்டாங்களாமே... என்ன விசயம்?” என்று கேட்டார்.

''என்னண்ணே தெரியாத மாதிரி கேக்கிறே... பல்கலைக்கழகம் வருதுன்னு நீதானே சொன்னே... அதுக்கு, பல ஏக்கர் நிலம் தேவைப்படும் இல்ல. அதான், இப்ப வாங்கி வச்சி, நல்ல லாபத்துக்கு யுனிவர்சிட்டிகாரங்களுக்கு விக்கலாம்ங்கிற ஐடியாவுல எல்லாரும் வாங்கிக் குவிக்கிறாங்க,” என்றார்.
தலையில் அடித்துக் கொண்டு சிரித்தார் ராமசாமி.

''என்னண்ணே திட்டம் வராதா... இடம் மாறிப் போயிடுச்சா,” என்று கலவரத்துடன் கேட்டார் அய்யாசாமி.
''திட்டம் எல்லாம் வரும்; நாந்தான் சொன்னேனே, அது, வர்சுவல் யுனிவர்சிட்டின்னு!”
''ஆமாண்ணே சொன்னே; நான்கூட வச்சவால் அப்படிங்கற பேரு, கேள்விப்படாத தலைவரு பேரா இருக்கேன்னு சொன்னேனே...”என்றார்.

''ஐயோ... வர்ச்சுவல் யுனிவர்சிட்டின்னா, கண்ணுக்கு தெரியாமல் இயங்கும் பல்கலைக் கழகம்ன்னு அர்த்தம்.”
''அப்படின்னா...”

''பழைய காலம் மாதிரி, வாத்தியார் வந்து வகுப்புல பாடம் எடுக்கிறதோ, கூட்டம் கூட்டமா பசங்க வந்து படிக்கிறதோ அல்லது ஹாஸ்டலில் தங்கறதோ கிடையாது; தொழில் நுட்ப முன்னேற்றம் எங்கியோ போயிடுச்சு. எல்லாமே கம்ப்யூட்டர் மயம் அப்பு; நேரடி ஒளிபரப்பு; இங்க ஒரு லெக்சரர் பேசினா, இந்தியா பூரா ஒளிபரப்பாகும்.

''மாணவர்கள் வீட்டில் இருந்தாப்பலயே, நோட்ஸ் எடுப்பாங்க. 'சிடி' என்ற காம்பேக்ட் டிஸ்க் மூலமும், சேட்டிலைட் டிஷ் மூலமும் பாடம் ஒளிபரப்பாகும். 'பேஸ்புக்' மற்றும் 'ட்விட்டர்'ல விவாதிச்சு தெரிஞ்சுப்பாங்க.
''அதனாலே, இங்க குறைந்தபட்ச ஊழியர்கள் தான் இருப்பாங்க. அவங்களுக்கு மாடியில் குவார்ட்டர்ஸ், கேன்டீன்னு மொத்தம் அஞ்சு ஏக்கருக்குள்ளே கட்டடம் அடங்கிடும். அட, உனக்கு ஏன் இப்படி வேர்த்து கொட்டுது...”என்று ராமசாமி கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அய்யாசாமிக்கு இதயத்தில் லேசான வலி கிளம்பியது.

மறுநாள் ஆஸ்பத்திரி வாசலில் அவருடைய உறவினர்கள் சோகமாக பேசிக் கொண்டிருந்தனர்...
'பல லட்சத்த செலவு செஞ்சு வீணா கிடந்த பொட்டல் நிலத்த வாங்கிப் போட்டாரே... ஒரு மெடிக்கல் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தா, ஹார்ட் அட்டாக்குக்காக ஆஸ்பத்திரியில செலவான, நாலு லட்சத்தையாவது எடுத்திருக்கலாம். தவிர கொஞ்சம் மெண்டலா வேற ஆயிட்டாராமே... ம்ம்... பேராசை பெரு நஷ்டம்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க...' என்றனர்.

ஆர்.மாலதி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிலம்! Empty Re: நிலம்!

Post by ayyasamy ram Sun Mar 01, 2015 8:00 pm

: நிலம்! 3838410834
-
பாவம்...தப்பா புரிஞ்சுக்கிட்டாரு...!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82900
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நிலம்! Empty Re: நிலம்!

Post by krishnaamma Mon Mar 02, 2015 12:37 am

ayyasamy ram wrote:: நிலம்! 3838410834
-
பாவம்...தப்பா புரிஞ்சுக்கிட்டாரு...!
-
மேற்கோள் செய்த பதிவு: 1123604

பேராசை பெரு நஷ்டம்ன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க......................அது தான் இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நிலம்! Empty Re: நிலம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum