ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10 
Barushree
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10 
kavithasankar
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10 
mohamed nizamudeen
தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_m10தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

+2
ராஜா
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by krishnaamma Sun Mar 01, 2015 4:36 pm

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க பா.ஜ.,வின் தங்க நாணய திட்டம் !

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Tf5ugkHJQCKLVthSd81x+Tamil_News_large_1195703

புதுடில்லி : வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தின் மீதான மோகத்தை குறைப்பதற்காகவும், உள்நாட்டு தங்கத்தின் மீது ஈர்ப்பை ஏற்படுத்தவும் "தங்க நாணய திட்டம்" என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பொது பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி வெளியிட்டார்.

வெளிநாட்டு தங்க மோகம் : உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யம் நாடாக இந்தியா திகழ்கிறது. ஆண்டுக்கு சராசரியாக 800 முதல் 1000 டன்கள் தங்கத்தை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு 20,000 டன்கள் என புள்ளி விபர அறிக்கை தெரிவிக்கிறது. இந்த தங்கம் பெரும்பாலும் விற்பனை செய்யப்படுவதே இல்லை.

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததுடன் வெளிநாட்டு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக தங்கத்தின் தேவையும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் அளவும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.இதனால் இந்திய தங்க நகை உற்பத்தியாளர்களின் தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தங்க நாணய திட்டம் : தங்க சேமிப்பு திட்டம் மற்றும் தங்கத்தின் மீதான கடன் திட்டம் ஆகியவற்றிற்கு மாற்றாக கொண்டு வரப்பட்டுள்ளது தான், தங்க நாணய திட்டம். இந்த புதிய திட்டத்தின் மூலம், வங்கி வாடிக்கையாளர்கள் தங்கத்தை முதலீடு செய்து அதன் மூலம் வருமானம் பெற முடியும். மேலும், முதலீடு செய்த தங்கத்தின் மீது கடனும் பெற முடியும்.

வங்கிகள் மற்றும் பிற டீலர்கள் மூலம் தங்கத்தை பணம் ஆக்கிக் கொள்ளலாம். இதன் மூலம் பழைய தங்கத்தை மீண்டும் புதுப்பித்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது. இதனை மேலும் ஊக்குவிப்பதற்காக இந்திய தங்க நாணயங்களையும் அரசு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த தங்க நாணயங்களில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு விற்பனைக்கு வர உள்ளது.

வியாபாரிகள் வரவேற்பு : அரசின் தங்க நாணய திட்டத்திற்கு தங்க நகை வியாபாரிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து தங்க நகை வர்த்தக கூட்டமைப்பின் தலைவர் ஹரிஷ் சோனி கூறுகையில், தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. இருந்த போதும் அரசு அறிமுகம் செய்துள்ள தங்க நாணய திட்டம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது ராஷ்டிர ஸ்வர்ண நிவேஸ் திட்டத்தை போன்றே உள்ளது. இதன் மூலம் உள்நாட்டு தங்கத்தின் புழக்கம் அதிகரிப்பதுடன், இறக்குமதிகள் குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தங்க பத்திரம்:
இனி, வீட்டு பீரோவில் சும்மா கிடக்கும் தங்கத்தின் மூலம் வட்டி வருமானம் பார்க்கலாம். இந்திய மக்களின் வீடுகளில் 20 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விதமான சேமிப்பு, பூட்டி வைக்கப்படுவதால், வங்கி சேமிப்புகளை போல் முதலீடுகளுக்கு கிடைக்காமல் போய்விடுகிறது. இந்த நிலையை மாற்றி, தங்கம் வாங்குபவர்கள், முதலீட்டாளர்கள், அரசு என, முத்தரப்பினரும் பயன்பெறும் விதத்தில், பட்ஜெட்டில் இரண்டு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.

தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம்.

அரசு தங்கம் கடன் பத்திரம் (சாவரின் கோல்டு பாண்டு) - தங்கத்தை நேரடியாக வாங்குவதற்கு பதில் இதை வாங்கலாம். இவற்றின் மீது வட்டி வழங்கப்படும். தங்கம் அல்லது பணம் தேவைப்படும் போது, பத்திரத்தை கொடுத்துவிட்டு, அன்றைய விலையில் தங்கமோ அல்லது அதற்கு நிகரான பணத்தையோ பெற்றுக்கொள்ளலாம்.

தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by krishnaamma Sun Mar 01, 2015 4:42 pm

//தங்கத்தை பணமாக்கும் திட்டம் (கோல்டு மானிடைசேஷன் ஸ்கீம்) - இதில் வங்கி கணக்கை போல் தங்கத்திற்கு பிரத்யேக கணக்கை துவங்கி, தங்கத்தை அதில் வைக்கலாம். வைக்கப்பட்ட தங்கத்திற்கு வட்டி வழங்கப்படும். நகை தொழிலில் உள்ளவர்களும் இத்தகைய கணக்கை துவங்கி வைப்பு தங்கத்தின் மீது கடன் வாங்கிக் கொள்ளலாம். //

லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by ராஜா Mon Mar 02, 2015 11:08 am

நல்ல முயற்சி , அனைவரும் தங்கள் பயன்படுத்தும் ஒரு சில அணிகலன்களை தவிர மற்ற (bank locker , வீட்டு அலமாரிகளில்) சும்மா இருக்கும் நகைகளை இது போல தங்க நாணய திட்டத்தில் சேர்த்தால் வட்டியும் கிடைக்கும் இதன் மூலம் இந்திய ரூபாயின் மதிப்பு உயரவும் வாய்ப்புள்ளது.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by விமந்தனி Mon Mar 02, 2015 11:19 am

திட்டம் நன்றாக தான் இருக்கிறது. ஆனா, கிருஷ்ணாம்மா சொல்வது போல வேணும் போது தேவையான நகைகளை எடுத்து கொள்ள முடியுமா....?

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonதங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by ராஜா Mon Mar 02, 2015 11:53 am

விமந்தனி wrote:திட்டம் நன்றாக தான் இருக்கிறது. ஆனா, கிருஷ்ணாம்மா சொல்வது போல வேணும் போது தேவையான நகைகளை எடுத்து கொள்ள முடியுமா....?
தங்க நாணயதிட்டம் என்று தானே சொல்லியுள்ளனர் அக்கா , நாம் deposit பண்ணும் நகைகளுக்கு ஈடான 24 காரெட் நாணயங்களை எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by யினியவன் Mon Mar 02, 2015 12:33 pm

krishnaamma wrote:லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ் புன்னகை

லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.

நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by ராஜா Mon Mar 02, 2015 12:54 pm

யினியவன் wrote:லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.

நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப புன்னகை

அருமையான திட்டம் , இந்த தங்கத்தை உலக வங்கியில் deposit பண்ணி நமது பணத்தின் மதிப்பை உயர்த்திகொள்ளலாம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by சிவனாசான் Tue Mar 03, 2015 6:01 am

தங்கமான திட்டங்க.........வரவேற்போம்...........
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by krishnaamma Tue Mar 03, 2015 12:16 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:லாகாரில் வைப்பது போலவா?................அணிவதற்குத்தானே   நகை வாங்குகிறோம்...திடீரென்று வேண்டும் என்றால்?...............எடுக்க முடியுமா?...யாராவது விளக்கமுடியுமா இது பற்றி?.............வங்கி இல் உருக்கி விடுவார்களா? .......புரியலையே?...................விளக்கம் ப்ளீஸ் புன்னகை

லாக்கரில் வைப்பது போல் இல்லை. தங்கள் நகைகளுக்கு ஈடாக 24 காரட்டில் அன்றைய விலையில் மாற்றி அந்த தங்கத்தை கணக்கில் வரவு வைத்து விடுவார்கள். அதற்கு வட்டியும் தருவார்கள். என்று வேண்டுமோ அன்று அன்றைய விலையில் 24 காரட் தங்கமாக அல்லது அதற்கு ஈடான விலையை தந்துவிடுவார்கள்.

நகை வேண்டும் என்றால் யார்ட்டயாவது அடிச்சிட வேண்டியது தான் தேவைக்கு ஏற்ப புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1123707

அதுக்கு ஏன் நாம் வாங்கி,( கூலி சேதாரம் போட்டு வாங்கி...) வங்கி   இல் வைக்கணும் இனியவன்?....( இவங்க வேறு 24 காரட் என்று மாற்ற எவ்வளவு கழிப்பாங்களோ ? சோகம் ) ............வாங்கும்போதே coin  ஆக வாங்கிடலாமே?..........நகைகளை போட்டுக்கணும் என்று வாங்கி விட்டு, இவர்களிடம் எப்படி கொடுப்பது? சோகம்................ கூடாது கூடாது கூடாது

சிலர், பணம் ( வட்டி ) கிடைக்கும் ஆசை இல் உள்ளே வைத்திருக்கும் நகைகளை கொண்டு போய் வங்கி இல் வைக்கும்போது,

" இது ஏற்கனவே டிக்ளேர் செய்த நகையா? "..." எப்போ வாங்கினது"?....."பில் இருக்கா "  என்று ஆயிரம்  கேள்வி கேட்ப்பார்கள்.......

கருப்பு பணம் போல கருப்பு நகைகளை வெளியே கொண்டு வர போட்டுள்ள திட்டம் இது.............எவ்வளவு  பேர் இதை உபயோகிப்பார்கள் என்று எனக்கு சந்தேகமாய் இருக்கு புன்னகை
.
.
ஸ்விஸ் இல் இருப்பதை கொடுவந்துட்டாங்க..............இப்போ இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by T.N.Balasubramanian Tue Mar 03, 2015 6:15 pm

பெண்கள் நகை அணிந்தால்தான் அழகாய் இருப்பார்களா ?
வெளிநாட்டு பெண்கள், இந்திய பெண்கள் போல்  நகை அணிகின்றனரா?
நகை அணியவேண்டியதின் அவசியம் என்ன ?

ரமணியன்

பிகு : எப்பிடி இருப்பினும் , இந்த முயற்சி/ திட்டம் , வெற்றி அடையுமா ? என்பது சந்தேகமே !!
ர...ன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம் Empty Re: தங்கத்தின் மீதான மோகத்தை குறைக்க, தங்க நாணய திட்டம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum