ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

+3
M.M.SENTHIL
krishnaamma
சிவா
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:28 pm

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா KXKXXYGQRh2Nm23eKW2O+india-vs-south-africa

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 130 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியை தோற்கடித்துள்ளது.

மெல்பர்னில் இன்று நடந்த பி-பிரிவு ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கள் இழப்புக்கு இந்திய அணி 307 ஓட்டங்களை குவித்திருந்தது.

தென்னாப்பிரிக்க அணி 40.2 ஓவர்கள் முடிவில் 177 ஓட்டங்கள் மட்டுமே குவித்திருந்த நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவிக்கொண்டது.

இந்திய அணியில் ஷிக்கார் தவான் ஆபாரமாக ஆடி 137 ஓட்டங்களையும் அஜின்க்யா ரஹானே 79 ஓட்டங்களையும் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

விராத் கோலி 46 ஓட்டங்களையும் மகேந்திர சிங் தோனி 18 ஓட்டங்களையும் எடுத்திருந்தினர்.

தென்னாப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக பாப் டு பிளெஸிஸ் 55 ஓட்டங்களைக் குவித்திருந்தார். டி வில்லியர்ஸ் 30 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் 10 ஓவர்களில் 41 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

மொஹமட் ஷமி மற்றும் மோஹித் ஷர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணியை 177 ஓட்டங்களுக்குள் சுருட்டினர்.

நடப்பு சாம்பியனான இந்தியா இம்முறை உலகக்கோப்பை போட்டிகளில் பங்குபற்றிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

பாகிஸ்தானுடனான முதல் போட்டியை 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, பி-பிரிவில் 4 புள்ளிகளுடன் இந்தியா முன்னணியில் உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:29 pm

தென் ஆப்பிரிக்காவை 130 ரன்களில் வீழ்த்தி வரலாற்றை மாற்றி எழுதியது இந்திய அணி!

பாகிஸ்தானைத் தொடர்ந்து, தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தியுள்ளதால், உலகக் கோப்பை காலிறுதிக்கு முன்னேற்றும் வாய்ப்பை வலுப்படுத்தி இருக்கிறது இந்தியா.

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்க அணியை 130 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியாவுக்கு எதிராக 308 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 177 ரன்கள் மட்டுமே இழந்து தோல்வியுற்றது.

தவணின் அபார சதமும், ரஹானேவின் அதிரடி அரை சதமும் பேட்டிங்கில் கைகொடுக்க, அஸ்வின் - ஷமி - மோஹித் ஆகியோரின் பந்துவீச்சுக் கூட்டணியின் உறுதுணையுடன் இந்தியா அபார வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:29 pm

மாறியது வரலாறு

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்காவை வென்றதில்லை என்ற வரலாற்றை இன்று மாற்றி எழுதியது இந்தியா.

இது, உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்கா சந்தித்த மிக மோசமான தோல்வி என்பதும் கவனிக்கத்தக்கது.

உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தோற்காத ஒரே அணி தென் ஆப்பிரிக்காதான் (3 போட்டிகள்) என்பதே நேற்று வரை வரலாறாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவின் பார்னெல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 17 ரன்கள் எடுத்திருந்தார். 40.2-வது ஓவரில் ஜடேஜா பந்துவீச்சில் தாஹிர் 8 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

37.2-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில், 2 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கெல் பவுல்ட் ஆனார். 36.2-வது ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் தவணிடம் கேட்ச் கொடுத்து ஸ்டெயின் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார்.

33.6-வது ஓவரில் அஸ்வினின் பந்துவீச்சில் ஃபிலாண்டர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 33.4 ஓவரில் மில்லர் ரன் அவுட் ஆனார். அவர் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.

31.3-வது ஓவரில் துமினி 15 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:30 pm

2 முக்கிய விக்கெட்டுகள்!

28.1-வது ஓவரில் மோஹித் சர்மா பந்துவீச்சில், தவணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் டூ பிளஸ்ஸி. அவர் 71 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்திருந்தார்.

22.5 ஓவரில் ஜடேஜா பந்தை அடித்தார் டிவில்லியர்ஸ். அவர் அடித்த பந்து மோஹித் சர்மா வசம் வந்தது. சட்டென மிகச் சிறப்பாக அவர் த்ரோ செய்ய, அற்புதமாக ரன் அவுட் செய்தார் தோனி.

அபாயகரமான ஆட்டக்காரர் என்று கருதப்படும் டிவில்லியர்ஸும் டூ பிளஸ்ஸியும் ஆட்டமிழந்து, இந்தியாவுக்கு திருப்புமுனையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

முதல் இரண்டு விக்கெட்டுகளுக்குப் பிறகு, திணறலைத் தவிர்த்து சற்றே வலுவாக ஆடத் தொடங்கிய நிலையில், தென் ஆப்பிரிக்கா அடுத்தடுத்த 2 முக்கிய விக்கெட்டுகள் பறிபோனது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப்படுகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:30 pm

ஆம்லா அவுட்

10.2-வது ஓவரில் மோஹித் சர்மாவின் அபாரப் பந்துவீச்சில் முகமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ஆம்லா. அவர் 28 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்திருந்தார்.

தென் ஆப்பிரிக்க அணியின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தி, விக்கெட்டுகளை வீழ்த்தும் முனைப்பு மிக்கதாக இந்திய அணியின் பவுலிங் அமைந்துள்ளது.

முன்னதாக, துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான டிகாக் 15 பந்துகளில் 7 ரன்கள் எடுத்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

8.6-வது ஓவரில் ரஹானே சிறப்பாக ஃபீல்டிங் செய்தார். அவரின் துணையுடன் ஆம்லாவை ரன் அவுட் செய்யும் வாய்ப்பை ரஹானே தவறவிட்டார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:31 pm

இந்திய இன்னிங்ஸ்:

தவண், ரஹானே அதிரடி ஆட்டம்: தென் ஆப்பிரிக்காவுக்கு 308 ரன்கள் இலக்கு

ஷிகார் தவணின் அதிரடி சதம், ரஹானேவின் அபார ஆட்டத்தின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், தென் ஆப்பிரிக்க அணிக்கு 308 ரன்கள் என்ற சற்றே சவாலான வெற்றி இலக்கை இந்திய அணி நிர்ணயித்துள்ளது.

கடைசி 5 ஓவர்களில் எதிர்பார்த்தபடி சிறப்பாக பேட் செய்யாததால், இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் கட்டுக்குள் வைக்கப்பட்டது.

அஸ்வின் 5 ரன்களும், ஷமி 4 ரன்களும் எடுத்து, கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி ஓவர்களில் விளாசி ஸ்கோரை வெகுவாக் உயர்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி, 11 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், மோர்கெல் பந்துவீச்சில் கீப்பர் டீகாக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

47.2-வது ஓவரில் ரவீந்திர ஜடேஜா 4 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், டிவில்லியர்ஸால் டைரக்ட் ஹிட்டில் ரன் அவுட் ஆனார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:31 pm

அதிரடி ரஹானே 79

இந்தியாவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்வதற்கு உறுதுணை புரிந்த ரஹானா 45.6-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அவர் 60 பந்துகளில் 79 ரன்களை விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சோபிக்காத ரஹானே, இப்போட்டியில் மீண்டெழுந்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, சுரேஷ் ரெய்னா 44.5-வது ஓவரில் மோர்கெல் பந்துவீச்சில் ரோசோவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இவர் 5 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:31 pm

தவண் அபார சதம்

வலுவான பந்துவீச்சும், நல்ல ஃபீல்டிங்கும் கொண்டதாகக் கருதப்படும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக அபார சதம் அடித்தார், இந்தியத் துவக்க ஆட்டக்காரர் ஷிகார் தவாண்.

43.4-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 146 பந்துகளில் 137 ரன்கள் குவித்து, இந்திய ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார். இதுதான் அவரது சர்வதேச ஒருநாள் போட்டியில் தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

உலகக் கோப்பை முன்பு வரை ஃபார்மில் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட தவண், தன் பேட்டிங் மூலம் இப்போது தொடர்ச்சியாக பதில் சொல்லி வருகிறார்.

ஷிகர் தவண் சதமடித்த அனைத்துப் போட்டிகளிலுமே இந்தியா வெற்றி பெற்றுள்ளது என்கிறது ஒரு புள்ளி விவரம்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:32 pm

விராட் கோலி 46

முன்னதாக, சிறப்பாக பேட் செய்து வந்த கோலி, 60 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில், இம்ரான் தாஹீர் பந்துவீச்சில் டூ பிளேஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 19.1-வது ஓவரில் பார்னெல் பந்துவீச்சில் கோலியின் கடினமான கேட்சை ஆம்லா தவறவிட்டார்.

இந்திய அணி முதல் விக்கெட்டை ஆரம்பத்திலேயே பறிகொடுத்த நிலையில், அணிக்கு வலுவான அடித்தளம் அமைவதற்கு, தவணுக்கு கோலி உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

திணறல் துவக்கம்

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே மெல்போர்னில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை லீக் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

துவக்க வீரர்களாக ஷிகர் தவண் மற்றும் ரோஹித் சர்மா களமிறங்கினர். ஆரம்பத்தில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சுக்கு இந்தியா திணறியது.

ஸ்டெய்ன் வீசிய முதல் ஓவரை சந்தித்த ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்கவில்லை. 3-வது ஓவரில் ஏபி டிவில்லியர்ஸின் அற்புதமான ஃபீல்டிங்கில் ரோஹித் சர்மா ரன் அவுட் ஆனார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by சிவா Sun Feb 22, 2015 11:33 pm

ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடினார் தவானுக்கு கேப்டன் டோனி புகழாரம்

அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். என்று கேப்டன் டோனி கூறியுள்ளார்.

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் டோனி கூறியதாவது:‘

அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் ஒருங்கிணைந்து கலக்கி இருக்கிறோம். இது மற்றொரு முழு நிறைவான செயல்பாடாகும். வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசி நெருக்கடி அளித்தனர். ஜடேஜா கூட நன்றாக பவுலிங் செய்தார்.

ஷிகர் தவான் தனது போக்கில், திட்டமிட்டு அருமையாக விளையாடினார். பெரிய ஷாட் தேவைப்பட்ட போது, அதை செய்தார். ஒன்று, இரண்டு ரன்கள் வீதம் தேவைப்பட்ட போது அதற்கும் ஒத்துழைத்தார். சதத்தை கடந்த பிறகும் அவசரப்படாமல் நீண்ட நேரம் நின்று ரன்களை சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஆடினார்.

சதத்தை எட்டிய பிறகும், மொத்தம் 130 அல்லது 140 ரன்கள் குவிக்க முடிகிறது என்றால் அது தான் அணிக்கு முக்கியம். அதனால் அணி கூடுதலாக 20 முதல் 25 ரன்களை பெற முடியும். வலைபயிற்சியின் போது தவான் கடினமாக உழைத்தார். அதற்கு பலன் கிடைத்து இருக்கிறது. பார்மில் இருக்கிறாரா? இல்லையா? என்பது பற்றி ரசிகர்கள் அடிக்கடி பேசுகிறார்கள்.

பார்ம் என்பது பெரிய விஷயமே கிடையாது. 15 முதல் 20 நிமிடங்கள் களத்தில் நின்று விட்டாலேயே இயல்பான நிலைக்கு வந்து விடலாம்’ என்று கேப்டன் டோனி கூறினார்.

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா Empty Re: உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது.
» உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி- இந்தியா தனது 6-ஆவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளை இன்று எதிர்கொள்கிறது.
» இந்தியா - அரபு அமீரகம் - உலகக் கோப்பை: இந்தியா வெற்றி
» உலகக் கோப்பை கிரிக்கெட் 2023
» உலகக் கோப்பை நமக்குத்தான்! - கிரிக்கெட் ஜூரம் ஆரம்பிச்சாச்சு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum