ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

அவசர அவசரமாய் ...  நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Mon Feb 16, 2015 12:26 pm

அவசர அவசரமாய் ...
நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் !பேச 9843268210.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் - 641 001. விலை : ரூ. 50. vijayapathippagam2007@gmail.com
இனிய நண்பர் கவிஞர் பொன் விகரம் அவர்கள் மாமனிதர் தமிழ்க்கூத்தான் அறிவு பட்டறையில் வார்த்து எடுக்கப்பட்ட வார்ப்பு. திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் என்னோடு கவியரங்கில் கலந்து கொண்டு கவிதை வாசிக்கும் அன்பர். நூல் வெளியீட்டு விழாக்களை பிரம்மாண்டமாக நடத்தி பிரமிப்பில் ஆழ்த்துபவர். அவசர அவசரமாய் என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. நூல் முழுவதும் தலைப்பு குறித்தே ஆழ்ந்து சிந்தித்து புதுக்கவிதைகள் வடித்துள்ளார். வாழ்த்துரைகள், அணிந்துரை, அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.
இயந்திரமயமான இந்த உலகத்தில் மனிதர்களும் இயந்திரமாகவே மாறி வருகின்றனர். எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்றாகி விட்டது. பொறுமை என்பதின் பொருள் புரிவதில்லை பலருக்கு. முடிவு என்பது யோசித்து எடுக்க வேண்டும் எனபதை வரலாற்று நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதிய கவிதை நன்று.
அமெரிக்காவின்
அவசர முடிவு
ஹிரோசிமா, நாகசாகி.
அரசு திட்டப் பணங்கள் ஐஸ் கட்டி கைமாறுவது போலவே இருக்கின்றன. முழுமையாக திட்டத்திற்கு சென்று அடைவதில்லை. முன்பெல்லாம் சாலைகள் சரலை கற்கள் கொட்டி தார் ஊற்றி தரமாக போட்டார்கள். ஆனால் இன்று ஒதுக்கப்படும் நிதியில் சில பகுதி அரசியல்வாதிகளுக்கு சென்று விடுவதால் சாலையை தரமின்றி போட்டு வருகின்றனர். அதனை உணர்த்திடும் புதுக்கவிதை நன்று.
அடுத்த
நாளே
பல்லைக் காட்டுது
அவசரமாய்
போட்ட
தார்சாலை.
காலையில் பணம் கடன் கொடுத்து மாலையில் வட்டி வாங்கும் கொடூரம் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது. வட்டி கட்ட முடியாமல் தற்கொலை மரணங்கல் நாளும் அரங்கேறி வருகின்றது. அதனை உணர்த்திடும் கவிதை.
உயிரை
எடுக்குது
அவசரத்துக்கு
வாங்கிய
ரன்னு வட்டி.
குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா, கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் வரிகள் போல, சிலர் தவறான வழியில் விரைவாக பணம் ஈட்டி விட்டு பின் சிறைபட்டு அல்லல்படும் அவலங்களும் நாட்டில் நடந்து வருகின்றது.
அவசர அவசரமாய்
பணம் சேர்த்தான்
ஆற அமர
உட்கார்ந்து
வருத்தப்படுகிறான்
சிறைச்சாலையில்.
கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று பொன்மொழி உண்டு. இன்று மதுக்கடை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றாகி விட்டது. மதுக்கடை இல்லாத பட்டிதொட்டி எல்லாம் மதுக்கடைகள் பெருகி விட்டன.
சீக்கிரமாய்
வரும்
போதையில்
அவசரமாய்
முடியுது
ஆயுள்
குடிக்கு அடிமையாகி பலர் அற்ப ஆயுளில் மரணம் அடையும் சோகத்திற்கு முடிவு கட்ட வேண்டும்.
தமிழகத்தில் நடிக்கும் நடிகர்கள், இரண்டு படம் வெற்றி பெற்று விட்டால் உடன் கட்சி தொடங்கி முதல்வர் ஆக வேண்டும் என்று கனவு காண்கின்றனர். ஆனால் கண்ட கனவு நனவாகுமா? என்பதே கேள்விக்குறி.
அவசரம்
நேற்று
அரம்பித்த
கட்சி
இன்று
ஆட்சியை
பிடிக்க
அலையுது !
2016ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று 2016 பேர் சொல்லி வருகின்றனர். அவர்கள் சொல்வதைக் கேட்டு மக்கள் சிரித்து வருகிறார்கள்.
சாலை விபத்து எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றது. வருடத்திற்கு வருடம் விபத்து எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கின்றது. காரணம் பொறுமையின்மை, அவசரம்.
சாலைகளில்
அவசரம்
வேகமாய் கூடுது
விபத்துக்களின்
எண்ணிக்கை !
பொறுத்தார் பூமி ஆள்வார் என்று பொன்மொழி உண்டு. இன்று அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. பதறாத காரியம் சிதறாது என்பார்கள். அதனையும் இன்று பொருட்படுத்துவதில்லை. அவசரத்தில், பதற்றத்தில் பல தவறுகள் நடந்து வருகின்றன. ஆனால் இயற்கை எந்த அவசரமுமின்றி நிதானமாக அதன் பணியினை செவ்வன செய்து வருகின்றன என்ற உண்மையை கவிதையில் வடித்த விதம் நன்று.
பூமி
அவசரமில்லாமல்
சுத்துது
பூக்கள்
அவசரமில்லாமல்
மலருது
நிலவும், சூரியனும்
வழக்கம் போல உதிக்குது
கோடான கோடி
வருடமாய் அவை அப்படியே !
இருக்குது அவசரமில்லாமல்
மனிதனின் ஆறாம் அறிவுக்கு மட்டும்
எத்தனை அவசரம் எத்தனை அவதாரம் !
அவசரம் என்ற ஒரு கருப்பொருளைக் கொண்டே மிக அழகாக சிந்தித்து கவிதைகள் வடித்த இனிய நண்பர் கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அவசரம்
மண்ணை
மலடியாக்கி விட்டு
விதைகளுக்கு
வயாகரா குடுக்குது !
உலகமயம், தாராளமயம் என்ற பெயரில் வந்த அவசர முடிவுகள் மண்ணை மலடியாக்கிய உண்மையை கவிதையில் வடித்தது சிறப்பு. பாராட்டுகள். தொய்வின்றி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி கவிஞர் பொன் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள். . .
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» அவசர அவசரமாய் ... நூல் ஆசிரியர் : பொன் விக்ரம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.
» ஹைக்கூ ஆற்றுப்படை நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன் .குமார்
» வடிகால்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் பொன் .கண்ணகி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» இந்திய இலக்கியச் சிற்பிகள் மு .வ .( மு .வரதராசன் ) நூல் ஆசிரியர் பொன் சௌரி ராஜன். நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum