ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தின விழாவுக்கு ஒபாமாவை அழைத்தது சாதனை: மோடி உத்தரவை நிறைவேற்றிய தூதர் ஜெய்சங்கர்

Go down

குடியரசு தின விழாவுக்கு ஒபாமாவை அழைத்தது சாதனை: மோடி உத்தரவை நிறைவேற்றிய தூதர் ஜெய்சங்கர் Empty குடியரசு தின விழாவுக்கு ஒபாமாவை அழைத்தது சாதனை: மோடி உத்தரவை நிறைவேற்றிய தூதர் ஜெய்சங்கர்

Post by kshanmuganathan Thu Jan 22, 2015 3:52 am

புதுடில்லி: இந்திய குடியரசு தின விழாவிற்கு, அமெரிக்க அதிபர் ஒபாமாவை அழைப்பது என்ற யோசனையை முதலில் தெரிவித்தது, பிரதமர் மோடி தான்; அதை நிறைவேற்றி காட்டியது, அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

கடந்த, 1947, ஆகஸ்ட் 15ல், பிரிட்டீஷாரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற இந்தியாவுக்கென தனி ராணுவம், தனி அரசியல் அமைப்புச் சட்டம், தனி குடியரசு ஏற்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதத்தில், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 26ல் குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. இதில், நம் ராணுவ பராக்கிரமத்தை வெளி உலகுக்கும், நாட்டு மக்களுக்கும் காட்டும் விதத்தில், ராணுவத்தின் அனைத்து படைப்பிரிவினரும் ஊர்வலமாக கொண்டு வரப்படுகின்றனர். இந்த உயரிய, கோலாகல விழாவில், அமெரிக்க அதிபர் ஒருவர் பங்கேற்பது இது தான் முதல் முறை. இதற்கு முன், பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதற்கு முன் ஆட்சியில் இருந்த எந்த அரசுகளும், அமெரிக்க அதிபரை, இந்திய குடியரசு தின விழாவுக்கு அழைக்க வேண்டும் என, நினைக்க கூட இல்லை. சிறிய நாடுகளின் தலைவர்களும், நெருங்கிய நட்பு நாடுகளின் தலைவர்களும் தான், குடியரசு தின சிறப்பு விருந்தினர்களாக, இதுவரைஅழைக்கப்பட்டிருந்தனர். நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற மோடி, மூன்று மாதங்களிலேயே, அமெரிக்க அதிபருக்கு அழைப்பு அனுப்பி, அவரும் அந்த அழைப்பை ஏற்று, புதிய சாதனையை படைத்துள்ளார்.



எவ்வாறு சாத்தியமாயிற்று?


* மே, ஜூன் மாதங்களில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜெய்சங்கரிடம் பேசிய பிரதமர் மோடி, 'ஜனவரி 26, குடியரசு தின விழாவில், சிறப்பு விருந்தினராக அதிபர் ஒபாமாவை அழைக்க முடியுமா...' என, கேட்டார்.
* அந்த கேள்வியை ரகசியமாக வைத்துக் கொண்ட ஜெய்சங்கர், இந்த கேள்வியை, தனக்கு நெருக்கமான அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் கொண்டு சென்றார்.
* அமெரிக்க அதிகாரிகள், இதுகுறித்து, அதிபருக்கு நெருக்கமான வட்டாரங்களில் கேட்கவே, விஷயம், ஒபாமாவின் காதுகளுக்கு சென்றது.
* இதற்குள், இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.
* 'இந்தியாவின் குடியரசு தின விழாவில் பங்கேற்பதில் எந்த சிக்கலும் இல்லை' என, ஒபாமா தன் அமைச்சர்களிடம் கூறினார்.
* அந்தத் தகவல், ஜெய்சங்கர் மூலம் பிரதமர் மோடியிடம் தெரிவிக்கப்பட்டது.
* மகிழ்ச்சி அடைந்த மோடி, அதிபர் ஒபாமாவை முறைப்படி அழைத்தார். அவரும், 'ஓகே' என சொல்ல, அமெரிக்க ஊடகங்களில் தகவல் கசிந்தது.
* செப்டம்பரில், பிரதமர் மோடி, டுவிட்டரில், ஒபாமாவின் வருகை குறித்து செய்தி வெளியிட்டார். அதன் பின், இரு நாடுகளின் அதிகாரிகளும் கலந்து பேசி, அதிபரின் சுற்றுப்பயண விவரம், பாதுகாப்பு, தேவைகள், வரவேற்பு, நிகழ்ச்சிகள் போன்றவற்றை இறுதி செய்தனர். இதோ... இன்னும் மூன்று நாட்களில், ஆம், 25ம் தேதி, ஒபாமா டில்லியில் வந்திறங்குகிறார்; 27ம் தேதி வரை, பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.


மலர் போர்வை:


மூன்று நாட்கள் இந்தியாவில் தங்கியிருக்க உள்ள அதிபர் ஒபாமா, ராஜஸ்தான் மாநிலம், ஆஜ்மிர் சென்று, அங்குள்ள, வெகு பிரபலமான, மொய்னுதீன் சிஸ்தி தர்காவில் மலர் போர்வை சார்த்துகிறார்.


மூன்று எம்.பி.,க்கள் வருகை:


இந்தியா வரும் அதிபர் ஒபாமாவுடன், அமெரிக்க எம்.பி.,க்கள் மூவர் வருகின்றனர். அவர்களில், அமி பேரா என்பவர், இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். அவருடன், ஜோ குரோலி, செனட் சபை எம்.பி., மார்க் வார்னர் ஆகியோரும் இந்தியா வந்து, பல நிகழ்ச்சிகளில், இந்திய தொழிலதிபர்களை சந்திக்கின்றனர்.


துடைப்பம் தூக்குகிறார்:


பிரதமர் மோடியின் கனவு திட்டங்களில் ஒன்றான, 'தூய்மை இந்தியா' திட்டத்தில், அமெரிக்க அதிபர் ஒபாமாவும் பங்கேற்கிறார். இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அதன் சிறப்பையும் உணர்ந்துள்ள ஒபாமா, டில்லி நகர வீதி ஒன்றை சுத்தப்படுத்த சம்மதம் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த இடத்தின் பெயர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.

அதிபர் ஒபாமாவின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு உட்பட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. எங்கும், எந்த முனையிலும், எந்தப்பிரச்னையும் இல்லை. எல்லாமும் சுமுகமாக நடந்தேறும்.
ராஜ்நாத் சிங்,
மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,

இந்தியா - நேபாள எல்லையில் பயங்கர வாதிகள் ஊடுருவல் செய்ய முடியாத வகையில் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறையாக அனுமதி பெற்று இந்தியாவுக்குள் நுழைபவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
தளபதி எச்.கே.குப்தா,
ராணுவப்படையின் பொறுப்பாளர்

தாஜ்மஹாலை பார்வையிட வரும் அதிபர் ஒபாமாவின் பாதுகாப்புக்காக, 100 அமெரிக்க வீரர்களும், 4,000 இந்திய வீரர்களும் ஈடுபடுத்தப்படுவர். ஏற்கனவே, 30 அமெரிக்க வீரர்கள் ஆக்ரா வந்துள்ளனர்.
சதிஷ் கணேஷ்,
ஆக்ரா எஸ்.பி.,
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்


பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» அழைத்தது மோடி, ஆனால் ஸ்டாலின் செல்வது எங்கே தெரியுமா?
» மோடி பதவியேற்பு விழாவுக்கு ஜெயலலிதா வரவில்லையென்றால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும்
» மோடி பாகிஸ்தான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார் - முன்னாள் அமெரிக்க தூதர்
» முதல்வராக மோடி 10 ஆண்டு சாதனை
» கின்னஸ் சாதனை பட்டியலில் ஜன் தன் யோஜ்னா திட்டம் : மோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum