ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

+3
விமந்தனி
கோ. செந்தில்குமார்
சிவா
7 posters

Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by சிவா Thu Jan 15, 2015 6:27 pm

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் 201501022257508527_GrowingFake-sexual-troublesomeDowry-Cases_SECVPF

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்ற வகையில் பல சட்டங்களும், குறிப்பாக வரதட்சணை ஒழிப்பு, பாலியல் தொல்லை தடுப்பு சட்டங்களும் இருக்கின்றன. சமீபகாலங்களாக சில பெண்கள் இதுபோல சட்டங்களை தவறாக பயன்படுத்துவதை சமுதாயம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு பெண் தனக்கு சம்பள பாக்கி கொடுக்கவில்லை என்று போலீசில் புகார் செய்துவிட்டு, அதோடு விட்டுவிடாமல், பாலியல் தொல்லை என்ற புகாரையும் இணைத்து கொடுத்து இருக்கிறார். இதனால் அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மட்டுமல்லாமல், மேலும் 2 உயர் அதிகாரிகள் மீதும் பாலியல் தொல்லை புகார் கொடுத்துள்ளார். ஒருசில இடங்களில் பாலியல் புகார்களை தங்கள் வழக்குக்கு வலுவூட்ட பெண்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்திவிடுகிறார்கள் என்று ஒரு குறை இருக்கிறது. பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லை என்றால் உடனடியாக அந்த நிறுவனத்திலேயே புகார் கொடுப்பதற்காக பணிபுரியும் இடங்களில் 10–க்கும் மேற்பட்ட பெண்கள் பணியில் இருந்தால் பாலியல் தொல்லை தொடர்பான புகார்களை வழங்கவும், விசாரிக்கவும் அந்த நிறுவனத்திலேயே பணிபுரியும் ஒரு பெண் தலைமையிலான குழு இருக்க வேண்டும் என்று விதி இருக்கிறது. அந்த குழுவில் கொடுக்கலாம். ஆனால், இதுபோன்ற புகார்களெல்லாம் உடனடியாக அங்கு கொடுக்காமல், காலம்தாழ்ந்த பிறகே போலீசில் கொடுப்பதுதான் சற்று அய்யத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் வேலைபார்த்த சாப்ட்வேர் என்ஜினீயர் ஒருவர் மீதும், அவருடைய பெற்றோர் மீதும், அவருடைய மனைவி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என்று வழக்கு தொடர்ந்தார். அவரும், அவருடைய பெற்றோரும் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றிருந்த நிலையில், 4 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. இதற்காக அந்த இளைஞர் 80 முறை சென்னைக்கும், சிங்கப்பூருக்கும் இடையே விமானத்தில் பறந்துவர செலவு செய்யவேண்டியது இருந்தது. கடைசியில் ஒரு தீர்வாக அந்த பெண்ணுக்கு ரூ.20 லட்சம் கொடுத்த பிறகு, அந்த பெண் கோர்ட்டில் ஒரே வரியில், தான் கூறிய குற்றச்சாட்டுகளையும், புகாரையும் திரும்பப்பெறுவதாக கூறி, வழக்கை வாபஸ் பெற்றுக்கொண்டு, அடுத்த 2 மாதங்களுக்குள் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார். இந்த 4 ஆண்டுகளும் அந்த என்ஜினீயரும், அவருடைய பெற்றோரும் எந்த அளவுக்கு மனரீதியாகவும், பணரீதியாகவும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்?

இதுபோன்ற வழக்குகளில் எத்தனை வழக்குகள் பொய்யாக ஜோடிக்கப்பட்ட வழக்குகள் என்ற கணக்கை தேசிய குற்றப்பிரிவு பதிவேட்டை மேற்கோள்காட்டி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.நாகமுத்து வெளியிட்ட தகவலைப்பார்த்தால், உடனடியாக இது சீர்செய்யப்பட வேண்டியதன் அவசியத்தைக்காட்டுகிறது. மொத்தம் பதிவான வழக்குகளில் எத்தனை கற்பழிப்பு வழக்குகள், வரதட்சணை சாவு வழக்குகள், திருமணமான பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல் வழக்குகள், பெண்களை மானபங்கபடுத்துதல் வழக்குகள் ஆகியவை பொய் வழக்குகள் என்பதை நீதிபதி எஸ்.நாகமுத்து பட்டியலிட்டு, மொத்தம் இதுபோன்ற வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமலோ, அல்லது பொய் வழக்கோ என்ற வகையில் 2012–ல் மட்டும் 48 சதவீத வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகியிருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இத்தகைய பொய் வழக்குகளால் அதனால் பாதிக்கப்பட்டவர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எத்தனை அவமானங்கள், பணச்செலவு, நேரவிரயம், மனஅமைதியின்மை, வேலை இழப்பை அனுபவித்திருப்பார்கள் என்பதையும் கூறியுள்ளார். பல வழக்குகளில் இறுதியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலையாகிவிடுகிறார்கள். பல வழக்குகளில் குற்றச்சாட்டுகள் கைவிடப்படுகின்றன. ஆனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன பதில்? இத்தகைய பொய் வழக்குகளால் முதலில் ஜெயில் தண்டனையும், பல இழப்புகளையும் சந்தித்தவர்களுக்கு அதையெல்லாம் மீட்டுத்தர முடியுமா? பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு பொய் புகார்கள் கொடுப்பதை வைத்து, உடனடியாக அப்பாவிகள் மீது நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலைகள் ஏற்படாமல் தடுக்க, புகார்களை பெறும் போலீஸ் அதிகாரியும், வழக்குகளை எடுத்துக்கொள்ளும் மாஜிஸ்திரேட்டும் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள் உண்மைதானா என்பதை நன்கு விசாரித்து, ஆராய்ந்தே எடுத்துக்கொள்ள வேண்டும்.

தினத்தந்தி

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by கோ. செந்தில்குமார் Thu Jan 15, 2015 11:46 pm

தவறே செய்யாதவர்கள் எத்தனையோ பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.  இதற்கு யார் பொறுப்பு?  நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு.  இப்படியே போனால் இந்தியா உருபடாது.  பொய் புகார் கொடுப்பவர்கள் எல்லோரும் பணத்திற்காகவே இப்படி செய்கிறார்கள்.  காவல் நிலையத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  இதை பயன்படுத்தி எத்தனையோ குடும்பங்களை நாசம் செய்திருக்கிறார்கள்.  பொய் புகார்களை கொடுப்பவர்களை என்ன செய்ய முடியும்? காவல்துறையும், நீதித்துறையும் அவர்களின் பக்கம் தான் இருக்கிறது.  லஞ்சம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?  சட்டமே தெரியாதவர்கள் தான் காவல்துறையிலும், நீதித்துறையிலும் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.  என்ன செய்வது?  இது தான் இந்தியாவின் சாபக்கேடு...!
கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014

http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by விமந்தனி Fri Jan 16, 2015 12:21 am

உண்மையாகவே கொடுமைக்குள்ளாக்கப்படும் எந்த பெண்ணும் உடனடியாக படி தாண்டி பஞ்சாயத்தை நாடமாட்டாள். இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என்று தன் பிள்ளைகள் நலன் மற்றும் பிறந்த வீட்டு மரியாதை குறித்தும் தினமும் பொறுத்துப்போகும் பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பெண்களின் வளர்ப்பு நிச்சயம் சரியாக இருக்காது. அவ்வளவு தான் சொல்லமுடியும். இப்போதெல்லாம் அம்மாக்கள் திருமணமாகி போகும் தன் பெண்ணிடம் 'அட்ஜெஸ்ட் செய்து இருக்கணும்...' என்றா சொல்லுகிறார்கள்? 'முடிஞ்சா பாரு ... இல்லன்னா ஒன்னும் கவலைபடாதே... அம்மா நானிருக்கேன்...' என்று தானே சொல்லுகிறார்கள்? அம்மாக்கள் மாறாதவரை இப்படிப்பட்ட பெண்களும் தங்களுடைய நல்ல கணவன்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.....

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by ayyasamy ram Fri Jan 16, 2015 11:07 am

அநியாயம் அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by M.M.SENTHIL Fri Jan 16, 2015 12:16 pm

வேதனையான உண்மை.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by சிவா Sat Jan 17, 2015 2:22 am

கோ. செந்தில்குமார் wrote:தவறே செய்யாதவர்கள் எத்தனையோ பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள்.  இதற்கு யார் பொறுப்பு?  நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு.  இப்படியே போனால் இந்தியா உருபடாது.  பொய் புகார் கொடுப்பவர்கள் எல்லோரும் பணத்திற்காகவே இப்படி செய்கிறார்கள்.  காவல் நிலையத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.  இதை பயன்படுத்தி எத்தனையோ குடும்பங்களை நாசம் செய்திருக்கிறார்கள்.  பொய் புகார்களை கொடுப்பவர்களை என்ன செய்ய முடியும்? காவல்துறையும், நீதித்துறையும் அவர்களின் பக்கம் தான் இருக்கிறது.  லஞ்சம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்?  சட்டமே தெரியாதவர்கள் தான் காவல்துறையிலும், நீதித்துறையிலும் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள்.  என்ன செய்வது?  இது தான் இந்தியாவின் சாபக்கேடு...!
மேற்கோள் செய்த பதிவு: 1115481

மிக அழகாகக் கூறியுள்ளீர்கள் செந்தில்குமார்!

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by சிவா Sat Jan 17, 2015 2:23 am

விமந்தனி wrote:
உண்மையாகவே கொடுமைக்குள்ளாக்கப்படும் எந்த பெண்ணும் உடனடியாக படி தாண்டி பஞ்சாயத்தை நாடமாட்டாள். இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என்று தன் பிள்ளைகள் நலன் மற்றும் பிறந்த வீட்டு மரியாதை குறித்தும் தினமும் பொறுத்துப்போகும் பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பெண்களின் வளர்ப்பு நிச்சயம் சரியாக இருக்காது. அவ்வளவு தான் சொல்லமுடியும். இப்போதெல்லாம் அம்மாக்கள் திருமணமாகி போகும் தன் பெண்ணிடம் 'அட்ஜெஸ்ட் செய்து இருக்கணும்...' என்றா சொல்லுகிறார்கள்? 'முடிஞ்சா பாரு ... இல்லன்னா ஒன்னும் கவலைபடாதே... அம்மா நானிருக்கேன்...' என்று தானே சொல்லுகிறார்கள்? அம்மாக்கள் மாறாதவரை இப்படிப்பட்ட பெண்களும் தங்களுடைய நல்ல கணவன்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.....
மேற்கோள் செய்த பதிவு: 1115489

இன்றைய சமுதாய உண்மையை அப்பட்டமாகக் கூறியுள்ளீர்கள் அக்கா! பாராட்டுக்கள்!

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by ராஜா Sat Jan 17, 2015 11:09 am

கோ. செந்தில்குமார் wrote:தவறே செய்யாதவர்கள் எத்தனையோ பேர் தண்டனை பெற்றிருக்கிறார்கள். இதற்கு யார் பொறுப்பு? நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் தான் பொறுப்பு. இப்படியே போனால் இந்தியா உருபடாது. பொய் புகார் கொடுப்பவர்கள் எல்லோரும் பணத்திற்காகவே இப்படி செய்கிறார்கள். காவல் நிலையத்திலும் சரி, நீதிமன்றத்திலும் சரி லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதை பயன்படுத்தி எத்தனையோ குடும்பங்களை நாசம் செய்திருக்கிறார்கள். பொய் புகார்களை கொடுப்பவர்களை என்ன செய்ய முடியும்? காவல்துறையும், நீதித்துறையும் அவர்களின் பக்கம் தான் இருக்கிறது. லஞ்சம் கொடுத்து பதவிக்கு வருபவர்களிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? சட்டமே தெரியாதவர்கள் தான் காவல்துறையிலும், நீதித்துறையிலும் முக்கிய பதவிகளில் இருக்கிறார்கள். என்ன செய்வது? இது தான் இந்தியாவின் சாபக்கேடு...!
முற்றிலும் உண்மை செந்தில் , இந்த இரண்டு துறைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ள நீங்கள் சொன்னா 100% உண்மையா தான் இருக்கும்

விமந்தனி wrote:
உண்மையாகவே கொடுமைக்குள்ளாக்கப்படும் எந்த பெண்ணும் உடனடியாக படி தாண்டி பஞ்சாயத்தை நாடமாட்டாள். இன்னும் கொஞ்சம் பார்ப்போம் என்று தன் பிள்ளைகள் நலன் மற்றும் பிறந்த வீட்டு மரியாதை குறித்தும் தினமும் பொறுத்துப்போகும் பெண்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலே குறிப்பிடப்பட்ட பெண்களின் வளர்ப்பு நிச்சயம் சரியாக இருக்காது. அவ்வளவு தான் சொல்லமுடியும். இப்போதெல்லாம் அம்மாக்கள் திருமணமாகி போகும் தன் பெண்ணிடம் 'அட்ஜெஸ்ட் செய்து இருக்கணும்...' என்றா சொல்லுகிறார்கள்? 'முடிஞ்சா பாரு ... இல்லன்னா ஒன்னும் கவலைபடாதே... அம்மா நானிருக்கேன்...' என்று தானே சொல்லுகிறார்கள்? அம்மாக்கள் மாறாதவரை இப்படிப்பட்ட பெண்களும் தங்களுடைய நல்ல கணவன்களுக்கு தொல்லை கொடுத்துக்கொண்டுதான் இருப்பார்கள்.....
இதுவும் அருமையான கருத்து அக்கா .

இன்றைய தாய்மார்கள் திருமணமாகி புகுந்தவீட்டுக்கு செல்லும் / சென்ற பெண்களுக்கு எப்படி சொல்லிகொடுக்கிறார்கள் எதை சொல்லிகொடுக்கிறார்கள் என்பதை தான் தொலைக்காட்சி சீரியல்களில் விவரமா சொல்லுகிறார்களே.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by mbalasaravanan Sat Jan 17, 2015 12:44 pm

சில தவறான பெண்கள் , தாங்கள் செய்யும் தவறை கணவன் கண்டித்தால் உடனே வரதட்சனை கொடுமை என சொல்லுகிறார்கள் , கேட்டால் ஆணாதிக்க சண்முகம் சாரி சமூகம் அப்டிங்கரங்க
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள் Empty Re: பெருகி வரும் போலி பாலியல் தொல்லை, வரதட்சணை வழக்குகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum