ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

+2
T.N.Balasubramanian
Manik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by Manik Wed Jan 14, 2015 4:47 pm

நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் நீண்டநாள் கழித்து திரும்பவும் உங்கள் முன் உங்கள் மாணிக்!!!!!!!!!

எனது ஊரின் அருகில் இருக்கும் அற்புத தலமான பிரான்மலையின் இரகசியங்கள் சில உங்களின் பார்வைக்கு

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியடுத்த பரம்புமலை என்ற பிரான்மலை கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னன் ஆட்சி செய்த பகுதியில் இயற்கை சூழலில் அமைந்த தளம் இது. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தளம் இது. “மயில்புல்குதண் பெடையோடு உடனாடும் வளர்சாரல் குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக் கொடுங்குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுடர் அனலேந்தி நின்றாடி எயில்முன்பட எய்தானவன் மேயல்வெழில் நகரே” என்ற திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத் தலங்களில் 5வது தளமாகும். இக்கோவில் சுமார் 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.

மூன்றடுக்கு சிவன் கோவிலான இம்மலைக்கோவிலில் பாதாளம், பூலோகம், கைலாயம் என மூன்று அடுக்குகளில் காட்சி தருகிறார் சிவன். பாதாளத்தில் உள்ள கோவிலில் கொடுங்குன்றநாதர் குயிலமுத நாயகி அருள் பாலிக்கிறார்கள். பூலோகம் என சொல்லப்படும் மத்தியில் உள்ள கோவிலில் விசாலாட்சியுடன் விஸ்வநாதரும் அருள் பாலிக்கிறார். மேல்நிலை கோவிலாக கைலாயம் எனப்படும் இங்கு தேனம்மை என்ற அம்பிகையுடன் மங்கைபாகராக காட்சி தருகிறார். கைலாயம் எனப்படும் மேலடுக்கில் உள்ள சன்னதி குடவரைக் கோவிலாக அமைந்துள்ளது. இந்த சன்னதியில் மங்கைபாகர் அம்பிகையுடன் இணைந்து அகத்தியருக்கு திருமண காட்சியை அருளிய கோலத்தில் காட்சி தருகிறார். இதை சிவனின் அன்னியோன்ய கோலம் என்கிறார்கள். தேனம்மை என்ற இறைவியின் பேருக்கிணங்க தேனடைகள் நிறைந்திருக்கின்றன. இங்கு பாதாளத்தில் அமைந்துள்ள கொடுங்குன்றநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இச்சிலையின் மீது ஐப்பசி மாதம் முதல் பங்குனி மாதம் வரை சிவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இவ்வாறு சூரிய ஒளி விழுவதை காண்பது அபூர்வம்.
சன்னதியின் முன்புற மண்டப மேற்சுவரில் கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் காணச்சென்ற முப்பத்து முக்கோடி தேவர்களும் சிற்பமாக அடிக்கப்பட்டுள்ளது. மங்கைபாகர் சிலை நவமூலிகைச் சாற்றால் செய்யப்பட்டதாகும். எனவே இவருக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. பெளர்ணமியன்று காலையில் நவபாஷான சிலைக்கு புணுகு சாம்பிராணி தைலம் மட்டுமே சாத்துகின்றனர். அதே சன்னதியில் காசிராஜன் கொடுத்த உடையவர்லிங்கம் என்ற சிறிய லிங்கம் இருக்கிறது. மங்கைபாகருக்கு அபிஷேகம் கிடையாது என்பதால் அவருக்கு செய்ய வேண்டிய இந்த லிங்கத்திற்கே செய்யப்படுகிறது. குறிஞ்சி நிலத்தில் அமைந்த இந்த கோவில் என்பதால் இந்த நிலத்திற்குரிய தேன், திணைமாவு மற்றும் பச்சரிசி மாவில் செய்த பொருள்களை நெய்வேத்யமாக படைக்கின்றனர். மற்ற சிவன் கோவில்களில் போல் சன்னதியின் எதிரில் நந்தி இக்கோவிலில் கிடையாது. சிவன் அகத்தியருக்கு திருமண கோலத்தில் காட்சியளித்த போது நந்தி தேவர் மத்தளம் வாசித்துக் கொண்டிருந்தார் என்ற அடிப்படையில் இங்கு நந்தி நிறுவப்படவில்லை. மேலும் இவ்வாலயத்தில் கொடிமரமும், பலிபீடமும் கிடையாது. மற்ற கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு செய்யும் பொழுது சுவாமி சிலைகளுக்கு அடியில் அஷ்டபந்தனம் மூலிகை மருந்துகள் வைப்பது வழக்கம். ஆனால் இக்கோவிலில் சிவன் சிலைக்கு கீழே இவ்வாறு வைக்கப்படுவது இல்லை. இவர் முதலும் முடிவும் இல்லாதவராக இருப்பதால் அஷ்டபந்தனம் சாத்தப்படுவதில்லை என்கிறார்கள். இவருக்கு ஒருமுறை அணிவித்த வஸ்திரத்தை மறுமுறை அணிவிப்பது இல்லை. ஒவ்வொரு முறையும் புத்தாடையே அணிவிக்கின்றனர். இந்த சிவன் கையில் 4 வேதங்களை வைத்தபடி காட்சி தருகிறார். எனவே இவருக்கு வேதசிவன் என்ற பெயரும் உண்டு. கல்வியில் சிறப்பிடம் பெற மாணவர்கள் இவருக்கு வெள்ளை நிற மலர்மாலை சாத்தி வெந்நிற வஸ்திரங்களை அணிவித்து வேண்டிக் கொள்கிறார்கள். அருணகிரிநாதருக்கு இத்தலத்தில் முருகன் நடன காட்சி காட்டியதாக ஐதீகம். இக்கோவிலில் தனி சன்னதியில் இருக்கும் முருகன் வயோதிக கோலத்தில் காட்சி தருகிறார். வழக்கமான முருகன் சன்னதியிக்கு எதிரில் மயில்வாகனம் தான் இருக்கும். ஆனால் இங்கு முருகன் சன்னதிக்கு எதிரில் யானை இருக்கிறது. முருகன் பத்மாசுரனை சம்ஹாரம் செய்ததால் தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இத்தலத்தில் இரண்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றதாக ஐதீகமுண்டு. இந்த லிங்கமே கொடுங்குன்றநாதர் சன்னதி பிரகாரத்தில் சொக்கலிங்கம், இராமலிங்கம் என்ற பெயரில் இருக்கிறது. பெயரே தெரியாத மரம் ஒன்றின் கீழ் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி யோக நிலையில் சுமார் 4 ¾ அடி உயரம் கொண்ட திருவுருவச் சிலை இருக்கிறது. இப்பகுதியில் இது போன்ற சிலை வேறு எங்கும் இல்லை. இத்திருத்தலத்தின் தலவிருட்சமாக பல நூறாண்டு கண்ட உறங்காபுளி என அழைக்கப்படும் புளியமரம் உள்ளது. இம்மரம் பூக்கும், காய்க்கும் ஆனால் பழுக்காது. இத்தலத்தில் பைரவருக்கென தனி சன்னதி உள்ளது. இப்பைரவரின் சிலை நிர்வாண நிலையில் நிறுவப்பட்டுள்ளது. தனி தீர்த்தமும் உள்ளது. இத்தீர்த்தத்திற்கு குஷ்டவிலக்கிசுனை என்று அழைக்கப்படுகிறது. இச்சுனையின் நீரில் நாள்பட்ட தோல்வியாதி உள்ளவர்கள் இச்சுனையில் குளித்து சிவனை வழிபட்டால் தோல்வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை. ஒரு ஏழை மூதாட்டி இத்திருத்தலம் கட்டுவதற்கு தன்னால் முடிந்த ஒரு அனா பணத்தை தந்ததாகவும் அதை வாங்க மறுத்ததும் அதன் பின் கட்டிய கோவிலின் சுவர்கள் நிலைபெறாமல் சரிந்தனர். அதையடுத்து அந்த மூதாட்டி கொடுத்த பணத்திற்கேற்ப சிறு கல்துண்டு பதித்தவுடன் சுவர் நின்றதாக கூறுகின்றனர். அதற்கு சான்றாக பைரவர் ஆலயத்தில் பெரிய சுற்றுச்சுவர்களுக்கிடையே சிறு கல்துண்டு நிறுவப்பட்டுள்ளது. இத்தலத்திற்கு வந்த திருஞானசம்பந்தர் மலையை தூரத்தில் இருந்து கண்ட பொழுது இம்மலையே சிவனாக காட்சி தந்தது. இதையடுத்து அத்தலத்தில் தன் கால் படக்கூடாது எனக்கூறி 5 மைல் தூரத்தில் நின்றே இத்தலம் பற்றி பதிகம் பாடியுள்ளார். எம் பிரான் மலை என சொல்லி பதிகம் பாடினார். எனவேதான் இத்தலம் எம்பிரான்மலை என பெயர் பெற்று பிற்காலத்தில் பிரான்மலை என மறுவியது. இன்றும் இத்தலத்தில் பாரி உற்சவம் என்னும் ஒரு விழா எடுக்கிறார்கள். இவ்விழாவில் முல்லைக்கு தேர் கொடுத்த வைபவம் நடக்கும். பாரி மன்னனின் திருவுருவச் சிலையை ஒரு தேரில் வைத்து பறம்பு மலை அடிவாரத்திற்கு கொண்டு செல்கிறார். அங்கு முல்லைக் கொடியின் அருகில் தேரை நிறுத்திவிட்டு திருவுருவச் சிலையை கோவிலுக்கு திருப்பி கொண்டுவந்து விடுவர். அதன் பின் அப்பகுதி மக்களுக்கு மன்னர் தானம் செய்யும் படி அரிசி அளப்பு வைபவம் நடக்கும். அப்போது பக்தர்களுக்கு அரிசியை தானமாக தருகின்றனர். இக்கோவில் திருவண்ணாமலை ஆதினத்திற்குட்பட்ட குன்றக்குடி ஆதீனத்தில் உள்ளது. இந்த பரம்பு மலை சுமார் 2500 அடி உயரம் கொண்டது. மலையெங்கும் மூலிகைகள் நிறைந்துள்ளன. சுவாசக்கோளாறுகள் உள்ளவர்கள் இம்மலையேறினால் அதில் உள்ள மூலிகை காற்றை சுவாசிக்க அப்பிரச்சனை தீரும் என்று பக்தர்கள் இன்றும் மலையேறுகின்றனர். மார்கழி, தை மாதம் குறிஞ்சி மலர்கள் மலையெங்கும் பூத்துக் குலுங்கும். உச்சிமலையில் கார்மேகங்கள் உரசி செல்வது பார்ப்பவர்களை சில்லிட வைக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஆங்கிலேயர்களை பகைத்துக் கொண்டு இங்கு மறைந்திருந்தார் என கூறுகின்றனர். அந்த இடம் ஊமையன்குடம்பு என இன்றும் பெயர் பெறுகிறது. இரும்பால் ஆன பழமை வாய்ந்த பீரங்கி உச்சிமலையில் இருப்பது இத்தலத்திற்கு மேலும் சிறப்பு. இங்கு இருக்கும் சிவனை தரிசித்து மலையில் ஏறி மேலிலுள்ள சுனையில் தீர்த்தம் எடுத்து வேண்டிக்கொண்டால் எண்ணியது ஈடேறும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.

இக்கோவிலுக்கு மதுரையிலிருந்து சிங்கம்புணரி வழியாக பொன்னமராவதி செல்லும் பேருந்தில் பிரான்மலை என்னும் பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டும்.



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by T.N.Balasubramanian Wed Jan 14, 2015 9:54 pm

படிக்க படிக்க சுவை சேர்க்கும் , அரிய செய்திகளை அறிய தந்துள்ளீர் Manik .
பார்க்க வேண்டிய கோவில்கள் பட்டியலில் சேர்க்கவேண்டிய கோயிலில்
இதுவும் ஒன்று .
( அந்த கோயிலை பார்க்கவருகையில் உங்களையும் பார்க்கலாம் அல்லவா ?)

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by சிவனாசான் Thu Jan 15, 2015 12:01 am

அன்பரே அருமையான ஆன்மீகப் பதிவு ..............
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by Manik Thu Jan 15, 2015 9:45 am

கண்டிப்பாக ரமணிய்யன் அய்யா நானே உங்களை அழைத்துச் செல்வேன்.....

நன்றி ராஜன் அய்யா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by பாலாஜி Thu Jan 15, 2015 11:07 am

Manik wrote:கண்டிப்பாக ரமணிய்யன் அய்யா நானே உங்களை அழைத்துச் செல்வேன்.....

நன்றி ராஜன் அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1115365

நானும் வரேன் தம்பி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by பாலாஜி Thu Jan 15, 2015 11:12 am

படங்கள் இருந்தால் பகிரலாமே தம்பி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by Manik Thu Jan 15, 2015 12:21 pm

கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by பாலாஜி Thu Jan 15, 2015 12:36 pm

Manik wrote:கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....
மேற்கோள் செய்த பதிவு: 1115375

இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை இந்தியாவில் இருப்பேன் அப்போ போகலாம் ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by ராஜா Thu Jan 15, 2015 12:41 pm

பாலாஜி wrote:
Manik wrote:கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....
மேற்கோள் செய்த பதிவு: 1115375

இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை இந்தியாவில் இருப்பேன் அப்போ போகலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1115378
நான் கூட இந்த வருடம் ஜூன் / ஜூலை இந்தியாவில் இருப்பேன் தல , நம்ம ஊரில் சந்திப்போம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by பாலாஜி Thu Jan 15, 2015 12:44 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
Manik wrote:கூகிள் ல பிரான்மலை நு தேடுங்க அன்ன நிறைய படம் வரும்........... நீங்க அடுத்த முறை வர்ரப்ப கண்டிப்பா போலாம் அண்ணா.....
மேற்கோள் செய்த பதிவு: 1115375

இந்த வருடம் ஜூன் மற்றும் ஜூலை இந்தியாவில் இருப்பேன் அப்போ போகலாம் ....
மேற்கோள் செய்த பதிவு: 1115378
நான் கூட இந்த வருடம் ஜூன் / ஜூலை இந்தியாவில் இருப்பேன் தல , நம்ம ஊரில் சந்திப்போம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1115379

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் 676261 மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் 676261


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம் Empty Re: மலையே சிவனாகக் காட்சியளித்த கொடுங்குன்ற நாதர் ஆலயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum