ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

3 posters

Go down

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Empty மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

Post by krishnaamma Mon Jan 05, 2015 12:15 am

வாழ்க்கைத் துணையிடம் தோற்போம்... வாழ்வில் ஜெயிப்போம்' - என்ற எண்ணத்துடன், தெளிந்த நீரோடை போல் ஆரம்பிக்கும் இல்வாழ்வு, பலருக்கு காலக் கிரமத்திலேயே கலங்கிய குட்டை போல் ஆகி விடுவது, தற்போது வாடிக்கையாகி விட்டது.

அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் இழுக்காய் இயன்றது அறம் என்ற வள்ளுவப் பெருந்தகையின் வார்த்தைகள் இன்று செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகி விட்டது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழும் இன்பமான சூழ்நிலையை ஏற்படுத்தி தருவதே, குடும்ப உறவின் முதல் கடமை.
ஆண், பெண் இருவரும் சம அளவில் படித்து, சம அளவிலேயே சம்பாதிப்பதும், 'நீ அறிவாளியா, நான் அறிவாளியா? நீ என்ன எனக்கு எஜமானியா?' என்பது போன்ற, 'ஈகோ' பிரச்னைகள் தம்பதியரிடம் தலை தூக்குவதும் அதிகரித்து வருகிறது.

திருமணத்திற்கு பின், சுமுகமாக பேசி தீர்த்துக் கொள்ள வேண்டிய அற்பமான காரணங்களுக்காக கூட, நீதிமன்றம் போவது, இப்போது சர்வ சாதாரணமாகி விட்டது.
தகுந்த நியாயமான காரணங்கள் இருந்தாலொழிய, குடும்பத்தை உடைக்காமல் கொண்டு செல்வதே அறிவுடைமை. கணவன் குறட்டை விடுவது, தன் தூக்கத்தை கெடுக்கிறது என்பதற்காக கூட, விவாகரத்து கோரும் பெண்கள், மேலை நாட்டில் அதிகம். ஆனால், அதே மேலை நாடுகளில், திருமணத்திற்கு முன் மணமக்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது.

நம் நாட்டிலும் இந்த சட்டத்தை கொண்டு வந்தால் என்ன என்ற கருத்து, சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடுக்கப்பட்ட, ஒரு விவாகரத்து வழக்கை விசாரித்த நீதியரசர் கிருபாகரன் முன் வைக்கப்பட்டது.
இந்த வழக்கு பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. மணமுறிவு ஏற்பட, பல காரணங்கள் கூறப்பட்டாலும், மணமக்களின் உடல் கோளாறுகள் காரணமாக இருக்கும் இந்த வழக்கை சுட்டிக் காட்டிய நீதியரசர், 'இந்த பிரச்னையை தீர்க்க அரசு எத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது?' என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.

'எதிர்வரும் சந்ததியினர், இது போன்ற சிக்கல்களை சந்திக்கக் கூடாது' என்று கருத்து தெரிவித்த அவர், 'அரசு இந்த பிரச்னையை மிகுந்த கவனத்துடன் அணுக வேண்டும்' என்றும் குறிப்பிட்டுள்ளார். விவாகரத்துகள் பெருகி வரும் சூழலில், ஒரு ஆரோக்கிய வெளிச்சமாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது.

விவாகரத்துக்கு உடற்கூறியல் தொடர்பான சிக்கல்களும் காரணமாகி விடுகிறது என்பதும் நாம் அறிந்ததே.
தென்கோடி மாவட்டத்தை சேர்ந்த காவல்துறையின் மிக முக்கிய பொறுப்பில் இருந்த காவல் அதிகாரி ஒருவர், திருமணமான மறுநாளே, விவாகரத்து கேட்டு விண்ணப்பித்தார். காரணம், மணப்பெண்ணின் உடல் முழுவதும் வெண் புள்ளிகள் இருக்கிறது என்பது. 'திருமணத்திற்கு முன் இது தெரிந்திருந்தால், இந்த திருமணமே நடந்திருக்காது; அனைவருக்கும் ஏற்பட்ட மனக் கஷ்டமும் தேவையில்லாதது' என்று குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சின்ன உதாரணம் தான். ஆனால், நடைமுறை சிக்கல்களை தாண்டி, நீதிமன்றம் வரும் போது தான், இந்த வழக்குகள் பெரிதும் கவனிக்கப்படுகிறது.

மணமக்களின் குடும்பத்தினர்களுக்கே அந்த சமயத்தில் தான் தெரிய வந்திருக்கும். இந்த பிரச்னைகளை அவ்வளவு எளிதாக வெளியில் சொல்ல இயலாது. வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வு என்னவாகும் என்கிற பயம், உண்மையை மறைக்க வைக்கும். இந்த குறிப்பிட்ட கருத்துக் கேட்டு விசாரணையோடு நிறுத்தி விடாது, கருத்துக் கேட்புக் கூட்டமாகவும் நடத்தினார் நீதியரசர் கிருபாகரன். வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், உளவியல் நிபுணர்கள் என, பல்வேறு தரப்பினரும், தங்களது கருத்துக்களை முன் வைக்கவும் வாய்ப்பு வழங்கினார்.

பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று, நடைமுறை சிக்கல்களை முன் வைத்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே, பங்கேற்ற பலரின் விருப்பமாக இருந்தது. மருத்துவ பரிசோதனைகள் மூலமாக, பாலியல் பிரச்னைகள், மலட்டுத்தன்மை போன்ற குறைகள் இருந்தால் கண்டுபிடிக்கப்பட்டு விடும். எதிர்காலத்தில் இது மாதிரியான காரணங்களால் ஏற்படும் விவாகரத்துகள் குறையவும் வாய்ப்பு உண்டு என்ற கருத்துக்களை, அவர்கள் முன் வைத்தனர்.

போலி மருத்துவ சான்றிதழ் கொடுக்கப்படலாம் என்பதற்குத் தீர்வாக, மணமகன் வீட்டாரின் மருத்துவர் மணப்பெண்ணுக்கும், மணப்பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளைக்கும் பரிசோதனை செய்து சான்றிதழ் கொடுக்க வலியுறுத்தலாம் என்றும், முடிவாக வெளிநாட்டில் நடைமுறையில் இருக்கும் திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை சட்டம் நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்தலாம் என்ற கருத்தையே வலியுறுத்தினர்.
நமக்கு இங்கே எழும் கேள்வி...

இவ்வாறு கொண்டு வரப்படும் சட்டம், முழுமையாக நடைமுறைக்கு சாத்தியப்படுமா என்பது தான். நம் நாட்டில் பல நூறு சட்டங்கள் போடப்பட்டிருக்கும். ஆனால், அதை பின்பற்ற தான் ஆளிருக்காது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான், மதுபானங்கள் விற்பனை செய்ய வேண்டும், திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் போன்ற பல சட்டங்கள், இங்கே மீறப்பட்டு தானே இருக்கின்றன?

ஆக, திருமணத்திற்கு முந்தைய மருத்துவப் பரிசோதனை என்பதை, சட்டமாக அமல்படுத்தும் முன், அதை எப்படி நடைமுறைப் படுத்துவது; அதில் என்ன சிக்கல்கள் வரும்; எல்லாரும் இப்படி செய்ய முடியுமா போன்ற கேள்விகளை முன் வைத்து, அதற்கு தீர்வு காண வேண்டும்.

இந்த பரிசோதனையில் மிகப் பெரிய குறைகள், நோய்கள் இருந்தால், கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் முடிவு எடுக்கலாம். யாரும் யாரையும் கோர்ட், கேஸ் என்று காயப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், 'இதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதே' என்றாள், என் தோழி ஒருத்தி.

திருமணத்தின் போது திடகாத்திரமாக இருக்கும் ஆணோ, கர்ப்பப்பை தொற்று வியாதி இல்லாத ஆரோக்கியமான பெண்ணோ, அதன் பின், ஆரோக்கியமாகவே இருப்பர் என்பது என்ன நிச்சயம்? விளையாட்டு துறையிலுள்ள பல பெண்களுக்கு, கடினமான உடற்பயிற்சியின் போதே, கன்னித் திரை கிழிந்து விடக் கூடிய வாய்ப்பும் அதிகம். இதெல்லாம் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய விஷயமாகி விடுமே என்கிற தோழியின் வாதமும் நியாயம் தானே!

நல்ல மாப்பிள்ளை, நல்ல மணப்பெண் என்பவர்களுக்கு, உடல் தகுதி மட்டும் போதும்; பிற குணநலன்களை பற்றிய விசாரணை தேவையில்லை என்கிற மாதிரியான தோரணை, இந்த சட்டத்தின் மூலம் ஏற்பட்டு விடும் என்பது, மற்றுமொரு குழப்பம் என்கிறார் ஒரு ஆண் நண்பர்.

ஆயினும், இந்த சட்டத்தின் மூலம், பல மிகப் பெரிய ஏமாற்று வேலைகளை தடுக்க முடியும். கண்களை திறந்து கொண்டே கிணற்றில் விழுந்து விடக் கூடிய சூழ்நிலையிலிருந்து, நம்மை காத்துக் கொள்ள முடியும் என்பதும் நிதர்சன உண்மை. உடல் ரீதியான நிரந்தர பிரச்னைகளை மறைத்து, திருமணம் செய்வது தவறு; அதே சமயம், தீர்க்கக்கூடிய பிரச்னைகளை மனம் விட்டுப் பேசிய பின், இல்லறத்தில் அடியெடுத்து வைத்தால், இந்த வழக்கு, நீதிமன்றம்... ஏன் இந்த கட்டுரையே அவசியமில்லாமல் போய் விடும் தானே!

- வான்மதி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Empty Re: மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

Post by ayyasamy ram Mon Jan 05, 2015 6:14 am

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! T9hp1emFQS2zDXD6CfEw+Shriya,JeevainRowthirammoviestills,pics(1)
-
மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Empty Re: மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

Post by ayyasamy ram Mon Jan 05, 2015 6:14 am

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! T9hp1emFQS2zDXD6CfEw+Shriya,JeevainRowthirammoviestills,pics(1)
-
மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82752
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Empty Re: மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

Post by anirudh Mon Jan 05, 2015 6:19 am

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! 103459460
anirudh
anirudh
பண்பாளர்


பதிவுகள் : 110
இணைந்தது : 23/02/2014

Back to top Go down

மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே! Empty Re: மனம் விட்டு பேசி மருத்துவ பரிசோதனையை தவிர்க்கலாமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum