ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் சில மனிதர்கள்

2 posters

Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty இப்படியும் சில மனிதர்கள்

Post by விமந்தனி Sun Jan 04, 2015 1:02 am

இப்படியும் சில மனிதர்கள் E_1420128582

ஸ்ரீபெரும்புதுார் அருகில் உள்ள தன் மகள் வீட்டில், சீதாலஷ்மி
பாட்டி அம்முடிவு எடுக்கையில் அவருக்கு வயது 90. மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியிடம், தன் மனநிலையை பக்குவமாக புரிய வைத்திருக்கிறார்.

புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. கண்ணீர் மல்க அவர் வந்து நின்ற இடம் மயிலாப்பூர்.

'ராணிம்மா... எனக்கு உங்களை விட்டா இப்போ யாரும் இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு சொல்லிடாதீங்க!' அன்னை இல்ல நிர்வாகி ராணியின் கைப்பிடித்து சீதாலஷ்மி அழ, அன்போடு அவர் பாட்டியை அணைத்துக் கொண்டார்.

இன்றும், அந்த அரவணைப்பில்தான் இருக்கிறார் பாட்டி. இப்போது அவருக்கு வயது 102.

''அய்யோ... அது கார்த்திகை 6ம் தேதியே முடிஞ்சு போச்சே!'' குழந்தையின் சிரிப்போடு, தன் பிறந்தநாளை நமக்குச் சொன்னார் பாட்டி!

ஆனால், நமது அடுத்த கேள்வி, அவரது முக சுருக்கத்தை மேலும் அடர்த்தியாக்கியது. ''ச்சே... ச்சே... மகள் கூட பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா! அவளுக்கு ரெண்டு குழந்தைங்க; புருஷனும், பொண்டாட்டியும் சம்பாதிக்கிறது நாலு பேருக்குமே சரியா இருக்கு. இந்த நிலைமையில, நான் வேற எதுக்கு அவங்களுக்கு பாரமா இருக்கணும்னுதான் வெளியில வந்துட்டேன்.

இப்பகூட, அவங்க என்னை கூப்பிட்டுட்டுதான் இருக்கறாங்க! நான்தான் போகலை!'' உறவுகளுக்கு வலி தந்துவிடக்கூடாது என்ற உணர்வுடன், பாட்டி உதிர்த்த வார்த்தைகளில், 'எப்படி வாழ வேண்டும்' என்ற வழி தெரிந்தது!

பேரன், பேத்தியை பார்க்கணும்னு ஆசை இல்லையா?
''இல்லாம இருக்குமா? மாசத்துக்கு ஒருதடவை, அவங்க என்னை வந்து பார்ப்பாங்க! அவங்க கிளம்புறப்போ, கொஞ்சமா மனசு வலிக்கும்; பொறுத்துக்குவேன்! போறப்போ, 300 ரூபா கைச்செலவுக்கு கொடுத்துட்டு போவாங்க! இங்க எனக்கு எந்த குறையும் இல்லைங்கறதால, பக்கத்துல இருக்கிற விநாயகர் கோவில் செலவுக்கு கொஞ்சம், கொஞ்சமா அந்த பணத்தை கொடுத்துடுவேன். அந்த சாமி, என் மக குடும்பத்தையும், உங்களையும், எல்லாரையும் நல்லா வைச்சுக்கும்!''

சீதாலஷ்மி பாட்டி இங்கு வந்ததில் இருந்து, நான்கு சுவர்களுக்குள் தான் வாழ்க்கை. சில மீட்டர்கள் தாண்டி, கபாலீஸ்வரர் கோயில் இருந்தாலும், அன்னை இல்லத்திற்கு அருகில் இருக்கும் 'பிள்ளையார்' தான் பாட்டிக்கு இஷ்டதெய்வம்!

நாளிதழ்கள் வாசிக்க, தொலைக்காட்சி பார்க்க பாட்டிக்கு பார்வை பத்தாது; வானொலிக்கு செவித்திறன் ஒத்துழைக்காது; ஆனாலும்...
''அதை எப்படிப்பா சொல்றது? அவங்க சொத்து குவிச்சிட்டதா சொல்லி, நீதிமன்றம் தண்டிச்சிடுச்சு. இப்போ, போராடிட்டு இருக்காங்க. அதான், பன்னீர் முதல்வர் ஆயிருக்காரு; இந்த ஜி.கே.வாசனை
மட்டும் அவங்க நல்லா வைச்சிருந்தாங்கன்னா, அவரு புதுக்கட்சி ஆரம்பிச்சிருக்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது; அப்புறம், இந்த 2005 வருஷத்துக்கு முன்னாடி அச்சடிக்கப்பட்ட ரூபா நோட்டெல்லாம், இனிமே செல்லாதாமே!'' தினந்தோறும் நாளிதழ்கள் வாசிக்கப்படுவதை, 102 வயது பாட்டி கச்சிதமாக உள்வாங்கியிருக்கிறார் என்பதும், மறதி தீண்டி விடாமல் தன் மூளையை பராமரிக்கிறார் என்பதும் பெரும் ஆச்சர்யம்!

நம் ஆச்சர்யத்தை உள்வாங்கியபடியே, ''வாழ்ற காலம் வரைக்கும் எல்லாத்தையும் ஒரு மனுஷன் தெரிஞ்சு வைச்சுக்கணும். அப்பதான், அவன் வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்!'' உள்ளத்திலிருந்து உண்மை சொல்லியது 102 வயது அதிசயம்!

இப்படி ஒரு ஆயுள் கடவுள் தந்ததற்கு என்ன காரணம் பாட்டி?
''உடலை வருத்தி, என்னால யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது. அள்ளிக் கொடுக்க பணமோ, நகையோ என்கிட்டே இல்லை.
ஆனாலும், நான் இருக்கிறேன்னா, அது நாலுபேரை வாழ்த்துறதுக்குத் தான்! இதைத்தவிர, வேற எதுவும் எனக்குத் தோணலைய்யா!''
ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் பிறந்து, 12 வயதில் திருமணம் ஆகி, 40 வயதில் சென்னை வந்து, 80 வயதில் கணவனை இழந்து, 90 வயதில் மகளைப் பிரிந்து, ஆனாலும்... நம்பிக்கையோடு வாழ்கிறார் பாட்டி!

30 வயதை கடப்பதற்குள் மூச்சு முட்டுகிறோம் நாம்! இதற்கெல்லாம் என்ன காரணம்? ''வளர்ப்புதான்யா எல்லாத்துக்கும் காரணம்! எங்ககாலத்துல, தலை நிறைய பூ வைச்சு சந்தோஷமா பள்ளிக்கூடத்துக்குப் போவோம். சாயங்காலம் வந்து சந்தோஷமா விளையாடுவோம். விளையாடிட்டு வந்து, விளக்கேத்தி சாமி கும்பிடுவோம்.

அப்பா, அம்மாவோட பிரச்னைகள் எதுவும் எங்களுக்குத் தெரியாது. எங்க முன்னாடி, அவங்க சண்டை போட்டுக்கவும் மாட்டாங்க. இதெல்லாம்தான், வாழ்க்கையை ஆரோக்கியமா பார்க்க வைச்சது. இப்போ, அப்படியா இருக்கு?

இதை விடுய்யா... கைக்குத்தல் அரிசியும், கீரையுமா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தோம். இப்பவும் அதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, சாப்பிட மனசிருக்கா?''

பாட்டியின் எந்த கேள்விக்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால், ஒரு கேள்வி மிச்சம் இருந்தது!

வயசு கூடுதேன்னு பயமிருக்கா பாட்டி?

''அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா; ஆனா, ஆசை ஒண்ணு இருக்கு! இப்ப வரைக்கும் என் உடம்புல எந்த நோயும் இல்ல; மரணம் வரைக்கும், இப்படியே இருந்திடணும்னு ஆசைப்படறேன். அவ்வளவுதான்! யாருக்கும் கஷ்டம் கொடுத்துடக் கூடாதுல்ல!''

பாட்டி... எங்க எல்லாரையும் ஆசிர்வாதம் பண்ணுங்க!
''எல்லாரும் நல்லா இருங்கப்பா!''


-தினமலர்


இப்படியும் சில மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇப்படியும் சில மனிதர்கள் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இப்படியும் சில மனிதர்கள் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இப்படியும் சில மனிதர்கள் Empty Re: இப்படியும் சில மனிதர்கள்

Post by ayyasamy ram Sun Jan 04, 2015 5:40 am

இப்படியும் சில மனிதர்கள் 103459460
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum