ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முடிவு உங்கள் கையில் - சிறுகதை

5 posters

Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by mbalasaravanan Mon Nov 24, 2014 5:49 pm

தன் மனம் கவர்ந்தவனிடம் சம்மதம் சொல்லுமுன்னே , இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று கோவிலுக்கு கிளம்பினாள் மீரா.

" ஹே நித்து

"தனியா எங்க மேடம்கிளம்பிட்டிங்க? அதுவும் பட்டு புடவை மல்லிகை பூ...எனக்கே தெரியாமல் வீட்டுல கல்யாண வேலை நடக்குதா ? "

" சீ போடி.. உன் அண்ணியை நீயே இப்படி பேசலாமா ? சரி உங்க கிருஷ்ணா அண்ணாவை கோவிலுக்கு வர சொல்லு"

" அண்ணியா? ஹே என்னடி சொல்லுறே? "

" அதெல்லாம் அங்கே கேட்டுக்கோ ...நான் வரேன்

"அதிக சந்தோஷத்தை கொடுப்பதும்கடவுள்தான் பறிப்பதும் கடவுள்தான். கோவிலுக்கு செல்லும்வழியில் சிறுவர்கள்சாலை ஓரம் விளையாடுவதை பார்த்தாள் மீரா. ஒரு புன்னகையுடன் கை அசைத்துவிட்டு அவள் செல்லும்போது கூட்டத்தில் இருந்த சிறுமி சாலை நடுவில் ஓடி வர, அந்த சிறுமியை காப்பாற்ற எண்ணி மீரா ஸ்கூட்டியை விட்டு இறங்கி வர மயிரிழையில் அந்த சிறுமி உயிர் தப்ப, எதிர் வந்த காரால் தூக்கி எறியபட்டாள் மீரா. கண் சிமிட்டும் நொடியில் அந்த விபத்து நடந்துவிட, கூட்டம் சேர்ந்தது .

மீராவை பார்க்க அதே பாதையில் வந்த கிருஷ்ணன்,கூட்டத்தை பார்த்ததும் காரை நிறுத்தினான்.

" மீரா ?????

மருத்துவமனை,

" டாக்டர் ?? "

"நீங்க அவங்களுக்கு என்ன உறவு ? "

" ஹஸ்பண்ட்"

" கொஞ்சம் உள்ள வாங்க "

" சொல்லுங்க டாக்டர் "

" மிஸ்டர் கிருஷ்ணா. இத நீங்க எப்படி எடுத்துபிங்கன்னு தெரியல "

" அவ உயிருக்கு "

" கண்டிப்பா ஆபத்து இல்ல ... கடவுள் புண்ணியத்துல அவங்க ஸ்கல் லே அடி படல . பட் "

" பட் "

" அவங்க தூக்கி எறியபட்ட வேகத்துல அவங்க அடி வயித்துல இன்ஜர்ட் ஆகி இருக்கு. சோ அவங்க கர்ப்பப்பை ஆபரேஷன் பண்ணி ரெமுவ் பண்ணனும் . அப்படி இலேன்னா........ பீயிங் பிரன்க் வேற வழி இல்ல மிஸ்டர்கிருஷ்ணன் "

" உடனே ஆபரேஷன் பண்ணுங்க டாக்டர் .. நான் சைன் பண்றேன் .எவ்வளோ செலவானாலும் பரவால்ல . எனக்கு என் மீரா வேணும் .

"அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களில் மீரா மெல்ல குணமானாள்.

" கிருஷ்ணா "

" ம்ம்ம் "

" ஏன் இப்படி இருக்கீங்க ? நான் தான் குணம் ஆகிட்டேன்ல "

" அப்படிலாம் ஒன்னும் இல்ல கண்ணம்மா .. உன்னை ஹாஸ்பிடல் பெட்ல பார்க்க கஷ்டமா இருக்கு அவ்ளோதான் "

" நிஜம்மா அதான் காரணமா? "

" அடடடா ஹாஸ்பிடல்ல கூட ரோமென்ஸ் பண்ணாம இருக்க மாட்டிங்களா ? " என்றபடி உள்ளே நுழைந்தாள் நித்யா.

" நீயே பாருடி உன் அழுமூஞ்சி அண்ணாவை ...என்னை நீலாம்பரின்னு சொன்னியே .. இபோ உன் அண்ணா முகத்துக்கு என்ன பெயர் வைக்க போற?"இப்படியே தோழிகள் இருவரும் கிருஷ்ணனை சிரிக்க வைக்க முயற்ச்சித்தனர்.

சில நாட்களுக்குபிறகு

" அண்ணா மீராவை இன்னைக்கு டிஸ்சார்ஜ் பண்றாங்க. நீங்க டாக்டரை பார்த்துட்டு வாங்க.. ஆகாஷ் காருல இருக்கான் நான்அண்ணியை கூட்டிடு போறேன்

"டாக்டரின் அறையில் ,

" இம்பாசிபல் கிருஷ்ணன்..அதெப்டி மீராவுக்கு தெரியாம வெச்சுருப்பிங்க ? உங்களுக்கு உடம்பு சரி இல்லன்னா கூட மறைக்கலாம். அவங்களுக்கு நடந்த ஆபரேஷன் அவங்களுக்கே தெரியாம எப்படி மறைப்பிங்க ? "

" தெரியாது டாக்டர் பட் இது மீராவுக்கு தெரிஞ்சா அவ தாங்க மாட்டா "

" அவங்க தாங்கனும்னா முதல்ல நீங்க தாங்கனும் கிருஷ்ணன். நானும் இத்தனை நாளுல பார்த்தேன் . நீங்க யாருகிடேயும் எதுவும் சொல்லிமனசு விட்டு அழல ... நீங்களே இதுல இருந்து மீளல கிருஷ்ணன்..முதல்ல நீங்க இதைஎதுக்கணும்...அதுக்கப்பறம் மீராகிட்ட பேசுங்க "

" தேங்க்ஸ் டாக்டர். வரேன்

" கண்களில் ஜீவனே இல்லாமல் இருந்தவனை பரிதாபத்துடன் பார்த்தார் டாக்டர்.

இரண்டு மாதங்களில் சென்னை வருவதாக சொன்ன கிருஷ்ணன் ஆறு மாதங்களாகியும் அங்கேயே இருந்தான். ஆகாஷ், ஆகாஷின் தாயார், நித்யாவின் கவனிப்பிலும் கிருஷ்ணனின் அரவணைப்பிலும் குணமாகிய மீராஒரு நாள் ,

" கிருஷ்ணா ...நாம எப்போ சென்னைக்கு போறோம் ?"

" நாமளா? என்னடா? இன்னும் 3 மாசம் நான் இங்கயே இருக்கேன்"

" எனக்கு என்ன பிரசவமா நடந்துருக்கு ? ஐ எம் பைன் கிருஷ்ணா . என்னையும் கூட்டிடு போங்க . இங்க இருந்து ? "

" இப்போ எதுக்கு கண்ணம்மா? "

" எனக்கு இங்க மூச்சு முட்டுது . உங்க கிட்ட மனசு விட்டு பேசணும் . சென்னைல வேலை பார்த்துக்குறேன் . என் ஸ்கூல் ல கூட பேசிக்கலாம்..என்னால இங்க இருக்க முடில ப்ளீஸ்"

" சரிடா

"மீரா புறப்பட்டாள் . அவள் விரும்பியவனுடன் , தன் தோழியைபிரிந்து கண்ணீருடன் புறப்பட்டாள். நித்யாவிற்கு மீராவை பிரிவதற்கே மனமில்லை. எனினும் அவளுக்கு ஒரு மாறுதல் தேவை என்பதை அறிந்து அவளை தடுக்காமல் இருந்தாள்.

காரில்,

" கிருஷ்ணா வண்டியை நிறுத்துங்க ...."

" ????"

" நிறுத்துங்க கிருஷ்ணா ?"

" என்னாச்சுடா ? "

" எனக்கு என்ன ஆபரேஷன் நடந்துச்சுன்னு எனக்கே தெரியும் இப்பவாச்சும் வண்டியை நிறுத்துங்க " அவள் சொன்னதும் பதறி காரை நிறுத்தியவன் அவள் புறம் திரும்பினான்.

கலைந்த சுருள் கேசம், திருத்தபடாத தாடி, ஜீவனே இல்லாத கண்கள், புன்னகை மறந்தஇதழ்கள், முற்றிலுமாய் மாறி போன கிருஷ்ணனை பார்த்தவள் காதலா, தாய்மையா, துயரமா? சொல்ல முடியாத உணர்வில் அவனை இறுக அனைத்து கொண்டாள்.

" எனக்கு ஹாஸ்பிடல்ல யே தெரிஞ்சுபோச்சு கிருஷ்ணா. இப்பவாச்சும் அழுதுருங்க கிருஷ்ணா . என்னால உங்களை இப்படி பார்க்க முடில. அழுதுருங்க

"அணை திறந்த வெள்ளமாய் அவன் கண்ணீர் பெருக்கெடுக்க அவளை மேலும் இறுக அணைத்து கண்ணீர் விட்டான் கிருஷ்ணன். அவன் கண்ணீர் அனைத்தையும் தாங்கிக்கொண்டு மௌனமாய் அழுதாள் மீரா.

" நாந்தான் சொன்னேனேடா ...என் தலைவிதி இப்படிதான் இருக்கும்னு ? உனக்கு மனைவி ஆகுறதுக்கு முன்னாடியே நான் மலடி ஆகிட்டேனே " என்று கதறினாள் .

" ஹே மீரா ... மீரா உன்னை கெஞ்சி கேக்குறேண்டா..எனக்கு உன்னை எப்படி சமாதனம் பண்றதுன்னு கூட தெரிலம்மா ... ப்ளீஸ் மீரா அழாதேடா " என்று அவனும் அழுதான்.

அவன் மீண்டும் அழுவதை உணர்ந்தவள் மெல்ல அமைதியடைந்தாள்.அவள் கைகளைப்பற்றி பேச ஆரம்பித்தான் கிருஷ்ணன்.

" மீரா எனக்கு நீ . உனக்கு நான். போதாதா? நீ பெற்றெடுத்தாள் தான் எனக்கு மனைவு ஆகுற தகுதி இருக்கா? நான் உன்னை தான் விரும்பினேன். வேற எதையும் எதிர்பார்த்து விரும்பல. உன் அன்பு எனக்கு மட்டும் கிடைக்கனும்னு விதி. அதான் இப்படிலாம். நீ அழாத ப்ளீஸ். நாம சென்னை போகலாம் . நான் வீட்டுல பேசுறேன் . கல்யாணம் பண்ணிக்கலாம். இனி நாம தனியா இருக்க வேணாம்

"அவன் சொல்வதை அமைதியாய் கேட்டவள் .அதற்கு பதிலாய் அவன் செவிகளில் இடியை இறக்கினாள்.

" நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் ? "

" மீரா புரிஞ்சுதான் பேசுறியா? "

" புரிஞ்சதுனாலத்தான் பேசறேன் . நான் கல்யாண வாழ்கைக்கு தகுதி இல்லாதவள். யோசிச்சுதான் பேசுறிங்களா? நீங்க வீடுக்கு முதல் பையன் . உங்களுக்கு கல்யாணம் ஆகி வாரிசு வரும்னு வீட்டுல எவ்வளோ ஆசை பட்டுருபாங்க "

" அப்படிலாம் இல்ல நான் சொன்னபுரிஞ்சுபாங்க "

" ஆமா புரிஞ்சுப்பாங்க ..வேற வழி இல்லாமதான் புரிஞ்சுப்பாங்க "

" இது விதண்டாவாதம் மீரா . எனக்கு நீ வேணும் "

" உங்க மீரா போய்ட்டா கிருஷ்ணா .. அந்த விபத்துல அவளும் பொய் சேர்ந்துட்டானு நெனசுகொங்க

"அவள் வார்த்தையை கேட்டு ரௌதிரமானான் கிருஷ்ணன்.

" அப்போ எதுக்குடி என் கூட வந்த? "

" நான் இதை சொல்லத்தான் வந்தேன் கிருஷ்ணா ...நான் நிரந்தரமா போறேன் .."

" போ ஆனா என் பொணத்தை பார்த்துட்டு போ

"இப்படியே இருவரிடையே வாதம் அதிகமாக முடிவில்,

" சரி நீ சொன்ன மாதிரி, நீ சொல்ற பொண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். ஆனா அது நடக்குற வரை நீ என் கண்பார்வையில் தான் இருக்கணும் . சம்மதமா ? " என்றான் இறுகிய குரலில்.
( உன்னாலே எனக்கு வேற ஒரு பொண்ணை பார்த்து கட்டி வைக்க முடியுமா மீரா ? என் அன்பும் ஸ்பரிசமும் உனக்கு மட்டும்தான் சொந்தம்னு உனக்கே தெரியும் . உன் வாயாலேயே என்னை கல்யாணம் பண்ணிக்கோ கிருஷ்ணா நு சொல்ல வைக்கிறேன் )

( எனக்கு இது வரம் இல்லையா கிருஷ்ணா? நீ இன்னொரு பெண்ணுக்கு ....................... உன் கல்யாணம் நடக்குற வரை தினமும் உன்னை பார்த்தாலே போதும் . கடைசியா நானும் அந்த மீரா மாதிரி உன்னை நெனசுகிட்டே வாழ்ந்திடுவேன்)

இருவரும் இரு துருவத்தில் நின்று இப்படி ஒரு முடிவெடுக்க, அந்த துருவங்களை இணைப்பத்தற்கு காலத்தோடு காதலும் பயணித்து கொண்டிருக்கிறது.

நன்றி:எழுத்து.கம
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by ayyasamy ram Mon Nov 24, 2014 8:27 pm

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by விமந்தனி Mon Nov 24, 2014 9:44 pm

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  3838410834


 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon முடிவு உங்கள் கையில் - சிறுகதை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by ayyasamy ram Tue Nov 25, 2014 9:42 am

கதை அருமை...  முடிவு உங்கள் கையில் - சிறுகதை  3838410834
-
கொஞ்சம் எழுத்துப் பிழைகளைக் களைந்தால்
சுவை கூடும்...

-
கோவில்லுக்கு
-
சி போடி..
-
ஹஸ்பன்"
-
எடுத்துபிங்கனு
-
செலவானாலும் பரவலே
-
முயற்ச்சித்தனர்
-
ரௌதிரமானான்
-..
பிழை சுட்டல் சுவை கூட்டவே
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82741
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by M.Saranya Tue Nov 25, 2014 11:11 am

அருமை...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by ஜாஹீதாபானு Tue Nov 25, 2014 1:23 pm

கதை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 முடிவு உங்கள் கையில் - சிறுகதை  Empty Re: முடிவு உங்கள் கையில் - சிறுகதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum