ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்றில் இன்று - நவம்பர்

+6
M.Saranya
raghavansriramya
T.N.Balasubramanian
ayyasamy ram
krishnaamma
விமந்தனி
10 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Sat Nov 01, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 1

வரலாற்றில் இன்று - நவம்பர் Ei68Gh6TlyDmBdUpEiRa+November-1

1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.

1592 - கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.

1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.

1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.

1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.

1805 - முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான்.

1814 - நெப்போலியனின் பிரான்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.

1876 - நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.

1894 - ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டர் இறந்ததை அடுத்து இரண்டாம் நிக்கலாஸ் மன்னனானான்.

1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை
ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.

1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.

1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.

1918 - மேற்கு உக்ரேன் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.

1922 - ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.

1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.

1948 - சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.

1950 - புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.

1951 - நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.

1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.

1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.

1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

1956 - இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.

1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

1970 - பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்.

1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.

1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.

1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.

2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by krishnaamma Sat Nov 01, 2014 12:23 am

வரலாற்றில் இன்று - நவம்பர் CzQQCzqETVKkJRF9LZjJ+November-1

ஹோ பாண்டிச்சேரிக்கும் இன்று ஹாப்பி பர்த்டே வா? ..........இங்கு ரொம்ப நல்லா கொண்டாடு வாங்க..........."கர்நாடகா  ராஜ்யோத்சவ் " என்று ............நாளைக்கு லோக்கல் ஹொலிடே விடுவாங்க.....................ஒவ்வொரு 'சௌக்' லேயும்  கர்நாடகா கொடி ஏத்தி கும்பிடுவாங்க.......................நம் தமிழ் நாட்டில் தான் எதுவும் இல்லை சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Sat Nov 01, 2014 12:27 am

krishnaamma wrote:ஹோ பாண்டிச்சேரிக்கும் இன்று ஹாப்பி பர்த்டே வா? ..........இங்கு ரொம்ப நல்லா கொண்டாடு வாங்க..........."கர்நாடகா  ராஜ்யோத்சவ் " என்று ............நாளைக்கு லோக்கல் ஹொலிடே விடுவாங்க.....................ஒவ்வொரு 'சௌக்' லேயும்  கர்நாடகா கொடி ஏத்தி கும்பிடுவாங்க.......................நம் தமிழ் நாட்டில் தான் எதுவும் இல்லை சோகம்
ஓ... விவரங்களுக்கு நன்றி கிருஷ்ணாம்மா. அன்பு மலர்


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Sun Nov 02, 2014 12:03 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 2

வரலாற்றில் இன்று - நவம்பர் 9tX6OzKRYGjBYEQe3Ww0+November-2

1570 - வட கடலில் ஏற்பட்ட சூறாவளி காரணமாக ஒல்லாந்தில் 1,000 பேர் வரையில் இறந்தனர்.

1834 - முதன்முதலாக இந்தியாவில் இருந்து 75 ஒப்பந்தத் தொழிலாளர்கள் மொரீசியஸ் சென்றனர்.

1868 - நியூசிலாந்து சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

1889 - வடக்கு மற்றும் தெற்கு டகோட்டா ஐக்கிய அமெரிக்காவின் 39வது, 40வது மாநிலங்களாக முறையே இணைந்தன.

1899 - தென்னாபிரிக்காவில் போவர்கள் பிரித்தானியர்கள் வசம் இருந்த லேடிஸ்மித் பகுதியை 188 நாட்கள் பிடித்து வைத்திருந்தனர்.

1914 - ரஷ்யா ஓட்டோமான் பேரரசு மீது போரை அறிவித்தது.

1917 - பிரித்தானியாவின் வெளிநாட்டு விவகாரங்களுக்குப் பொறுப்பான செயலாளராக இருந்த ஆதர் பெல்ஃபர் வெளியிட்ட பிரகடனத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் ஒரு தேசியத் தாயகம் ஏற்படுத்தப்பட
வேண்டும் என்பதை இங்கிலாந்து அரசு ஆதரிக்கிறது எனக் கூறப்பட்டது.

1930 - ஹைலி செலாசி எதியோப்பியாவின் பேரரசன் ஆனான்.

1936 - இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி ரோம்-பேர்லின் அச்சு என்ற அச்சு அணியை அறிவித்தான்.

1936 - பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது.

1936 - கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது.

1953 - பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1963 - தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியை அடுத்து கொலை செய்யப்பட்டார்.

1974 - தென் கொரியத் தலைநகர் சியோலில் விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 78 பேர் கொல்லப்பட்டனர்.

2000 - பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்.

2006 - ஈழப்போர்: கிளிநொச்சி வைத்தியசாலை சுற்றவுள்ள பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய குண்டுத்தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 - இலங்கை வான்படையின் வான்குண்டுத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Mon Nov 03, 2014 12:00 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 3

வரலாற்றில் இன்று - நவம்பர் ZSg7qfhARPKovJx0eVDS+November-3

644 - இரண்டாவது முஸ்லிம் கலீபா உமறு இப்னு அல்-கத்தாப் மதினாவில் பாரசீக அடிமையினால் கொல்லப்பட்டார்.

1493 - கரிபியன் கடலில் டொமினிக்காத் தீவை முதன் முதலில் கொலம்பஸ் கண்டார்.

1655 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவப் பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

1793 - பிரான்சின் நாடகாசிரியரும், செய்தியாளரும், பெண்ணியவாதியுமான ஒலிம்பியா டி கஸ் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.

1812 - நெப்போலியனின் இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.

1838 - பாம்பே டைம்ஸ் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் 1861 இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா எனப் பெயரிடப்பட்டது.

1903 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலை அடுத்து பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.

1905 - ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ் அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.

1913 - ஐக்கிய அமெரிக்கா வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

1918 - போலந்து ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை அமெரிக்காவின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.

1957 - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை (லைக்கா என்னும் நாயை) சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் 2 விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.

1963 - தி.மு.க. செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.

1963 - ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டில் காமராசர் அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.

1964 - வாஷிங்டன் டீசி மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.

1970 - சல்வடோர் அலெண்டே சிலியின் அதிபரானார்.

1973 - நாசா மரைனர் 10 என்ற விண்கப்பலை புதன் நோக்கி அனுப்பியது. 1974, மார்ச் 29 இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1978 - டொமினிக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1979 - கம்யூனிச பாட்டாளிகள் கட்சியில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1982 - ஆப்கானிஸ்தானில் சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1986 - மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஐக்கிய அமெரிக்காவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1988 - இலங்கையின் தமிழ்க் குழுவான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினரால் மாலை தீவுகள் அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி இந்திய இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.



வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Tue Nov 04, 2014 12:07 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 4

வரலாற்றில் இன்று - நவம்பர் BL0mb3OORFeiZnVffyPp+November-4

1333 - ஆர்னோ ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் பரவியதில் இத்தாலியின் புளோரென்ஸ் நகரில் பெரும் சேதம் ஏற்பட்டது.

1576 - ஸ்பானியப் படைகள் பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரை கைப்பற்றினர். மூன்று நாட்களில் இந்நகரம் பெரிதும் சேதப்படுத்தப்பட்டது.

1861 - வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

1869 - அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது.

1914 - பிரித்தானியாவும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன.

1918 - முதலாம் உலகப் போர்: இத்தாலியிடம் ஆஸ்திரியா-ஹங்கேரி அரசு சரணடைந்தது.

1918 - 40,000 கடற்படையினர் கீல் துறைமுகத்தைக் கைப்பற்றியதை அடுத்து ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது.

1921 - ஜப்பானியப் பிரதமர் ஹரா தக்காஷி டோக்கியோவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1956 - அக்டோபர் 23 இல் ஆரம்பமான ஹங்கேரியப் புரட்சியை முறியடிக்க சோவியத் படைகள் ஹங்கேரியை முற்றுகையிட்டன. ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் கொல்லப்பட்டு லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர்.

1966 - இத்தாலியின் புளோரென்ஸ் நகரத்தின் மூன்றில் இரண்டு பகுதி வெள்ளப் பெருக்கில் அழிந்தது. 113 பேர் கொல்லப்பட்டனர். பல பெறுமதியான ஓவியங்களும் நூல்களும் அழிந்தன.

1967 - எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு: நடிகர் எம். ஜி. ராமச்சந்திரன் கொலை முயற்சி வழக்கில் நடிகர் எம். ஆர். ராதாவுக்கு ஏழு ஆண்டுக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

1979 - ஈரானியத் தீவிரவாதிகள் டெஹ்ரானில் அமெரிக்கத் தூதராலயத்தை முற்றுகையிட்டு 53 அமெரிக்கர்கள் உட்பட 90 பேரை பணயக்கைதிகளாகப் பிடித்தனர்.

1984 - நிக்கராகுவாவில் இடம்பெற்ற தேர்தல்களில் சண்டினீஸ்டா முன்னணி வெற்றி பெற்றது.

1995 - இஸ்ரேலியப் பிரதமர் இட்சாக் ரபீன் தீவிரவாத வலதுசாரி இஸ்ரேலியரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004 - ஐவரி கோஸ்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 12 பிரெஞ்சுப் படையினர் மற்றும் 3 ஐநா கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by ayyasamy ram Tue Nov 04, 2014 4:58 am

பிறப்புக்கள்[தொகு]
1618 – அவுரங்கசீப், முகலாயப் பேரரசர் (இ. 1707)
1845 – வாசுதேவ் பல்வந்த் பட்கே, இந்தியப் புரட்சியாளர் (இ. 1883)
1897 – ஜானகி அம்மாள், இந்திய தாவரவியலாளர் (இ. 1984)
1951 – திரையன் பாசேசுக்கு, ரோமானிய அரசியல்வாதி
1957 – டோனி அபோட், ஆத்திரேலிய அரசியல்வாதி, பிரதமர்
1972 – தபூ, இந்திய நடிகை
-
இறப்புகள்[தொகு]
1988 - கி. வா. ஜகந்நாதன், தமிழ் இதழாளர், எழுத்தாளர் (பி. 1906)
1988 - ஜேம்ஸ் இரத்தினம், ஈழத்து எழுத்தாளர். (பி. 1905)
1995 - இட்சாக் ரபீன், இஸ்ரேல் பிரதமர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1922)
-
சிறப்பு நாள்[தொகு]
பனாமா - கொடி நாள்
ரஷ்யா - மக்கள் ஒற்றுமை நாள்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Wed Nov 05, 2014 12:06 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 5

வரலாற்றில் இன்று - நவம்பர் YKPlXQVETlOhXY15vrJX+November-5

1530 - நெதர்லாந்தில் நிகழ்ந்த பெரும் வெள்ளம் றெய்மேர்ஸ்வால் என்ற நகரத்தை அழித்தது.

1556 - முகலாயப் பேரரசுப் படைகள் இந்தியாவின் சூர் பேரரசின் தளபதி ஹேமு என்பவனின் படைகளை பானிபாட் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. பேரரசன் அக்பர் இந்தியாவின் அரசனானான்.

1605 - ரொபேர்ட் கேட்ஸ்பி என்பவனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தைத் தகர்க்க எடுக்கப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.

1757 - புரூசியா பேரரசன் பிரெடெரிக் பிரான்ஸ் மற்றும் ரோம் பேரரசு ஆகியவற்றின் கூட்டுப் படையை ரொஸ்பாக் என்ற இடத்தில் தோற்கடித்தான்.

1814 - இலங்கையின் வடக்கு மற்றும் வட-மேற்குப் பகுதிகளில் இடம்பெற்ற பெரும் சுழற்காற்று யாழ்ப்பாணம், விடத்தல் தீவு, மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தின.

1831 - ஐக்கிய அமெரிக்காவில் அடிமைக் கிளர்ச்சியில் ஈடுபட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் குற்றவாளியாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டது.

1861 - ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ணில் முதலாவது மெல்பேர்ண் கிண்ணக் குதிரைப் பந்தயப் போட்டி ஆரம்பமாயிற்று.

1862 - மினசோட்டாவில் 303 டகோட்டா பழங்குடியினர் வெள்ளையினத்தவரை கொலை கெய்த குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் காணப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

1895 - தானுந்தின் முதலாவது அமெரிக்கக் காப்புரிமத்தை ஜோர்ஜ் செல்டன் பெற்றார்.

1911 - செப்டம்பர் 29 இல் ஓட்டோமான் பேரரசுடன் இத்தாலி போரை அறிவித்த பின்னர் திரிப்பொலி மற்றும் சிரெனாய்க்கா ஆகியவற்றை இத்தாலி தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1913 - ஐக்கிய இராச்சியம் சைப்பிரசை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

1917 - அக்டோபர் புரட்சி: எஸ்தோனியாவில் கம்யூனிசத் தலைவர் ஜான் ஆன்வெல்ட் புரட்சியாளர்களுக்குத் தலைமை வகித்துச் சென்று அரசைக் கைப்பற்றினார்.

1935 - மொனோபொலி மட்டை ஆட்டம் முதன் முதலில் பாக்கர் சகோதரர்கள் என்ற நிறுவனத்தினால் வெளியிடப்பட்டது.

1940 - பிராங்கிளின் ரோசவெல்ட் ஐக்கிய அமெரிக்காவின் அதிபராக மூன்றாவது தடவையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1945 - நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தினர் மீதான வழக்கு விசாரணை டில்லி செங்கோட்டையில் ஆரம்பமானது.

1965 - ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1967 - லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 49 பேர் கொல்லப்பட்டனர்.

1971 - இன்ரெல் நிறுவனம் உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது.

1987 - தென்னாபிரிக்காவில் 24 ஆண்டுகால சிறைவாசத்தின் பின்னர் கொவான் உம்பெக்கி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

1996 - பாகிஸ்தான் அதிபர் பரூக் அகமது கான் பிரதமர் பெனாசீர் பூட்டோ தலைமையிலான அரசைக் கலைத்தார்.

1999 - இலங்கைப் படைகளுக்கெதிராக விடுதலைப் புலிகள் தொடுத்த ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கையின் முதலாவது கட்டம் ஏ-9 நெடுஞ்சாலையின் தெற்குப்புறமாக விளக்குவைத்த குளம் என்ற பகுதி கைப்பற்றப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.

2006 - 148 ஷியா முஸ்லிம்களை 1982இல் கொன்றதாக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால ஈராக் அரசின் சிறப்பு நீதிமன்றம் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேனுக்கு மரண தண்டனை தீர்ப்பு அளித்தது.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Thu Nov 06, 2014 11:41 pm

வரலாற்றில் இன்று - நவம்பர்' 6

வரலாற்றில் இன்று - நவம்பர் LAQ6cAsbSCaUW87GD5LS+November-6

1632 - முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.

1759 - பாளையக்காரர் பூலித்தேவரின் நெற்கட்டான் செவ்வலைக் கோட்டையை இசபல்கான் கான்சாகிப் என்பவனின் படைகள் வெடிகுண்டுகள் கொண்டு தாக்கின. ஆனாலும் கோட்டையைப் பிடிக்க முடியவில்லை.

1844 - டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டுவரப்பட்டது.

1860 - ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரே குடியரசுக் கட்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது அதிபராவார்.

1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புக்குத் தலைவரானார்.

1891 - இலங்கை ஸ்டீம்ஷிப் கம்பனிக்குச் சொந்தமான நீராவிக் கப்பல் "லேடி ஹவ்லொக்" முதன் முறையாக கொழும்பு வந்தடைந்தது.

1913 - தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.

1918 - போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.

1935 - எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தனது முப்பதாண்டு கால பதவியில் இரண்டாவது தடவையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஜெர்மனியின் தாக்குதலில் 350,000
சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், ஜெர்மனியர்கள் தமது 4.5 மில்லியன் பேரை இழந்திருப்பதாகவும் சோவியத் வெற்றி கண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

1943 - இந்தியாவின் வங்காளத்தில் "நவகாளி"யில் இடம்பெற்ற இந்து-முஸ்லிம் கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக மகாத்மா காந்தி கல்கத்தாவில் இருந்து நவகாளி வந்து சேர்ந்தார்.

1943 - இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். ஜெர்மனியினர் நகரை விட்டு விலகும் போது நகரின் பல பகுதிகளை சேதமாக்கினர்.

1944 - புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. பின்னர் ஜப்பானில் கொழுத்த மனிதன் அணுகுண்டு போடுவதற்கு இது பயன்பட்டது.

1962 - ஐநா பொதுச்சபை தென்னாபிரிக்காவின் நிறவெறிக் கொள்கையைக் கண்டித்துத் தீர்மானம் நிறைவேற்றியது.

1963 - வியட்நாம் போர்: நவம்பர் 1 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து, இராணுவத் தலைவர் டோங் வான் மின் தெற்கு வியட்நாமின் அதிபரானார்.

1965 - ஐக்கிய அமெரிக்காவுக்கு குடியேற விரும்பிய கியூபா நாட்டினரை விமானம் மூலம் அங்கு கொண்டு செல்ல கியூபாவும் ஐக்கிய அமெரிக்காவும் உடன்பட்டன. இதன்படி 1971இற்குள் 250,000 கியூபர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

1977 - ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1985 - கொலம்பியாவில் இடதுசாரி தீவிரவாதிகள் நீதிக் கட்டிடத்தைக் கைப்பற்றி 11 நீதிபதிகள் உட்பட 115 பேரைக் கொன்றனர்.

1999 - அவுஸ்திரேலியர்கள் அனைத்து மக்கள் வாக்கெடுப்பு மூலம் பிரித்தானிய முடியாட்சியின் கீழ் தொடர்ந்திருக்க சம்மதம் தெரிவித்தனர்.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by விமந்தனி Fri Nov 07, 2014 12:13 am

வரலாற்றில் இன்று - நவம்பர்' 7

வரலாற்றில் இன்று - நவம்பர் O6sAtyu5Rrm9HBG4Oxu8+November-7

1492 - உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது.

1502 - கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 - உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் த லண்டன் கசெட் (The London Gazette) முதலாவது இதழ் வெளியானது.

1893 - கொலராடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.

1910 - உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது.

1917 - அக்டோபர் புரட்சி: விளாடிமிர் லெனின் தலைமையில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ரஷ்யாவின் இடைக்கால அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். (பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது அக்டோபர் 25 இல் இடம்பெற்றது).

1917 - முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றின.

1918 - மேற்கு சமோவாவில் பரவிய ஒரு வித நச்சு (வைரஸ்) நோய் காரணமாக 7,542 பேர் (20% மக்கள் தொகை) ஆண்டு முடிவிற்குள் இறந்தனர்.

1931 - மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1941 - இரண்டாம் உலகப் போர்: "ஆர்மேனியா" என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.

1941 - நாசி ஜெர்மனியர் உக்ரேனில் நெமிடீவ் என்ற இடத்தில் 2580 யூதர்களைக் கொன்றனர்.

1956 - சூயஸ் கால்வாய் பிரச்சினை: எகிப்தில் இருந்து இடனடியாக ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், இஸ்ரேல் படைகளை வெளியேறுமாறு ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் கேட்கப்பட்டது.

1983 - ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

1991 - மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1996 - நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2002 - அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.


வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவரலாற்றில் இன்று - நவம்பர் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வரலாற்றில் இன்று - நவம்பர் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வரலாற்றில் இன்று - நவம்பர் Empty Re: வரலாற்றில் இன்று - நவம்பர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum