ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையில் நனைந்து பாருங்கள்...

+4
M.Saranya
யினியவன்
M.M.SENTHIL
krishnaamma
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty மழையில் நனைந்து பாருங்கள்...

Post by krishnaamma Thu Oct 16, 2014 7:51 pm

மழையில் நனைந்து பாருங்கள்... TOPYwwjYTJS8xJmAdjJy+gallerye_161352450_1093525

கோடைக்காலத்தில், "மழை வந்தா நல்லயிருக்குமே!” மழைக்காலத்தில், "வெயில் அடிச்சா தேவலயே!” என்று பிதற்றும் மனங்கள் ஏராளம். ஆனால் மழையில் சொட்டச் சொட்ட நனைந்து, அந்த அனுபவத்தில் குதூகலித்ததுண்டா நீங்கள்? இல்லையென்றால், இனிமேலும் தாமதிக்காமல் சத்குருவின் மழை அனுபவத்தைக் கேட்டுவிட்டு நனையக் காத்திருங்கள் மழைக்காக!

திறந்த வெளியில் நடந்து செல்கிறீர்கள். திடீரென்று மழை வருகிறது. என்ன செய்வீர்கள்? அருகிலிருக்கும் ஏதாவது ஒரு கூரைக்கு அடியில் ஓடிப்போய் ஒளிந்து கொள்வீர்களா? ஓ! சர்க்கரையைப் போல், உப்புக் கட்டியைப் போல் மழையில் கரைந்து விடுவோம் என்று பயமா உங்களுக்கு? மழையைக் கண்டதும் ஓடுவதேனோ?

எனக்கு மூன்று, நான்கு வயது இருக்கும். எங்கள் வீடு மிகப்பெரிய திறந்த வெளியில் அமைந்திருந்தது. மைசூரில் மழைக்காலம் வந்தால், வானம் பொத்துக் கொண்டு ஊத்தும். மழையைவிட்டு விலக மாட்டேன். ஆனால் பெரியவர்களோ, நெருப்பில் கால் வைக்க அஞ்சுபவர்களைப் போல் மழையைக் கண்டால் எட்ட ஓடி விடுவார்கள். "உள்ளே வா ஜலதோஷம் பிடிக்கும்; காய்ச்சல் வரும்” என்று என்னென்னவோ சொல்லி மிரட்டுவார்கள், நான் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டேன்.

என்னைக் கவர்ந்து செல்ல வருபவர்களிடம் சிக்க மாட்டேன். தினமும் திமிறத் திமிற குடம் குடமாகத் தண்ணீரை ஊற்றி குழந்தைகளைக் குளிப்பாட்டுபவர்கள் கூட, அதுவாகப் பொழியும்போது எதற்காகப் பதறி நனையவிடாமல் தடுக்கிறார்கள் என்னும் கேள்வி என் உள்ளத்தில் அப்போதே உதிக்கும்.

கோடையில் வரும் முதல் மழைத்துளி என் மீது மோதும்போது, எனக்குள் அளவிலா ஆனந்தம் பொங்கி ஆர்ப்பரித்திருக்கிறது. பிற்பாடு தோப்பு, விவசாயம் என்று என்னை ஈடுபடுத்திக் கொண்டபோது, தனியாளாக இருந்தேன். புல் தரையில் படுத்து நனைவேன். மழை என் மீது சுதந்திரமாகப் பொழியும். மழைநீர் என்னைத் தழுவி ஓடும். என்னைச் சுற்றி தேங்கும். இயற்கையுடன் எனக்குத் தொடர்பு கொடுக்கும்.

அனுபவங்களைத் தேடும் இளைஞனாக என் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்ய ஆரம்பித்த வயதில்கூட, நான் மழைக்காக ஒதுங்கியதில்லை. மழையில் வாகனத்தை சந்தோஷமாகச் செலுத்துவேன். முகத்தில் மோதும் மழை, பார்வையைக் குறைக்கும். ஆனால், எப்போதும் எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன், முழுமையான கவனத்துடன் செய்து வந்ததால், மழை எனக்கு சவாலாக இருந்ததில்லை.

மழையில் நான்கு ஐந்து மணி நேரங்கள் கூடத் தொடர்ந்து பைக்கை செலுத்தி இருக்கிறேன். "சூரியன் வெளிச்சம் பொழியும்போது நான் தொடர்ந்து பயணம் செய்வதில்லையா? மழையைக் கண்டு மட்டும் ஏன் ஓட வேண்டும்?” என்பேன்.

மழை பொய்த்துப் போய் தமிழ்நாடே வறண்டிருந்த நேரம் அது!

ஈஷா அன்பர் ஒருவரின் மகள், தனக்குப் பள்ளியில் சொல்லிக் கொடுத்தப் பாடலை என்னிடம் ஆசையுடன் பாடிக் காட்டினாள். "ரெயின் ரெயின் கோ அவே” அதிர்ந்தேன். மழைக்காக தமிழகமே ஏங்கிக் காத்திருக்கும்போது, அதை வராதே, போ போ! என்று விரட்டும் பாடல் அது.

ஆங்கிலேயரின் குளிர் தேசத்தில் மழை என்பது அவஸ்தையான ஒன்று. அதற்காக, அவர்கள் சொன்னதை இங்கே அப்படியே எடுத்தாள்வதா? கலப்படமில்லாத குழந்தைகளின் மனதில் அந்த எண்ணம் தங்கிவிடாதா? மழையைக் கண்டாலே, அதை போகச் சொல்லி அவர்கள் கோரிக்கை வைக்க மாட்டார்களா?

ஈஷா மையம் நடத்தும் பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தைகளை, மழையிலிருந்து பதுங்கச் சொல்வதில்லை. மழையை மழையாக அவர்கள் அனுபவித்து உணரக்கூடிய வாய்ப்பைக் கெடுப்பதில்லை. குடைகள் இன்றி அவர்களை ஒரு நாளாவது மழையில் நடத்திச் செல்லுமாறு சொல்லி இருக்கிறேன்.

கோடை வந்தால், நிலம் காய்ந்து வறண்டு இருக்கும். மழைத்துளிகள் நனைத்ததும், எல்லாம் மாறிவிடும். புல்லும், செடிகளுமாக பூமி சடசடவென்று பசுமையாகிவிடும். எங்கேயிருந்து வந்தது இந்தப் பசுமை? பூமிக்குள் விதைகள் மழைக்காகப் பொறுமையாகக் காத்திருந்தன. வருடக் கணக்கில் மழை பொய்த்த பூமியில் கூட இந்த விதைகள் பொறுமையை இழக்கவில்லை. நம்பிக்கையை இழக்கவில்லை. அதேபோல்தான் உங்களுக்குள் விதைக்கப்பட்டிருக்கும் விதைகளும் பொறுமையாகக் காத்திருக்கின்றன.

சரியான சூழல் கிடைத்ததும், சடாரென்று மலர்கின்றன. சிலருக்கு சில ஜென்மங்களே காத்திருக்க நேரிடலாம். நீங்கள் ஏன் அந்தப் பட்டியலில் இருக்கிறீர்கள்? உங்களுக்கு அது இப்போதே நிகழ வேண்டும் என்பதே என் விருப்பம். உங்களுக்குள் அதற்கான சூழலை இப்போதே உருவாக்கிக் கொள்ளுங்கள்!

ஒரு கட்டத்தில் உன்னத உணர்வுகள் என்னை ஆட்கொண்டு என் வாழ்க்கை புது அர்த்தம் பெற்ற பிறகு, மழை எனக்கு மிக மிக அற்புதமானதோர் அனுபவத்தைத் தந்திருக்கிறது. இப்போதும் என் வீட்டில் திறந்தவெளி முற்றம் ஒன்று இருக்கிறது. மழை வந்தால், ஆனந்தமாக அங்கே நனைந்து கொண்டு கிடப்பேன்.

மழை வேறு, நீங்கள் வேறு அல்ல. மழை வருகையில், நீங்களே உங்கள் மீது பொழிவதுபோல் உணருங்கள். மழை என்பது உங்களுக்கு இயற்கை வழங்கும் மாபெரும் வாய்ப்பு. அடுத்த மழையில் நனைந்து பாருங்கள்!

சத்குரு - தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 11:05 pm

நல்ல பகிர்வு அம்மா... எனக்கும் மழையில் நெடுநேரம் பைக்கில் செல்ல பிடிக்கும்.. ஈரோட்டில் இருந்து முனியப்பன் கோவில் வரை (சுமார் இருபது கிலோ மீட்டர்) மழையில் நனைந்தே வந்திருக்கிறேன்..

மேலும், நம்ம ஊர் பக்கமெல்லாம் மழை வர்றதே பெருசு (அயோக்கிய பசங்க அதிகம் ஆயிட்டாங்களோ, நான் ஜெயில்ல உள்ளவங்கள சொல்லல)..

அப்படி வரும்போது அதை வரவேற்றுதான் பார்ப்போமே நம்ம சத்குரு சொல்வதைபோல. புன்னகை புன்னகை


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by krishnaamma Thu Oct 16, 2014 11:39 pm

எனக்கும் மழை இல் நனைவது ரொம்ப பிடிக்கும் புன்னகை நிறைய முறை மொட்டை மாடிக்கு ஓடி இருக்கேன் ............. .இப்போ பால்கனிக்கு போய்விடுவேன்..............மழையை வேடிக்கை பார்க்கவும் ரொம்ப பிடிக்கும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by யினியவன் Fri Oct 17, 2014 12:01 am

கிரிஷ்ணாம்மா தலைப்பை பார்த்தவுடன் டவுட்டு - கிருஷ்ணா டாக்டருக்கு படிச்சிருப்பாரோன்னு புன்னகை


Last edited by யினியவன் on Fri Oct 17, 2014 2:23 pm; edited 1 time in total



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by M.Saranya Fri Oct 17, 2014 2:21 pm

மழையில் நனைவது அலாதியான ஒன்று ...
வெளியில் அவ்வளவாக நனைந்தது கிடையாது...
ஆனால் வீட்டில் நிறைய முறை பால்கனியில் நின்று நனைத்திருக்கிரேன்.

இதெல்லாம் ஈஷா வில் பயிற்சி பெற்ற பிறகு நடந்தவை...


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மழையில் நனைந்து பாருங்கள்... W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by ஜாஹீதாபானு Fri Oct 17, 2014 2:45 pm

எனக்கும் மழையில் நனையப் பிடிக்கும்...

வயதாக வயதாக அதுவும் பிடிக்காம போச்சு. தெருவில் போகும்போது பெரும் மழையாக இருந்தால் நனையமாட்டேன். சாதாரண மழை என்றால் நனைந்து கொண்டே வீட்டிற்குச் சென்று விடுவேன்.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by T.N.Balasubramanian Fri Oct 17, 2014 2:54 pm

செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.


மழையில் நனைந்து பாருங்கள்... V5pwVNbwRR293DGjW8Vg+images

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Fri Oct 17, 2014 2:57 pm; edited 1 time in total


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by ஜாஹீதாபானு Fri Oct 17, 2014 2:56 pm

T.N.Balasubramanian wrote:செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1096947

மதியம் சாப்பிடலையா ? பக்கோடா சாப்பிடுறிங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by ayyasamy ram Fri Oct 17, 2014 3:02 pm

மழையை ரசிக்க ஒரு நகைச்சுவை
-
தாயும் மகனும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.
மகன் கேட்டான்:
-
ஒயிட் கலர் சாரி கட்டியிருக்கிற ஆன்டி மழையில்
நனையற சீன் வரும்போது சொல்லுடான்னு அப்பா
சொன்னாரே, ஏன்மா..?
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82826
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by krishnaamma Fri Oct 17, 2014 3:10 pm

T.N.Balasubramanian wrote:செம மழை இப்போ மேற்கு மாம்பலத்தில் .
வெளியே சென்று நன்றாக ரசித்து நனைந்து வந்தாச்சு
sit out இல் உட்கார்ந்து வேடிக்கை பார்ப்பது பிடிக்கும் .
ஒரு பக்கம் மழை
மறு பக்கம் சுடசுட தூள் பக்கோடா .
உட்கார்ந்து அனுபவிக்கிறேன் மழையும் /பக்கோடாவையும்.


மழையில் நனைந்து பாருங்கள்... V5pwVNbwRR293DGjW8Vg+images

ரமணியன்

இந்த அனுபவமே சூப்பர் தான் ஐயா ! என்ஜாய் !! அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மழையில் நனைந்து பாருங்கள்... Empty Re: மழையில் நனைந்து பாருங்கள்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum