ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

+2
M.M.SENTHIL
soplangi
6 posters

Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by soplangi Thu Oct 16, 2014 1:56 pm

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் C70d08b6-6e1b-4837-bab0-3e0b48869009_S_secvpf

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை இருக்கும்.

நான் கலெக்டராவேன்... டாக்டராவேன்... என்ஜினீயர் ஆவேன்... என்று சிறு வயதிலேயே குழந்தைகள் மனதில் வளர்ந்து கொள்ளும் ஆசைக்கு ஏற்ப பெரியவனாக வளர்ந்து சாதிக்கிறார்கள்...

அப்படித்தான் சாதிக்குக்கும் போலீஸ் கமிஷனராகி சாதிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் விதி...?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.

படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.

உறவினர் ஒருவர் போலீஸ்காரராக இருப்பதால் காக்கி சட்டை அணிந்து அவர் மிடுக்குடன் நடந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அவரை அழைத்து நானும் ஒருநாள் இப்படி போலீஸ் அதிகாரியாக வருவேன் என்பான்.

அவரும் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். உன்னால் நிச்சயம் போலீஸ் அதிகாரியாக வரமுடியும். முதலில் நன்றாகபடி என்று பெற்றோரும் உற்சாக மூட்டினார்கள்.

மனதில் துளிர்விட்ட போலீஸ் அதிகாரி கனவுடன் அந்த இளந்தளிர் தனது பள்ளி பயணத்தை தொடர்ந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று உடல் நலம் பாதித்த சாதிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவனை ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.

கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் நொறுங்கி போனார்கள். தங்கள் அன்பு மகனை மரணம் நெருங்கி கொண்டிருப்பதை நினைத்து தவித்தார்கள்.

எத்தனை ஆசை...? எத்தனை கனவுகள்...? அத்தனையும் கானல் நீராகி விட்டதே என்று மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.

தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கிடம் அவனது கடைசி ஆசையை மருத்துவர்கள் கேட்டனர்.

அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ‘நான் போலீஸ் கமிஷனராக ஆசைப்பட்டேன். ஆனால்....’ என்று அவன் முடிப்பதற்குள் அருகில் நின்ற மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இவ்வளவு அற்ப ஆயுளில் அவன் வாழ்க்கை பயணம் முடியும் என்று யார் கண்டது? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று! அதுதானே உண்மை.

முடியப்போகும் சாதிக்கின் வாழ்க்கையில் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஐதராபாத்தில் இயங்கும் ‘மேக் ஏ விஷ்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக்கின் நிலைமையும், அவனது கடைசி ஆசையையும் விவரித்தனர்.

உடனே தொண்டு நிறுவனத்தினர் போலீஸ் கமிஷனரை அணுகி விவரத்தை கூறினார்கள்.

கல்லுக்குள் ஈரம் இருக்கும் போது காக்கிச் சட்டைக்குள் ஈரம் இல்லாமலா போகும்? அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி முன்வந்தார். சிறுவன் சாதிக்குக்கு போலீஸ் சீருடை, தொப்பி தயாரானது. நேற்று காலை 10 மணி... கமிஷனராக பதவி ஏற்க சீருடை அணிந்து வீட்டில் சாதிக் தயாராக இருந்தான்.

சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய போலீஸ் வாகனம் சாதிக் வீட்டு முன்பு வந்து நின்றது.

காவலர் ஒருவர் கார் கதவை திறந்து விட மிடுக்காக காரில் ஏறி அமர்ந்தான் சாதிக். ஐதராபாத் நகர வீதியில் கமிஷனராக... மனதுக்குள் கற்பனையில் மிதந்தபடி சாதிக் பயணித்தான்.

கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கியதும் காவலர் ஒருவர் ‘சல்யூட்’ அடித்து வரவேற்றதும் பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதையை ஏற்றுக் கொண்டான்.

போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி பூங்கொத்து கொடுத்து சாதிக்கை வரவேற்றார். பின்னர் கமிஷனரின் இருக்கையில் சாதிக்கை அமர வைத்தனர்.

அந்த அறையில் நிரம்பி இருந்த நிருபர்களும் புதிய கமிஷனரை மகிழ்விக்க புதிய கமிஷனர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்டனர்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரவுடியிசத்தை ஒழிப்பேன். சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படும். போக்குவரத்து சீராக இருக்கும். நாள் முழுவதும் காவலர்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஈவ்–டீசிங்க்கு இடம் கிடையாது என்று படபடவென்று பதிலளித்தான்.

அதோடு உதவி கமிஷனர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இந்த விசயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டான்.

பின்னர் தயாராக வைத்திருந்த சில கோப்புகளிலும் கையெத்திட்டான். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தை சுற்றி காட்டினார்கள்.

ஒரு நாள் கமிஷனராக வலம் வந்த சாதிக்கின் உள்ளத்தில் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான பூரிப்பு. சந்தோசத்தில் சிரித்து கொண்டே அனைவரிடமும் உரையாடினான்.

இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் இதயமும் கண்ணீர் வடித்தது. எத்தனை ஆசை கனவுகள்... இந்த சிறுவனுக்கு? அநியாயமாய் பாதியிலே கருகி போகிறதே...

வாழும் காலமாவது வசந்த காலமாக இருக்கட்டும் என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு ஒவ்வொருவரும் அவனை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த வயதில் எவ்வளவு பெரிய கனவு கண்டுள்ளான். கடவுள் அவனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை. எங்களால் முடிந்த இந்த உதவியின் மூலம் அவனுடைய ஆசையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி எங்களுக்கு என்றார் கமிஷனர் மகேந்திர ரெட்டி.

-- மாலைமலர்

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by M.M.SENTHIL Thu Oct 16, 2014 3:16 pm

உண்மையிலேயே கண்கள் கலங்குகிறது... காவலர்கள் அனைவரும் மனிதனாக நடந்துள்ளனர்..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by பாலாஜி Thu Oct 16, 2014 4:42 pm

உண்மையில் கண்கள் கலங்குகின்றன ... இச்சிறுவனின் ஆசையை நிறைவேற்ற உதவிய அனைவருக்கும் அன்பு நன்றிகள் .


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by தமிழ்நேசன்1981 Thu Oct 16, 2014 5:42 pm

உதவிய காவலர்களுக்கு நன்றிகள்... ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் 3838410834 நன்றி
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by T.N.Balasubramanian Fri Oct 17, 2014 8:44 am

கடைசி நேர ஆசை --
நிறைவேற முயற்சித்த மருத்துவர்கள் ,
ஆக்கபூர்வமான செயல் புரிந்த "Make A Wish " தொண்டு நிறுவத்தினர் ,
நிறைவேற்றிய போலீசார்
மனித உள்ளத்தில் ஈரம் இன்னும் இருக்கிறது என்று
கூறாமல் கூறி யுள்ள இம்முன்று நிறுவகத்தினருக்கும்,
எப்படி நன்றி சொல்லுவது --அதுதான் என் குழப்பம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35015
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by M.Saranya Fri Oct 17, 2014 10:24 am

கடவுள் ஏன் இப்படி குழந்தைகளை படைத்து அவர்களுக்கு இத்தகைய திறமைகளை கொடுத்து துளிர் விடும் முன்பே வாடச் செய்கிறார்.

என் கண்ணில் கண்ணீர் வருவதை விட கடவுள் மீது கோபம் தான் அதிகமாய் வருகிறது. சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை கோபம் கோபம் கோபம் கோபம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார் Empty Re: ஒரு நாள் போலீஸ் கமிஷனர் - சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக புகார்
» சுஷ்மாவின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகள் பான்சூரி
» பெங்களூருவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை போலீஸ் கமிஷனர் கமல்பந்த் அறிவிப்பு
» பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum