ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

5 posters

Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by சிவா Mon Oct 13, 2014 3:23 am

இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த 17 வயதுப் பெண் மலாலா யூசஃப்சாய்க்குமாகப் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்திய - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவும் வேளையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருப்பது தற்செயல் நிகழ்வா அல்லது திட்டமிட்ட செயலா என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் இந்தியத் துணைக் கண்டத்தை ஒருங்கிணைத்திருக்கும் நோபல் தேர்வுக் குழுவுக்கு நன்றி!

"சமாதானம் என்பது தீவிரவாதத்திற்கும் யுத்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்ல, சமுதாயத்தில் குழந்தைகள் எதிர்கொள்ளும் ஏற்றத்தாழ்வுகள், அவர்களுக்கு மறுக்கப்படும் நியாயமான மனித உரிமைகள் போன்றவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைப்பது' என்கிற நோபல் தேர்வுக் குழுவினரின் புதிய சிந்தனை வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தீவிரவாதத்திற்கு எதிராகத் துணிந்து போராடி, தனது கல்வி கற்கும் உரிமையை நிலைநாட்ட தலிபானின் கொலைவெறித் தாக்குதலை எதிர்கொண்டு, மருத்துவ சிகிச்சைக்காகத் தனது தாய்நாடான பாகிஸ்தானிலிருந்து தப்பியோடிய மலாலா யூசஃப்சாய்க்கு, 17 வயதில் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பது பாராட்டுக்குரிய செய்தி. இங்கிலாந்திலுள்ள பர்மிங்க்ஹாமில் தனது வகுப்பறையில் பாடம் படித்துக் கொண்டிருந்தபோது, மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது என்பது நெகிழ்ச்சி ஏற்படுத்தும் நிகழ்வு.

கல்வி கற்க வேண்டிய பருவத்தில் சிறார்கள் வேலைக்கு அனுப்பப்படுவதற்கும், கொத்தடிமைகளாக நடத்தப்படுவதற்கும் எதிரான போராட்டம் கைலாஷ் சத்யார்த்தியினுடையது. உத்தரப் பிரதேசத்திலுள்ள நிலவிரிப்பு (கார்ப்பெட்) தயாரிப்பவர்கள் குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராகத் தொடங்கிய அவரது போராட்டத்தால், பல சிறுவர் சிறுமியர் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் அவரது பங்கு கணிசமானது. அவரது "பச்பன் பச்சாவ்

ஆந்தோலன்' என்கிற குழந்தைகளை மீட்போம் இயக்கம் பற்றி இந்தியாவிலேயே கூடப் பரவலான புரிதல் இல்லாமல் இருக்கும் நிலையில், நார்வே, ஸ்வீடனில் இயங்கும் நோபல் தேர்வுக் குழுவினர் அதன் தொண்டை அங்கீகரிக்க முற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.

இந்தியர் ஒருவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு கிடைத்திருக்கிறது என்கிற மகிழ்ச்சி ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் இழிநிலையை இந்த விருது உலகுக்கு வெளிச்சம் போடுகிறது

என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கடந்த 20 ஆண்டுகளில் சிறார் மரணங்களும், பெண் சிறார் கொலை நிகழ்வுகளும் கணிசமாகக் குறைந்திருக்கின்றன. சிறார்கள் பள்ளிக்குப் போவது அதிகரித்திருப்பதும், குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதும் உண்மைதான். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க தேசிய ஆணையம் அமைத்திருக்கிறோம் என்பதும், கல்வி கற்கும் உரிமையைச் சட்டமாக்கி இருக்கிறோம் என்பதும் நிஜம்தான்.

ஆனாலும்கூட, இதர துறைகளில் இந்தியா அடைந்திருக்கும் முன்னேற்றங்களுடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் பற்றிய நமது கவனம் மிகமிகக் குறைவே.

மத்திய, மாநில அரசுகளின் கல்விக்கான ஒதுக்கீடு இந்தியாவின் மொத்த உற்பத்தி விகிதத்தில் மூன்று விழுக்காடு மட்டுமே.

உலகிலேயே மிகக் குறைவு இந்தியாவில்தான். இந்தியாவிலுள்ள குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஊட்டச்சத்து குறைந்தவர்கள். உலகிலுள்ள ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளில் ஐந்தில் ஒரு குழந்தை இந்தியாவைச் சார்ந்ததாக இருக்கிறது.

கணக்கிலடங்காத குழந்தைகள் அம்மை, வயிற்றுப்போக்கு, விஷக்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்து கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான குழந்தைகள் தெருவோரச் சிறார்களாக வாழ்கிறார்களே, அவர்களைப் பற்றி யாராவது கவலைப்படுகிறார்களா? அப்படி வளரும் பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்களே, அதைத் தடுக்க நாம் முயற்சிகள்

மேற்கொள்கிறோமா? மலாலா யூசஃப்சாய்க்கும், கைலாஷ் சத்யார்த்திக்கும் வழங்கப்பட்டிருக்கும் சமாதானத்திற்கான நோபல் விருது நமது கண்களைத் திறக்க வேண்டும்.

நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

தினமணி


நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty Re: நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by தமிழ்நேசன்1981 Mon Oct 13, 2014 7:33 am

நமது நாட்டில் விருதுகள் வழங்கப்படுவதே வேண்டப்பட்டவர்களை மகிழ்விக்கதேனே...
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty Re: நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by சதாசிவம் Mon Oct 13, 2014 10:19 am

இதில் அரசின் தவறு என்பதை விட மக்களின் தவறு என்றே சொல்ல வேண்டும்..மக்கள் தங்களைச் சுற்றி நடைபெறும் அவலங்கள் எதையுமே பொருட்டாக மதிப்பதில்லை.. தங்கள் கண்களுக்கு பெரிதாக காட்டப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே கவனிக்கின்றனர். ஜாதி, அரசியல், சினிமா, சலுகை, மானியம் போன்றவை. அரசு மக்கள் கவனிக்கும் விசயங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது ஆதலால் தான் சினிமா நடிகர்களுக்கு விருந்து வழங்கப்படுகிறது. உண்மையில் அவர்கள் தேசத்துக்கு என்ன செய்தார்கள் ???


சதாசிவம்
நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty Re: நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by krishnaamma Mon Oct 13, 2014 10:43 am

//நோபல் விருதுக்கான தேர்வுக் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் கைலாஷ் சத்யார்த்திக்கு இந்திய அரசு குறைந்தபட்சம் பத்மஸ்ரீ விருதுகூட வழங்கி அவரது சேவையை அங்கீகரிக்காமல் இருந்திருப்பதிலிருந்தே குழந்தைகள் நலன் பற்றிய நமது அக்கறையைப் புரிந்துகொள்ள முடிகிறது.//

கசப்பான நிஜம்...................சோகம்
.
.
.
என்றாலும் அவர்கள் இருவருக்குமே என் மனமார்ந்த வாழ்த்துகள் ! அன்பு மலர்

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! UG2OzzqITECLJ9159vfb+flower-bouquet_018


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty Re: நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by M.Saranya Mon Oct 13, 2014 11:38 am

என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்....


நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! NEnh26qAS6uY7PYyCkta+works


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது! Empty Re: நோபல் - விருது பெருமிதப்பட வைக்கிறது. அரசின் செயல்பாடு தலைகுனிய வைக்கிறது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர்களின் வயிற்றை எரிய வைக்கிறது இந்திய அரசின் செய்கை: டி.ராஜேந்தர்
» அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு அமைதியிக்கான நோபல் விருது!
» வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு: விருது பெறும் மூன்று பேர் யார் தெரியுமா?
» நோபல் விருது பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி மறைவு
» நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ணனுக்கு பிரிட்டன் "நைட்ஹூட்' விருது அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum