ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

3 posters

Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by சிவா Sat Oct 11, 2014 2:16 am

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! 10689807_749160438490389_3743408018250228731_n

2014 -ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலாவுக்கும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டது.

அதில், குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக போராடி வரும் கைலாஷ் சத்யார்த்தி அமைதிக்கான நோபல் பரிசை, பாகிஸ்தானின் மலாலாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

டில்லியில் வசித்து வரும் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி, 1990 முதல் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அவரது சேவையின் மூலம் இதுவரை 80 ஆயிரம் குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

பச்பன் பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பை துவக்கி கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வருகிறார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, பெண் கல்விக்காக போராடி வருபவர்.


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by சிவா Sat Oct 11, 2014 2:17 am

அமைதி நோபல் பெறும் கைலாஷ் சத்யார்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சிறார் உரிமைகள் சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி மற்றும் பெண் கல்வி உரிமையை வலியுறுத்திப் போராடிய பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “அமைதிக்கான நோபல் பரிசை வென்ற கைலாஷ் வித்யார்த்திக்கு எனது மனம் திறந்த வாழ்த்துக்கள். இந்த சாதனை குறித்து நாடு முழுதும் பெருமையடைகிறது.

கைலாஷ் சத்யார்த்தி மனித குலம் முழுதிற்குமான ஒரு காரணத்திற்காக தனது வாழ்க்கையை அரப்பணித்துக் கொண்டுள்ளார். இந்த உறுதியான முயற்சிகளை நான் வரவேற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் உரிமைப் போராளி மலாலா யூசுப்சாய் பற்றி குறிப்பிடும்போது“இவரது வாழ்க்கை கடுமையான தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட பயணம்” என்று பதிவிட்டுள்ளார்.

நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்றதையடுத்து கைலாஷ் சத்யார்த்தி தனது ட்விட்டர் பதிவில் “தேநீர் விற்கும் சிறுவனாகத் தொடங்கி தற்போது பிரதமராகியுள்ளார். இனி ஒரு குழந்தை கூட குழந்தைத் தொழிலாளியாகக் கூடாது என்பதை இவர் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துச் செய்தியில், “குழந்தைத் தொழிலாளர்கள் என்ற சமூக பிரச்சினையில் உயிர்ப்புள்ள இந்திய சிவில் சமூகத்தின் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த நோபல் பரிசைப் பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by சிவா Sat Oct 11, 2014 3:46 am

நோபல் பரிசு பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா-பாகிஸ்தான் பிரதமர்களுக்கு மலாலா அழைப்பு

அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பாகிஸ்தானை சேர்ந்த பெண் கல்விப் போராளி மலாலா யூசுப்சாய் லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:-

மிக இளம்வயதில் நோபல் பரிசைப் பெறுவது எனக்கு பெருமையாக இருக்கிறது. இந்த பரிசை கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. சத்யார்த்தியின் பணிகள் எனக்கு தூண்டுகோலாக இருந்தன.

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். தங்கள் உரிமைகளுக்காக அவர்கள் எழுந்து நிற்க வேண்டும். நான் நோபல் பரிசை பெறும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியா-பாகிஸ்தான் நட்புறவு சிறப்பாக வேண்டும். தற்போது எல்லையில் நிலவும் பதட்டமான சூழ்நிலை அதிருப்தி அளிக்கிறது. இரு நாட்டு பிரதமர்களும் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை ஏற்படுத்த வேண்டும். கல்வி மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என விரும்புகிறேன்.

எதிர்காலத்தில் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். ஆனால், இப்போது அரசியல்வாதியாக வர வேண்டும் என விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by சிவா Sat Oct 11, 2014 3:48 am

ஜனாதிபதி, சோனியா வாழ்த்து

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்திக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மிகப்பெரிய மக்கள் சமுதாயத்துக்காக குழந்தை தொழிலாளர் போன்ற பலவித சமுதாய பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அவர் ஆற்றிய பங்களிப்புக்கு அங்கீகாரமாக இந்த பரிசு கருதப்படுகிறது.

நாட்டில் அனைத்து வகை குழந்தை தொழிலாளர்களையும் நீக்குவதற்காக அரசின் முயற்சியுடன் இணைந்து அவர் ஆற்றிய பணி மிகவும் முக்கியமானது.

இவ்வாறு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

சத்யார்த்தியின் சிறப்பான பங்களிப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் அவர் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது மிகவும் சரியானது. நாட்டுக்கு இது மிகப்பெரிய பெருமை.

பாகிஸ்தானின் மலாலாவுக்கு எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியா, பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது தெற்கு ஆசியா முழுமைக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறும்போது, ‘‘இந்திய எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திவரும் வேளையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இது மோதல் போக்கு தீர்வாகாது, எந்த நாடு மோதலை தூண்டினாலும் அது தடுக்கப்பட வேண்டும் என்ற தெளிவான தகவலை அனுப்பியதாக உள்ளது’’ என்றார்.

பாரதீய ஜனதா துணைத்தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, ‘‘குழந்தைகள் உரிமைக்காக கைலாஷ் சத்யார்த்தி புரட்சிகரமான பணிகளை செய்துள்ளார். இது இந்தியாவுக்கு மிகப்பெரிய கவுரவம்’’ என்றார்.

காங்கிரஸ் தலைவர் ரஷீத் ஆல்வி, ஐக்கிய ஜனதாதள எம்.பி. அலி அன்வர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கைலாஷ் சத்யார்த்திக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by சிவா Sat Oct 11, 2014 4:00 am

மலாலாவுக்கு நோபல்: பாகிஸ்தானுக்கு பெருமை: நவாஸ்

சிறுமிகளின் கல்வி உரிமை போராளியான மலாலா யூசுப்சாய்க்கு அமைதி நோபல் கிடைத்திருப்பது தங்களது நாட்டுக்குப் பெருமை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அமைத்து தந்து கொண்டிருக்கும் இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியுடன், இந்த வருடத்துக்கான நோபல் பரிசை பாகிஸ்தான் போராளிச் சிறுமி மலாலா யூசுப்சாய் வென்றுள்ளார்.

மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறும்போது, "மலாலா, பாகிஸ்தான் நாட்டுக்குக் கிடைத்த பெருமை. அவருக்கு கிடைத்த பெருமை, நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்த பெருமை. உலகம் முழுவதிலும் உள்ள சிறுவர் - சிறுமியர் மலாலாவின் வழியை பின்பற்ற வேண்டும். உறுதியான போராட்ட குணத்தை பெற வேண்டும்.

பெண்களின் குரல் கூட உயர்த்தப்படாத சமுதாயத்தில் கல்வி போராட்டத்தை ஏற்படுத்தியவர்தான் மலாலா. இது மலாலா ஒருவருக்கு கிடைத்த பரிசு அல்ல, பாகிஸ்தானின் பெண்களுக்குக் கிடைத்த பரிசு. அவர்தான் நமது கண்களின் ஒளியாகவும் இதயத்தின் குரலாகவும் திகழ்கிறார்" என்றார்.

பாகிஸ்தானின் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஆப்கான் எல்லையில் உள்ள ஸ்வாட் மாகாணத்தின் மிங்கோரா நகரைச் சேர்ந்தவர் மலாலா யூசுப்சாய். பாகிஸ்தான் சிறுமிகளின் கல்வி உரிமைக்காக போராடிய மலாலாவை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தாலிபான் பயங்கரவாதிகள் சுட்டதில் அவர் படுகாயமடைந்தார்.

உயிருக்கு போராடிய மலாலாவுக்கு லண்டனில் உள்ள ராணி எலிசெபெத் மருத்துவமனையில் சிக்கலான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவர் உயிர் பிழைத்தார். அதன் பின்னர் தாலிபான்களின் கடுமையான மிரட்டல்களையும் தாண்டி அவர் அங்கு சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்படுவதை எதிர்த்து போராடினார். சிறுமிகள் பள்ளிகளுக்கு சென்றால், அந்த இடம் தகர்க்கப்படும் என்று தாலிபான்கள் எச்சரித்த பின்னரும் மலாலாவின் போராட்டம் தொடர்ந்தது.


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by ayyasamy ram Sat Oct 11, 2014 7:55 am

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! 103459460 கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by தமிழ்நேசன்1981 Sun Oct 12, 2014 8:00 am

நோபல் நாயகன் கைலாஷ் சத்யார்த்தி!


கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Kailash3

அன்னை தெரசா , பாரக் ஓபாமா , நெல்சன் மண்டேலா , தலாய்லாமா வரிசையில் அமைதிக்கான நோபல் பரிசை இம்முறை பாகிஸ்தானின் 17 வயது மலாலாவுடன் இணைந்து இந்தியாவின் 60 வயதான கைலாஷ் சத்யார்த்தி அவர்களும் இணைந்து பெற்றுள்ளார். இவரைப்பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டது இல்லை. ஆனால் 30 வருடங்களாக இவரின் தீவிர முயற்சியால் இதுவரை 83,000 குழந்தைத்தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.



மத்திய பிரதேச மாநிலத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு எலக்ட்ரிகல் இன்ஜினியர். அவர் வாழ்ந்த இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் என்பது சர்வ சாதாரணமான நிகழ்வு. இன்று நியுயார்க் , மிலன் போன்ற பெருநகரங்களில் கிடைக்கும் புதிய ஆடைகள் , பேஷன் பொருட்களில் இருந்து நம் ஊர்ப்பெரியவரின் விளைநிலங்கள் வரை குழந்தை தொழிலாளர்கள் அமர்த்தப்படுகிறார்கள். கூலி குறைவு ; எதிர்க்க மாட்டார்கள் ; நினைத்த வேலையை அதட்டி வாங்கலாம் போன்ற காரணங்களால் முதலாளிகளும் அவர்களையே வேலைக்கு வைக்க விரும்புகிறார்கள்.

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Kailash1
படிக்க வேண்டிய வயதில் தொழிலாளி ஆகும் குழந்தைகளுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காது. காலையில் இருந்து நள்ளிரவு வரை கொத்தடிமைகளாக நடத்தப்படும் இவர்கள் பின்பு முதலாளிகளுக்கு கை கால் பிடித்து விடுவது போன்ற கொடுமைகளையும் அனுபவிக்கின்றனர். இதில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் சிறுமிகள் நிலைமையோ அந்தோ பரிதாபம். வறுமையின் காரணமாக புரோக்கர்கள் தரும் பணத்திற்கு மயங்கி குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் ; அதன் பின் நடக்கும் அவலங்களை அறியமுடியாது. திரும்ப குழந்தையை மீட்கவும் முடியாது.

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Kailash2

இதை வேரோடு அறுத்து எறிய தனது 26 ஆம் வயதில் "பச்பன் பசாவோ அந்தலன்" (குழந்தை பருவத்தை காப்போம்) என்ற அமைப்பை ஏற்படுத்தி அறவழிப்போராடத்தை தொடங்கினார். நேரடியாக காவல்துறையை அணுகி புகார் செய்தால் ; புகார் செய்தவரை பின்னர் முதலாளிகளின் ஆட்கள் பிரித்து எடுத்து விடுவார்கள் என்பதால் ; இந்த அமைப்பின் மூலம் குழந்தை தொழிலாளர்களை மீட்க வழி செய்தார்.

இங்கு வரும் புகார்களை வைத்து அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் முதலில் அங்கு நடக்கும் அவலங்களை ரகசியமாக கண்காணிப்பார்கள். புகார் உறுதி செய்யப்பட்டதும் ; அந்த ஊரின் லோக்கல் மாஜிஸ்ட்ரேட் மற்றும் காவல்துறை உதவியுடன் ரெய்டு நடத்தப்பட்டு குழந்தைகளை மீட்பார்கள். பின்னர் அதே சத்யார்த்தி அவர்களால் ஆரம்பிக்கப்பட முக்தி ஆசிரமத்தில் அக்குழந்தைகள் சேர்க்கப்பட்டு பெற்றோருடன் அனுப்பிவைக்கப்படும் வரை அங்கு தங்கவைக்கப்படுவார்கள்.இதுபோல் மீட்கப்படும் குழந்தைகளுக்கு அரசு "குழந்தை தொழிலாளர் தடுப்பு" சட்டத்தின் கீழ் இருபதாயிரம் ரூபாய் வழங்கப்படும்.

1985ஆம் ஆண்டு இவர் நடத்திய பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் மலைவாழ் பெண்கள் மற்றும் சிறுமிகள் பற்றிய விழிப்புணர்வு போராடத்தில் ; கடுமையாக தாக்கப்பட்டார். இவருடைய அமைப்பில் இருந்த ஆதர்ஷ் கிஷோர் என்பவர் அப்பொழுது சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றொருவர் அடித்தே கொல்லப்பட்டார்.

சாதனைத்துளிகள் :

* இவரது தீவிர போராடத்தின் விளைவு 2006 ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் தடைச்சட்டம் இயற்றப்பட்டது

* இவரது ரக்மார்க் அமைப்பின் தரச்சான்றிதழ் பெரும் பொருட்கள் அனைத்தும் குழந்தைத்தொழிலாளர்கள் இன்றி உற்பத்திசெய்யப்பட்டவை



* சாக்ஸ் (SAACS) என்றும் அமைப்பின் தலைவரான இவர் தெற்காசியா முழுவதும் உள்ள தன்னார்வ நிறுவனங்கள் உதவியுடன் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும் நிறுவனங்களுக்கு செக் வைக்கப்படுகிறது.

* முன்னரே பலமுறை அமைதிக்கான நோபல் பரிசுக்குபரிந்துரைக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். பல வருடங்களுக்கு முன்னரே முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இவரின் சாதனைகளை பாராட்டி விருது வழங்கி கவுரவப்படுத்தியுள்ளார்.

* இவரது அமைப்புக்கு சமிபத்தில் பொறுப்பேற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு நரேந்தர சிங் தோமர் அவர்கள் தனது முதல் மாத சம்பளத்தை வழங்கி தனது ஆதரவைத்தெரிவித்துள்ளார்.

* 1901 ஆண்டு முதல் ஆண்டு தோறும் வழங்கப்படும் நோபல் பரிசை பெரும் எட்டாவது இந்தியர் ஆகிறார். கடைசியாக நம் நாட்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேதியியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

ஈ.கோ.சஞ்ஜீத்

(மாணவ பத்திரிகையாளர்)
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு! Empty Re: கைலாஷ் சத்யார்த்தி, மலாலாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum